Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இதான் கடைசி தொடர்…! விலகும் கேப்டன் கோலி…. புது முடிவாலும் ரசிகர்கள் ஷாக் ..!!

வர இருக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் 20 ஓவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட்கோலி அண்மையில் தெரிவித்தார். நீண்ட அறிக்கை மூலம் விராத் கோலி தனது கருத்தை பகிர்ந்து கொண்டது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. அதே நேரத்தில் 20 ஓவர் போட்டியில் ஒரு வீரனாக செயல்படுவேன் என்றும், ஒருநாள் போட்டி – டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருப்பேன் என்றும், நீண்ட ஆலோசனைக்குப் பிறகு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மனுசனா இவன்…! ஏ.பி.டி.யின் மரண அடி…. ரோட்டுக்கு பறந்த 2 சிக்ஸர்….!!

கொல்கத்தா – பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது. ஐபிஎல் தொடரில் நேற்று  (அக்.12) நடைபெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தேவ்தத் படிகல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிஷான் சூப்பராக ஆடினார்… பவர்பிளேயில் விக்கெட்டை இழந்தோம்… தோல்வி குறித்து ரோகித் கருத்து..!!

பெங்களூரு அணிக்கு எதிரான தோல்வி குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.. ஐபிஎல் தொடரின் 10ஆவது லீக் போட்டி துபாயில் நேற்று நடந்தது.. இந்த போட்டியில் ரோஹித் தலைமயிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமயிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதியது.. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச முடிவு செய்தார்.. அதன்படி களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பெரிய மைதானத்துல 9 சிக்ஸர்… சூப்பராக ஆடிய கிஷான்… தோற்றாலும் தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்..!!

  பெங்களூரு அணிக்கு எதிராக மும்பை அணி தோற்றாலும் இளம்வீரர் கிஷான் சூப்பராக ஆடி வியக்க வைத்தார்.. ஐபிஎல் தொடரின் 10ஆவது லீக் போட்டி துபாயில் நேற்று நடந்தது.. இந்த போட்டியில் ரோஹித் தலைமயிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமயிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதியது.. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச முடிவு செய்தார்.. அதன்படி களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சரியான மேட்ஜ்!… தவித்த மும்பை… RCBயை மிரட்டிய கிஷான்… பரபரப்பான சூப்பர் ஓவர்.. வென்றது கோலிப்படை..!!

மும்பை அணியை சூப்பர் ஓவரில் வென்று அசத்தியது பெங்களூரு அணி. ஐபிஎல் தொடரின் 10ஆவது லீக் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியியும் மோதியது.. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச முடிவு செய்தார்.. அதன்படி களமிறங்கிய பெங்களூர் அணியின் தொடக்க வீரர்கள் மற்றும் ஆரோன் பின்ச் இருவரும் சிறப்பாக விளையாடினர்.. குறிப்பாக அதிரடியாக ஆடிய ஆரோன் பின்ச் தனது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் 2020: ஆர்சிபி அணிக்கு புதிய மாற்றமாவது கைகொடுக்குமா?

ஐபிஎல் தொடரின் முக்கிய அணியாக வலம்வரும் ஆர்சிபி அணி தங்கள் அணியின் புதிய லோகோவை வெளியிட்டுள்ளது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பாக அணியில் ஏதெனும் மாற்றத்தைச் செய்வது வழக்கம். இதனிடையே நேற்று ஆர்சிபி அணியின் நிர்வாகம் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளக் கணக்குகளில் இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்ற பெயரை ராயல் சேலஞ்சர்ஸ் என்று மாற்றம் செய்ததோடு, முகப்பு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹெட் மையர், குர்கீரத் மரண அடி…. ஹைதராபாத் பரிதாப தோல்வி!!

பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வென்றுள்ளது  ஐ.பி.எல் 54 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. இப்போட்டி பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரூ அணியின் கேப்டன் விராட் கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களான  சாஹா 20 (11) ரன்களும்,  கப்தில் 30 (23) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வில்லியம்சன் அதிரடியில் பெங்களூரு அணிக்கு 176 ரன்கள் இலக்கு!!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழந்து 175 ரன்கள் குவித்துள்ளது  ஐ.பி.எல் 54 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரூ அணியின் கேப்டன் விராட் கோலி  பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக விருத்திமான் சாஹாவும், மார்ட்டின் கப்திலும் களமிறங்கினர். இருவரும் நல்ல துவக்கம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மழையால் ஆட்டம் பாதியில் நிறுத்தம்…. இரு அணிகளுக்கும் சம புள்ளிகள்!!

பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டு சம புள்ளிகள் வழங்கப்பட்டது.  ஐ.பி.எல் 49 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்  பீல்டிங்கை தேர்வு செய்தார். இப்போட்டி பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில் நேற்று   இரவு 8 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழையின் காரணமாக போட்டி பாதிக்கப்பட்டு 11. 26 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

5 ஓவர் போட்டியாக மாற்றம்….. பெங்களூரு அணி 62 ரன்கள் குவிப்பு.!!

பெங்களூரு அணி 5 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 62 ரன்கள் குவித்துள்ளது.  ஐ.பி.எல் 49 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்  பீல்டிங்கை தேர்வு செய்தார். இப்போட்டி பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழையின் காரணமாக போட்டி பாதிக்கப்பட்டு 11. 26 மணிக்கு போட்டி தொடங்கியது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

RCB VS RR ஐபிஎல் போட்டி : டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங்…. மழையால் ஆட்டம் பாதிப்பு!!

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ள நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது   ஐ.பி.எல் 49 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளது . இப்போட்டி பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்  பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ள நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“வேடிக்கையாக விளையாடி வென்றோம்” விராட் கோலி கருத்து.!!

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது குறித்து கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.    ஐ.பி.எல்லில் நேற்று ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்   அணியும்  பெங்களூரு  சின்ன சுவாமி  ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியில்  அதிரடியாக விளையாடிய ஏ.பி டிவில்லியர்ஸ் 44 பந்துகள் 82* ரன்கள்  (7 சிக்ஸர், 3 பவுண்டரி), குவித்தார். மேலும்  மார்கஸ் ஸ்டாய்னிஸ் 46* (34) ரன்களும், பார்த்திவ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கடைசி கட்டத்தில் சிறப்பான பவுலிங்…. பஞ்சாப் அணியை பறக்க விட்ட பெங்களூரு..!!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை  வீழ்த்தியது     ஐ.பி.எல் 42 வது லீக் போட்டியில்  ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்   அணியும் மோதியது . இப்போட்டி பெங்களூரு  சின்ன சுவாமி  ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியில்  அதிகபட்சமாக ஏபி டிவில்லியர்ஸ் 44 பந்துகள் 82* ரன்கள்  (7 சிக்ஸர், 3 பவுண்டரி), குவித்தார். மேலும்  மார்கஸ் ஸ்டாய்னிஸ் 46* (34) […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டிவில்லியர்ஸ் அதிரடியில் கடின இலக்கு…. சேஸ் செய்யுமா பஞ்சாப்.?

பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 202 ரன்கள் குவித்துள்ளது  ஐ.பி.எல் 42 வது லீக் போட்டியில்  ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்   அணியும் விளையாடி வருகிறது . இப்போட்டி பெங்களூரு  சின்ன சுவாமி  ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக பார்த்திவ் பட்டேலும், விராட் கோலியும் களமிறங்கினர். தொடக்கத்தில் பார்த்திவ் பட்டேல் நல்ல துவக்கம் கொடுத்தார். விராட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

RCB VS KXIP ஐபிஎல் போட்டி : டாஸ் வென்ற பஞ்சாப் பீல்டிங் தேர்வு.!!

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது   ஐ.பி.எல் 42 வது லீக் போட்டியில்  ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்   அணியும் விளையாடி வருகிறது . இப்போட்டி பெங்களூரு  சின்ன சுவாமி  ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக பார்த்திவ் பட்டேலும், விராட் கோலியும் களமிறங்கி விளையாடி வருகின்றனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் XI: பார்த்திவ் பட்டேல், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனி அதிரடியில் மிரண்டு போன கோலி….!!

தோனி எங்களுக்கு பயம் காட்டிவிட்டார் என்று பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.  ஐ.பி.எல் 39 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நேற்று பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில் மோதியது.  இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை  தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 161 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பார்த்திவ் பட்டேல் 53 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் போட்டிகளில் இந்திய வீரர் நிகழ்த்தாத புதிய சாதனை படைத்த தல தோனி…!!

ஐபிஎல் போட்டிகளில் 200 சிக்ஸர் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை தல தோனி நிகழ்த்தியுள்ளார்.  ஐ.பி.எல் 39 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. இப்போட்டி பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை  தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 161 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தனி ஆளாக கடைசி வரை போராடிய தல தோனி….. 1 ரன்னில் வென்றது பெங்களூரு….!!

பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது  ஐ.பி.எல் 39 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. இப்போட்டி பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை  தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 161 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பார்த்திவ் பட்டேல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னைக்கு 162 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது பெங்களூரு அணி!!

பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 161 ரன்கள் குவித்துள்ளது. ஐ.பி.எல் 39 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை  தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணியில் விராட் கோலியும், பார்த்திவ் பட்டேலும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். விராட் கோலி 9 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சதம் விளாசிய கோலி….. ரஸெல் மரண அடி வீண்….. த்ரில் வெற்றியை ருசித்த பெங்களூரு..!!

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஐ.பி.எல் 35 வது லீக் போட்டியில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும்,  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும்மோதியது . இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று   இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். பெங்களூரு அணியில் டிவில்லியர்ஸுக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் அவருக்கு  பதிலாக டேல் ஸ்டெய்ன் […]

Categories
விளையாட்டு

விராட் கோலி அதிரடி சதம்…..மீண்டும் பெங்களூரு இமாலய ரன் குவிப்பு…. இலக்கை எட்டுமா கொல்கத்தா…!!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 213 ரன்கள் குவித்துள்ளது.   ஐ.பி.எல் 35 வது லீக் போட்டியில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும்,  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன . இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். பெங்களூரு அணியில் டிவில்லியர்ஸுக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் அவருக்கு  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

KKR VS RCB ஐபிஎல் போட்டி : மாற்றத்தில் பெங்களூரு…. டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங்..!!

பெங்களூரு  அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை  தேர்வு செய்துள்ளது  2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 35 வது லீக் போட்டியில் விராட் கோலி தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டும் மும்பையிடம் வீழ்ந்த பெங்களூரு…!!

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 31 வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில்  டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டிவில்லியர்ஸ், மொயின் அலி அதிரடி….. 172 ரன்கள் இலக்கை எட்டுமா மும்பை..!!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 171 ரன்கள் குவித்தது  2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 31 வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

RCB VS MI போட்டி…. டாஸ் வென்ற மும்பை பவுலிங்..!!

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது  2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 31 வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மும்பையை பழி தீர்க்குமா…. RCB VS MI பலப்பரீட்சை..!!

இன்றைய ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்  மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணிகள் மோதுகின்றன   2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 31 வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. முன்னாள் சாம்பியன் மும்பை அணி இந்த சீசனில் இதுவரை 7 போட்டிகள் விளையாடி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விராட் கோலி , டிவில்லியர்ஸ் அதிரடி…. முதல் வெற்றியை ருசித்த பெங்களூரு..!!

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது  ஐ.பி.எல் 28 வது லீக் தொடரில் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், விராட் கோலி  தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும்,  பஞ்சாப்பில் உள்ள மொஹாலி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு மோதியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெயிலும், கே.எல் ராகுலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தனி ஆளாக நின்று அடித்த கெய்ல்….. பெங்களூருக்கு 174 ரன்கள் இலக்கு..!!

பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 173 ரன்கள் குவித்துள்ளது    2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 28 வது லீக் தொடரில் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விராட் கோலி  தலைமையிலான ராயல்சேலஞ்சர்ஸ்பெங்களூரு அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி பஞ்சாப்பில் உள்ள மொஹாலி ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அரைசதம் விளாசிய கெய்ல்…. பஞ்சாப் அணி 11ஓவர் முடிவில் 99/2..!!

பஞ்சாப் அணி 11 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 99 ரன்களுடன் விளையாடி வருகிறது   2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 28 வது லீக் தொடரில் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விராட் கோலி  தலைமையிலான ராயல்சேலஞ்சர்ஸ்பெங்களூரு அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி பஞ்சாப்பில் உள்ள மொஹாலி ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் வெற்றி பெறுமா..? டாஸ் வென்ற பெங்களூரு பவுலிங்..!!

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது  2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 28 வது லீக் தொடரில் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விராட் கோலி  தலைமையிலான ராயல்சேலஞ்சர்ஸ்  பெங்களூரு அணியும் மோதுகின்றன. இப்போட்டி பஞ்சாப்பில் உள்ள மொஹாலி ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்றைய ஆட்டத்திலாவது வெற்றி பெறுமா…. RCB VS KXIP பலப்பரீட்சை..!!

ஐ.பி.எல்லில்  இன்றைய ஆட்டத்தில்  கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன  2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 28 வது லீக் தொடரில் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விராட் கோலி  தலைமையிலான ராயல்சேலஞ்சர்ஸ்  பெங்களூரு அணியும் மோதுகின்றன. இப்போட்டி பஞ்சாப்பில் உள்ள மொஹாலி ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. பஞ்சாப் அணி இத்தொடரில் 7 போட்டிகள் விளையாடி 4ல் வெற்றியும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பெங்களூரு அணியில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்…!!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  2019 ஐபிஎல் போட்டி கடந்த மார்ச் 23ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை அணி இந்த முறையும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலும் ஒவ்வொரு அணியும் வெற்றிக்காக போராடி வருகிறது. இதில் பெங்களூரு அணி எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் அந்த அணியால் ஒரு வெற்றியை கூட பெற முடியவில்லை. பெங்களூரு அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டும் பெங்களூரு அணி தோல்வி….. டெல்லி அணி சூப்பர் வெற்றி..!!

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 18.5 ஓவரில் 6 விக்கெட் இழந்து 152 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 20 -வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில்  டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி 20 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மாற்றத்துடன் களமிறங்கும் RCB …… தொடர் தோல்வியில் இருந்து மீளுமா….. டெல்லி அணியுடன் இன்று பலப்பரீட்சை..!!

இன்றைய ஐ.பி.எல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 20 -வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி இந்த தொடரில் இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் தோற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளதால் விராட் கோலி விரக்தியில் இருக்கிறார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டும் புயலாக உருவெடுத்த ரஸல்…… தொடர் தோல்வியில் பெங்களூரு அணி ….!!

கொல்கத்தா அணி 19.5 ஓவரில் 5 விக்கெட் இழந்து 206 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 12ஆவது ஐ.பி.எல் திருவிழா மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 17 வது லீக் போட்டியில் நேற்று  8 மணிக்கு பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோலியும்,, டிவில்லியர்ஸும் ஆக்ரோஷ தாக்குதல்….. கொல்கத்தா அணிக்கு இமாலய இலக்கு….!!

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 3 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்துள்ளது. 12ஆவது ஐ.பி.எல் திருவிழா மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 17 வது லீக் போட்டியில் இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெற்றி கணக்கை தொடங்குமா…… RCB VS KKR அணிகள் பலப்பரீட்சை….!!

இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணிகள் மோதுகின்றன 12ஆவது ஐபிஎல் திருவிழா மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 17 வது லீக் போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. பெங்களூரு அணி இதுவரையில்  4 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோற்று மண்ணை கவ்வியுள்ளது. அந்த அணியில் பேட்டிங்கில் அதிரடி வீரர் டிவில்லியர்ஸ், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நாங்கள் தோல்வியிலிருந்து மீண்டு வருவோம்” – கேப்டன் விராட் கோலி…!!

நாங்கள் தோல்வியிலிருந்து மீண்டு வருவோம் என பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.  ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 14-ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன் சிங் ஸ்டேடியத்தில் நேற்று மோதியது.  இப்போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி முதல் வெற்றியை ருசித்துள்ளது. ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்  தோல்விகளை  சந்தித்து வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் அணி, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி…… 6 ஆவது இடம் பிடித்த பெங்களூரு அணி…….!!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின்  தோல்வியால் பெங்களூரு அணி  6வது இடத்தை பிடித்துள்ளது.    12வது  ஐ.பி.எல் தொடரின் 14-ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி  ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன் சிங் ஸ்டேடியத்தில் நேற்று  இரவு 8 மணிக்கு நடைபெற்றது. இப்போட்டியில்  டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டும் பெங்களூரு அணி தோல்வி……. முதல் வெற்றியை ருசித்த ராஜஸ்தான்….!!

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழந்து  164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.   12வது  ஐ.பி.எல் தொடரின் 14-ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன . இந்த போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன் சிங் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில்  டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பார்த்திவ் பட்டேல் அரைசதம்…… ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 159 ரன்கள் இலக்கு…!!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில்4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்துள்ளது.  12வது  ஐ.பி.எல் தொடரின் 14-ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன . இந்த போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன் சிங் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில்  டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டிவில்லியர்ஸ், கோலி மீண்டும் ஏமாற்றம்…… பெங்களூரு அணி 10 ஓவர் முடிவில் 73/2….!!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 ஓவர் முடிவில் 73/2 ரன்களுடன் விளையாடி வருகிறது   12வது  ஐ.பி.எல் தொடரின் 14-ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன . இந்த போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன் சிங் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில்  டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டம்…… பெங்களூரு அணி 5 ஓவர் முடிவில் 43/0….!!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 ஓவர் முடிவில் 43/0 ரன்களுடன் விளையாடி வருகிறது   12வது  ஐ.பி.எல் தொடரின் 14-ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன . இந்த போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன் சிங் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில்  டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங் தேர்வு செய்துள்ளது…!!

 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற  ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.  12வது  ஐ.பி.எல் தொடரின் 14-ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ்  அணிகள்  மோதுகின்றன. இந்த போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன் சிங் ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து பெங்களூரு அணி களமிறங்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் வெற்றி யாருக்கு….? ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதல்….!!

இன்று நடைபெறும் 14வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான்  அணிகள்  மோதுகின்றன 12வது  ஐ.பி.எல் தொடரின் 14-ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ்  அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன் சிங் ஸ்டேடியத்தில்  இன்று இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. இரண்டு அணிகளும் விளையாடிய 3 போட்டிகளிலும் மண்ணை கவ்வியுள்ளது. இரண்டு  அணிகளிலும் சிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் இருந்தாலும் ஒருசேர அணியாக செயல்படுவதில் வெற்றி காண முடியாமல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நடுவர் செய்த தவறு கிரிக்கெட்டுக்கு நல்லது அல்ல……ரோஹித் சர்மா வருத்தம்..!!

 “நோ பால்” மூலம் வெற்றி பெற்றதற்கு மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா கவலையை தெரிவித்துள்ளார்.      ஐ.பி.எல்லில் 7-ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்  மற்றும் ராயல் சேலங்கர்ஸ் பெங்களூரு  அணிகளுக்கிடையேயான போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை அணி கடைசி பந்தில்  வெற்றி பெற்றது. ஆனால் “நோ பால்” மூலமாக வெற்றி பெற்றது பின்னர் தான் தெரியவந்தது..இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை குறிப்பிட்டு RCB ரசிகர்கள் சமூக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இது ஐ.பி.எல் கிரிக்கெட்…… கிளப் கிரிக்கெட் அல்ல….. டென்ஷனான விராட் கோலி…!!

பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, நாம் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடுகிறோம் கிளப் கிரிக்கெட்டில் அல்ல என்று கோபமாக கூறியுள்ளார்.  ஐ.பி.எல்லில் 7-ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்  மற்றும் ராயல் சேலங்கர்ஸ் பெங்களூரு  அணிகள் விளையாடியது . இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு  தொடங்கியது. இதில்  டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணி களமிறங்கி 20 ஓவர் முடிவில் 187 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இத்தனை கேமரா இருக்கு ஒருத்தர் கூட பாக்கல….. இது மும்பை வெற்றி அல்ல….. RCB ரசிகர்கள் கொந்தளிப்பு…..!!

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மலிங்கா வீசிய  “நோபால்” விவகாரம் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.   ஐ.பி.எல்லில் 7-ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்  மற்றும் ராயல் சேலங்கர்ஸ் பெங்களூரு  அணிகள் விளையாடியது . இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு  தொடங்கியது. இதில்  டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணி களமிறங்கி 20 ஓவர் முடிவில் 187 ரன்கள் குவித்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2வது வீரராக 5000 ரன்களை குவித்து விராட் கோலி சாதனை……!!

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி 5000 ரன்களை கடந்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.  ஐ.பி.எல்லில் 7-ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்  மற்றும் ராயல் சேலங்கர்ஸ் பெங்களூரு  அணிகள் விளையாடியது . இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு  தொடங்கியது. இதில்  டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணி களமிறங்கி 20 ஓவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கடைசி வரை போராடிய டிவில்லியர்ஸ்…… பரபரப்பான நிமிடத்தில் மும்பை அணி வெற்றி…!!

பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 181 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது..  ஐ.பி.எல்லில்  இன்று  7-ஆவது லீக் போட்டியில்மும்பை இந்தியன்ஸ்  மற்றும் ராயல் சேலங்கர்ஸ் பெங்களூரு  அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணி களமிறங்கி 20 ஓவர் முடிவில் 187 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக […]

Categories

Tech |