இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை ரூபாய் 22 முதல் 23 வரை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்த நிலையில் விலையை கட்டுப்படுத்த அவற்றை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு எடுத்தது. அதன்படி எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து 14 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு விநியோகிக்கப்பட்டது. ஆனால் ஏராளமான வெங்காயம் இன்னும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் தேக்கம் அடைந்து இருப்பதாக […]
Tag: Onion Price
வெங்காய உற்பத்தி குறைவே விலை உயர்வுக்கு காரணம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வெங்காய விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வு குறித்து மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதேநேரம் வெங்காய விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர அயல்நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. எகிப்து போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பபடும் வெங்காயம், தமிழ்நாடு உள்ளிட்ட […]
திமுகவின் ஆட்சிக்காலத்தில் வெங்காயத்தின் விலையைக் கேட்டால் கண்ணீர் வரும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். வெங்காய விலை ஏற்றம் தொடர்பாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவுத்துறை அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘வெங்காய விலை ஏற்றத்தைத் தொடர்ந்து என்னை அழைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் அறிவுறுத்தினார். தற்போது வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது. முதல் கட்டமாக பண்ணை பசுமை நுகர்வோர் […]
திருவள்ளூரில் ஒரு கிலோ வெங்காயம் 50 ரூபாய்க்கு கொடுத்ததால் மக்கள் சண்டைபோட்டுக் கொண்டு வாங்கினர். இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏறிக்கொண்டே செல்கிறது. விலை ஏற்றம் அடைவதால் சில உணவகங்களில் வெங்காயத்தை அதிகளவு சேர்த்து செய்யும் உணவுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தொடர் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் உள்பட நாடு எங்கிலும் வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருக்கிறது. சென்னையின் புகழ்பெற்ற கோயம்பேடு மார்க்கெட்டில் 1 கிலோ சின்ன வெங்காயம் 200 ரூபாய் […]
தொடர்ந்து உயர்ந்து வரும் வெங்காயத்தின் விலை உயர்வு தொடர்பாக அமைச்சர்கள் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினர். ’வெங்காயம்’ மக்கள் அதிக அளவில் தங்கள் உணவில் பயன்படுத்தும் ஒரு அத்தியாவசிய உணவுப் பொருளாகும். அடிக்கடி விலை ஏற்ற இறக்கத்தை சந்திப்பதால் வெங்காயத்தை சாதாரண மக்கள் அதிகவிலை கொடுத்து வாங்க முடியாத சூழல் நிலவுகிறது.தலைநகர் சென்னையைப் பொருத்தவரையில், வெங்காயம் 30 ரூபாய் முதல் 75 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திர மாநிலத்திலிருந்து வரும் பெரிய வெங்காயம், கிலோ ஒன்று […]