Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்” தீர்த்தவாரியில் கலந்து கொண்ட பக்தர்கள்….!!!

ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடைபெற்ற தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டத்தில் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 13-ஆம் தேதி ஊஞ்சல் உற்சவம் தொடங்கியது. விழாவின் நிறைவு நாளான நேற்று மூலஸ்தானத்தில் இருந்து காலை 9:15 மணிக்கு புறப்பட்ட நம் பெருமாள் சந்திராபுஷ்கரணி குளத்திற்கு வந்த பிறகு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை அடுத்து காலை 9:45 மணிக்கு நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

“புரட்டாசி மாத கடைசி வெள்ளிக்கிழமை” காரையார் கோவிலில் குவிந்த பக்தர்கள்….!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் புகழ்பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் இரு சக்கர வாகனம், கார்கள் மற்றும் சிறப்பு பேருந்துகளில் கோவிலுக்கு சென்று சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தார், பட்டவராயன், பேச்சியம்மன், தளவாய் மாடன், தூசி மாடன் மற்றும் பரிவார தேவதைகளை வழிபட்டினர். முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் திருப்பணிக்காக 12 கோடி ரூபாய் […]

Categories
ஆன்மிகம் விழாக்கள்

“சங்கர ராமேஸ்வரர் கோவில்” கொடியேற்றத்துடன் தொடங்கிய ஐப்பசி திருக்கல்யாண விழா….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் சங்கர ராமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முன்னதாக காலை 7 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. இந்நிலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். வருகிற 22-ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

Categories
ஆன்மிகம் விழாக்கள்

“தீர்த்தம் எடுக்கும் நிகழ்ச்சி” 28 கி.மீ தூரம் பாதயாத்திரையாக வந்த வாலிபர்கள்….. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்….!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நூர்சாகிபுரம் பகுதியில் உள்ள காளியம்மன் கோவில், மாரியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக தீர்த்தம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து நூர்சாகிபுரம் பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் விரதம் இருந்து மேற்கு தொடர்ச்சி மலை மீது இருக்கும் காட்டழகர் என்று அழைக்கப்படும் சுந்தரராஜ பெருமாள் கோவிலின் அடிவாரத்தில் உள்ள நூபுர கங்கை தீர்த்த தொட்டியில் தீர்த்தம் எடுத்து 28 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரையாக வந்தனர். இதனை அடுத்து தீர்த்த நீரை […]

Categories
ஆன்மிகம் கோவில்கள் மதுரை மாவட்ட செய்திகள்

வரம் தரும் “ஆதி ஜோதி முருகர் கோவில்” புரட்டாசி மாத பௌர்ணமி சிறப்பு பூஜைகள்….!!!!

மதுரை மாவட்டத்திலுள்ள செம்பட்டி கரடு மழை அடிவாரத்தில் வரம் தரும் ஆதி ஜோதிமுருகர் கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு விபூதி, இளநீர், குங்குமம், பால், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட 11 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தனர். இதனை அடுத்து ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த முருகப்பெருமானுக்கு மகா தீபாரதனை நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

Categories

Tech |