தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 3பேரை காவல்துறையினர் கைது செய்தனர் . ஓட்டப்பிடாரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் தனியாக வரும் பெண்களை குறிவைத்து ஒரு கும்பல் வழிப்பறி செய்து வந்தனர் .இது குறித்து விசாரணை செய்து வந்த போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட முத்தரையரத்தை சேர்ந்த தினேஷ்குமார் ,மதுரை மாவட்டம் மேலுரைச்சேர்ந்த கருப்பசாமி ,நெல்லை திசையன்விளையை சேர்ந்த துரை ஆகியோரை கைது செய்தனர் .அவர்களிடம் இருந்த […]
Tag: Ottapidaram
ஒட்டப்பிடாரத்தொகுதி திமுக வேட்பாளர் எம் .சி. சண்முகையாவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர் .எஸ். ராஜகண்ணப்பன் எம் . எல் .ஏ தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார் . மே 19 ம் தேதி , இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் , தேர்தல் பிரச்சாரம் பலமாக நடந்துவருகிறது . இந்நிலையில் ஒட்டப்பிடாரத்தொகுதி திமுக வேட்பாளர் எம் .சி. சண்முகையாவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர் .எஸ் .ராஜகண்ணப்பன் எம் . எல் .ஏ மற்றும் அனிதா ஆர் .ராதாகிருஷ்ணன் எம் […]
”எடப்பாடி ஆட்சிக்கு, மே 19ம் தேதி இறுதி மணி அடிக்க தயாராகுங்கள் வாக்காளர்களே” என வாக்காளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறைக்கூவல் விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், ஒட்டபிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையா ஆவார். இவரை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின், தாளமுத்து நகர், தருவை குளம், புதியமுத்தூர் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்தார் . அப்போது அவர் பேசுகையில், ”பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி எடப்பாடி ஆட்சி ” என அவர் விமர்சித்தார். மேலும் தூத்துக்குடி முதல் சென்னை வரை புதிய ரயில் […]
தமிழகத்தில் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. மேலும் சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் இதோடு சேர்த்து மீதமுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தினார். ஆனால் நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி 3 சட்டமன்ற தொகுதி தவிர்த்து 18 சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் […]
தமிழகத்தில் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு மே 19ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. மேலும் சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் இதோடு சேர்த்து மீதமுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தினார். ஆனால் நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி 3 சட்டமன்ற […]
ஓட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 493 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் . அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுந்தர்ராஜ் என்பவருடைய வெற்றியை எதிர்த்து கிருஷ்ணசாமி சென்னை உயர்நீதி மன்றத்தில் தேர்தல் வழக்கு தொடுத்தார் . அதில் அரசு மணல் குவாரி ஒப்பந்தம் உள்ளதை மறைத்துவிட்டு […]