திருப்பூர் மாவட்டம் புளியம்பட்டி பவானி ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம் பெரிய புதூரில் சலாவுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள்,1 மகள் என மொத்தம் 3 குழந்தைகள் உள்ளனர். இவருடைய மூத்தமகன் சல்மான் பாசித் 8 – ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் தனது குடும்பத்தினருடன் சல்மான் பாசித் புளியம்பட்டியில் உள்ள பவானி ஆற்றுக்கு குளிக்கச் […]
Tag: parents
லால்குடியில் இருந்து கர்ப்பிணி மகளை காரில் கடத்திச் சென்ற பெற்றோர் உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், லால்குடியிலுள்ள பரமசிவபுரம் 8ஆவது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு ஹரிஹரன்(24) என்ற மகன் இருக்கிறார்.. தனியார் நிறுவன ஊழியரான இவரும், மதுரை மாவட்டம் தத்தனேரி பகுதியை சேர்ந்த மாரிராஜன் என்பவரது மகள் கீதா சோப்ராவும் (19), காதலித்து வந்துள்ளனர்.. இந்நிலையில் இருவரும் கடந்த ஜனவரி மாதம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் […]
பெற்றோர்களும் சமுதாயத்தினரும் ஆட்டிசம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகிறது குழந்தைகளின் மூளை நரம்பில் ஏற்படும் பாதிப்பின் காரணமாக ஆட்டிஸம் ஏற்படுகிறது. இது மூளை வளர்ச்சி மன வளர்ச்சி குறைபாடு காரணமாக ஏற்படுவது அல்ல என்பதை பெற்றோர்களும் சமுதாயத்தினரும் புரிந்து கொள்ளுதல் அவசியமாகும். இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆட்டிசம் குழந்தைகளுக்கு குறைபாடாக இருந்தாலும் பெற்றோர்களின் கவனிப்பின் மூலம் […]
18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்ததை சமூகநலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே கிராம பகுதி ஒன்றில் 18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு திருமணம் செய்ய இருப்பதாக அடையாளம் தெரியாத நபர் மூலம் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில் சமூக நல ஆர்வலர் சைல்டு லைன் உறுப்பினர் மற்றும் காவல்துறையினர் துத்திப்பட்டு பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிளஸ்-1 படித்து கொண்டிருந்த மாணவியின் படிப்பை நிறுத்தி […]
சாலை விபத்தில் சிக்கி, மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயக்குமார் – ராணி தம்பதி. இவர்களுக்கு ரவீந்திரன், சுரேந்தர் என்று இரண்டு மகன்கள் இருந்தனர். இதில் இளையமகன் சுரேந்தர் தனது பெற்றோர்களை சமயபுரம் கோயிலுக்கு அழைத்துச் செல்வதற்காக, சேலம் பேருந்து நிலையத்திலிருந்து வழி அனுப்பி வைத்துவிட்டு, நேற்று இரவு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கிய சுரேந்தரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு […]
கோவை மாவட்டம் பேரூர் அருகே மது அருந்த பணம் தராத தந்தை தாயை பெற்ற மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திரா வீதியை சேர்ந்தவர் சுந்தரம் அவர் மனைவி துளசி இவர்களுக்கு நான்கு மகனள்களும் கார்த்திகேயன் என்ற ஒரு மகனும் உள்ளனர். கார்த்திகேயன் கூலி வேலை செய்து வருகிறார் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கார்த்திகேயன் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்துள்ளார். இதனை பொறுத்துக் கொள்ள இயலாத கார்த்திகேயன் […]
குழந்தைகள் தவறான பாதையில் செல்வதற்கு இணையதளமும் ஒரு காரணம். அதை எந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற சுய கட்டுப்பாடு தேவை என்று இயக்குநரும் நடிகருமான சேரன் கூறியிருக்கிறார். ‘ராஜாவுக்கு செக்’ படத்தை பெற்றோர்கள் தங்களது குழந்தைளோடு சேர்ந்து பார்க்க வேண்டும் என்று இயக்குநரும், நடிகருமான நடிகர் சேரன் கூறியுள்ளார். இதுகுறித்து சேரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இன்றைய சமூகத்தில் நடந்துகொண்டிருக்கும் மற்றும் அனைத்து பெற்றோர்களும் பயந்து கொண்டிருக்கும் விஷயம் குறித்த படமாக ‘ராஜாவுக்கு செக்’ அமைந்துள்ளது. நம் […]
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்க முடியாமல் 412 இலவச பயிற்சி மையங்கள் திணறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது . தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்பீட் என்ற நிறுவனத்தின் மூலம் நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான நீட் பயிற்சி மையங்கள் தாமதமாக தொடங்கியதால் இது வரை முப்பதுக்கும் குறைவான வகுப்புகளே நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் தேர்தல் மற்றும் தொடர் […]
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர்களுடைய பெற்றோரின் நீதிமன்ற காவலை நீட்டித்து, அவர்களை மீண்டும் நவம்பர் 21ஆம் தேதி ஆஜர்படுத்த தேனி மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தேனி மருத்துவக் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்ட பிறகு, இது குறித்த விசாரணை தீவிரமடைந்தது. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட மாணவர்கள், அவர்களின் பெற்றோரான சரவணன், டேவிஸ், முகமது சபி ஆகியோர் பிணை கேட்டு மதுரை உயர்நீதின்றக் கிளையில் […]
வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தன்று பெற்றோர்கள் செல்போன் அனைத்தையும் அணைத்து விட்டு இரவு ஒரு மணி நேரம் அவர்களுடன் கட்டாயம் நேரம் செலவிட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுரை கூறியுள்ளது. தொழில்நுட்பமானது நாள்தோறும் வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இதனால் வீடுகளில் பெற்றோர்கள், குழந்தைகள், உறவினர்கள் முகம் பார்த்து பேசும் பழக்கமும் குறைந்து கொண்டே வருகிறது. முகம் பார்த்து பேசுவதை விட செல்போனில் பேசி மகிழ்வது அதிகம் விரும்பி வருகின்றனர். தொலைவில் இருக்கும் […]
இலங்கையில் நடந்த கொடூர வெடிகுண்டு சம்பவத்தால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளதாக கத்தோலிக்க தேவாலயம் கார்டினல் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 21_ஆம் தேதி நடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் நடந்த கொடூர தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 258 பேரின் உயிரை பறித்த இந்த கொடூர நிகழ்வில் 500_க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதை நிகழ்த்தியது தாங்கள் தான் என்று IS பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இந்நிலையில் , இலங்கையின் கத்தோலிக்க தேவாலயம் கார்டினல் மால்கோல்ம் ரஞ்சித் கடந்த […]
விருதுநகரில் தனியார் பள்ளியை பெற்றோர்கள் முற்றுகை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . விருதுநகர் நகராட்சி அலுவலகம் எதிரே அரசு உதவி பெறும் தனியார் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பெற இரவு முழுவதும் நீண்ட வரிசையில் பெற்றோர்கள் காத்திருந்தனர்.இந்நிலையில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகை செய்தனர். இதனையடுத்து மேலும் ஆத்திரமடைந்த பெற்றோர்களில் சிலர் மூடப்பட்ட பள்ளியின் […]