நடுக்கடலில் சென்று கொண்டிருந்த கப்பலில் இருந்த இந்திய ஊழியருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஓமன் அரசு விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஓமன் நாட்டில் சலாலா பகுதியில் ஜாக் லோகேஷ் சென்ற இந்திய சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது. அந்த கப்பல் நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது அதிலிருந்த இந்திய ஊழியர் ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த கப்பலின் கேப்டன் துறைமுகத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் […]
Tag: #Oman
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் முக கவசம் அணியாமல் வெளியே செல்ல வேண்டாம் என ஓமன் நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது. கடந்த ஒரு ஆண்டு காலமாக கொரோனாவால் உலக மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளான நிலையில் இருக்கின்றன. இதனால் ஒவ்வொரு நாடும் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தி சிகிச்சை மேற்கொண்டுவருகிறது. ஓமனில் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் 369 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 896 […]
தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஓமனில் இருந்து நாடு திரும்பிய தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரானில் இருந்து லடாக் வந்த 2 பேருக்கும் கொரான இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரானா உறுதி செய்யப்பட்ட மூவரின் உடல்நிலை சீராக உள்ளது என சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.
ஓமன் நாட்டை நீண்டகாலம் ஆட்சிசெய்து வந்த சுல்தான் கபூஸ் பின் சையத் அல் சையத் உடல்நலக்கோளாறு காரணமாக இன்று காலமானார். இதுதொடர்பாக ஓமன் அரசு ஊடகம் வெளியிட்டிருந்த ட்வீட்டர் பதிவில், “சில மாதங்களாக உடல் நலக்கோளாறில் அவதிப்பட்டுவந்த சுல்தான் கபூஸ் பின் சையத் அல் சையத் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 79. 1970ஆம் ஆண்டு ஓமன் நாட்டின் சுல்தானாக முடிசூடிய அவர், அந்நாட்டை நவீனமயமாக்குவதில் பெரும் பங்காற்றினார். அதேசமயம், பரம […]
சர்வதேச டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய 10ஆவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஓமன் வீரர் கவார் அலி படைத்துள்ளார். ஹாங்காங், அயர்லாந்து, நெதர்லாந்து, நேபாளம், ஓமன் உள்ளிட்ட ஐந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் ஓமன் நாட்டில் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற எட்டாவது போட்டியில் ஓமன் அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ஓமன் அணியின் பந்துவீச்சாளர் கவார் அலி ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றினார். […]
ஓமனில் நடந்த கார் விபத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர், மனைவி மற்றும் அவரது 8 மாத குழந்தை உயிரிழந்த நிலையில், மற்றொரு குழந்தை உயிருக்கு போராடி வருகிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த 30 வயதான கவுசல்லா அஸ்மத்துல்லா கான் என்பவர் துபாயில் வசித்து வருகிறார். இவருக்கு ஆயிஷா என்ற 29 வயது மனைவி இருக்கிறார். இந்த ஜோடிக்கு 3 வயதில் ஹனியா என்ற மகளும், 8 மாதமான ஹம்சா கான் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் இவர்கள் நேற்று முன்தினம் காரில் ஓமன் […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் வானில் ஏற்பட்ட பிரமாண்ட துளை பொதுமக்களை ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓமன் எல்லைக்கு அருகே அல் ஐன் (Al ain) நகரில் வானத்தில் திடீரென மிகப்பெரிய துளை உருவானது. இந்த துளையால் அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கினர். இந்த துளை பார்ப்பதற்கு சற்று விசித்திரமாக இருந்ததால் பொதுமக்கள் மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இதனை கண்டதும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பேசத்தொடங்கினார். இதனை சிலர் மற்றொரு உலகத்திற்க்கான வாயில் என இந்த அதிசய துளையை வருணிக்கத் தொடங்கி விட்டனர். ஆனால் இதற்க்கு முற்று […]