மே 1 ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நாம் முதலில் செய்ய வேண்டிய கடமை குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். மே ஒன்றாம் தேதி உலகம் முழுவதும் உழைப்பாளர் தினமாக அனுசரிக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாமும் நமது தாய், தந்தை, உறவினர்,பக்கத்து வீட்டார் என நமக்குத் தெரிந்த உழைக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்களை வருடந்தோறும் தெரிவித்து வருகிறோம். அந்த வகையில், கொரோனா பாதிப்பை கண்டு பொது மக்கள் அஞ்சி […]
Tag: nurse
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு செவிலியர் செய்த தியாகம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். பள்ளி, கல்லூரி, தியேட்டர், மால் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அனைத்தும் மூடப்பட்டு இருந்தாலும், மருத்துவர்கள் மருத்துவமனைகளை மூடவே இல்லை. எனவே மருத்துவர்களுக்கும் , செவிலியர்களுக்கும் மிகப்பெரிய கடமைப்பட்டிருக்கிறோம். அதிலும் சீனாவில் செவிலியர் ஒருவர் செய்த செயலை கேட்கையில் உண்மையாகவே அவரை மனம் குளிர பாராட்ட வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால் சீனாவில் ஏற்கனவே நிறைய பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் […]
மருத்துவர்களை, செவிலியர்களை வீட்டை காலி செய்யச் சொன்னால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தங்களின் உயிரை பற்றி கொஞ்சம் கூட கவலை படாமல் மக்களுக்காக சேவையாற்ற நாள்தோறும் மருத்துவமனைகளில் கஷ்டப்பட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்கள் அவ்வப்போது வீட்டிற்கு வந்து செல்வதால் இவர்கள் மூலம் தொற்று ஏற்பட்டுவிடுமோ என அச்சம் அடைந்து வீட்டு உரிமையாளர்கள் அவர்களை உடனடியாக காலி செய்ய சொல்லி கட்டாயப் படுத்தி வருகிறார்கள். இது […]
விமானத்தில் உயிரிழந்த மூதாட்டி உடன் பயணம் செய்த பயணிகள் நரகத்தை அனுபவித்ததாக அச்சத்துடன் கூறியுள்ளனர் நடுவானில் சென்று கொண்டிருந்த விமானம் ஒன்றில் 83 வயது கொண்ட வயதான பெண் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விமானத்தில் பயணித்த செவிலியர் ஒருவர் மருத்துவ குழுவினரின் உதவியுடன் மூதாட்டிக்கு சிகிச்சை அளித்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் மூதாட்டி. அவர் உயிரிழந்ததை தொடர்ந்து விமானத்தை தரையிறக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சடலத்தை எடுத்து தனியாக வைக்கும்படியும் […]
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் அறிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கோயம்புத்தூர் மாவட்டம் பீளமேடு சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. சத்தியமூர்த்தியின் மகள் ஹரிணி அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஹரிணி தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் பிளமேடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த காவல்துறையினர் ஹரிணியின் உடலை […]
சீன அரசு தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணொலிக் காட்சியொன்றைப் பகிர்ந்துள்ளது. அந்தக் காட்சி கல்நெஞ்சம் கொண்டோரையும் கரைக்கிறது என்றால் அது மிகையல்ல. சீனாவின் வூஹான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 900த்தை தாண்டியுள்ளது. 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சீன அரசு சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், சீனாவின் ஹெனன் மாகாணத்தில், கொரோனா வைரஸ் […]
தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் திருநங்கை ரக்ஷிகா ராஜ் என்பவர் தனது பெயரை பதிவு செய்ய கோரி தொடர்ந்த வழக்கிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநங்கை ரக்ஷிகா ராஜ் என்பவர் செவிலியர் படிப்பை முடித்துவிட்டு தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்ய 3ஆம் பாலின பெண் என விண்ணப்பத்தை நிரப்பி அளித்திருந்தார். இதையடுத்து ரக்ஷிகா அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ரக்ஷிகா. இந்நிலையில் வழக்கானது இன்று விசாரணைக்கு வந்த […]
ஜெர்மனி மருத்துவமனையில் வேலைபார்க்கும் ஆண் செவிலியர் மாரடைப்பு வரவைத்து நோயாளிகளை கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மன் நாட்டில் உள்ள டெல்மெர்ன் ஹாஸ்ட் மருத்துவமனையில்ஆண் செவிலியராக பணிபுரிபவர் நீல்ஸ் ஹோஜல். இவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தது. குறிப்பாக இவர் நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்படுத்தி பிழைக்க வைப்பதாக சுமார் 85 நோயாளிகளை கொன்றுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைகள் தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டத்தையடுத்து இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செவிலியர் நீல்ஸ் ஹோஜல் மீது […]