Categories
உலக செய்திகள்

ஊரடங்கு உத்தரவு…. யாராவது கேட்கலன்னா… சுட்டுக்கொள்ளுங்கள்… பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை சுட்டுக்கொல்லுங்கள் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் உத்தரவிட்டுள்ளார். உலக நாட்டு மக்களை கொன்று குவித்து அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சமூக விலகலைஅனைவரும்  கடைப்பிடிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி, பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி இருக்கிறது. மக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்து, அவர்களை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் நோயின் தீவிரத்தை உணராமல் ஜாலியாக […]

Categories
உலக செய்திகள்

ஃபான்ஃபோன் புயலுக்கு 47 பேர் பலி… மேலும் அதிகரிக்க வாய்ப்பு..!!

பிலிப்பைன்ஸில் வீசிய ‘ஃபான்ஃபோன்’ புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. பிலிப்பைன்ஸில் வீசிய ‘ஃபான்ஃபோன்’ புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47ஆக உயர்ந்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வீசிய இந்தப் புயலில், நாட்டின் பல்வேறு பகுதிகளை பாதிப்புக்குள்ளாகின. இந்த புயலானது மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதில் வீடுகளின் கூரைகள் பிய்த்து எறியப்பட்டன. மின் கம்பங்கள் சரிந்தன. இந்தச் சம்பவங்களில் 28 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அலுவலர்கள் இருதினங்களுக்கு முன் கூறியிருந்த நிலையில், தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

அரசுமுறை பயணம் நிறைவு…. தாயகம் திரும்பினார் குடியரசு தலைவர்..!!

அரசுமுறை பயணமாக ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்குச் சென்றிருந்த இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தாயகம் திரும்பினார். பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் அழைப்பின் பேரில் கடந்த 17ஆம் தேதி அந்நாட்டிற்கு அரசுமுறை பயணமாக இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்றிருந்தார். அங்கு தலைநகர் மணிலாவில் உள்ள கல்லூரி ஒன்றில் மகாத்மா காந்தி கல்வி நிலையத்தை திறந்துவைத்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு, சுற்றுலா, அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளின் […]

Categories
உலக செய்திகள்

நா எதுக்கு பணம் கொடுக்கணும்… விமான நிலையத்தில் பெண் செய்த செயலால் சிரிப்பலை..!!

விமான நிலையத்தில் லக்கேஜ் குறிப்பிட்ட அளவைவிட எடை அதிகமாக இருந்ததால் அதிகப் பணம் கேட்ட அலுவலர்கள் வாயைப் பிளக்கும்படி பெண் ஒருவர் செய்த செயல் சிரிப்பலையை ஏற்படுத்தியது. பிலிப்பைன்ஸ் நாட்டில் ரோட்ரிக்ஸ் என்ற இளம்பெண் விடுமுறையைக் கொண்டாடுவதற்கு ஊருக்குக் கிளம்பியுள்ளார். விமான நிலையத்தில் ரோட்ரிக்ஸின் லக்கேஜை பரிசோதித்ததில் அனுமதிக்கப்பட்ட எடையளவான ஏழு கிலோவை விட இரண்டரை கிலோ அதிகமாக அதாவது 9.6 கிலோ இருந்துள்ளது. இதனால் ரோட்ரிக்ஸ் அதிகப்பணம் கட்ட வேண்டும் என்னும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். அதிகப் […]

Categories
உலக செய்திகள்

“பிலிப்பைன்சில் அடுத்தடுத்து நிலநடுக்கம்” 8 பேர் பலி …..பீதியில் உறைந்த பொதுமக்கள் …!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம்  ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். பல்வேறு தீவுகளை உள்ளடக்கியது பிலிப்பைன்ஸ். இந்த நாட்டின் லூஜன் தீவின் வடக்கே இத்பயாத் நகரின் வடகிழகில் 12 கி.மீ. தொலைவில் 12 கி.மீ. ஆழத்தில் இன்று அதிகாலை சரியாக 4.16 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த ரிக்டர் அளவு கோளில் 5.4 ஆக பதிவானதாக புவியில் ஆய்வாளர்கள் சொல்கின்றனர். இதனால் வரலாற்று சிறப்பு வாய்ந்த கிறிஸ்தவ ஆலயம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்திருந்த வீடுகள் இடிந்து விழுந்தன. அதிகாலை வேளையில் மக்கள் […]

Categories
உலக செய்திகள்

பிலிப்பைன்சில் நிலநடுக்கம்…. இடிபாடுகளில் சிக்கி 8 பேர் பலி….!!

பிலிப்பைன்சில் நாட்டின் பொடீகா நகரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 8 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பிலிப்பன்ஸ் நாட்டின் பொடீகா நகரில் நேற்று திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 1 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் அந்நகரில் உள்ள பெரிய அடுக்குமாடி கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கியது. அதனால் அந்த பகுதியில் குடியிருந்த மக்கள் பயத்தில் உறைந்து போனார்கள். இதேபோல் பிலிப்பைன்ஸ் தலைநகரான மனிலாவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி […]

Categories

Tech |