பல்லாவரம் அருகே கத்தியைக்காட்டி மிரட்டி 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவளித்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள அனகாபுத்தூர் கண்ணியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவன் சதீஷ்குமார்.. வயது 30 ஆகிறது.. கட்டுமானப் பணியாளராக வேலைபார்த்து வரும் இவன், நேற்று இரவு இதே பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமியைக் கத்தியைக் காட்டி மிரட்டி, வலுக்கட்டாயமாக அவருக்குப் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.. இதனால் சிறுமி சத்தம் போடவே, அதனைக்கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர். இதனைப்பார்த்த சதீஷ்குமார் […]
Tag: #Pallavaram
பல்லாவரம் அருகே 6 வயது சிறுவன் மூடப்படாமலிருந்த தண்ணீர்த் தொட்டியில் விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள நெமிலிச்சேரி ரங்கநாதன் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் 4ஆவது மகன் சந்தோஷ் குமார்.. இந்த சிறுவனுக்கு 6 வயதாகிறது.. இச்சிறுவன் நேற்று தன்னுடைய அண்ணன் மற்றும் அக்காவுடன் வீட்டின் அருகே புதிதாக கட்டிவரும் கட்டடத்தில் மூடப்படாமலிருந்த 12 அடி தண்ணீர் தொட்டியின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, திடீரென சிறுவன் எதிர்பாராதவிதமாக அந்தத் தொட்டியில் […]
பல்லாவரம் அருகே தாய் திட்டியதால் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல், அரங்கநாதன் தெருவில் வசித்து வருபவர் ரம்யா.. 16 வயதுடைய இவர் 10-ஆவது படித்து விட்டு, வீட்டிலிருந்து வந்தார்.. இவரது தந்தை கொத்தனாராக வேலைபார்த்து வருகிறார்.. தாய் பழவியாபாரம் செய்து வருகிறார். இதனால் வீட்டு வேலைகளை செய்யுமாறு மகள் ரம்யாவிடம் அவரது தாய் கூறியுள்ளார். ஆனால் ரம்யா வீட்டு வேலைகளை செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. […]
கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். பல்லாவரத்தையடுத்த திரிசூலம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பனை செய்துவருவதாக பல்லாவரம் காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார் வந்துகொண்டிருந்தது. இதனையடுத்து காவல் துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு கும்பல் ரகசியமாக கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது. இதையடுத்து அவர்களை மடக்கிப்பிடித்து கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர், பல்லாவரம் காவல் […]
பல்லாவரத்தில் இராணுவ வீரரை சுட்டுக் கொன்ற இராணுவ வீரர் தன்னை தானே சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லாவரம் ராணுவ குடியிருப்பில் பிரவீன்குமார் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் இவர் கீழ் பணியாற்றுபவர்கள் ஜக்ஸிர். இவர் சரியாக பணிக்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு தகவல் வெளியாகியது.இது தொடர்பாக ஜக்ஸிர்_ருக்கும் , பிரவீன்குமாருக்கும் அடிக்கடி வாக்கு வாதம் ஏற்படும்.அதே போல நேற்று நள்ளிரவிலும் ராணுவ முகாமில் இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படுகின்றது. இதனால் […]