400 ஆண்டுகள் பழமையான நடுக்கல்லை ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கட்டனூர் பகுதியில் கோவில் பூசாரியான பொன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம், வயலூர் குமரன், தாமரைக்கண்ணன் ஆகியோர் புதுக்குளம் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது போரில் வீர மரணம் அடைந்த வீரர்களின் நினைவாக வைக்கப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான நடுக்கல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நடுக்கல் சிற்பத்தின் தலையின் மேற்பகுதியில் […]
Tag: Old statues
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் கிராமத்தில் செங்கண்மா வரலாற்று நடுவத்தைச் சேர்ந்த பிரேம்ஆனந்த் என்பவர் நடுக்கற்களை கண்டுபிடித்துள்ளார். அதில் 2 நடுகற்கள் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் காலத்தை சேர்ந்ததும், மற்றொரு நடுக்கல் 9- ஆம் நூற்றாண்டின் இறுதியில் அந்த பகுதியை ஆட்சி செய்த நுளம்பர்களின் நடுக்கல் ஆகும். இந்த நடுக்கல்லை தொல்லியல் துறையைச் சேர்ந்த பூங்குன்றன் என்பவர் ஆய்வு செய்துள்ளார். இதுகுறித்து பூங்குன்றன் கூறியதாவது, முதல் நடுக்கலில் பெருமந்தைகளை மீட்கும் போது சாத்தனாதி சேத்தன் என்பவர் […]
1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் கிராமங்களில் வரலாற்று ஆய்வாளரான கோ.செங்குட்டுவன் என்பவர் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழங்கால கற்சிலைகளை கோ.செங்குட்டுவன் கண்டெடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, செம்மணூர் கிராமத்தில் பூரணி பொற்கலை உடனுறை அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இங்கு கிபி 8-ஆம் நூற்றாண்டை சேர்ந்த பலகை கல்லில் வடிவமைக்கப்பட்ட பழமையான ஐயனார் சிற்பமும், கிபி 10-ஆம் நூற்றாண்டை சேர்ந்த […]