மார்ச் மாதத்தில் 60 சதவிகிதம் ரயில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸின் தாக்கம் நாடு முழுவதும் பரவலாக அதிகரித்து வருவதால், அதனுடைய அச்சம் பொதுமக்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில், பொதுமக்களும் பயணங்களை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ரயில் பயணத்தை பயணிகள் விரும்பாமல் ஏற்கனவே முன்பதிவு செய்து இருந்தால் அதை ரத்து செய்தும் வந்துள்ளனர். அதன்படி கடந்த மார்ச் மாதத்தில் முன்பதிவு செய்த பயணிகள் […]
Tag: passenger
சென்னை மெட்ரோ ரயில் வழித்தடத்தில் உயர்மின்அழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சின்னமலையில் இருந்து தேனாம்பேட்டை நோக்கியும் , தேனாம்பேட்டையில் இருந்து விமான நிலையம் நோக்கி செல்லும் வழித்தடம் என் இரண்டு வழித்தடத்தில் மெட்ரோ இரயில் சேவை இயக்கப்படுகிறது. தேனாம்பேட்டையில் இருந்து சின்னமலை இடையே செல்லும் மெட்ரோ ரயில் பாதையில்சரியாக மூன்று மணியளவில் உயர்மின் அழுத்தக் கம்பி அறுந்து விழுந்துள்ளதாக தெரிகின்றது. இதனால் தற்போது ஒரு வழிப்பாதையில் மட்டுமே மெட்ரோ ரயில் சேவையானது இயக்கப்பட்டு வருகிறது. இதன் […]
தனியார் பேருந்தை வேகமாக ஓட்டியதற்கு கண்டிப்பு தெரிவித்த பயணியை ஓட்டுநர் அடித்து பேருந்திலிருந்து கீழேயிறக்கியதால் பரபரப்பு நிலவியது. கோவை ரயில் நிலையம் அருகில் இன்று ஒண்டிப்புதூரிலிருந்து உக்கடம் வழியாக காந்திபுரம் சென்ற தனியார் பேருந்தை அதன் ஓட்டுநர் மிக வேகமாக ஓட்டியுள்ளார். அதனால் பயந்த பயணி ஒருவர் மெதுவாக ஓட்டுமாறு ஓட்டுநரிடம் கூறியுள்ளார். அதை, சிறிதும் பொருட்படுத்தாத ஓட்டுநர் தொடர்ந்து வேகமாகவே ஓட்டியுள்ளார். அதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் கோபமடைந்த ஓட்டுநர், அந்தப் பயணியை அடித்து […]
சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில், வண்டியிலிருந்து ஒரு பயணி தவறி கீழே விழும் நேரத்தில், அங்கிருந்த காவலர் ஒருவர் பயணியை லாவகமாக உள்ளே தள்ளி உயிரைக் காப்பாற்றிய சம்பவம் குறித்த காணொலி இணையத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுத் தந்துள்ளது. தொடர்வண்டியிலிருந்து கீழே விழும் பயணியை காவலர் ஒருவர் காப்பாற்றும் காணொலி இணையத்தில் வைரலாகியுள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து இன்று காலை 6:45 மணிக்கு எட்டாவது நடைமேடையிலிருந்து, தாதர் விரைவு தொடர்வண்டி புறப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாகப் பயணி ஒருவர் […]
பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததால் வழக்கம் போல் மதுரை- செங்கோட்டைக்கு தினசரி பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது .. மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு தினசரி பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதில் மதுரையில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் பயணிகளின் இரயில் ( வண்டி எண் : 56734,56735 ) இரு மார்க்கங்களில் கடந்த 13 -ந் தேதியில் இருந்து தண்டவாள பராமரிப்பு பணிக்காக விருதுநகருடன் ரத்துசெய்யப்பட்டது .மேலும் இம்மாற்றம் 31- ந் தேதி வரை அமுலில் இருக்கும் […]
தமிழக தென் மாவட்டங்களில் போதை பொருள் கடத்தப்படுவதாக வெளியான தகவலை அடுத்து மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மும்பையில் இருந்து தமிழகத்தின் தென் மாவட்டத்தில் உள்ள பகுதிகளுக்கு சட்ட விரோதமாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து மதுரை ரயில் நிலையத்தில் திடீரென ரயில்வே துறை காவலர்கள் மோப்ப நாயின் உதவியுடன் மதுரை இரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர்.இச்சோதனையானது மதுரை ரயில் நிலைய காவல் ஆய்வாளர் முகேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சுமார் […]
ரெயில் செல்லும் பயணிகளிடம் பணம் பறித்ததாக 4 ஆண்டுகளில் மட்டும் 73,000 திருநங்கைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரெயில் பயணத்தின் போது திருநங்கைகளால் தொல்லைகள் ஏற்படுவதாகவும் , அவர்கள் பயணிகளின் பணத்தை வலுக்கட்டாயமாக பறிப்பதாகவும் பல்வேறு தரப்பினரிடமிருந்து புகார்கள் எழுந்தது. இதில் பணம் கொடுக்காத பயணிகளிடம் அவர்கள் மிக மோசமாக நடப்பதாகவும், சில பயணிகளை தாக்குவதாகவும் ரெயில்வே போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டதையடுத்து இதை உறுதி செய்த போலீசார் திருநகைகள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ரயிலில் பயணிகளுக்கு இடையூறாக இருக்கும் திருநகைகள் மீது எடுத்த நடவடிக்கை […]