வீட்டுக்குறிப்புகள் தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசம் செய்யும் போது அதில் சேர்த்தால் ரசம் மிகவும் சுவையாக இருக்கும். அடைக்கு அரைக்கும் போது அரிசி மற்றும் பருப்புடன் வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசி கூடுதலாக இருக்கும். மண்பானை புதிதாக வாங்கும் போது அதில் சிறிது எண்ணெய் தடவி சூடேற்றி பின் பயன்படுத்தினால் மண்வாசனையும் வராது. விரிசலும் விடாது. நைலான் கயிரை சோப்பு நீரில் நனைத்து பயன்படுத்தினால் நீண்ட நாள் பயன் படும் . சீக்கிரத்தில் சேதமடையாது.
Categories