போலீஸ்காரர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பாலையம்பட்டி பகுதியில் வசிக்கும் சிறுமி தனது நண்பரான ஹரிகிருஷ்ணன் என்பவருடன் கடந்த 23-ஆம் தேதி மூக்கையூர் கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது தினேஷ்குமார், அஜித், பத்மாஸ்வரன் ஆகிய 3 வாலிபர்கள் தகராறு செய்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இன்று காலை ஹரிகிருஷ்ணன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்து சிறுமி விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். […]
Tag: police
விபத்தில் இறந்த போலீஸ்காரரின் குடும்பத்தினருக்கு 30 லட்ச ரூபாய் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் பால சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் போக்குவரத்து போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலசுப்பிரமணி சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து பாரத ஸ்டேட் வங்கி சார்பில் விபத்து காப்பீட்டு தொகையாக பாலசுப்ரமணியின் குடும்பத்தினருக்கு 30 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அப்போது திண்டுக்கல் […]
தேடப்பட்டு வந்த இரண்டு குற்றவாளிகளை அதிகாரிகள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர். திருச்சி மாவட்டத்திற்கு ஸ்கூட் விமானத்தில் வந்த பயணிகளை குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கறம்பக்குடி காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிகாரிகள் அவரை பிடித்து கறம்பக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர். இதேபோன்று ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் எமனேஸ்வரம் காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிகாரிகள் வேல்முருகனை […]
நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் காவல்துறையினர் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்ரமங்கலம் பகுதியில் அன்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரத்குமார், தென்னரசு ஆகிய நண்பர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நாகமங்கலம் தனியார் பள்ளி அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது நண்பர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து அன்பரசன் மற்றும் சரத்குமார் ஆகிய இருவரும் விக்ரமங்கலம் காவல் நிலையத்தில் தனித்தனியாக […]
போலீஸ் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து தப்பி ஓட முயன்ற நபரை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள நுங்கம்பாக்கத்தில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் காவல்துறையினர் மடக்கி விசாரித்துள்ளனர். அப்போது அவர் அதே பகுதியில் வசிக்கும் வெங்கடேசன் என்பது தெரியவந்துள்ளது. மற்றொரு நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் வெங்கடேசனும் அந்த நபரும் இணைந்து மோட்டார் சைக்கிளை மதுரவாயலில் இருந்து திருடிவந்தது தெரியவந்துள்ளது. […]
காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக காவல்துறையினருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும் என்ற ஒரு மிக முக்கியமான உத்தரவை தற்போது தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறப்பித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய போது, முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழக காவல் துறையினருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும் […]
மனித நேயத்துடன் செயல்பட்ட போலீஸ் ஏட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சென்றாம்பாளையம் பிரிவு பகுதியில் கடந்த 2-ஆம் தேதி மூதாட்டி ஒருவர் நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த அந்த மூதாட்டியின் உடலை காவல் துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து அந்த மூதாட்டிக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்பதை அறிந்த கிணத்துக்கடவு போலீஸ் ஏட்டு செல்வகுமார் மூதாட்டியின் […]
ரயிலில் ஏற முயன்ற போது கீழே விழுந்த முதியவரின் உயிரை விரைந்து சென்று காப்பாற்றிய போலீஸ்காரரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் சவாய் மதபூர் ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில்வே நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஒரு ரயிலில் முதியவர் ஒருவர் ஏற முயற்சிக்கும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர் விரைந்து சென்று அந்த முதியவரை மீட்டுள்ளார. இவ்வாறு அவர் […]
தாய் மற்றும் மகனை காரில் கடத்தி சென்று துன்புறுத்திய 12 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆத்திகுளம் பகுதியில் தங்க மாரியப்பன் என்ற டி.வி மெக்கானிக் வசித்து வருகிறார். இவரின் நண்பரான மொக்கையா என்பவரின் மூலம் பாண்டிச்சேரியில் வசித்து வரும் ஜெய்சங்கர் என்பவர் தங்க மாரியப்பனுக்கு அறிமுகமானார். இந்நிலையில் ஜெய்சங்கர் தான் இரிடியம் வியாபாரம் செய்வதால் அதற்கு எலக்ட்ரானிக் போர்டு வேண்டும் என்றும், அதற்குரிய ஒரு லட்சம் பணத்தையும் தங்க […]
குற்றங்களை தடுக்கும் பொருட்டு போலீசாருக்கு சிறிய ரக கேமராக்களை பயன்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் உள்ள செந்தண்ணீர்புரம் தொகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோந்து சென்ற போலீஸ்காரரை ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக அபராதம் விதிக்கும் போது ஒரு சில வாகன ஓட்டிகள் போலீசாருடன் வாக்குவாதம் செய்வதால் இதுபோன்ற பிரச்சினைகள் நீதிமன்றம் வரை போகிறது. அதோடு ஆர்ப்பாட்டங்கள், அரசியல் கட்சிகள் […]
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சுந்தர பாண்டியன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் விவசாயிகள் சங்க மணிக்குமார் இதற்கு முன்னிலை வகித்துள்ளார். இந்த போராட்டத்தை முன்னாள் எம்.எல்.ஏ ராமசாமி […]
குடியரசு தின அணிவகுப்பில் பெண் போலீஸ் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. அப்போது மாவட்ட கலெக்டர் பொன்னையா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். அதன்பின்னர் ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர், மேடைக்கு சென்று அரசின் 29 பயனாளிகளுக்கு ரூபாய் 2 கோடியே 14 லட்சத்து 73 ஆயிரத்து 181 மதிப்பிலான அரசு […]
சூதாட்டம், கஞ்சா விற்பனை, மது விற்பனை போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்திலுள்ள அரியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அரசு மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்த குற்றத்திற்காகவும், சூதாட்டம் ஆடிய குற்றத்திற்காகவும், மதுபானங்களை விற்பனை செய்த குற்றத்திற்காகவும் 11 பேரை கைது செய்தனர். இதனையடுத்து பாகாயம் எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வரும் ரவி […]
கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் ஒருவரை கைது செய்து, அவர் வைத்திருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் ஏழாயிரம்பண்ணை சப் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசார் அங்குள்ள விளக்கு பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அந்த நபர் அன்பின் நகரம் பகுதியில் வசித்து வரும் ஜீவானந்தம் என்பதும், இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் போலீசாருக்கு […]
புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்த புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அலமேலு புறத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராதாகிருஷ்ணனின் உத்தரவின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் ஆகியோரின் மேற்பார்வையில், தனிப்படை இன்ஸ்பெக்டர் ஆனந்தம் தலைமையில், விழுப்புரம் […]
மின்சார ரயிலின் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்த பல பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அமைந்தகரை பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வந்தார். இவர் நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே கடந்த 7ஆம் தேதி மின்சார ரயில் மோதி அங்கு இறந்து கிடந்தார். இதனையடுத்து அவரது உடலை எழும்பூர் ரெயில்வே போலீசார் மீட்டு அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். […]
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக இரு வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் ரோஷணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் ராஜ் மற்றும் சிவகுமார் என்ற காவலரும் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 25 வயது மதிக்கத்தக்க 3 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் திண்டிவனம்-செஞ்சி சாலையில் வேகமாக சென்றனர். அந்த மூன்று பேரும் மோட்டார் சைக்கிள் சென்ற வேகத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதனையடுத்து போலீசார் […]
லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக மருத்துவ கல்லூரி காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார், புதிய பேருந்து நிலையம் பகுதியில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயம் சந்தேகப்படும் வகையில் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்த போது, அந்த நபர் சாமந்த […]
சப்-இன்ஸ்பெக்டர் தனது வீட்டில் 34 பவுன் நகைகளை காணவில்லை என போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகர் போலீஸ் குடியிருப்பில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் சப்-இன்ஸ்பெக்டராக புளியந்தோப்பு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் செல்லத்துரை திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் செல்லத்துரை தனது வீட்டில் 50 பவுன் நகையை வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனது சொந்த ஊரான தென்காசி […]
போக்குவரத்து அதிகாரிகள் தார்பாய்கள் இல்லாத லாரிகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர் வேலூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு போக்குவரத்து துறை ஆய்வாளர்கள் கருணாநிதி மற்றும் சக்திவேல் ஆகியோர் அலுவலர் செந்தில்வேலன் தலைமையில் மோட்டார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அச்சமயம் அப்பகுதி வழியாக மணல் ஏற்றி வந்த இரண்டு லாரிகள் அதன் மேற்புறத்தில் தார்ப்பாயால் மூடாமல் சென்றதை கவனித்தனர். இதனால் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அதிகாரிகள் அந்த லாரிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் […]
தலைமை ஆசிரியரின் வீட்டிலும், தனியார் நிறுவன ஊழியரின் வீட்டிலும் ஒரே நாளில கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருமாள்புரம் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியராவார். இந்நிலையில் ஆங்கில புத்தாண்டு தினத்தில் மனோகரன் அவரது குடும்பத்தினருடன் அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு இரவில் புறப்பட்டு சென்றுள்ளார். அதன்பின் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் அவ்வீட்டில் திருடுவதற்காக திட்டமிட்டனர். இதனையடுத்து மனோகரன் வீட்டின் […]
மணல் கடத்தி வந்த டிராக்டரை பறிமுதல் செய்த காவல் துறையினர் கடத்தல் காரர்களை வலை வீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கும்மங்குடி பகுதியானது, கே.புதுப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது. எனவே கும்மங்குடி பகுதியில் கே.புதுப்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு டிராக்டரை காவல் துறையினர் வழி மறித்தனர். இதனை பார்த்த ஓட்டுனர் பாதியிலேயே டிராக்டரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் டிராக்டரை […]
கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மண்டையூர் பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவரது கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக பிளஸ் டூ படிக்கும் மாணவி ஒருவர் சென்றுள்ளார். அப்போது சசிகுமார் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து மாணவி கீரனூர் அனைத்து மகளிர் […]
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் ஹோட்டல்களிலும் டிசம்பர் 31-ஆம் தேதி புத்தாண்டு கொண்டாட்டப்படும். இதனைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவர். இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்து மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த தடை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் விளக்கம் அளித்துள்ளார். அந்த […]
உத்தரபிரதேச மாநிலத்தில் அலாவுதீன் விளக்கு எனக் கூறி 31 லட்சம் மோசடி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தலைமுறையினர் பெரும்பாலானோரிடம் உழைக்காமலே அதிகமான பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகப்படியாக எட்டிப்பார்க்கிறது. அதற்கு சிறந்த உதாரணம் ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தைப் போட்டு பல மோசமான முடிவுகளுக்கு தள்ளப்படுவது தான். இது மட்டுமல்லாமல், பல மோசடிக் கும்பல்களும் மக்களிடம் ஆசையைத் தூண்டி நூற்றுக்கணக்கில் பணங்களை மோசடி செய்துதான் வருகிறார்கள். அந்த வகையில், உத்திரப்பிரதேச மாநிலம் மீரட்டில், […]
வீட்டில் குடியிருக்கும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக தலைமைக் காவலர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வரும் திருமணமான கலையரசி(30) என்ற பெண் செம்பியம் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.. அந்தபுகாரில், ” எங்களது வீட்டின் உரிமையாளரின் பெயர் கண்ணன். இவர் வேப்பேரி போக்குவரத்து காவல் துறையில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில், நேற்று குளியலறையில் இருந்து குளித்து விட்டு நான் வீட்டுக்குள் […]
மூன்று மாத குழந்தையிலிருந்து 50 குழந்தைகளை வீட்டில் அடைத்து வைத்து வன்கொடுமை செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் அழகான வீடு ஒன்றின் அருகே வசிக்கும் மக்கள் அந்த வீட்டில் இருப்பது மிகவும் அமைதியான குடும்பம் எனக்கூறி இருந்தது. ஆனால் காவல்துறையினர் குறிப்பிட்ட வீட்டை சோதனை செய்த போது சகிக்க முடியாத காட்சிகளை பார்த்தவர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு பணியிலிருந்து சென்றுள்ளனர். அவர்கள் அந்த வீட்டில் பார்த்தது மூன்று மாத குழந்தையிலிருந்து 50 பிள்ளைகள் அந்த வீட்டில் இருந்தனர். தனக்குப் […]
போலியான வாழ்க்கையை நம்பி நிஜ வாழ்க்கையை இழந்து விடாதீர்கள் என காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். நிஜ வாழ்க்கையில் உண்மையான அன்பு பாசத்துடன் நமது தாய், தந்தை, மனைவி, அக்கா, தங்கை, தம்பி, அண்ணன் உள்ளிட்ட உறவுகள் நம்மை பார்த்துக் கொண்டாலும், நாம் ஏனோ பொய்யான உலகை தேடி தான் கற்பனையில் மிதந்து கொண்டிருக்கிறோம். இதனால் பலர் பல விளைவுகளை சந்தித்து வருகின்றனர். பலர் தங்களது அடையாளத்தை இழந்து நடுரோட்டில் நிற்க கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தற்போது […]
தஞ்சையில் ஒரே வங்கியில் கணக்கு வைத்திருந்த 6 பேரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் இரண்டரை லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் ரயில் நகரில் வசித்து வரும் மரைன் இன்ஜினியராக பணியாற்றி வந்த ஆயூப் என்பவர் ஊரடங்கு காரணமாக கப்பலில் ஏதும் பணி இல்லாததால், தனது சொந்த மாவட்டத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவரது வங்கி கணக்கில் இருந்து கிட்டத்தட்ட 4 தவணையாக ரூபாய் 40 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கணக்கு […]
சிறுமியின் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்த இன்ஸ்பெக்டர் தங்கராஜ், காவலர் செந்தில்குமார் ஆகியோருக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் கவிஷ்கா.. இந்த சிறுமிக்கு இதய அறுவை சிகிச்சை செய்வதற்கு 5 லட்சம் ரூபாய் தேவைப்பட்டது.. சிறுமியின் தந்தை கார்த்திக் பண உதவி ஏதும் கிடைக்காமல் மிகுந்த மனவேதனையில் தவித்து வந்தார். இதையடுத்து நந்தம்பாக்கம் காவல்துறை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தங்கராஜ், காவலர் செந்தில்குமார் மற்றும் காவல் நிலையத்தில் பணியாற்றியவர்கள் […]
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது குறித்த தகவல் கிடைத்ததையடுத்து, தாமாக முன்வந்து விசாரணை நடத்தி, இளைஞர் ஒருவரைக் கைதுசெய்த வீரபாண்டி போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தேனி மாவட்டம் வீரபாண்டி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவன் ரெங்கநாதன்.. 28 வயதான இவன் மேடை அலங்காரம் செய்யும் வேலை செய்துவருகிறான். இவன் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசையாக பேசி, அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இந்தநிலையில், ரங்கநாதனுக்கு வேறொரு பெண்ணுடன் […]
பெண்களிடம் விசாரிப்பதாக நள்ளிரவில் பாலியல் ரீதியாக பேசிவந்த சிறுகனூர் இன்ஸ்பெக்டர் மணிவண்ணனுக்கு கட்டாய ஓய்வளித்து திருச்சி டிஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். திருச்சி மாவட்டம் சிறுகனூர் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்தவர், மணிவண்ணன். இவர் இதற்கு முன்னதாக பணியாற்றிய காவல் நிலையங்களில் புகார் அளிக்க வரும் பெண்களிடம் நள்ளிரவு நேரத்தில் அல்லது யாரையும் அழைத்து செல்லாமல் தனியாக சென்று விசாரணை என்கிற பெயரில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுபற்றி காவல் உயர் அலுவலர்களுக்குத் தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது. அதுமட்டுமின்றி […]
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரையும் பச்சைப்படுகொலை செய்த மூன்று காவலர்களையும் கொலைவழக்கில் கைதுசெய்ய வேண்டுமென நாடே ஒற்றைக்குரலில் ஓங்கி ஒலிக்கும் போதும், இன்னும் அவர்கள் மீது எவ்வித வழக்கும் பதிவுசெய்யாதிருந்து அத்தனை பேரின் உணர்வுகளையும் அலட்சியப்படுத்துவது ஏன்? ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்வதும் எதிர்ப்பு வலுத்தால் பணியிடைநீக்கம் செய்வதையே அதிகபட்சமான சட்டநடவடிக்கை என்பதைப் போல சித்தரித்து அக்கொலையாளிகளைக் காப்பாற்ற தமிழக அரசு துணைபோவதன் பின்னணி என்ன? பாதிக்கப்பட்டக் குடும்பத்தைவிட கொன்றொழித்த கொலையாளிகள் மீது முதல்வருக்கு அதீத இரக்கம் இருப்பது […]
தாம்பரம் பகுதியை அடுத்த ஊனமாஞ்சேரி பகுதியில் வசித்துவரும் காவல் உதவி ஆய்வாளர் தூக்குப் போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் பகுதியை அடுத்துள்ள கொளப்பாக்கம் ஊனமாஞ்சேரி பகுதியில் வசித்து வருபவர் கிஷோர்.. இவருக்கு வயது 50 ஆகிறது. இவர் சென்னை ஆவடியிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் காவல் உதவி ஆய்வாளராக வேலைப்பார்த்து வருகின்றார். இவர் வழக்கம்போல் நேற்று காலை வேலைக்கு சென்றுவிட்டு பணி முடிந்து மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.. வீட்டிற்கு வந்த […]
தன்னுடைய பெற்றோரை ஒருமையில் பேசியதாக காவல் உதவி ஆய்வாளருடன் ஒருவர் கைகலப்பில் ஈடுபட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. கோவை ரத்தினபுரி சாஸ்திரி வீதியில் தள்ளுவண்டி உணவுக்கடை நடத்திவருபவர் வேல்மயில். இவர் வழக்கம்போல் ஜூன் 17ஆம் தேதி தன்னுடைய மனைவி மற்றும் பள்ளியில் படிக்கும் மகனுடன் கடையில் வியாபாரம் செய்துவந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக 8 மணிக்கு மேல் கடையைத் திறந்துவைப்பதற்கு அனுமதியளிக்காத போதிலும், அவர் கடையை திறந்து வைத்துள்ளார். அதனால் அப்போது ரோந்துப் […]
ராமநாதபுரம் மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறையின் வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆபாச வீடியோ அனுப்பி இளைஞர் ஒருவர் சிக்கிக்கொண்டார்.. ராமநாதபுரம் மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறையின் வாட்ஸ்அப் எண்ணிற்கு, ஒரு எண்ணில் இருந்து வீடியோ ஒன்று வந்துள்ளது. அது என்ன வீடியோ என்று அதனைப் பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.. அதிர்ச்சி என்வென்றால் அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் தன்னை தானே நிர்வாணமாகப் படம்பிடித்து அனுப்பியிருந்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியதில், வீடியோ அனுப்பிய […]
தமிழகம் முழுவதும் இதுவரை 1,500 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. இதுவரை 56,845 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை பேர் 31,316 குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ள நிலையில் இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 704 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 39,641 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இதுவரை 1,500 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் […]
தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடமிருந்து ரூ4,46,89,179 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில்தேவையின்றி ஊரடங்கு விதிகளை மீறி வெளியே வருவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை தமிழக காவல்துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கூறி 4,32,061 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதேபோல் ஊரடங்கை மீறியதாக இதுவரை […]
பல பெண்களை ஏமாற்றி மிரட்டி பணம் பறித்த நாகர்கோவில் இளைஞர் காசியை சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட இருவர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகளை பதிவு செய்த போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே, காசி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு கந்துவட்டி வழக்கு கடந்த வாரம் பதிவு செய்யப்பட்டது. வடசேரி காவல்நிலையத்தில் காசியின் மீது மேலும் புதிதாக ஒரு […]
பல பெண்களை ஏமாற்றி மிரட்டி பணம் பறித்த நாகர்கோவில் இளைஞர் காசியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கூடுதல் மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட இருவர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகளை பதிவு செய்த போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத்தொடர்ந்து, அவனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் தாக்கல் செய்த மனு நாகர்கோவில் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. […]
பல பெண்களை ஏமாற்றி மிரட்டி பணம் பிரித்த நாகர்கோவில் இளைஞர் காசியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கூடுதல் மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட இருவர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகளை பதிவு செய்த போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவனை காவலில் எடுத்து வியாசருக்கு அனுமதி கோரி போலீசார் தாக்கல் செய்த மனு நாகர்கோவில் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை […]
நாகர்கோவில் காசியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நாகர்கோவில் கூடுதல் மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த வழக்கில் காசியை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. போலீஸ் காவலில் எடுப்பதற்காக அளிக்கப்பட்ட மனு மீதான விசாரணையில் காசி இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி என்ற சுஜி. இவன், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதலங்களில் […]
பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த நாகர்கோவில் இளைஞர் காசி நாகர்கோயில் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டான். கைது செய்யப்பட்ட இளைஞர் காசியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். காசியை போலீஸ் காவலில் எடுப்பதற்காக அளிக்கப்பட்ட மனு மீது விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி என்ற சுஜி. இவன், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதலங்களில் தன்னை பணக்காரன்போல் காட்டி கொண்டான். இதனால், அவரிடம் மயங்கிய பெண் […]
தமிழக காவல்துறையில் அவசர வேலை வாய்ப்பு; இந்த வேலை ஊரடங்கு காரணமாக காவல் துறையுடன் இணைந்து தடுப்புப் பணிகளை மேற்கொள்ள ஆட்கள் எடுக்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் சென்று பணியில் சேரலாம். பணியிடங்கள்: பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் முன்வரலாம். யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்: ஓய்வுபெற்ற மத்திய ஆயுதப்படை வீரர்கள். வயது வரம்பு: 40 முதல் 50 வரை இருக்க வேண்டும்
நாகர்கோவிலை சேர்ந்த காசி மீது புதிதாக கந்து வட்டி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இவன் பெண்களை ஏமாற்றிய வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டான். தற்போது, காசி மீது 3 வழக்குகளை காவல்துறை பதிவு செய்துள்ளது. குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி என்ற சுஜி. இவன், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதலங்களில் தன்னை பணக்காரன்போல் காட்டி கொண்டான். இதனால், அவரிடம் மயங்கிய பெண் டாக்டர், விமான பணிப்பெண் உள்ளிட்டோரிடம் பழகி அவர்களை ஆபாசமாக […]
மே 1 ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நாம் முதலில் செய்ய வேண்டிய கடமை குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். மே ஒன்றாம் தேதி உலகம் முழுவதும் உழைப்பாளர் தினமாக அனுசரிக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாமும் நமது தாய், தந்தை, உறவினர்,பக்கத்து வீட்டார் என நமக்குத் தெரிந்த உழைக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்களை வருடந்தோறும் தெரிவித்து வருகிறோம். அந்த வகையில், கொரோனா பாதிப்பை கண்டு பொது மக்கள் அஞ்சி […]
கொரோனா ஊரடங்கு நிவாரண நிதியாக மும்பை போலீஸ் பவுண்டேஷனுக்கு ஹிந்தி நடிகர் அக்ஷய்குமார் 2 கோடி நிதி வழங்கி உதவி செய்துள்ளார். உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா இந்தியாவையும் வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு நாடு முழுவது மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். இதில் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் தினக்கூலி தொழிலாளர்கள் தான். ஊரடங்கால் வருமானம் இன்றி ஒரு வேளை உணவிற்கு கூட இன்றி தவித்து […]
மகாராஷ்டிராவில் இதுவரை 96 காவல்துறை பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 394 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 18 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,817 ஆக அதிகரித்துள்ளது. அதில், 4,447 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள், 1020 பேர் புனே பகுதியை சேர்ந்தவர்கள். மேலும் மொத்த இறப்புகள் எண்ணிக்கை 301 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் மிகவும் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதி […]
ஊரடங்கு காலத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்த ஊர்காவல்படை அதிகாரியை மண்டியிட வைத்த அரசு அதிகாரி மீது நடவடிக்கைஎடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டுமே தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதன்படி, ஆங்காங்கே சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு வாகனங்கள் […]
தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதையடுத்து ரூ2,68,30,954 வசூலிக்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனாவை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே மக்கள் வெளியே வருகின்றனர். இதை மீறி தேவையற்று வெளியே சுற்றுபவர்கள் மீது தமிழக காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 2,85,150 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளதாக […]