மூதாட்டியின் உடலை பெண்கள் சுமந்து சென்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காளியப்பன் கவுண்டன் புதூர் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காவேரியம்மாள்(82) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக சுப்பிரமணியன் உயிரிழந்தார் இந்நிலையில் நேற்று வயது மூப்பு காரணமாக காவேரியம்மாளும் உயிரிழந்தார். பொதுவாக இறந்தவர்களின் உடலை ஆண்கள் சுமந்து சென்று அடக்கம் செய்வது வழக்கம். இந்நிலையில் காவேரியம்மாவின் உடலை பெண்கள் சுமந்து ஊரை சுற்றி வந்து கோவை அரசு […]
Tag: Organ donation
மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை காமராஜர் நகர் காலனியில் அழகிரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாந்த்(35) என்ற மகன் இருந்துள்ளார். இவர் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 9- ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் அம்மாபேட்டை பகுதியில் இருக்கும் உழவர் சந்தை அருகே சென்ற போது நிலைதடுமாறி பிரசாந்த் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை […]
உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கியதற்காக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் விருது வழங்கப்பட்டது. இதை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார். டெல்லியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் 10ஆவது உடல் உறுப்பு தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கியமைக்காக தமிழ்நாட்டிற்கு 5ஆவது முறையாக விருது கிடைத்துள்ளது. இவ்விருதினை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், மத்திய […]
அமைச்சர் ஜெயகுமாரும், நானும் உடல் உறுப்பு தானம் செய்துள்ளோம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். உடல் உறுப்பு தான விழிப்புணர்வு வார விழாவானது, சென்னை, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது, அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் விஜயபாஸ்கர் விழாவை தொடங்கி வைத்து ,உடல் உறுப்பை தானம் செய்த 5 பேர் குடும்பத்திற்கு பாராட்டு மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கினார்கள்.மேலும் உடல் உறுப்பு தானத்தை மையப்படுத்தி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டன. இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய சுகாதார துறை அமைச்சர் […]