காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்ற முதலமைச்சர் அறிவிப்புக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. தமிழ்நாட்டின் தஞ்சாவூர், திருச்சி, புதுகை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என சேலம் தலைவாசலில் நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். இதற்கு பல்வேறு அமைப்புகள், கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகிறது. நேற்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். […]
Tag: #palaniswami
தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்காக மூன்று தலைமுறைகளாக வசித்துவந்த மக்களைக் காவல் துறையினரைக் கொண்டு கட்டாயப்படுத்தி வெளியேற்றிய அலுவலர்களால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாநகரம் மெய்யனூர் இட்டேரி பகுதியின் மயானத்தின் அருகேயுள்ள அரசு நிலத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த சுமார் இருபதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். சுமார் மூன்று தலைமுறைகளாக வசித்துவந்த இடத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடர்பான கட்டடம் கட்டுவதாகக் கூறி, சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் வசித்துவந்த பகுதியிலிருந்து வெளியேற்றி, அருகேயுள்ள இடத்தில் வசித்துக்கொள்ளும்படி […]
தொகுதி நலனுக்காக தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்க முடிவு செய்துள்ளேன் என்று பாரிவேந்தர் தெரிவித்தார். இந்திய ஜனநாயக மக்கள் கட்சி நிறுவனரும், எம்.பியுமான பாரிவேந்தர் சார்பில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளிகளுக்கு 100 கணினிகள் வழங்கும் விழா திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களிடம் பாரிவேந்தர் கணினிகளை வழங்கினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாரிவேந்தர், “கடந்த ஆறு மாதங்களில் மத்திய அமைச்சர்களை சந்தித்து தொகுதிக்கு வேண்டிய பல்வேறு திட்டங்களை […]
சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ஒரு கோடி ரூபாய் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த எட்டாம் தேதியன்று இரவு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை அங்கு வந்த இரண்டு நபர்கள், கைத்துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்திவிட்டும் தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்தினருக்கு தன்னுடைய […]
நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்த 2019-2020 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது துணை நிதிநிலை அறிக்கையில் கூடுதலாக 6,580 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019-2020 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது துணை நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில், மொத்தமாக 6 ஆயிரத்து 580 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு 1000 ரூபாய் ரொக்கப் பணத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு […]
தமிழ்நாடு அரசால் விருது மழை பொழிந்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆளுநர் உரை மீதான பதிலுரையில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர், அரசுமுறைப் பயணமாக வெளிநாடுகளுக்கு சென்றதன் மூலம் லண்டனில் புகழ்வாய்ந்த கிங்ஸ் மருத்துவமனையின் கிளை, தமிழகத்தில் விரைவில் அமைக்கப்பட இருப்பதாகத் தெரிவித்தார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பிறகு 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 63 புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதன் மூலம் 83 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகியிருப்பதாகக் கூறிய அவர், […]
கன்னியாகுமரியில் சுட்டுக்கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழ்நாடு – கேரளா எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதி சோதனைச்சாவடியில் காவல் துறையினர் இன்று காலை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் வந்த அடையாளம் தெரியாத இருவர், காவல் உதவி ஆய்வாளர் வில்சனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பினர். இதில் வில்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த […]
திருவள்ளூரில் பெண்ணை காப்பாற்ற சென்று உயிரிழந்த இளைஞர் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் முன்பதாக முதல்வர் பழனிசாமி ஒரு சில அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது திருவள்ளூரில் பெண்ணை காப்பாற்ற சென்று உயிரிழந்த யாகேஷ் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றார். மேலும் பலத்த காயமடைந்த சார்லி என்ற இளைஞர் குடும்பத்திற்கு ரூ […]
முதல்வர் பழனிசாமிக்கு சிறந்த அரசியல் ஆளுமைக்கான விருது வழங்கப்பட்டது 2019 ஆம் ஆண்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு ஹலோ எஃப்எம் சார்பாக விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான திரு. எடப்பாடி பழனிசாமிக்கு ‘சிறந்த அரசியல் ஆளுமை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் தனியார் வானொலி சார்பில் சிறந்த அரசியல் ஆளுமை என்ற விருதினை முதல்வர் பழனிசாமி பெற்றுள்ளார். விருது பெற்ற முதல்வர் பழனிசாமிக்கு பலரும் வாழ்த்து […]
சுஜித் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 10 லட்சமும் அதிமுக சார்பில் ரூ. 10 லட்சம் நிதியுதவியாக அளிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25 ஆம்தேதி மாலை ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சுஜித் என்ற 2 வயது சிறுவனை மீட்க நடைபெற்ற 80 மணி நேரப் போராட்டம் தோல்வியில் முடிந்தது. சுஜித்துக்காக நாடே அஞ்சலி செலுத்திவருகிறது. இந்நிலையில், முதலமைச்ச எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் […]
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து பலியான குழந்தை சுஜித்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுகாட்டுப்பட்டியில் 2 வயதான சுஜித் கடந்த 25 ஆம் தேதி மாலை 5: 40 மணியளவில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். அவனை மீட்க கடந்த 4 நாட்களாக 80 மணி நேரத்தையும் தாண்டி மீட்பு பணி நடைபெற்றது. ஓட்டு மொத்த தமிழகமும் சுஜித் எப்படியாவது உயிருடன் வர வேண்டும் […]