பேரூராட்சி தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தலைஞாயிறு பேரூராட்சியில் வரும் 19-ஆம் தேதியன்று தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில் தலைஞாயிறு பேரூராட்சியிலுள்ள 15 வாக்குச்சாவடிகளில் 10,000 பேர் வாக்களிக்கவுள்ளனர். இதனால் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்காக காவல்துறையினர் தலைஞாயிறு பேரூராட்சி கடை வீதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளனர். இந்த கொடி அணிவகுப்பில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பங்கேற்றனர்.
Tag: police flag parade
பேரூராட்சி தேர்தலையொட்டி காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மணல்மேடு பேரூராட்சி தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும், வாக்காளர்கள் எந்தவித அச்சமுமின்றி வாக்களிக்கவும், தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் காவல்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில், மணல்மேடு காவல்துறையினர் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொடி அணிவகுப்பு மணல்மேடு பேரூராட்சி அலுவலகத்தில் புறப்பட்டு மணல்மேடு பேரூராட்சி சார்ந்த வார்டுகள் வழியாக சென்று காவல்நிலையத்தில் முடிந்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தலையொட்டி காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடி பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தலையொட்டி வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் பொறையாறு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நேற்று நடைபெற்றுள்ளது. இந்த அணிவகுப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலும், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முன்னிலையிலும், பொறையாறு புதிய பேருந்து நிலையத்திலிருந்து கடைவீதி வரை நடைபெற்றுள்ளது. இதில் மகளிர் காவல்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
போலீசாரின் கொடி அணிவகுப்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு நடைபெற்றுள்ளது. இந்த கொடி அணிவகுப்பில் காமராஜர் திடலில் ஆரம்பித்து சத்திரம், எம் ஜி ஆர் சாலை வழியாக அண்ணா சிலைக்கு வந்து நிறைவடைந்துள்ளது. இந்த அணிவகுப்பில் வஜ்ரா, வருண் ஆகிய வாகனங்களும் பங்கேற்றுள்ளது. கொடி அணி வகுப்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். மேலும் கூடுதல் சூப்பிரண்டுகள் […]