தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் முகமது நஸ்ருதீன் என்பவரை பிடித்து விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து அவரது உடைமைகளை ஸ்கேன் செய்த போது ஏதோ லேசாக அசைவது போல் தெரிந்தது. இதனால் அதிகாரிகள் அவர் வைத்திருந்த பையை திறந்து பார்த்தபோது 4 அரியவகை குரங்கு குட்டிகள் இருப்பதை […]
Tag: officers action
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பொலவக்காளிபாளையம் பகுதியில் அரசு அனுமதியின்றி தனியார் குழந்தைகள் காப்பகம் நடத்தப்படுவதாக அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தனியார் குழந்தைகள் காப்பகத்தில் சோதனை நடத்திய போது 18 வயதிற்கு உட்பட்ட 11 சிறுவர்கள் தங்கியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து எந்தவித பதிவேடுகள் இல்லாமலும், அரசு அனுமதி இல்லாமலும், போதுமான பணியாளர்கள் இல்லாமலும் சிறுவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதுகுறித்த […]
மது போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெலக்கல் நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு இளவரசன் என்பவர் தமிழ் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கு வரும்போது இளவரசன் சில நேரங்களில் மது போதையில் வந்ததாக கல்வித்துறை அதிகாரிக்கு புகார் அளிக்கப்பட்டது. மேலும் இளவரசன் மாணவிகளை ஆபாசமாக திட்டுவதோடு, சரியாக பாடமும் நடத்தவில்லை என கூறப்படுகிறது. கடந்த 2-ஆம் தேதி மது போதையில் […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள கிழக்கு ராமாபுரம் ஊராட்சி அலுவலகத்தில் சுற்றுச்சுவர் இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பொது வழியாக இருந்த இடத்தில் அலுவலக சுற்றுச்சுவர் கட்டப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளதாக அதே பகுதியில் வசிக்கும் ஒருவர் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி தலைமையிலான அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். இதனை அறிந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக இருக்கும் ஊராட்சி அலுவலக சுற்றுச்சுவரை இடிக்க விடமாட்டோம் என கூறியுள்ளனர். […]
ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்ட குடிசையை அதிகாரிகள் அகற்றினர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள புதுமாவிலங்கை கண்டிகை பகுதியில் சிலர் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து குடிசை அமைத்துள்ளதாக துணை தாசில்தார் சுந்தருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி துணை தாசில்தார் சுந்தர் தலைமையிலான வருவாய் ஆய்வாளர் கவிதா, கிராம நிர்வாக அலுவலர் எஸ்தர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடிசை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குடிசை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கூலி தொழிலாளியான செல்வராஜ்(53) என்பவர் […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாதவசேரி பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் குவைத் நாட்டில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் சொந்த ஊருக்கு வந்த சங்கர் ஓட்டுநர் உரிமத்தை கொண்டு செல்லாமல் மறந்து வீட்டிலேயே வைத்துவிட்டு குவைத் சென்று விட்டார். இதனால் சங்கரின் தம்பி அருள் கள்ளக்குறிச்சியில் இருக்கும் கூரியர் நிறுவனத்திற்கு சென்று அண்ணனின் ஓட்டுநர் உரிமத்தை குவைத் அனுப்புமாறு கூறியுள்ளார். அப்போது 5 நாட்களுக்குள் கூரியர் செல்ல வேண்டுமெனில் 3500 […]
சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர் பகுதியில் ரமீலா(72) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பொன்னியம்மன் கோவில் தெருவில் நடந்து சென்ற போது மர்ம நபர் ஒருவர் மூதாட்டி அணிந்திருந்த 10 கிராம் தங்க சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பாலா(25) என்பவரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் […]
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் கடையில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசாரும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் அந்த பகுதியில் இருக்கும் கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரண்டு கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது […]
விதிமுறையை மீறிய 6 கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சிகரெட் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி கோவை- பொள்ளாச்சி மெயின் ரோடு, ஆர்.எஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் கடைகளில் நேற்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விதிமுறைகளை மீறி சிகரெட் விற்பனை செய்த 6 கடைக்காரர்களுக்கு அதிகாரிகள் 1200 ரூபாய் அபராதம் விதித்தனர். […]
மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி கவுண்டன் பட்டியில் வழக்கறிஞரான சோலைராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஒரு மனுவினை தாக்கல் செய்தார். அந்த மனதில் கூறியிருப்பதாவது, கடந்த 2016-ஆம் ஆண்டு சோலைராஜா மதுரையில் இருக்கும் நகை கடையில் பழைய வெள்ளி நகைகளை கொடுத்து விட்டு புதிய நகைகளை வாங்கியுள்ளார். அன்றைய நிலவரப்படி பழைய வெள்ளி நகைக்கு 6601.28 ரூபாய் கொடுப்பதற்கு பதிலாக 5505 ரூபாய் மட்டும் கணக்கிட்டனர். மேலும் புதிய நகைக்காக 1096.20 […]
சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி வங்கிக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் வசிக்கும் கால்வின் ஜோசப் என்பவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் கால்வின் ஜோசப் வங்கி கணக்கில் உள்ள முதிர்ச்சி அடைந்த பணத்தை வேறு ஒரு கணக்குக்கு அனுப்பும்படி தெரிவித்துள்ளார். இதனால் வங்கியானது முதிர்வடைந்த தொகையை மட்டும் செலுத்தி அதற்கான வட்டி தொகையை கொடுக்கவில்லை. இதனால் வட்டி படத்தை தருமாறு கால்வின் ஜோசப் வங்கியை அணுகியும் அவர்கள் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் ராகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டார் தொகுதியில் இருக்கும் டைல்ஸ் கடையில் 31 ஆயிரத்து 752 ரூபாய் கொடுத்து டைல்ஸ் வாங்கியுள்ளார். அந்த டைல்ஸ் வாங்கிய 4 மாதங்கள் இல்லையே ஓட்டைகள் விழுந்து உபயோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ராகேஷ் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளரை தொடர்பு கொண்டு டைல்ஸ் கற்களை மாற்றி தருமாறு கேட்டதற்கு கடை உரிமையாளர் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனை அடுத்து வழக்கறிஞர் […]
கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். தீபாவளியின் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் சொந்த ஊருக்கு பேருந்து மற்றும் ரயில்களில் புறப்பட்டு செல்கின்றனர். கடைசி நேரத்தில் சிலர் ஆம்னி பேருந்துகளில் முண்டியடித்து செல்வதால் சில பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தது. அதன் அடிப்படையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கத்திப்பாரா, அசோக் நகர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கூடுதல் கட்டணம் வசூலித்த விதிமுறைகளை மீறிய 8 […]
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சொந்த ஊருக்கு பொதுமக்கள் பயணம் செய்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு சுங்கச்சாவடியில் போக்குவரத்து அலுவலர் சுரேஷ் தலைமையில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது வாகனங்களில் உரிமம், இன்சூரன்ஸ், ஓட்டுநர் […]
பொது இடங்களில் புகை பிடித்தவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், பூபதி, சங்கரன் ஆகியோர் கொண்ட குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொது இடங்களில் புகைபிடித்த குற்றத்திற்காக பொதுமக்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். இதனை அடுத்து புகை பிடித்தல் தடை செய்யப்பட்ட பகுதி என்று பதாகைகள் வைக்காத வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களிடமிருந்தும் அதிகாரிகள் அபராதம் வசூல் செய்தனர். இவ்வாறு […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை தாலுகா மீனவேலி கிராமத்தில் பெரியகுளம் அமைந்துள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த குளத்தில் சுமார் 2 ஹெக்டர் நிலத்தை அப்பகுதியில் வசிக்கும் 34 பேர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பை அகற்றும் படி சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வருவாய்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால் கால அவகாசம் கொடுத்தும் அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றாததால் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கார்த்திக் மற்றும் விராலிமலை தாசில்தார் சதீஷ் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று […]
25 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட தம்மத்து கோணம் என்ற பகுதியில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த சுக்கிரவார கட்டளைக்கு சொந்தமான இடம் அமைந்துள்ளது. இந்நிலையில் 3.16 ஏக்கர் நிலத்தை அறநிலையத்துறை தாசில்தார் சஜித் தலைமையில் ஒப்பந்தல் கோவில் செயல் அலுவலர் பொன்னி, பணியாளர் ஐயப்பன் ஆகியோர் முன்னிலையில் நில அளவையாளர்கள் ராகேஷ், அஜித் ஆகியோர் சுமார் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள […]
கோவிலுக்கு சொந்தமான இருபது கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களுக்கு சொந்தமான இடங்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் போரூர் கெருகம்பாக்கத்தில் இருக்கும் 15 கிரவுண்டு மனை சென்னை திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானதாகும். இதனை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். எனவே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலுக்கு சொந்தமான சுமார் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மீட்டு அறிவிப்பு […]
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் படி கள்ளங்குறிச்சி ரவுண்டானா அருகே போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாத வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இந்நிலையில் விதிமுறைகளை பின்பற்றாமல், தார்ப்பாய் சரியாக போடாமல், பிரதிபலிப்பான் ஒட்டாத 18 கனரக வாகன உரிமையாளர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
திறந்தவெளியில் உணவு தயாரித்த ஹோட்டல்களில் புரோட்டா கல்லை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் ஹோட்டல் உரிமையாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திறந்தவெளியில் உணவு தயாரித்து விற்பனை செய்யக்கூடாது என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் திறந்த வெளியில் உணவு தயாரித்து விற்பனை செய்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதன் அடிப்படையில் சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் அதிகாரிகள் ஒழுகினசேரி முதல் மீனாட்சிபுரம் வரை இருக்கும் ஹோட்டல்களில் திடீரென ஆய்வு செய்த போது ஹோட்டல்களின் வெளியே […]
தனியார் தொழில் நிறுவனங்களில் வேலை பார்த்த 3 சிறுமிகளை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். சேலம் மாவட்டத்தில் உள்ள நூற்பாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள், கோழிப்பண்ணைகளில் குழந்தை தொழிலாளர்கள் வேலையில் சேர்க்கப்பட்டுள்ளார்களா? என்பது குறித்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 சிறுமிகள் சில நிறுவனங்களில் பணியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அதிகாரிகள் சிறுமிகளை பணியில் அமர்த்திய குற்றத்திற்காக 3 நிறுவனங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் அந்த 3 […]
புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள கீழப்பாவூர் மற்றும் குறும்பலாபேரி ஆகிய முக்கிய பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் அருகில் இருக்கும் கடைகளில் கீழப்பாவூர் வட்டார மருத்துவ அலுவலர் ஆலோசனைப்படி அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ஒரு கடை உரிமையாளருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். மேலும் அனைத்து கடை உரிமையாளர்களுக்கும் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யக் கூடாது எனவும், […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பட்டாம்பூச்சி பூங்கா, மூலிகை நாற்று பண்ணை, ஆழியாறு அணை, குரங்கு நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் பாலிதீன் பைகளில் தின்பண்டங்களை எடுத்து சொல்கின்றனர். சிலர் அத்துமீறி மது பாட்டில்களையும் கொண்டு செல்வதால் ஆழியாறு பகுதியில் இருக்கும் வனத்துறை சோதனை சாவடியில் வனத்துறையினர் அவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் கண்காணிப்பையும் மீறி சிலர் பாலிதீன் […]
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு இறைச்சி கடைகள் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் தடையை மீறி சில கடைகளில் இறைச்சி விற்பனை நடைபெறுவதாக மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியனுக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் அதிகாரிகள் திண்டுக்கல் தெற்கு ரதவீதி, ஆர். எம்.காலனி, திருச்சி சாலை ஆகிய இடங்களில் அதிரடியாக ஆய்வு நடத்திய போது சில கடைகளில் இறைச்சியை விற்பனை செய்தது உறுதியானது. இதனை அடுத்து விற்பனைக்காக வைத்திருந்த 350 கிலோ கோழி, ஆடு இறைச்சிகளை அதிகாரிகள் […]
அதிக பாரம் ஏற்றி சென்ற லாரிகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவி மற்றும் பத்தமடை பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில் அதிக பாரம் ஏற்றி கொண்டு டாரஸ் லாரிகள் செல்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சப்-கலெக்டர் ரிஷப் மற்றும் போலீசார் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிக பாரம் ஏற்றி சென்ற மூன்று லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர்களிடமிருந்து 1.46 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. […]
மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்த 2 பேருக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தலைவாசல் பகுதியில் இருக்கும் மருந்து கடைகளில் கடந்த 2021- ஆம் ஆண்டு அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர். அப்போது மருந்து கடை உரிமையாளர்களான வினோத் மற்றும் செந்தில்குமார் ஆகிய இரண்டு பேரும் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரை மற்றும் மருந்துகளை விற்பனை […]
பொது இடங்களில் நின்று புகை பிடிப்பவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அருணா பொது இடங்களில் புகை படிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அதிரடியாக உத்தரவிட்டார். அதன்படி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் இருக்கும் பேருந்து நிறுத்தங்கள், உணவு விடுதி, மருத்துவமனை வளாகம், பேக்கரி உள்பட பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புகை பிடிப்பதற்கு அனுமதிக்கும் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கணவாய்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கழிப்பறைகளை மாணவர்களை வைத்து சுத்தம் செய்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக அதே பகுதியில் வசிக்கும் ரேணுகா தேவி என்பவர் மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த ஹைகோர்ட் ஒரு வாரத்திற்குள் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது. இந்நிலையில் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி முதன்மை கல்வி அலுவலர் நாசருதீனிடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். அந்த அறிக்கை […]
உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 14 ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இன்றி ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனால் காஞ்சிபுரம் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் உத்தரவின்படி போக்குவரத்து அலுவலர்களும், போக்குவரத்து போலீசாரும் தாலுகா அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக சாலை, காஞ்சிபுரம் பேருந்து நிலையம் ஆகிய பல்வேறு சாலைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆட்டோ உரிமம் புதுப்பித்தல், இன்ஷூரன்ஸ், […]
ஆட்களை ஏற்றி சென்ற குற்றத்திற்காக 10 வாகனங்களை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சரக்கு வாகனம் லாரிகளில் ஆட்களை ஏற்றி செல்வதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்படி ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ரகுபதி, மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார் ஆகியோர் செல்லியம்பாளையம் புறவழிச்சாலை, நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 2 லாரிகள், 5 சரக்கு வாகனங்கள் உள்பட பத்து […]
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை அளவீடு செய்து அதிகாரிகள் மீட்டனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள ஏலமன்னா பகுதியில் அரசு உண்டு உறைவிட பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இந்நிலையில் தனி நபர் ஒருவர் பள்ளிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து தேயிலை சாகுபடி செய்துள்ளதாக அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அம்ரித், கூடலூர் ஆர்.டி.ஓ சரவணன் ஆகியோரின் உத்தரவின்படி அதிகாரிகள் அரசு பள்ளிக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்தனர். அப்போது 7 சென்ட் நிலம் […]
அரசு பள்ளி ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சத்திரரெட்டியபட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக வேல்முருகன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மீது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் இருந்து பல்வேறு புகார்கள் எழுந்தது. அந்த புகாரின் பேரில் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தியுள்ளார். இந்நிலையில் வேல்முருகனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடக்குறிச்சி பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து கடைகள் கட்டியுள்ளனர். இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டு நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான இடங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அதிரடியாக உத்தரவிட்டது. அந்த உத்தரவின் படி உதவி கோட்ட பொறியாளர் சரவணன் தலைமையில் அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறி அதிக பயணிகளை ஏற்றி சென்ற 5 ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கணக்கன் பட்டியில் மூட்டை சுவாமி சித்தர் கோவில் அமைந்துள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோவில் செல்கின்றனர். இதில் விதிமுறைகளை மீறி அதிக அளவு பக்தர்களை ஏற்றிச் செல்வதாக வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார் […]
விதிமுறைகளை மீறி அதிகளவு மாணவர்களை ஏற்றி சென்ற 7 ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 105 பள்ளிகள் இருக்கின்றன. இந்த பள்ளிகளுக்கு பெரும்பாலும் மாணவர்கள் ஆட்டோ மற்றும் வேனில் செய்கின்றனர். இந்நிலையில் ஒருசில ஆட்டோக்களில் விதிமுறைகளை மீறி அதிகளவில் மாணவ-மாணவிகளை ஏற்றி செல்கின்றனர். எனவே வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ் தலைமையில் திண்டுக்கல்லில் அதிகாரிகள் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டு விதிமுறைகளை மீறி அதிகமான மாணவர்களை […]
பாசி படர்ந்து காணப்படும் சாய்வு தளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் காந்திமதி என்ற பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட ஷவரில் யானையை பாகன்கள் குளிப்பாட்டினார். இந்நிலையில் தண்ணீரில் மூழ்கி குளிப்பதற்கு வசதியாக கோவில் வளாகத்திலேயே ரூபாய் 10 லட்சம் செலவில் வசந்த மண்டபத்தில் நீச்சல்குளம் கட்டப்பட்டுள்ளது. இந்த நீச்சல் குளத்திற்குள் யானை இறங்குவதற்கு வசதியாக சாய்வு […]
சாலையோரம் போடப்பட்டிருந்த கடைகளை அதிகாரிகள் அகற்றினர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆழியாறு அணை பூங்கா முன்பு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 12 கடைகள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏலம் விடப்படுவது வழக்கம். தற்போது ஒப்பந்த காலம் முடிந்ததால் கடைகளை காலி செய்யுமாறு பொதுப்பணித்துறை மூலம் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் கடைகளை காலி செய்தனர். இந்நிலையில் பூங்கா முன்பு இருக்கும் சாலையோர கடைகளால் ஏலம் எடுக்கும் வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சாலையோரம் போடப்பட்டுள்ள கடைகளை அகற்ற […]
தரமற்ற மீன்களை விற்பனை செய்தது குறித்து விளக்கம் அளிக்க கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் இருக்கும் மீன் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் 10 கடைகளில் கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் சுமார் 400 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்து அழித்து விட்டனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து […]
காவல்துறையினர் பாதுகாப்புடன் அதிகாரிகள் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் கட்டியிருந்த ஹோட்டலை அகற்றி விட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.எம்.பி காலனியில் அரசு அலுவலர்களுக்கான குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த குடியிருப்பு பகுதியை சிலர் ஆக்கிரமித்து ஹோட்டல் நடத்தி வந்துள்ளனர். இது தொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நடைபெற்று உள்ளது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி காவல்துறையினர் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளார். அதன்படி நகரமைப்பு அலுவலர் உதயகுமார் தலைமையிலான அதிகாரிகள் காவல்துறையினர் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் ஹோட்டலை […]
பொதுமக்கள் ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்களை அகற்றி அதிகாரிகள் நடைபாதையை மீட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரவெனு ஹட்டி கிராமத்தில் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டியதால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். அதன்படி அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து […]
யானையை தாக்கிய குற்றத்திற்காக பாகனை பணி இடைநீக்கம் செய்து அதிகாரி உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் 28 கும்கி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாகன் முருகன் என்பவர் சேரன் யானையை குளிப்பதற்காக மாயார் ஆற்றிற்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து பாகனின் கட்டளைக்கு அடிபணியாததால் கோபமடைந்த முருகன் யானையை தாக்கியுள்ளார். இதனால் யானையின் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவ குழுவினர் அந்த யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். […]
அதிகாரிகள் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து சீராக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கிணத்துக்கடவு, குறிச்சி போன்ற பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குனியமுத்தூர் பகுதியில் இருக்கும் குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வீணாக சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்துள்ளனர். அதன்பின் பொக்லைன் இயந்திரத்தை […]
ஊரடங்கின் விதிமுறைகளை மீறி செயல்பட்டுக் கொண்டிருந்தால் நூற்பாலையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள வேடபட்டி ஊராட்சி பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நூற்பாலைகள் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த ஊரடங்கு சமயத்தில் நூற்பாலைகள் இயங்க அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் வேடப்பட்டி ஊராட்சி பகுதியில் இருக்கும் ஒரு நூற்பாலை தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மடத்துக்குளம் தாசில்தார் கனிமொழி மற்றும் வருவாய் துறையினர் அங்கு […]
நேற்று ஒரே நாளில் மட்டும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 1 கோடி ரூபாய் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பரிசுப்பொருட்களோ, பணமோ வழங்குவதை தடுக்கும் பொருட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் சோதனை செய்ததில் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 1 கோடியே 40 ஆயிரத்து 85 ரூபாய் பணம் […]
மகளின் திருமணத்திற்காக பட்டு புடவை வாங்க கொண்டு சென்ற பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் பறிமுதல் செய்து விட்டனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சென்னை மாவட்டத்திலுள்ள காக்கலூர் பால்பண்ணை அருகில் இருக்கும் சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த […]
தனியார் பள்ளி வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 10 லட்சம் ரூபாய் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆவடி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் எம்.ஜி.ஆர் நகர் சந்திப்பில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது […]
ஏ.டி.எம்-மில் நிரப்புவதற்காக கொண்டு சென்ற 1 கோடியே 9 லட்சத்து 47 ஆயிரத்து 800 ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் பொது மக்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படை அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள […]