உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 1 1/2 லட்சம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் சசிகுமார், மணிமேகலை, கார்த்திகேயன் மற்றும் காவல்துறையினர் மதக்கொண்டபள்ளியில் உள்ள அரசு பள்ளி முன்பு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயம் அதிகாரிகள் அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த காரில்1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதுகுறித்து காரில் […]
Tag: # Officers
பொதுமக்கள் வசதிக்காக 108 ஆம்புலன்ஸ் சேவை வசதி செய்து தரவேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாயில்பட்டியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு சுப்ரமணியபுரம், தாயில்பட்டி, சல்வார்பட்டி, வெற்றிலையூரணி, மீனாட்சிபுரம், கனஞ்சம்பட்டி, வெம்பக்கோட்டை, போன்ற பகுதிகளில் உள்ள கிராம மக்கள் தினமும் சிகிச்சைக்காக தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகின்றனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தைகளை பெற்ற தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் அதிக […]
சாலை பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், ரயில்வே மேம்பாலம், பாதாள சாக்கடை திட்டம் ஆகிய மூன்று பணிகளும் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்ட தோடு, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக தோண்டிய இடங்களில் குழிகளை மூடாமல் பல தெருக்களில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறது. […]
கலெக்டர் கருணாகரனின் உத்தரவின்பேரில் சட்டவிரோதமாக காலிங்கராயன் கால்வாயில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை வெளியேற்றி 28 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காலிங்கராயன் கால்வாய் மூலம் சுமார் 14 ஆயிரத்து 700 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று பயனடைகின்றன. மேலும் விவசாயிகள் இந்த கால்வாய் பகுதியில் வாழை, நெல், மஞ்சள் போன்ற பயிர்களை பயிரிட்டு உள்ளனர். இந்நிலையில் சட்டவிரோதமாக சுத்திகரிப்பு செய்யப்படாத சாயக்கழிவு நீரை கடந்த சில வாரங்களாக காலிங்கராயன் கால்வாயில் வெளியிடுவதாகவும், விளைநிலங்கள் […]
தென்காசி அரசு மருத்துவமனையில் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். கொரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கும் வகையில் நாடு முழுவதும் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டு ஒவ்வொருவருக்கும் இரு முறை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன் களத்தில் நின்று வேலை செய்த டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் செவிலியர்களுக்கு முதல் கட்டமாக தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதனை அடுத்து இரண்டாவது கட்டமாக அவர்களுக்கு விரைவில் தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்நிலையில் […]
கோவிலுக்கு பின்புறம் பதுக்கி வைத்திருந்த 8 மூட்டை ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்து விட்டனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தட்ச மொழி பஞ்சாயத்து தலைவர் பிரவீன் குமார் மற்றும் துணைத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோருக்கு சாத்தான்குளத்தில் இருந்து தாராபுரம் செல்லும் ரோட்டில் உள்ள இசக்கியம்மன் கோவில் பின்புறம் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து சாத்தான்குளம் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்து விட்டனர். அந்த தகவலின் பேரில் […]
சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வந்த ரூபாய் 35 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விமானநிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் அதிகளவில் தங்கம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் கமிஷனர் உத்தரவின்படி, சென்னை விமான நிலையத்திற்கு துபாய் விமானத்தில் வந்த பயணிகளை கவனமாக கண்காணித்து உள்ளனர். […]
குடிநீர் இன்றி சிரமப்படும் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள எப். கீழையூர் காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக முறையான காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கடும் சிரமத்தில் உள்ள மக்கள் தண்ணீரை தேடி அலைவது மட்டுமில்லாமல் ஒரு குடம் தண்ணீரை ஐந்து […]
வெளிநாட்டு பணத்தை சென்னையில் இருந்து துபாய்க்கு சென்ற விமானத்தில் கடத்த முயன்ற ஐந்து பேரை அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் இருந்து துபாய்க்கு இண்டிகோ ஏர்வேஸ் விமானம் ஒன்று அதிகாலை 5:3௦ மணிக்கு புறப்பட்டு சென்றது. அப்போது இந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக காத்திருந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அதிகாரிகளிடம் சிலர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அவர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து போலீசார் சந்தேகப்படும்படியான […]
வால்பாறை வனப்பகுதியில் சிறுத்தை உயிரிழந்தது குறித்து வனவிலங்குகள் வேட்டை தடுப்பு காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர். கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை, புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களிலும் அரிய வகை வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. இதில் வனச்சரக பகுதிக்குட்பட்ட வனப்பகுதிகளில் யானை, காட்டெருமை, முள்ளம்பன்றி, புலி, சிறுத்தை போன்றவை தேயிலை தோட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் இரை தேடி சுற்றித்திரிகின்றன. இந்நிலையில், வால்பாறை சேக்கல்முடி எஸ்டேட் அருகே உள்ள தேயிலை […]
தனுஷ்கோடி பகுதிகளில் 150 காக்கைகளை வேட்டையாடிய இருவரிடம் வனத் துறை அலுவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து – தனுஷ்கோடி செல்லும் சாலைப்பகுதியில் இருபுறமும் அடர்ந்த சவுக்கு மரக்காடுகள் உள்ளன. இந்தக் காடுகளில் பலவகையான உள்நாட்டு, வெளிநாட்டுப் பறவைகள், ஆஸ்திரேலிய பிளம்பிங்கோ பறவைகள் வசிக்கின்றன. இந்நிலையில் அடையாளம் தெரியாத இருவர் அந்தப் பகுதியில் பறந்துகொண்டிருந்த சுமார் 150 காகங்களைத் தீவனம் கொடுத்து வேட்டையாடி சாக்கு மூட்டையில் கட்டிவைத்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் வனத் துறையினருக்குத் தகவல் […]
வெங்காயம் பதுக்கலைத் தடுக்கும் வகையில் பழைய பால் பண்ணை பகுதியில் உள்ள வெங்காய மண்டியில் குடிமைப் பொருள் புலனாய்வு அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் தங்கம் – வெள்ளி விலையைப் போன்று வெங்காயம் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியிருக்கின்றனர். வெங்காயத் தட்டுப்பாடு மற்றும் விளைச்சல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சில இடங்களில் வெங்காயம் பதுக்கி வைத்து விலை ஏற்றம் […]
கள்ளச்சாராயம் விற்பனை குறித்து விசாரிக்க வந்த அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்தவில்லை என அப்பகுதி பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . திருவண்ணாமலை அருகே கீழ் பெண்ணாத்தூர் அடுத்த கீக்களூர் என்ற சிறிய கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்த்து அதை இரண்டு பேர் பாக்கெட்களில் போட்டு விற்பனை செய்துவந்துள்ளனர் . இதனை அப்பகுதி கூலி வேலை செய்வோர் மற்றும் அருகில் உள்ள கிராமத்தில் உள்ளவர்களும் வாங்கி குடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர் . இதனால் அப்பகுதியில் உள்ள குடும்பத்தினர் பாதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் […]
அனுமதி இல்லாமல் வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்த பெண் அதிகாரி விவகாரத்தில் மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரியை மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் வாக்குப் பதிவு என்னும் மையத்திற்குள் பெண் அதிகாரி நுழைந்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. மேலும் இதற்க்கு மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான நடராஜன் காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் மதுரை மக்களவை தொகுதி வேட்பாளர் சு. வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வாக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இதில் , […]