Categories
தேசிய செய்திகள்

அம்பேத்கர் பேரன் தலைமையில் சிஏஏக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம்!

நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. 1955ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை கடந்த 2016ம் ஆண்டிலேயே பாஜக நிறைவேற்ற முனைப்பு காட்டியது. ஆனால், மாநிலங்களவையில் போதிய பெரும்பன்மை இல்லாமை மற்றும் கடந்த அரசின் பதவிக்காலம் முடிவு உள்ளிட்ட காரணங்களால் அப்போது அந்த மசோதா காலவதியாகி விட்டது. இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடியுரிமைச் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கீரிப்பிள்ளையின் வாயில் கோழியாக அதிமுக – தமிமுன் அன்சாரி

கீரிப்பிள்ளையின் வாயில் கோழி சிக்கியது போல் அதிமுகவினர் சிக்கியுள்ளனர் என மனிதநேய ஜனதா கட்சி எம்எல்ஏ தெரிவித்துள்ளார் குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் கீரிப்பிள்ளை வாயில் சிக்கிக்கொண்ட கோழியைப் போல அதிமுக அரசு உள்ளது என மனிதநேய ஜனதா கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது “இந்த சட்டங்கள் CAA , NRC குறித்து அதிமுக தலைவர்களுக்கு சரியான புரிதல் இல்லை எனவே அதிமுகவினர் அரசியல் நெருக்கடியால் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரித்தவர் மீது குற்றச்சாட்டு

அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு இறுதி வடிவம் கொடுத்தவர் மீது அஸ்ஸாம் மக்கள் தொண்டு நிறுவனத் தலைவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான, ஏ.பி.டபிள்யூ தலைவர் அபிஜித் சர்மா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிவடிவம் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய வழிகாட்டலின்படி நடக்கவில்லை. இதில் ஏராளமான குளறுபடிகள் நடந்துள்ளன. அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜிலா தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: சிஏஏவுக்கு எதிராக பிப்ரவரி 2 முதல் 8 வரை கையெழுத்து இயக்கம் – முக ஸ்டாலின்..!!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பிப்ரவரி 2 முதல் 8 வரை கையெழுத்து இயக்கம் நடத்த திமுக கூட்டணி முடிவு செய்யப்பட்டதாக முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சிகளுடன்  குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்த ஆலோசனை நடைபெற்றது. இதில் மதிமுக, விசிக, தமிழ்நாடு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முக ஸ்டாலின், […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து DYFI அமைப்பினர் கண்டன பேரணி…!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்(DYFI) கண்டன பேரணி நடத்தினர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கண்டன பேரணி நேற்று நடைபெற்றது. இதில், குடியுரிமை திருத்தச் சட்டம் வேண்டாம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

CAA, NRC, NPR உள்ளிட்டவை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானவை’ – திக் விஜய்சிங்

CAA, NRC, NPR உள்ளிட்ட சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானவை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார். ஒரு மாத காலத்திற்கும் மேலாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷாகின் பாக் பகுதியில் போராடிவரும் போராட்டக்காரர்களைக் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நாங்கள் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்க்கிறோம். இச்சட்டங்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

CAA , NRC , NPRக்கு எதிராக வீடு வீடாக பரப்புரை செய்வோம் – சீதாராம் யெச்சூரி

 குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு (NPR) ஆகியவற்றிற்கு இருக்கும் தொடர்புகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வீடு வீடாக விரைவில் பரப்புரை மேற்கொள்ளப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறினார். கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு […]

Categories
மாநில செய்திகள்

குடியுரிமை சட்ட எதிர்ப்பு: சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டம்!

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கூடாதென வலியுறுத்தி கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தில் இன்று ஏராளமானோர் பங்கேற்றனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தமாட்டோம் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி மக்கள் அதிகாரம் உள்ளிட்ட ஏழு அமைப்புகள் சார்பில், கோட்டை முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு, “குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக நாடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவுக்கு எதிர்ப்பு: சட்டப்பேரவையை புறக்கணித்த டிடிவி, தமிமுன்.!

ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டப்பேரவை கூட்டத்தொடரிலிருந்து டிடிவி தினகரன், தமிமுன் அன்சாரி வெளிநடப்புச் செய்துள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2020ஆம் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. ஆளுநர் உரையை புறக்கணித்து பிரதான எதிர்க்கட்சியான திமுக வெளிநடப்புச் செய்தது. இதேபோல் காங்கிரஸ், அமமுக, மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வெளிநடப்புச் செய்தன. இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “அமமுக சார்பில் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளியேறியுள்ளோம். குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்ததை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ”NRC_க்கும் NPR_க்கும் தொடர்பில்லை” அமித்ஷா விளக்கம் …!!

என்.ஆர்.சிக்கும், என்.பி.ஆர்க்கும் எந்தத் தொடர்பும் இல்லை என  அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும், குடிமக்கள் பதிவேட்டிற்கும் பொதுமக்களிடையே பெரிய குழப்பங்கள் ஏற்பட்டநிலையில் இதன் மூலமாக குடியுரிமை பறிக்கப்படும் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. எனவே இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ANI செய்தி நிறுவனத்துக்கு விரிவான விளக்கம் அளித்தார். அப்போது அமித்ஷா கூறுகையில் NRC , NPR_க்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை அவர் தெளிவாக  விளக்குகின்றார். இதனை தனித்தனியாக  பாருங்கள் […]

Categories

Tech |