Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கோவையில் தவிக்கும் இலங்கை பெண்” மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு…!!!!

இலங்கை யாழ்ப்பாணத்தில் நாகையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வானதி(39) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஜெனித் என்ற மகனும், கீர்த்தனா என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் சுற்றுலா விசாவில் வானதி தமிழகம் வந்து கும்பகோணம் பகுதியில் இருக்கும் நண்பர்களின் வீடுகளுக்கு சென்று தங்கியுள்ளார். இதனை அடுத்து ஊரடங்கு முடிந்ததும் கோவை தடாகம் ரோடு டி.வி.எஸ் நகரில் இருக்கும் தோழி ஒருவர் வீட்டிலிருந்து கொண்டே சொந்த நாட்டுக்கு செல்ல முயற்சி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“பிரசவத்தின் போது தவறான சிகிச்சை” பரிசோதனையில் தெரிந்த உண்மை…. மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கணவர்…!!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இங்கு கைக்கு குழந்தையுடன் வந்த தம்பதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது பெயர் வெங்கடேசன். பண்ருட்டி சிறுவத்தூர் பகுதியில் எனது மனைவி பத்மாவதி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். கடந்த செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி கடலூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் எனது மனைவிக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அக்டோபர் 14-ஆம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குமரி மீனவர்கள் மாயம்…. மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை…!!!

இரண்டு குமரி மீனவர்கள் மாயமானதால் அவர்களது குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடியப்பட்டணம் மீனவ கிராமத்தில் சகாய செல்சோ(37) என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் ஆண்டனி(33) என்பவரும் பக்ரைன் நாட்டில் தராப் மாஜித் என்பவரால் அவரது படகில் மீன் பிடிப்பதற்கு பணியில் அமர்த்தபட்டனர். கடந்த 17-ஆம் தேதி இருவரும் மீன்பிடிப்பதற்காக மொராக் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ் கடலுக்கு சென்றுள்ளனர். கடந்த 19-ஆம் தேதி அவர்கள் கரை திரும்பி இருக்க […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“காப்பாளராக சான்றிதழ் வழங்க வேண்டும்” பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக போராடும் மூதாட்டி….!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காமன்கோட்டையில் கண்ணம்மாள்(68) என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி தனது மகன் வழி பேத்தி மற்றும் பேரனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு எனது மகன் தர்மலிங்கம் டெங்கு காய்ச்சல் காரணமாக இருந்துவிட்டார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு எனது மருமகள் நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தையை மட்டும் தூக்கிக் கொண்டு எங்கோ சென்று விட்டார். இதனால் கார்த்திகா(8), லாவண்யா(13), […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட 2 குடும்பத்தினர்…. என்ன காரணம்….?? மாவட்ட ஆட்சியரிடம் மனு….!!

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 2 குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் கரிசல்பட்டி கிராமத்தில் வசிக்கும் பாலமுருகன் உட்பட சிலர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நானும் எனது உறவினர் குடும்பத்தினரும் வீடு கட்டி அருகருகே வசித்து வருகிறோம். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“ஆபத்தான நிலையில் இருக்கும் மின்கம்பம்” பொதுமக்களின் கோரிக்கை…!!

சாய்ந்து விழும் நிலையில் இருக்கும் மின்கம்பத்தை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாஞ்சிக்கோட்டை சாலே ஜமால் உசேன் நகர் 2-வது தெருவில் இருக்கும் மின் கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் சிமெண்ட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் பலத்த காற்று வீசினால் மின்கம்பம் சாய்ந்து விழும் அபாயம் இருக்கிறது. எனவே உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்னரே அதிகாரிகள் ஆபத்தான நிலையில் இருக்கும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“நிவாரண தொகை தாங்க” பல லட்ச ரூபாய் நஷ்டம்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

சேதமடைந்த வாழைகளுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார். தென்காசி மாவட்டத்திலுள்ள சம்பன்குளத்தில் விவசாயியான சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது 1 1/2 ஏக்கர் நிலத்தில் வாழைகள் பயிர் செய்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் வீசிய சூறைக்காற்றில் 500-க்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்து விழுந்ததால் சாமி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து சேதமடைந்த வாழைகளுக்கு நிவாரண தொகை வழங்க நடவடிக்கை வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை கைது செய்யுங்க” போலீஸ் சூப்பிரண்டிடம் மூதாட்டி அளித்த மனு…!!

மோசடியில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை கைது செய்ய வலியுறுத்தி மூதாட்டி போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடக்குறிச்சி பகுதியில் மதியழகன் சுசிலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சுசீலா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, ஈரோட்டை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான ராஜாங்கம் என்பவர் மூலமாக பருவாச்சி கிராமத்தில் இருக்கும் ஆசிரியர் காலனியில் உள்ள ஒரு வீட்டு மனையை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்த ஒற்றை யானை…. பெரும் நஷ்டத்தில் விவசாயிகள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சில்லரைபுரவு பஞ்சாயத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 800 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு தென்னை, வாழை, மா, நெல் உள்ளிட்ட விவசாயம் அதிக அளவில் நடைபெறுகிறது. இந்நிலையில் ஒற்றை தந்தத்துடன் காட்டு யானை ஒன்று திரவியம்நகர் பகுதியில் சுற்றி திரிகிறது. இந்த காட்டு யானை விவசாய […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உக்ரைனில் சிக்கி தவிக்கும் மகள்…. 2 நாட்களாக பேசவில்லை…. மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு…!!

உக்ரைனில் சிக்கி தவிக்கும் மகளை மீட்டுத்தருமாறு பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூரில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரித்திகா என்ற மகள் உள்ளார். இவர் உக்ரைனில் இருக்கும் மருத்துவக் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ரித்திகாவின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கடந்த 2 நாட்களாக உக்ரைனில் சிக்கித் தவிக்கும் எங்களது மகள் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவில்லை. இதனால் மகளுக்கு என்ன ஆனது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அரைநிர்வாணமாக சென்ற சகோதரர்கள்….. சார்பதிவாளரிடம் அளிக்கப்பட்ட மனு…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

சகோதரர்கள் அரைநிர்வாண கோலத்தில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர்.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் சகோதரர்களான பழனியப்பன், வரதராஜன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சகோதரர்கள் தங்களது தந்தை ராமன் என்பவரது பெயரில் இருக்கும் நிலத்தை பாகப்பிரிவினை செய்வதற்காக வில்லங்க சான்றிதழை பெற்றுள்ளனர். அதில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 13 செண்ட் நிலத்தில் 6 1/2 செண்ட் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு போச்சம்பள்ளி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“நகை,பணத்துடன் மாயமாகிவிட்டார்” கணவரை கண்டுபிடித்து தாங்க….. போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு….!!

நகை மற்றும் பணத்தை தன் காணாமல் போன கணவரை கண்டுபிடித்து தருமாறு பெண் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஞானிபாளையம் பகுதியில் இந்துமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது கணவர் பெயர் ஹரிபாபு. இவர் பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். எனது கணவர் கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென காணாமல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அநியாயம் பண்றாங்க…. கொலை மிரட்டல் விடுத்த கும்பல்…. காவல்துறை சூப்பிரண்டிடம் மனு….!!

கந்து வட்டி கும்பல் கொலை மிரட்டல் விடுவதாக காவல்துறை சூப்பிரண்டிடம் மனு அளித்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கின்ற காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தில் பாண்டியன் என்பவர் புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியதாவது, நெமிலி தாலுக்கா வேகாமங்களம் கிராமத்தில் நான் வசித்து வருகிறேன். அரக்கோணத்தில் இருக்கும் டாஸ்மாக் மதுபானக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறேன். அதன்பின் வீடு கட்டும் பணிக்காக சிலரிடம் பணம் வாங்கியுள்ளேன். இதனை அடுத்து வாங்கிய கடன் தொகையை திருப்பி செலுத்தி விட்டேன். இருப்பினும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“பாலியல் தொந்தரவு செய்கிறார்”… நடவடிக்கை எடுங்க… விசைத்தறி உரிமையாளர் மீது தொழிலாளர்கள் புகார்..!!

தனியார் குடியிருப்பில் வசிக்கும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கும் விசைத்தறி உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்கள் நாமக்கல் கலெக்டரிடம்  மனு கொடுத்தனர்.. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள தோக்கவாடி பகுதியிலுள்ள பெண்கள் சிலர் விசைத்தறி கூடத்தில் தங்கி வேலைபார்த்து வருகின்றனர். அவர்கள் குடும்பத்தினருடன் மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். அந்த புகாரில் கூறப்பட்டதாவது, “தங்களது விசைத்தறி கூடத்தின் உரிமையாளர் செல்வம் என்பவர், விசைத்தறி கூட வளாகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

சட்ட விரோதமாக இயங்கும் பார்களை மூட தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தல்..!!

சட்டவிரோதமாக இயங்கி வரும் மதுக்கூடங்களில், ஆய்வுக்குச் செல்லும் அதிகாரிகள் தாக்கப்படுவதாகவும், அதுகுறித்து புகார் அளித்தால் போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். புளியம்பட்டி நகராட்சிப் பகுதியில் 6 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இவற்றில் இரண்டு கடைகளில் மட்டுமே பார் வைத்துக்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. மீதமுள்ள நான்குக் கடைகளை ஒட்டி சட்ட விரோதமாக ஆளும் கட்சியினரின் 24 மணி நேரமும் மது விற்பனையுடன் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு கடத்தப்படுவதற்கு எதிர்ப்பு .. விஜய் மல்லையா மனு இன்று விசாரணை..!!

இந்தியாவிற்கு நாடு கட்டப்பட்டதற்கு  எதிராக தொழிலதிபர் விஜய் மல்லையா தாக்கல் செய்த  மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை  இன்று பிரிட்டன் உயர்நீதிமன்றம் துவங்குகிறது. இந்திய வங்கிகளில் 9,000 கோடி கடன் வாங்கிய விஜய் மல்லையா அதை திருப்பி செலுத்தாமல், லண்டனுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு தப்பி சென்றார். அவரை நாடு கடத்த உத்தரவிடக் கோரி லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் இந்திய அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விஜய் மல்லையா கடன்களை திருப்பிச் […]

Categories
மாநில செய்திகள்

5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை சட்ட விரோதமானது என அறிவிக்க மனு!

5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான அரசாணையை சட்ட விரோதமானது என அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த லூயிஸ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாய இலவச கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது 5 மற்றும் 8 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை நடத்தும் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு .. உச்சநீதி மனறத்தில் புதிய மனு..!!!

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரானார் முகேஷ் குமார் சிங் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தார்.  இதனையடுத்து பிப்ரவரி 1ந் தேதியன்று 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது. இந்நிலையில், கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததை எதிர்த்து, குற்றவாளி முகேஷ் குமார் சிங் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஆனால் இந்த மனுவை உச்சநீதிமன்றம் […]

Categories
மாநில செய்திகள்

JUST NOW : ‘வழக்கு வாபஸ் ஏன் ? திராவிட கழகம் விளக்கம் ..!!

நடிகர் ரஜினிக்கு எதிராக திராவிடர் கழகம் தொடரப்பட்ட வழக்கை  வாபஸ் பெற்றது குறித்து விளக்கம் அளித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் புத்தக விழாவில் பெரியார் குறித்து சர்சையாக பேசியதற்கு மன்னிப்பு கேட்கமுடியாது என தெரிவித்துள்ளது தமிழகத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. இதனிடையே நடிகர் ரஜினி மீது நடவடிக்கை எடுக்க கோரி  50க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டது. அதே போல இதேபோல சென்னை உயர் நீதிமன்றத்திலும் கடந்த 21-ந் தேதி வழக்கு தொடரப்பட்டது. திராவிட இயக்கம் சார்பில் நீதிமன்றத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ரஜினிக்கு எதிரான வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி!!

பெரியார் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் ஜனவரி 14ஆம் தேதி நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் நடத்திய ஊர்வலத்தில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண உருவங்களை எடுத்துச்சென்றதாகவும், காலணி மாலை அணிவிக்கப்பட்டிருந்ததாகவும் பேசினார். பெரியார் பற்றி பொய்யான தகவலைப் பரப்பி பெரியாரின் பெயருக்கு களங்கம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வேளாண்மைக்கு தனி பட்ஜெட் கோரி விவசாயிகள் மனு!

வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றுகூடி வேளாண்மைக்கு தனி பட்ஜெட் கோரி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த 20 ஆண்டுகளில் மாநிலத்தின் மொத்த வரி இரண்டு லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்த நிலையில், உழவர்களுக்கு பாசன மின்சாரம் மற்றும் காப்பீட்டு நெல் கரும்பு ஊக்கத்தொகை நல வாரியம் கடன் தள்ளுபடி மானியம் பெற 6,100 கோடி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

‘தரமற்ற ரேஷன் அரிசி…. 1 கிலோவுக்கு ரூ 25 வழங்க வேண்டும்… ஆட்சியர் அலுவலகத்தில் மனு.!

ரேஷனில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக இருப்பின் அதற்கான பணத்தை மக்களுக்கு அரசு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. குறைதீர் கூட்டம் உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 4ஆம் தேதி மாலை விலக்கிக்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து அரசின் வழக்கமான செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு மனுக்கள் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மறைமுக தேர்தலை எதிர்த்து மனு தாக்கல்..!!

உள்ளாட்சித் தேர்தலில் மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படுவதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மறைமுக தேர்தல் முறையை ரத்து செய்யக்கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ”தமிழ்நாட்டிலுள்ள 15 மாநகராட்சிகளுக்கான மேயர்கள், 276 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள் ஆகியவைகளுக்கான தலைவர்கள் நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இப்போது இப்பதவிகளுக்கு […]

Categories
சினிமா மாநில செய்திகள்

Breaking : ”நடிகர் சங்க தேர்தல் செல்லாது” தமிழக அரசு வாதம் ….. !!

நடிகர் சங்கத் தேர்தல் சட்டப்படி நடத்தப்படாததால் செல்லாது என அறிவிக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டதுள்ளது. நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கு மற்றும் உறுப்பினர் நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று நீதிபதி கல்யாணசுந்தரம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கடந்த ஜூன் 23-ம் தேதி நடந்த நடிகர் சங்க தேர்தலில் 70% பேர் வாக்களித்திருக்கிறார்கள். பதவி காலம் முடிந்துள்ளதால் நடிகர் சங்க பணிகள் தேங்கி கிடக்கின்றது. உடனே வாக்கு எண்ணிக்கை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவன் வெளியூரில்…. சந்தர்ப்பத்தை பயன்படுத்திய வாலிபர்… கமிஷனரிடம் மனு கொடுத்த இளம்பெண்..!!

இளம்பெண் ஒருவர் தான் தனியாக வசித்து வருவதால் பக்கத்து வீட்டு வாலிபர் பாலியல் தொல்லை கொடுப்பதாக  கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.  சென்னையை அடுத்துள்ள மாங்காடு பகுதியைச் சேர்ந்தஇளம்பெண் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, கோவூர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். எனது கணவர் பெங்களூருவில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். பக்கத்து வீட்டில் வசித்து வரும் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“விஜய்மல்லையா மனு ஏற்பு” இந்தியா கொண்டு வருவதில் சிக்கல்….!!

நாடுகடத்த எதிர்ப்பு தெரிவித்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டதால் மல்லையாவை  இந்தியாவுக்கு கொண்டுவர சிக்கல் ஏற்பட்டுள்ளது .  SBI உள்ளிட்ட இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன்பெற்று விட்டு அதை திரும்ப செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற இந்திய தொழிலதிபர்  விஜய் மல்லையாவை நாடு கடத்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா சார்பில் லண்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

இன்று நடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு…. பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!

புனித எப்பாஸ் பள்ளியில் இன்று காலை 7 மணிக்கு நடிகர் சங்கத்தின் தேர்தலின் வாக்குப்பதிவு  நடைபெறுவதால் பலத்த போலீஸ் போடப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் நடக்கிறது. இதில் நாசர் , விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் , ஐசரி கணேஷ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. பல்வேறு தடைகளை சந்தித்த நடிகர் சங்க தேர்தல் இன்று சென்னை மயிலாப்பூரில்  உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

ஐசரி கணேஷ் தேர்தலில் நிற்கும் தகுதியை இழந்து விட்டார்…. பூச்சிமுருகன் விமர்சனம் ..!!

ஐசரி கணேஷ் நடிகர் சங்க தேர்தலில் நிற்கும் தகுதியை இழந்து விட்டார் என்று பாண்டவர் அணி பூச்சிமுருகன் விமர்சித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் பல்வேறு தடைகளை தாண்டி நாளை நடைபெற உள்ளது. இதில் நாசர் , விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே.பாக்யராஜ் , ஐசரி கணேஷ்  தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரனம் காட்டி தேர்தலுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க காவல்துறை மறுப்பு தெரிவித்த நிலையில் , நடிகர் விஷால் தேர்தலுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நீதிபதிக்கு நன்றி கூறிய நடிகர் விஷால்…..!!

நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்ட நீதிபதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் பல்வேறு தடைகளை தாண்டி நாளை நடைபெற உள்ளது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே.பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன .சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரனம் காட்டி தேர்தலுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க காவல்துறை மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து நடிகர் விஷால் தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“சங்க விதிமுறைபடியே செயல்படுகின்றோம்” நடிகர் நாசர் பேட்டி …!!

நடிகர் சங்க விதிமுறைபடியே நாங்கள் செயல்படுகின்றோம் என்று நடிகர் நாசர் தெரிவித்துள்ளார். பல்வேறு தடைகளை தாண்டி நடிகர் சங்கத்தேர்தல் நாளை சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெற இருக்கின்றது. இதற்கான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்தது. இதையடுத்து பாண்டவர் அணியினர் கூட்டாக செய்தியாளரை சந்தித்தனர்.அப்போது நடிகர்  நாசர் கூறுகையில் , நடிகர் சங்க தேர்தல் 3 வாரத்திற்கு முன்பு வரை அமைதியாகவே  நடைபெறும் என்றே நினைத்தோம். தேர்தலுக்கு இவ்வளவு பெரிய தடை எதற்காக?  தொடர்ந்து 3 ஆண்டுகளாக  எங்களுடன் பயணித்தவர்களுக்கு  […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் சங்க தேர்தலுக்கு மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் பாதுகாப்பு…. நீதிமன்றம் உத்தரவு…!!

புனித எப்பாஸ் பள்ளியில் நடிகர் சங்க தேர்தல் நடைபெறுமென்றும் , மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் பல்வேறு தடைகளை தாண்டி நாளை நடைபெற உள்ளது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே.பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன .சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரனம் காட்டி தேர்தலுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க காவல்துறை மறுப்பு தெரிவித்த நிலையில் , நடிகர் விஷால் தேர்தலுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் சங்க தேர்தல் பாதுகாப்பு “அவசர வழக்காக விசாரிக்கிறது” உயர்நீதிமன்றம் …!!

நடிகர் சங்க தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரிய வழக்கை அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கின்றது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் பல்வேறு தடைகளை தாண்டி நாளை நடைபெற உள்ளது. இதில் நாசர் ,விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே.பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன .சட்ட ஒழுங்கு பிரச்சனையை நடத்த போதிய போலீஸ் வழங்க காவல்துறை மறுப்பு தெரிவித்த நிலையில் நடிகர் விஷால் தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

விஷாலின் மனு மீதான விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தது நீதிமன்றம் …!!

நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக நடிகர் விஷாலின் மனு  விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தது உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் வருகிற 23ம் தேதி எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த முறை வெற்றி பெற்ற நாசர் ,விஷால் ,கார்த்தி ஆகியோர் உள்ளிட்ட பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. ஆனால் 23_ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“8 வழிச்சாலை திட்டம்” மத்திய அரசின் மேல் முறையீட்டு மனு இன்று விசாரணை….!!

8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றம் விதித்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகின்றது. மத்திய அரசு கொண்டு வந்த பாரத்மாலா என்ற திட்டத்தின் கீழ் சென்னை முதல் சேலம் வரை 276 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுமார் ரூ.10 ஆயிரம் கோடி செலவிவு செய்து 8 வழி சாலை அமைக்கும் திட்டம் முடிவு செய்யப்பட்டது.  இந்த திட்டத்தை செயல்படுத்த சேலம், தர்மபுரி, காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கமல்ஹாசனின் சூலூர் பிரச்சாரத்திற்கு தடை கோரி மனு…!!!

கமலஹாசன் பிரச்சாரம் செய்ய கூடாதென்று இறந்துபோன மக்கள் நீதி மையம் உறுப்பினர் பாலமுருகனின் மனைவி மனு அளித்தார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் செய்ய கூடாதென்று இறந்துபோன மக்கள் நீதி மையம் உறுப்பினர் பாலமுருகனின்  மனைவி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து பின் செய்தியாளர்களை சந்திதித்த அவர் கூறியதாவது,    கடந்த மாதம் 18ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்துக்கு சென்ற தனது கணவர் பின்பு சடலமாக வீட்டிற்கு திரும்பினார் என்றும் தனது […]

Categories

Tech |