ஆந்திர தலைநகரில் விவசாயிகள் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் குறித்து செய்தி சேகரித்த மூன்று ஊடகவியலாளர்கள் மீது காவல் துறையினர் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆந்திர தலைநகர் அமராவதியில் அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அரசுக்கு எதிராக விவசாயிகள் பெரும் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மூன்று ஊடக புகைப்படக்காரர்கள் மீது ஜெகன் அரசு பொய் வழக்கு பதிவுசெய்துள்ளது. விவசாயிகளின் போராட்டங்களைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் அமராவதி பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், […]
Tag: Police Department
சென்னை: வாகனத் தணிக்கையின் போது அதிவிரைவாக சென்ற 158 வாகனங்களை காவல் துறை பறிமுதல் செய்துள்ளது. சென்னையில் சாலை விதிகளை மீறி அதி விரைவாகச் செல்லும் இருசக்கர வாகனங்களாலும், சாலையில் நடத்தப்படும் வாகன பந்தயங்களாலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்க காவல் துறையினரும் அவ்வப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கு காவல் துறையினர் இணைந்து, நேற்று சென்னை காமராஜர் சாலை, அண்ணா சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, […]
உளுந்தூர்பேட்டை பகுதியில் பேருந்திலிருந்து கீழே விழுந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அடுத்துள்ள ஆசனூர் ராஜவீதியில் வசிப்பவர் சரவணன் வயது 34 . இவர் டெல்லியில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தந்தை குணசேகரன் என்பவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவரின் உடல்நிலையை கவனிப்பதற்காக டெல்லியிலிருந்து ரயில் மார்க்கமாக விழுப்புரம் வந்தடைந்தார். பின்னர் ரயில் நிலையத்தில் இருந்து அரசு பஸ்சில் ஏறி உளுந்தூர்பேட்டை ஆசனுர் பஸ் நிறுத்தம் அருகே பேருந்தில் […]
தஞ்சாவூர் அருகே தொழிலாளி வயிற்று வலி காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அடுத்துள்ள சத்தியமங்களம் ஊராட்சியில் வாழ்க்கை கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் (வயது 60) . இவர் விவசாயக்கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். மேலும் வயிற்றுவலி அதிகமானதால் மனமுடைந்த கூலித்தொழிலாளி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். மயங்கிய ராமலிங்கத்தை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இச் சம்பவம் குறித்து அவரது […]
சிவகங்கை அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து ஊழியர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் நேரு பஸார் தெருவில் வசித்து வருபவர் தமிழ்செல்வன். அவர் அரசு மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் வேலையில் ஈடுபட்டிருந்த போது, அவரைநோக்கி வேகமாக வந்த ஒக்கூரைச் சேர்ந்த அருண்குமார் என்ற வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தமிழ்ச் செல்வனை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சரிந்து விழுந்த தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே […]
பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் பொறியியல் கல்லூரி மாணவர் பெண் வேடமிட்டபடி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அருகே மத்தம்பாளையத்தில் உள்ள ஸ்ரீசக்தி பொறியியல் கல்லூரியில் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த எபின் ராபர்ட் என்ற மாணவர் எந்திரவியல் 3 ‘ஆம் ஆண்டு படித்து வந்தார்.கல்லூரி விடுதியில் தங்கி இருந்த எபினுக்கு நீண்ட நாட்களாகவே பெண்ணாக மாற வேண்டும் என்ற ஆசை இருந்ததாகச் தெரிவித்தனர். விடுதி அறையில் யாரும் இல்லாத நேரத்தில் பெண்கள் அணியும் […]
சென்னையில் மூன்று திருநங்கைகள் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் மயிலாப்பூர் பகுதியில் வசிப்பவர் ரேவதி.இவருடைய வயது 45. இவர் அப் பகுதியில் உள்ள லூர்ஸ் சர்ச்சு வழியாக சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த திருநங்கைகள் ரேவதியை வழிமறித்து தலையில் கை வைத்து ஆசிர்வதித்துள்ளனர். அப்போது ரேவதி சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவரிடம் இருந்த கைப்பையை திருடிச்சென்ற மூன்று திருநங்கைகள் வேகமாக ஓடியுள்ளனர்.அத்துடன் அவ்வழியாக வந்த ஆட்டோவில் ஏறி வேகமாக சென்றனர். அந்த பெண் கூச்சலிட்டும் கூட ஆட்டோ நிற்காமல் வேகமாக […]