Categories
மாநில செய்திகள்

“தலாக்”கூறிய கணவன் மீது மனைவி புகார்… குடும்ப செலவுக்கு பணம் கேட்டதால் நேர்ந்த விபரீதம்..!!

உத்திரபிரேதசத்தில் முத்தலாக் தடை சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்பும் தலாக் கூறிய கணவன் மீது மனைவி புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 31 ஆம் தேதி அன்று மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பின் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. முத்தலாக் தடைச் சட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். குறிப்பாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி முத்தலாக் தடை சட்டம் […]

Categories
மாநில செய்திகள்

பிரதமர் மோடியை சந்தித்த அதிமுக எம்.பி. மைத்ரேயன் ….!!

மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் முடிவதால் அதிமுக எம்.பி. மைத்ரேயன் பிரதமர் மோடியை சந்தித்தார். பாராளுமன்றத்தில் உள்ள  மாநிலங்களவையின் தமிழக MP_க்கள் ரத்தினவேல், கனிமொழி, மைத்ரேயன், டி.ராஜா, கே.பி.அர்ஜுனன். ஆர்.லட்சுமணன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து திமுக  சார்பில் வைகோ , சண்முகம் , வில்சன் ஆகியோர் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகினர். அதே போல அதிமுக சார்பில் முகமது ஜான் , சந்திரசேகர்  , அன்புமணி ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வாகினர்.  இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னையை சரி செய்ய நடவடிக்கை – பிரதமர் மோடி..!!

நாட்டிலுள்ள 226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னையை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  பாராளுமன்ற மாநிலங்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்து பேசினார். அப்போது பேசிய அவர், தாங்கள் வெற்றி பெறாவிட்டால் , இந்தியா தோல்வி அடைகிறது என காங்கிரஸ் நினைக்கிறது. காங்கிரஸ் கட்சியும் இந்தியாவும் ஒன்றா ?. பாஜக வெற்றியடைந்ததால் ஜனநாயகம் தோற்றுவிட்டதாக காங்கிரஸ் கட்சி கூறுகிறது அப்படியெனில் வயநாடு, ரேபரேலியில் ஜனநாயகம் […]

Categories
தேசிய செய்திகள்

“130 கோடி மக்களுக்கு சேவை செய்வது மிகச்சிறந்த வாய்ப்பு” பிரதமர் மோடி..!!

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி, 130 கோடி மக்களுக்காக  சேவை செய்வதை மிகசிறந்த வாய்ப்பாக கருதுகிறேன் என்று பேசியுள்ளார்   17-வது மக்களவையில் கடந்த 20-ஆம் தேதி அன்று  குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்தினார். இந்த உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அனைத்து கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டு விவாதித்தனர். இதையடுத்து மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பேசினார். அப்போது பேசிய அவர், மக்களுக்கு எந்தெந்த திட்டங்கள் […]

Categories
மாநில செய்திகள்

“மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது” – பிரதமருக்கு பழனிச்சாமி கடிதம்…!!

மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதியளிக்க கூடாது என தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.  கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் காவிரியின் குறுக்கே அணை கட்ட கூடாது என தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகா 9,000 கோடி செலவில் மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமியும்  காவிரி விவகாரம் தொடர்பாக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மதிப்புமிக்க யோசனைகள்” நன்றி கூறி பிரதமர் மோடி ட்வீட் …!!

மோடி தலைமையில் நடந்த அனைத்து கட்சியினர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து மோடி ட்வீட் செய்துள்ளார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று அனைத்து  கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, நிதின்கட்கரி, பியூஷ் கோயல், அதிமுக சார்பில் ரவீந்தரநாத் குமார் மற்றும் அனைத்து கட்சியினர் பங்கேற்றனர். 17-வது நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதற்காக மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது. […]

Categories
தேசிய செய்திகள்

“பிரதமர் மோடி தலைமையில்” அனைத்து கட்சியினர் ஆலோசனை கூட்டம்…!!

பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது  டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, நிதின்கட்கரி, பியூஷ் கோயல் மற்றும் அதிமுக சார்பில் ரவீந்தரநாத் குமார் ஆகியோர் பங்கேற்றனர். 17-வது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்கி ஜூலை  26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு, முத்தலாக் மசோதா உள்ளிட்ட பல்வேறு  மசோதாக்களை நிறைவேற்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரிக்கை – முதல்வர் பழனிசாமி..!!

முதல்வர் பழனிசாமி, சிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்   டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி சந்தித்து தமிழ்நாட்டின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து கோரிக்கை மனுவினை வழங்கினார். அதை தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழகத்திற்கு தர வேண்டிய நிலுவை தொகையை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். தொடர்ந்து ஜலசக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை  சந்தித்து தமிழகத்திற்கான நதி நீர் […]

Categories
மாநில செய்திகள்

“கோதாவரி – காவிரி நதிநீர்” இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற கோரிக்கை – முதல்வர் பழனிசாமி..!!

டெல்லியில்முதல்வர் பழனிசாமி, கோதாவரி – காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.  டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி சந்தித்து தமிழ்நாட்டின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து கோரிக்கை மனுவினை வழங்கினார். அதை தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழகத்திற்கு தர வேண்டிய நிலுவை தொகையை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். தொடர்ந்து ஜலசக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை  சந்தித்து தமிழகத்திற்கான நதி நீர் திட்டங்கள் மற்றும் மேகதாது அணை […]

Categories
தேசிய செய்திகள்

 2022-ல் “விவசாயிகளின் வருமானம்” இரட்டிப்பாகும் – பிரதமர் மோடி..!!

பிரதமர் மோடி நிதி ஆயோக் கூட்டத்தில், 2022-ல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.  பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடைபெற்றது. இது 5வது நிதி ஆயோக் கூட்டமாகும். இதில் மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், நிதி ஆயோக்கின் துணை தலைவர், தலைமை செயல் அதிகாரி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர்களும் அழைக்கப்பட்டனர். இதில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா […]

Categories
தேசிய செய்திகள்

2024-ல் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் என்ற நிலையை அடையும் – பிரதமர் மோடி..!!

நிதி ஆயோக் கூட்டத்தில், 2024-ல் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் என்ற நிலையை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.  பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடைபெற்றது. இது 5வது நிதி ஆயோக் கூட்டமாகும். இதில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், நிதி ஆயோக்கின் துணை தலைவர், தலைமை செயல் அதிகாரி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர்களும் அழைக்கப்பட்டனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மேகதாது அணை கட்ட அனுமதியளிக்க கூடாது” முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்..!!

தமிழக முதல்வர் பழனிசாமி கர்நாடகா மேகதாது அணை கட்ட அனுமதியளிக்க கூடாது என்று ஜலசக்தித்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்  நிதி ஆயோக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த 5வது நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் கலந்து கொள்வதற்கு தமிழக முதல்வர் பழனிசாமியும் டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியை முதல்வர் பழனிச்சாமி காலை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் பழனிசாமி..!!

டெல்லியில் தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்  மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் மோடி மீண்டும் 2 வது முறையாக பதவியேற்ற பிறகு, நிதி ஆயோக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த 5வது நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் கலந்து கொள்வதற்கு தமிழக முதல்வர் பழனிசாமியும் டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியை […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

ரஷ்ய அதிபர் புதினுடன் மோடி பேச்சு வார்த்தை..!!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில்  இரு நாட்டு உறவுகள் குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் மோடி பேச்சு வார்த்தை நடத்தினார். கிர்கிஸ்தானின் தலைநகர் பிஷ்கேக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில்  பிரதமர் மோடி விமானம் மூலம் புறப்பட்டு சென்று பங்கேற்றார். இதையடுத்து நடைபெற்ற மாநாட்டுக்கிடையே பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது   இரு நாட்டு தலைவர்களும் சிரித்த முகத்துடன்  கை குலுக்கி கொண்டனர். இருவரும் இரு நாட்டு உறவுகள் குறித்தும், பல்வேறு முக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு…. சீன அதிபருடன் மோடி பேச்சுவார்த்தை..!!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில்  இரு நாட்டு உறவுகள் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் மோடி பேச்சு வார்த்தை நடத்தினார். கிர்கிஸ்தானின் தலைநகர் பிஷ்கேக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி இன்று  விமானம் மூலம் புறப்பட்டு சென்று பங்கேற்றார். இதையடுத்து நடைபெற்ற மாநாட்டுக்கிடையே பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். சந்திப்பில்  இரு நாட்டு தலைவர்களும் சிரித்த முகத்துடன்  கை குலுக்கி கொண்டனர். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு உறவுகள் […]

Categories
தேசிய செய்திகள்

கிர்கிஸ்தானுக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டார் மோடி..!!

பிரதமர் மோடி கிர்கிஸ்தானுக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்  கிர்கிஸ்தானின் தலைநகர் பிஷ்கேக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு 13 மற்றும் 14 இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். முன்னதாக இந்திய விமானங்கள் எல்லை  பாகிஸ்தானின்  பாலக்கோடு பகுதியில் தாக்குதல் நடத்தியதையடுத்து இந்திய விமானங்கள் தங்கள் எல்லைக்குள் பறப்பதற்கு பாகிஸ்தான் தடை விதித்தது. இதனால் பிரதமர் மோடி பாகிஸ்தான் வான் பரப்பு வழியாக செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து  பிரதமர் அவ்வழியாக செல்வதற்கு இந்தியா […]

Categories
தேசிய செய்திகள்

“பிரதமர் மோடி கிர்கிஸ்தான் பயணம்” பாகிஸ்தானிடம் அனுமதி கேட்கும் இந்தியா..!!

பிரதமர் மோடியின் விமானத்தை தங்கள் வான்பரப்பில் பறக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது  இந்திய விமானங்கள் எல்லை தாண்டி சென்று பாகிஸ்தானின்  பாலக்கோடு பகுதியில் தாக்குதல் நடத்தியதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் இந்திய விமானங்கள் தங்கள் எல்லைக்குள் பறப்பதற்க்கு பாகிஸ்தான் தடை விதித்தது. அந்த தடையை சமீபத்தில் தான் வரும் 15-ம் தேதி வரை பாகிஸ்தான் நீட்டித்தது. இந்த நிலையில் பிரதமர் மோடி வரும் 13ம் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் பங்கேற்க கிர்கிஸ்தானுக்கு விமானம் மூலம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்றார் ராஜ்நாத்சிங்..!!

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக ராஜ்நாத்சிங் பொறுப்பேற்றுக் கொண்டார்   மக்களவை தேர்தலில் வென்றதையடுத்து மோடி மீண்டும் இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் பிரதமராக பதவி ஏற்றார். அவருடன் 24 பேர் கேபினட் அமைச்சர்களாகவும் , 09 பேர்  தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சர்களாகவும், 24 பேர் ராஜாங்க அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர். இதையடுத்து நேற்று அமைச்சரவையில் இடம்பெற்றவர்களுக்கு நேற்று இலாக்கா ஒதுக்கப்பட்டு, அந்தந்த துறைகளின் அமைச்சர்களாக பொறுப்பேற்று வருகின்றனர். இந்நிலையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் அமித்ஷா…!!

அமித்ஷா உள்துறை அமைச்சராக இன்று தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மக்களவை  தேர்தலில் பாரதிய ஜனதா மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து மோடி மீண்டும் இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் பிரதமராக பதவி ஏற்றார். அவருடன்  கேபினட் அமைச்சர்களாக  24 பேரும்,   தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சர்களாக 09 பேரும்,  ராஜாங்க அமைச்சர்களாக 24 பேரும் பதவி ஏற்றனர். இதையடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடிக்கும்,  அமைச்சர்களுக்கும் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அமைச்சரவையில் இடம்பெற்றவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“மோடி கோயில் சென்றால் நாங்கள் மசூதி செல்வோம்” – அசாதுதின் ஓவைசி..!!

மோடி கோயில் சென்றால் நாங்கள் மசூதி செல்வோம் என்று அசாதுதின் ஓவைசி தெரிவித்துள்ளார். மக்களவை தொகுதியில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளதால் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.இந்நிலையில் ஐதராபாத் மக்களவை தொகுதியில் தொடர்ச்சியாக  4-வது முறை வெற்றி பெற்றுள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசி, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது “ மோடியால்  கோவிலுக்குள்  சென்று வணங்க  முடியும் என்றால், நாமும் நம்முடைய மசூதிகளுக்கு செல்லலாம். மோடி  குகைக்குள் அமர்ந்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மத்திய அமைச்சரவையில் “21 பேர் மீது கிரிமினல் வழக்கு” தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தகவல்..!!

மத்திய அமைச்சரவையில் 51 பேர் கோடிஸ்வரர்களாகவும் , 21 பேர் கிரிமினல் வழக்கு உள்ளவர்களாகவும் இருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து பிரதமராக மோடி இரண்டாவது முறையாக பொறுப்பேற்றார். அப்போது அவரது தலைமையிலான புதிய மத்திய  அமைச்சரவையில் 25 கேபினட் அமைச்சர்களாகவும் , 24 இணையமைச்சர்களாகவும் மற்றும் 9 பேர் தனிப்பொறுப்புடன் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்கான  இலாகாகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து இந்திய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு பொறுப்பேற்ற 56 அமைச்சர்களின் வேட்புமனுக்களை ஆராய்ந்தது. இதில் 22 அமைச்சர்கள்  […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“புதிய அமைச்சரவை கூட்டம்” மோடி தலைமையில் நடைபெற்றது…!!

பதவியேற்ற புதிய மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கூட்டணி மத்தியில் மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி தலைமையில் 58 பேர் கொண்ட புதிய மத்திய அமைச்சரவை பொறுப்பேற்றது. இந்நிலையில் புதிதாக பதவியேற்ற மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று  நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் மாலை நடைபெறும்…!!

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது  மக்களவை தேர்தலில் 542 தொகுதிகளில் பாரதிய ஜனதா  தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  353 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதில் பாரதிய ஜனதா மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று  தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து மோடிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று ஜனாதிபதி மாளிகையில் கோலாகலமாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் சேர்த்து 24 […]

Categories
அரசியல்

பதவியேற்றார் மோடி ..!! 17வது பிரதமருடன் அமைச்சர்கள் பதவியேற்பு ..!!

தொடர்ந்து 2 வது முறையாக குடியரசு தலைவர் பதவி பிரமாணம் செய்துவைக்க பதவியேற்றார் நரேந்திர மோடி . டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நரேந்திர மோடியை பிரதமராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து இந்தியாவின் 17-வது பிரதமராகவும், தொடர்ந்து இரண்டாவது  முறையாகவும் மோடி பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்கள், இந்திய தேசிய கட்சி தலைவர்கள், பிரபலங்கள், உட்பட எட்டாயிரம் பேர் கலந்து கொண்டனர். […]

Categories
அரசியல்

மோடி சர்க்காரை பின்னுக்கு தள்ளிய நேசமணி ..!!

modisarkar என்ற ஹாஷ்டேக் ஐ பின்னுக்கு தள்ளி நேசமணி ஹாஸ்டேக் ஆனது  ட்ரெண்டிங்கில் வளம் வலம்வந்து கொண்டு இருக்கிறது  வெளிநாட்டு இன்ஜினியர் ஒருவர் hammerக்கு  தமிழில் என்ன என்று நம்ம ஊரு இன்ஜினியரிடம் கேட்டுள்ளார், அதற்கு சுத்தியல் என்று பதிலளித்த அவர் அதனுடன் சேர்த்து பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலு தலையில் சுத்தியல் விழும் காமெடி காட்சி ஒன்றையும் இணைத்து அனுப்பி உள்ளார். இதனை பார்த்துவிட்டு வீடியோ உண்மை என்று நம்பி இவர் யார் என்று அவரிடம் கேட்டுள்ளார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மத்திய அமைச்சரை நியமிப்பதில் குழப்பம் “பாஜக தீவிர ஆலோசனை..!!

தேர்தல் முடிந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் பாஜக தலைவர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மே 30ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்க உள்ள நிலையில் மத்திய அமைச்சர்களாக யார் யாரெல்லாம் நியமிப்பது என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில் பாஜக தலைவரான அமித்ஷாவிற்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கலாம் என்ற விவாதம் எழுந்துள்ளது. ஆனால் அமித்ஷாவிற்கு மத்திய அமைச்சர் பதவியை கொடுத்தால் பாஜக தலைவர் பதவியில் […]

Categories
அரசியல்

பிரதமர் மோடிக்கு கிரண்பேடி வாழ்த்து ..!!

பிரதமோடிக்கு புதுசேரி ஆளுநர் கிரண்பேடி வாழ்த்து தெரிவித்துள்ளார் . நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது .நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆனார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் பிரதமரான நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் .மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா பல்வேறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ரஜினி, கமலுக்கு அழைப்பு” பாஜக ஊடுருவ முயற்சி – வைகோ குற்றசாட்டு…!!

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு  ரஜினி, கமலுக்கு அழைப்பு விடுத்தது, தமிழகத்தில் பா.ஜ.க. ஊடுருவ முயற்சி என வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.  மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து  வரும் மே -30 ஆம் தேதி இரவு 7 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் மீண்டும் பிரதமர் மோடி பதவியேற்கிறார். இவ்விழாவில் உலக தலைவர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்களும் பங்கேற்க உள்ளனர். தமிழக முதல்வர் இ.பி.எஸ், துணை முதல்வர் ஓ.பி.எஸ் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதே போல நடிகர் ரஜினிகாந்த் […]

Categories
தேசிய செய்திகள்

“மோடி பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு” கலந்து கொள்வாரா கமல்..?

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்கு கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.இதில் பாரதிய ஜனதா  மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து டெல்லியில்  நடைபெற்ற பா.ஜ.க எம்.பிக்கள் கூட்டத்தில் மோடியே  மீண்டும் பிரதமராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரினார். […]

Categories
தேசிய செய்திகள்

மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள ரஜினிகாந்துக்கு அழைப்பு…!!

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்கு ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.இதில் பாரதிய ஜனதா  மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. கடந்தமுறை போலவே கூட்டணி கட்சிகளை சேர்த்துக்கொண்டு கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இதையடுத்து டெல்லியில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நடைபெற்ற பா.ஜ.க எம்.பிக்கள் கூட்டத்தில்  நரேந்திரமோடியே  மீண்டும் பிரதமராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிரதமர் மோடி 30 -ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு பதவி ஏற்கிறார்..!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை வரும் 30 -ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு பதவியேற்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  7 கட்டங்களாக நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.இதில் பாரதிய ஜனதா  மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து டெல்லியில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற பா.ஜ.க எம்.பிக்கள் கூட்டத்தில்  நரேந்திரமோடியே  மீண்டும் பிரதமராக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற ஜெகன் மோகன் ரெட்டி…!!

டெல்லியில் பிரதமர் மோடியை YSR காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.   நடைபெற்ற மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இதில் ஆளும் தெலுங்கு தேசம் வெறும் 23 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று தோல்வியை தழுவியது. இந்த தோல்வியையடுத்து ஆந்திர மாநில முதல்வர் பதவியை சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டியை ஆட்சி அமைக்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்திய அணி உலகக்கோப்பையுடன் திரும்ப வேண்டும்” பிரதமர் மோடி..!!

பிரதமர் நரேந்திரமோடி இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்று தாயகம் திரும்புவதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 349 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக மட்டும் தனிப்பெரும்பான்மையாக 302 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. இதையடுத்து  பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும்  வாழ்த்துக்கள் தெரிவித்து வந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும்  தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறி இருந்தார். இந்நிலையில் விராட் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிரதமர் மோடி ராஜினாமா…. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் சந்திப்பு..!!

பிரதமர் மோடி தனது ராஜினாமா கடிதத்தை டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து முறைப்படி வழங்கினார். பாராளுமன்ற  தேர்தலில் பாரதிய ஜனதா 303 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக  தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க  272 இடங்கள் தேவை. ஆனால் பாஜக தனியாக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடமாக 52 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தேசிய அளவில் திமுக மட்டும்   23 இடங்களில் வெற்றி பெற்று  3-வது இடத்தை பிடித்துள்ளது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..!!

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 16-வது மக்களவையை கலைப்பதற்கான தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. மக்களவை தேர்தல் 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்று நேற்று வாக்கு  எண்ணப்பட்டது. இதில் பாஜக ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  349 தொகுதிகளை கைப்பற்றி மிகப்பெரிய வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இதில் பாரதீய ஜனதா மட்டும் தனியாக 302 இடங்களில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடிக்கு கனட பிரதமர் ஜஸ்டின் வாழ்த்து..!!

மக்களவை தேர்தலில் மாபெரும்  வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு கனட பிரதமர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு  நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. இத்தேர்தலில் பாரதிய ஜனதா  கட்சி இந்திய அளவில் 350 தொகுதிகளில்  வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சி அமைப்பது உறுதியாகியாகி விட்டது. இதனால் நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்ற நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பங்களாதேஷ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முக ஸ்டாலினுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்..!!

மக்களவை தேர்தலில் திமுக தலைவர் வெற்றி பெற்றதற்கு ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதும் 7 கட்டமாக  மக்களவை தேர்தல் நடைபெற்று தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது.  மக்களவை தொகுதியில் இந்திய அளவில் பாஜக 349 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால் பாஜகவிற்கு வெற்றி உறுதியாகிவிட்டது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 39 தொகுதிகளில் 37 தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. இதனால் திமுக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ட்விட்டர் பக்கத்தில் காவலாளி என்ற பெயரை நீக்கிய மோடி..!!

பிரதமர் மோடி ட்விட்டரில் தன் பெயருடன் சேர்த்திருந்த காவலாளி என்ற பெயரை நீக்கியுள்ளார்.  பிரதமர் மோடி தேர்தல் தொடங்கியதும் நான் காவல் காரன் என்று ட்விட்டரில் வீடியோ பதிவிட்டு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அதை தொடர்ந்து ட்விட்டரில் சவ்க்கிதார் (காவலாளி) மோடி என மாற்றினார். இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. இதை தொடர்ந்து பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மோடியை போலவே தங்கள் பெயருடன் அந்த பெயரை சேர்த்தனர். தற்போது மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. பாஜக 351 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

 “ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டும் எழுந்து நிற்போம்” டி.டி.வி தினகரன்..!!

 அமமுக பொது செயலாளர் டி.டி.வி தினகரன், ஜெயலலிதா கற்று தந்த துணிவோடு ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டும் எழுந்து நிற்போம் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.   நாடு முழுவதும் 7 கட்டமாக மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து இன்று  வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 345 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது.  தமிழகத்தை  பொறுத்தவரையில் மக்களவை தொகுதியில் திமுக 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 1 தொகுதிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஜனநாயக முறைப்படி ஆட்சியை நடத்துவார் என நம்புகிறோம்” முக ஸ்டாலின்..!!

மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து  பிரதமர் மோடிக்கு முக ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.     நாடு முழுவதும் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்திய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 345 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது. காங்கிரஸ் 92 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. இதனால்  மோடியே மீண்டும் பிரதமராவார் என்பது உறுதியாகி விட்டது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

” கேதார்நாத்துக்கும், எனக்கும் உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது” பிரதமர் மோடி பேட்டி..!!

பிரதமர் மோடி கேதார்நாத் புனித குகையில் நீண்ட நேர தியானம் முடித்த பின் எனக்கும் கேதார்நாத்துக்கும் உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது என்று கூறினார். பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு, ஏற்கனவே 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று இறுதிக்கட்ட தேர்தல் காலை 7 மணிக்கு  தொடங்கி நடந்து வருகிறது. இந்த தேர்தலுக்காக  தொடர் தேர்தல் பிரச்சாரம் செய்து வந்த பிரதமர் மோடி, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு நேற்று பாரம்பரிய உடையில்  நடந்து சென்று வழிபாடு செய்தார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜக இல்லாத ஆட்சி…. அகிலேஷ், மாயாவதியை சந்தித்த சந்திரபாபு நாயுடு..!!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பா.ஜ.க இல்லாத அரசை அமைப்பதற்காக அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதியை சந்தித்து பேசியுள்ளார். பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது . ஏற்கனவே 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நாளை 19-ம் தேதி  இறுதிக்கட்ட தேர்தலில்   59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சிகளை ஓன்று சேர்க்கும்  முயற்சியில் ஆந்திர  முதல்வர் சந்திரபாபு நாயுடு தீவிரமாக இறங்கியுள்ளார். தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து பிராந்திய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கேதார்நாத் குகையில் தியானம் செய்து வரும் மோடி.!!

பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள  கேதார்நாத் குகையில்  தியானம் செய்து வருகின்றார். பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நாளை 19-ம் தேதி  இறுதிக்கட்ட தேர்தல் நடக்க இருக்கின்றது. இதற்கான சூறாவளி பிரசாரம் நேற்று மாலை ஓய்ந்தது. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில், பிரதமர் மோடி, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார் நாத் கோவிலுக்கு   ராணுவ ஹெலிகாப்டர் மூலம் சென்றார். இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள  பிரதமர் மோடி பாரம்பரிய உடையில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நாங்கள் 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்” பிரதமர் மோடி உறுதி..!!

மத்திய பிரதேசத்தில் நடந்த  கடைசி பேரணியில், நாங்கள் 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றுவோம் என்று பிரதமர் மோடி உறுதியுடன் தெரிவித்துள்ளார்.  மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு 6-கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தேர்தல்  பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 7-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு வருகின்ற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்றுடன் அதற்கான தேர்தல் பிரசாரம் முடிவடைந்துள்ளது. பிரதமர் மோடி தேசம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“வித்யாசாகர் சிலை உடைந்த தடயத்தை அழிக்கும் போலீசார்” பிரதமர் மோடி குற்றச்சாட்டு..!!

வித்யாசாகர் சிலை உடைக்கப்பட்டதில் தடயங்களை அழிப்பதற்கு  போலீஸ் முயற்சி செய்து வருகின்றனர் என  பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். மேற்குவங்காள மாநிலம் மதுராபூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசியபோது, கொல்கத்தாவில் நடந்த  வன்முறைக்கு காரணம்திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்கள் தான். கலவரத்தின் போது அவர்கள் தான் ஈஸ்வர் சந்திரா வித்யாசாகர் சிலையை உடைத்தனர். போலீஸ் அதிகாரிகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின்  குண்டர்களை பாதுகாப்பதற்காக, சிலை உடைந்துள்ள பகுதியில் தடயங்களை அழிக்க முயற்சி செய்கின்றார்கள். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மோடிக்கு பதில் சொல்ல தேவையில்லை” சரித்திரம் சொல்லும் – கமல்ஹாசன்.!!

பிரதமர் மோடிக்கு  நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை  சரித்திரம் பதில் சொல்லும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற உள்ள  காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பிரசாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. 4 தொகுதிகளில் ஒன்றான அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக கமல் பிரசாரம் செய்த போது , சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’’ என்று பேசினார்.  கமலின் இந்த பேச்சுக்கு பிஜேபி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“எங்களுக்கு பிரதமர் பதவி இல்லயென்றாலும் பரவாயில்லை” பா.ஜ.கவை ஆட்சியமைக்க விடமாட்டோம் – குலாம்நபி ஆசாத்.!!

பா.ஜ.க இல்லாத ஆட்சியை கொண்டு வருவோமென  ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார். மக்களவை  தேர்தல் 7 கட்டமாக  நடைபெறும் என அறிவிக்கப்பட்டு  6 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இறுதி கட்ட தேர்தல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிந்து  வாக்கு பதிவு எண்ணிக்கைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே  உள்ள நிலையில் யார் ஆட்சி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் பலமாக எழும்பியுள்ளது. இதற்கிடையே  நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் என்று  பா.ஜ.க.வும், காங்கிரசும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“கொல்கத்தா கலவரத்தில் சேதமடைந்த வித்யாசாகர் சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும்” பிரதமர் மோடி உறுதி..!!

கொல்கத்தா கலவரத்தில் உடைக்கப்பட்ட வித்யாசாகர் சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் என பிரதமர் மோடி உறுதியுடன் தெரிவித்தார்.  சுதந்திரத்திற்கு முன் வெள்ளையர்கள் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தின் போது வங்காளம் என்றழைக்கப்பட்ட பெரும்பகுதியின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர், ஈஷ்வர் சந்திரா வித்யாசாகர். இவர் சிறந்த கல்வியாளராகவும்,  தத்துவவாதியாகவும், மொழிபெயர்ப்பாளராகவும், பேராசிரியராகவும், பெரும் கொடையாளராகவும் திகழ்ந்துள்ளார். இவரை மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் சமூக சீர்திருத்தவாதியாக பெருமையுடன் போற்றி, மதித்து வருகின்றனர். இதற்கிடையே கொல்கத்தா நகரில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“காங்கிரஸ் அரசு பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்களை ஏ.டி.எம் இயந்திரமாக பயன்படுத்தியது” பிரதமர் மோடி குற்றச்சாட்டு!!

முந்தைய ஆட்சியில் காங்கிரஸ் அரசு பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்களை ஏ.டி.எம் இயந்திரம் போல பயன்படுத்தியது என்று பிரதமர் மோடி குறை கூறியுள்ளார். மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு  6 கட்ட தேர்தல் நடந்து முடிந்தது.  இந்நிலையில் இறுதி கட்ட தேர்தலுக்காக பிரதமர் மோடி மத்திய பிரதேசத்தின் ராட்லம், இமாச்சலபிரதேசத்தின் சோலன், பஞ்சாப்பின் பத்திண்டா ஆகிய ஊர்களில் நடைபெற்ற கூட்டங்களில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சி அமைத்த காலத்தின் போது பாதுகாப்பு படைகளின் தேவைகள்  70 சதவிகிதம் வெளிநாடுகள் மூலமே […]

Categories
தேசிய செய்திகள்

“பிரதமர் மோடி பேசியதில் எந்த தவறும் இல்லை” – தேர்தல் ஆணையம்!!

பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதியை மீறியதாக அளிக்கப்பட  நான்காவது புகாரையும் தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலத்தின்  நந்தேட் பகுதியில் கடந்த மாதம் 6ம் தேதி பிரதமர் மோடிதேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தாக்கி பேசும் வகையில் ”நாட்டின் பெரும்பான்மையினர் சிறுபான்மையினராக இருக்கும்” தொகுதி என  வயநாடு தொகுதியை குறிப்பிட்டு பேசினார். பிரதமர் மோடி இப்படி பேசியது  தேர்தல் விதி மீறல் என காங்கிரஸ் கட்சியின்  சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த […]

Categories

Tech |