இந்த வார இறுதியில் வட கொரிய அதிபர் கிம்முடன் டெலிபோனில் பேசுவேன் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதிக்கு பின் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமலும், பொது வெளியில் தென்படாமல் இருந்ததால் அவர் இறந்து போய் விட்டதாகவும், கிம்முக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதன் காரணமாக எழுந்து நடக்க கூட முடியாத நிலையில் அவர் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இந்த […]
Tag: #northkorea
உலக நாடுகளின் எதிர்ப்பை கண்டுக்கொள்ளாமல் செயற்பட்டுவரும் வடகொரியா, மீண்டும் ஏவுகணை சோதனை செய்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இருக்கும் ஹாம்யாங் (Hamyang) மாகாணத்தில் உள்ள சோன்டாக் பகுதியில் இருந்து 3 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக, தென்கொரியா இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற ஏவுகணைகள் மீண்டும் ஏவப்படலாம் என்றும், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தென் கொரியா இராணுவம் கூறியுள்ளது. முன்னதாக, வட கொரியா கடந்த வாரம் கடலில் அடையாளம் தெரியாத இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை […]
வட கொரியா கடலில் ஏவி அடையாளம் தெரியாத இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்ததாக தென் கொரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது. நேற்று வட கொரியாவின் கிழக்கு கடலோர பகுதியில் இருக்கும் வோன்சான் பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி இந்த இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை செய்ததாக தென் கொரியா தெரிவித்துள்ளது.சுமார் 240 கி.மீ. தூரம் சென்ற இந்த ஏவுகணைகள் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய குறைந்த தூர ஏவுகணைகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுபோன்ற ஏவுகணைகள் மேலும் ஏவப்படலாம் […]
டொனால்டு டிரம்பை சந்திப்பதற்கு முன்பு அதிபர் கிம் ஜாங் அன்னுடன் பேச்சு வார்த்தை நடத்த 2 நாட்கள் பயணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங் வட கொரிய சென்றுள்ளார். சீன நாட்டின் அதிபராக இருப்பவர் ஜி ஜின்பிங். இவர் தற்போது 2 நாள்கள் பயணமாக வடகொரியா சென்றார். பிற நாடுகளில் இருந்து தனிமைப் படுத்தப்பட்ட வடகொரியா போன்றபி நாடுகளுக்கு 14 ஆண்டுகளுக்கு பின் பயணம் மேற்கொண்ட முதல் சீன அதிபர் ஜி ஜின்பிங்தான். வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங் சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.சீன […]
வடகொரியா மற்றும் ரஷ்யா நாட்டு தலைவர்கள் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது வெற்றிப் பெற்றுள்ளது என இருநாட்டு அதிபர்களும் அறிவித்துள்ளனர். கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வட கொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளால் தொடந்து அச்சுறுத்தி வந்த நிலையில், இந்த நடவடிக்கைக்கு குறித்து அமெரிக்க உள்ளிட்ட பல உலக நாடுகள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தது. சோவியத் ஒன்றியம் சிதைவிற்கு பிறகு ரஷ்யாவிற்கும், வடகொரியாவிற்கும் இடையே உள்ள உறவில் சற்று தொய்வு ஏற்பட்டது. தற்போது ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வடகொரியா முன்வந்தது. கடந்த […]
ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னும் முதல் முறையாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வட கொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளால் தொடந்து அச்சுறுத்தி வந்த நிலையில், இந்த நடவடிக்கைக்கு குறித்து அமெரிக்க உள்ளிட்ட பல உலக நாடுகள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தது. இந்நிலையில், இது தொடர்பாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வடகொரியா முன்வந்தது. வரலாற்றில் முதல் முறையாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னும், […]