Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“2 ஆயிரம் ரூபாய் கடன் தொகை” 37 ஆண்டுகளுக்கு பிறகு வந்த நோட்டீஸ்…. குழப்பத்தில் எலக்ட்ரீசியன்….!!

கடன் தொகையை திருப்பி செலுத்துமாறு 37 ஆண்டுகளுக்கு பிறகு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டியில் எலக்ட்ரீசியனான சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 1985-ஆம் ஆண்டு கடை வைப்பதற்காக அப்பகுதியில் இருக்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வாங்கியுள்ளார். அதன்பின் வந்த அரசுகள் கூட்டுறவு சங்க கடன் தள்ளுபடி என அறிவித்ததால் தனது கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக சேகர் நினைத்தார். இந்நிலையில் கூட்டுறவு சங்கத்தில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்டர் படத்தின் முக்கிய காட்சிகள்…. 25 கோடி நஷ்டஈடு… வெளியிட்ட பிரபல தனியார் நிறுவனம்….!!

மாஸ்டர் படத்தின் முக்கிய காட்சிகளை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட்ட நிறுவனத்திற்கு படக்குழுவினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் படம் திரையரங்குகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. ஆனால் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் படம் வெளியாவதற்கு முன்னரே இணையதளத்தில் வெளியாகின. இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் இந்த படமானது தங்களுடைய ஒன்றரை வருட உழைப்பு என்பதால் இதன் காட்சிகளை யாரும் வெளியிட கூடாது என வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து படத்தின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஐ.டி நோட்டீஸ் …!!

வருமானவரித்துறை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 1978ஆம் ஆண்டில், சென்னையில் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம்,  பொறியியல்,  தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்கிறது.இதோடு தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியில் கல்லூரிகளையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்து கண்கானித்து வருகின்றது. இந்நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் 2018-19, 2019-20 ஆம் ஆண்டு கணக்கான காலாண்டு கணக்கை முறையாக […]

Categories
மாநில செய்திகள்

சிறுவனை காலணியை கழற்றுமாறு கூறிய விவகாரம் – எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதிலளிக்க நோட்டீஸ்..!!

பழங்குடியின சிறுவனை அழைத்து தனது காலணியை கழற்றுமாறு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறிய விவகாரத்தில், எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்குமாறு தமிழ்நாடு டி.ஜி.பி, தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு தேசிய பழங்குடியின நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நீலகிரி மாவட்டம், முதுமலை யானைகள் புத்துணர்வு முகாமை பார்வையிடுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அங்கு சென்றார். அப்போது அவர், அங்கிருந்த கோயிலுக்குச் செல்லும்போது பழங்குடியின சிறுவனை அழைத்து தனது காலணியை கழற்றுமாறு கூறினார். […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மருத்துவ கலந்தாய்வு : ”பங்கேற்ற 126 வெளிமாநிலத்தவர்” மதுரை கிளை நோட்டீஸ்…!!

தமிழக  மருத்துவப்படிப்பு கலந்தாய்வில் பங்கேற்றதாக கூறப்படும் வெளிமாநில மாணவர்கள் 126 பேருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதுரையைச் சேர்ந்தவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவ கல்லூரிகளில் 85 சதவீத இடங்கள் தமிழக மாணவருக்கும் , 15 சதவீத இடங்கள் பிற மாநிலங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 126 வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் கலந்தாய்வில் பங்கேற்று உள்ளனர். எனவே இந்த மருத்துவ கலந்தாய்வை  ரத்து செய்து , புதிய கலந்தாய்வு […]

Categories

Tech |