பெங்களூரு சிறையில் இருக்கும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மூன்றாவது முறையாக பரோலில் வெளிவர உள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவருமாக டிடிவி தினகரனால் அறிவிக்கப்பட்ட சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மூன்று ஆண்டு சிறை தண்டனையை நிறைவுசெய்துள்ள அவருக்கு இன்னும் ஓராண்டு தண்டனை காலம் மீதம் உள்ளது. இதையடுத்து அவர் மூன்றாவது முறையாக பரோலில் வெளிவர இருப்பதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. […]
Tag: Parole
பேரறிவாளனின் ஒரு மாதம் பரோல் இன்றுடன் முடிவடைகின்ற நிலையில், நாளை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய ஒரு மாத கால பரோல் இன்றுடன் முடிவடைகிறது. இதனையடுத்து, நாளை காலை 10 மணிக்கு பேரறிவளானின் வீட்டிலிருந்து காவல் துறையினரின் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். இந்நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தனது கணவர் குயில்தாசனின் […]
ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயாஸூக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயாஸூக்கு 30 நாள் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகன் தமிழ்கோவிற்கு திருமண ஏற்பாடுகளுக்காக ராபர்ட் பயாஸ் பரோல் கோரியிருந்தார்.இந்நிலையில் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது, அரசியல் கட்சித் தலைவர்களுடன் பேசக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் பயாஸுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.
ராஜீவ் வழக்கில் ராபர்ட் பயாஸ்_க்கு 30 நாட்கள் பரோல் கோரிய மனு மீது நவம்பர் 4-ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயாஸ் தனது மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக 30 நாள் பரோல் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தனது மகள் தமிழ் கோ நெதர்லாந்தில் வசித்து வருகின்றார். 29 வயதான தன் மகளுக்கு திருமண ஏற்பாடுகளை நடைபெற்று வருகின்றது. […]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் ஆயுள் தண்டனை பெற்று வருகின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்து தமிழக அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. ஆனால் ஆளுநர் இன்று வரையில் எந்த முடிவும் […]
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் பரோல் மனு மீது 3 வாரத்துக்குள் பரிசீலித்து முடிவு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுவிட்டுள்ளது. விருதுநகர் அருப்புக்கோட்டையை சேர்ந்த ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தனது மகன் ரவிச்சந்திரன் 27 ஆண்டுகளாக சிறையில்இருக்கிறார். இவர் நான்கு முறை மட்டுமே பரோலில் வந்துள்ளார். குறிப்பாக ஏழு ஆண்டுகள் , 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கும் ஒருவர் முன்கூட்டியே விடுவிக்க […]
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் புழல் சிறையில் உள்ள ராபர்ட் பயாஸ் 30 நாள் பரோல் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயாஸ் தனது மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக 30 நாள் பரோல் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தனது மகள் தமிழ் கோ நெதர்லாந்தில் வசித்து வருகின்றார். 29 வயதான தன் மகளுக்கு திருமண ஏற்பாடுகளை நடைபெற்று வருகின்றது. இதை […]
ராஜிவ் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினிக்கு பரோல் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி , முருகன் , சாந்தன் , பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் நளினி தனது மகளின் திருமணத்திற்காக பரோல் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்நிலையில் அவருக்கு ஜூலை 25_ஆம் தேதி முதல் இரண்டு வாரம் பரோல் […]