குடிநீர் வினியோகம் செய்யாததால் அதை வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிறுணமல்லி ஊராட்சிக்கு குடிநீர் வழங்குவதற்காக ஏரியில் 2 ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது ஏரி முழுமையாக நிரம்பி இருக்கின்றதால் 2 ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு சில பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் […]
Tag: people struggle
மயானத்திற்கு செல்ல முடியாமல் தடுப்பு பாதை அமைத்ததால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தாழனூர் கிராமத்தில் மேட்டு தெரு பகுதி வழியாக ஒரு பாதை அமைந்திருக்கிறது. இந்தப் பாதையை ஊராட்சி நிர்வாகத்திற்கு ஒருவர் தானமாக கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக அவ்வழியாக மயானத்திற்கு செல்வதற்கும், அருகில் இருக்கும் கிராமங்களுக்கு செல்வதற்கும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது திடீரென அந்தப் பாதை வழியாக யாரும் செல்ல முடியாத வகையில் தனிநபர் ஒருவர் தடுப்பு ஏற்படுத்தியுள்ளார். […]
வழிபாதை பிரச்சனையில் உடன்பாடு ஏற்படாததால் கோபமடைந்த கிராம மக்கள் காவல்நிலையம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஈரியூர் கிராமத்தில் அய்யாதுரை என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே ஊரில் வசிக்கும் ஜெயபிரகாஷ் என்பவருக்கும் அய்யாதுரைக்கும் இடையே கிராம சாலையில் வழிபாதை சம்மந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் காவல்நிலையத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படாததால் கோபமடைந்த ஜெயப்பிரகாஷின் ஆதரவாளர்களான கிராம மக்கள் […]
லாரி அதிவேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கென்னடிகுப்பம் பகுதியில் ஜல்லி கற்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள் மற்றும் லாரிகள் அதிக வேகத்தில் இயக்கப்படுவதாகவும், இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜல்லி ஏற்றிக் கொண்டு அதிவேகமாக சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதனை அடுத்து மின் கம்பத்தில் மோதிய ஜல்லி லாரியை சிறை […]
குடிநீர் வழங்குமாறு ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியாக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் கடந்த சில நாட்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் இருந்துள்ளது. ஆதலால் அப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் […]
ஆதார் சேவை மையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள நகராட்சி அலுவலக வளாகத்தில் இயங்கி வருகின்ற ஆதார் சேவை மையத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் நேரில் வந்து ஆதார் கார்டில் பெயர் நீக்கல், தொலைபேசி எண் சேர்த்தல், நீக்கல் மற்றும் பெயர் சேர்த்தல் போன்ற திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது மத்திய அரசு சார்பாக தொழிலாளர் நல வாரியத்தில் 18 வயது முதல் 59 வயது வரை பதிவு செய்யலாம் […]
சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வி.கூட்டு ரோட்டிலிருந்து விருதாச்சலம் வரை தேசிய நெடுஞ்சாலை அமைந்திருக்கிறது. இதில் கீழ்குப்பத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் சுங்கச்சாவடியில் முதல் கட்டணம் வசூலிக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இதை அறிந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துச் சுங்கச்சாவடியின் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்துள்ளனர். இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி […]
கழிவுநீர் கால்வாயை தூர்வாராமல் இருப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருவேப்பிலங்குறிச்சியில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் கழிவுநீர் கால்வாய் தூர் வாராமல் இருப்பதினால் அதில் செல்லும் நீர் கால்வாயில் செல்லாமல் பேருந்து நிறுத்தத்தின் வழியாக ஆண்டிமடம் செல்லும் சாலை ஓரத்தில் வழிந்து ஓடுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது. இது பற்றி புகார் […]
பள்ளிக்கூடத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் இருந்து கடலூர் மாவட்டம் வழியாக தஞ்சாவூர் வரை இருக்கும் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இம்மாவட்ட காட்டுமன்னார்கோவில் அருகே வானமாதேவி கிராமத்தில் தற்போது விரிவாக்கப் பணிக்காக கட்டிடங்களை அகற்றும் பணி நடைபெற்றுள்ளது. இதனையடுத்து அங்குள்ள முத்துமாரியம்மன் கோவில் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை அகற்ற அதிகாரிகள் முயற்சி செய்த நிலையில் அப்பகுதி மக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு […]
வீட்டிற்குள் புகுந்த தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேலபுலம்புதூர் ஊராட்சியில் இருக்கும் எம்.ஜி.ஆர் நகர் மற்றும் மேட்டு தெரு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் கசக்கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. இது பற்றி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் கோபம் அடைந்த […]
தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளான சந்திரன் நகர் மற்றும் அவ்வை நகர் பகுதிகளில் 1500-க்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதிகளில் எப்பொழுது மழை பெய்தாலும் மழைநீர் வெளியேறுவதற்கு வடிகால் இல்லாத காரணத்தினால் குளம் போல் நீண்ட நாட்களாக தண்ணீர் தேங்கி விடுகின்றது. இதனால் பொதுமக்கள் கொசுத்தொல்லை, துர்நாற்றத்தால் அவதிப்பட்டு வந்துள்ளனர். இது பற்றி நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை மனு […]
வெள்ள நீரை வெளியேற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதிகளில் தொடர் கனமழை காரணத்தினால் ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறுவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் ஆம்பூர் அடுத்திருக்கும் துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கர் நகர் குடியிருப்பு பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்ததை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் இதை அறிந்து வந்த எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகள் உரிய […]
வீடுகளை சூழ்ந்திருக்கும் மழைநீரை அகற்ற கோரி கிராம மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டியூர் அருகாமையில் இருக்கும் மாரியம்மன் வட்டத்தில் 100-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் குட்டை நிரம்பி உபரி நீர் வெளியேறி அங்குள்ள வீடுகளை சூழ்ந்து இருக்கின்ற காரணத்தினால் ஒரு சில வீடுகளில் மழை நீர் புகுந்து இரண்டு நாட்களாகியும் வற்றாமல் இருந்து வருகிறது. அதன்பின் வீடுகளில் சேர்ந்து […]
குடிநீர் வசதி இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மருங்கூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு முறையான குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அருகாமையில் இருக்கும் விவசாய நிலங்களுக்குச் சென்று குடிநீர் பிடித்து வந்து பயன்படுத்தி வந்தனர். இதுபற்றி பலமுறை புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வந்தனர். இதனால் கோபமடைந்த […]
மயானத்திற்கு செல்ல பாதை வசதி இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள எடையந்தாங்கல் கிராமத்தில் 100-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இதில் இறப்பவர்களின் உடலை அடக்கம் செய்வதற்காக மயானத்திற்கு செல்ல பாதை இல்லாத காரணத்தினால் விவசாய நிலங்களில் வழியாக உடலை மயானத்திற்கு எடுத்து செல்கின்றனர். இதனால் மயானத்திற்கு செல்ல பாதை அமைத்துத் தருமாறு பொதுமக்கள் பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் […]
பேருந்துகளில் பொதுமக்கள் குடை பிடித்தவாறு பயணம் செய்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் இயக்கப்படும் பேருந்துகள் மோசமான நிலையில் இருக்கின்றன. தற்போது அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஏனெனில் பேருந்து மேற்கூரை வழியாக மழைநீர் வடிகின்றது. இந்நிலையில் பேருந்துக்குள் மழைநீர் வடிவதால் பொதுமக்கள் குடைகளை பிடித்தவாறு பயணம் செய்கின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறும் போது ஊரடங்கு நேரத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி […]