உதகை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்ததாக கூறி உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம் குன்னூரில் இளி துறை கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்நாதன். இவர் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 16ம் தேதி அவரது மனைவி நாகமணிக்கு பிரசவத்திற்காக உதகை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனிடையே பணியில் இருந்த செவிலியர் மற்றும் மருத்துவர்களிடம் தனது மனைவியை பரிசோதிக்குமாறு அருள்நாதன் கேட்டுள்ளார். இதனையடுத்து நாகமணியை பரிசோதித்துவிட்டு […]
Tag: ooty
உதகை அருகே வாழைத்தோட்டம் பகுதியில் இருந்து காட்டு யானை ரிவால்டேவை முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு அழைத்துச் செல்லும் முயற்சி தோல்வி அடைந்தது. பொக்காபுரம் வனப்பகுதிக்குள் தப்பி ஓடிய ரிவால்டேவை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் உதகை அருகே மாவனவல்லா பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ரிவால்டே என்ற ஆண் யானை 10 ஆண்டுகளுக்கு மேலாக சுற்றி வந்தது. தும்பிக்கையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அடர்ந்த காட்டுப் பகுதிக்கு செல்லாத அந்த யானை […]
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஏழு மாதங்கள் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகளின் வருகை 6 லட்சமாக குறைந்துள்ளது நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நூற்றாண்டு கால பழமை வாய்ந்ததாகும். இப்பூங்காவில் கோடை சீசனை முன்னிட்டு ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதனையடுத்து சர்வதேச அளவில் புகழ் பெற்ற இம்மலர் கண்காட்சியை காண வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டில் இருந்து பல்வேறு சுற்றுலா பயணிகள் இவ்விடத்திற்கு வருவது வழக்கம். ஆனால் […]
காதலர் தினத்தை முன்னிட்டு 5 லட்சம் கார்னேசன் மலர்கள் நீலகிரி மாவட்டத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. உதகை அருகே உள்ள கூக்கல்தொரை, தும்மனட்டி, துனேரி, கொடநாடு உள்பட பல்வேறு பகுதிகளில் கொய்மலர் சாகுபடி அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. கார்னேசன், ஜெர்பரா, லில்லியம் போன்ற கொய்மலர்கள் பசுமை குடில்களில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் சில விவசாயிகள் கார்னேசன் என்ற கொய்மலரை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். சிவப்பு, வெள்ளை, ஆரஞ்சு, பிங்க், மஞ்சள் என பல […]
உதகைமண்டல கோடை விழாவை மாவட்ட ஆட்சியர், இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார். உதகை , அரசு தாவரவியல் பூங்காவில் 123வது மலர் கண்காட்சி வரும் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைப்பெறவுள்ளது . இதற்கான முன்னேற்பாடுகளான ,மலர் தொட்டிகளை அடுக்குதல் போன்றவற்றையும் கோடைகால விழாவையும் இன்று மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். 123வது மலர் கண்காட்சியை , தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைக்க உள்ளார். மொத்தம் 15 ,000தொட்டிகளில் 200க்கும் மேற்பட்ட வகையான மலர்கள் காட்சிபடுத்தப்பட […]
மலைப்பாதையில் பஸ் டிரைவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டும் சாமர்த்தியமாக பஸ்யை ஓட்டியதால் பயணிகள் உயிர் தப்பினர். திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று காலை அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. பஸ்சில் 64 பயணிகள் இருந்தனர். பஸ்சை டிரைவர் சின்னசாமி என்பவர் ஓட்டினார். பிற்பகல் 2.30 மணியளவில் காட்டேரி பகுதியில் பஸ் சென்ற போது பலத்த மழை பெய்தது. இந்நிலையில் திடீரென டிரைவர் சின்னசாமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவர் வழியை […]