சுடுகாட்டுக்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேவ சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய அக்ரஹாரம் கிராமத்தில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் இருக்கும் சுடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாததால் பொதுமக்கள் உயிரிழந்தவர்களின் சடலத்தை வயல் வழியாக தூக்கி செல்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனையடுத்து மழைக்காலங்களில் வயல்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் […]
Tag: People request
மேம்பாலம் அமைத்து தர வேண்டி அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பனங்கட்டான்குடி சாலையில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இதனை கடந்து தான் பனங்காட்டான்குடி, அகரஎலத்தூர், கொண்டல், பெருமங்கலம், ஆதமங்கலம், புங்கனூர், மருதங்குடி, நிம்மேலி, வல்லுவகுடி, தென்னங்குடி, அகணி, பட்டமங்கலம், கோவில்பத்து மற்றும் சீர்காழி நகர் பகுதியிலிருந்து புறவழிச்சாலை வழியாக மயிலாடுதுறை, சிதம்பரம் உள்ளிட்ட ஊர்களுக்கு வாகனங்கள் செல்ல வேண்டியுள்ளது. இந்நிலையில் 30 நிமிடத்திற்கு 1 முறை ரயில்கள் வந்து செல்வதால் அடிக்கடி இந்த ரயில்வே […]
கணவரின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெண் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக மேலத்தானியம் பகுதியில் வசித்து வரும் இளஞ்சியம் மற்றும் அவரது உறவினர்கள் சென்றுள்ளனர். இளஞ்சியத்தின் கணவர் ஆனந்தன் என்பவர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்துள்ளார். அங்கு ஏற்பட்ட விபத்தில் ஆனந்தன் உயிரிழந்து விட்டார். இந்நிலையில் ஆனந்தன் இறந்து 20 நாட்களுக்கு மேலாகியும் அவரது […]
சுடுகாடுக்கு செல்வதற்கான பாதையை அமைத்து தர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொட்டிமேடு கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கென்று தனியாக சுடுகாடு ஒதுக்கப்படாததால் ஏரிக்கரையை சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அதற்குப் சென்று வர போதிய பாதை வசதி இல்லாததால் இறந்தவர்களை கொண்டு செல்ல பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் தொட்டிமேடு கிராமத்தில் ஏழுமலை என்பவர் உடல்நலக் குறைவினால் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இறுதி மரியாதை செய்து […]
பண்ருட்டியில் பழுதடைந்த நீர்த்தேக்க தொட்டி அறையில் இயங்கும் ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காட்டாண்டி குப்பம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 500க்கு அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாக இந்த பகுதி ரேஷன் கடை பழுதடைந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இயங்கி வருகிறது. இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் எங்கள் பகுதிக்கு ரேஷன் கடைக்கான கட்டிடம் கட்டப்படவில்லை […]