Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மகளுடன் நடந்து சென்ற தாய்….. சரமாரியாக தாக்கிய தம்பதி…. போலீஸ் விசாரணை…!!!

தாய் மகளை தாக்கிய தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள செம்படாபாளையம் பகுதியில் தண்டபாணி- பாப்பாத்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நந்தினி என்ற மகள் உள்ளார். இந்த குடும்பத்தினருக்கும் அதே பகுதியில் வசிக்கும் செல்வம் என்பவருக்கும் இடையே நிலபிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் பாப்பாத்தி தனது மகளுடன் நடந்து சென்ற போது செல்வம், அவரது மனைவி தவமணி ஆகியோர் தாய் மகளை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதனால் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!!!

10- ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த வரம் வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அப்போது சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் தனது மகளிடம் விசாரித்தார். அப்போது பண்டாரசெட்டிபட்டி பகுதியில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மலை உச்சியில் அழுகிய நிலையில் ஆண் சடலம்….. அதிர்ச்சியடைந்த போலீசார்…. தீவிர விசாரணை…!!!

 அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆணின் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு காவல் நிலைய குடியிருப்பு கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்ய ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன், சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ், நில அலுவலர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் ஏற்காடு மலை உச்சிக்கு சென்று நிலத்தை அளக்க முயன்றனர். அப்போது அழுகிய நிலையில் ஆணின் சடலம் கிடந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தீபாவளி சீட்டு நடத்தி பண மோசடி…. சப்-இன்ஸ்பெக்டர்- மனைவி மீது பரபரப்பு புகார்….. போலீஸ் விசாரணை….!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள பரவை அம்மன் கோவில் தெருவில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னபூரணம் என்ற மனைவி உள்ளார். இவர் சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, மதுரை பரவை சங்கன்கோட்டை தெருவில் வசிக்கும் மாநகர குற்றப்புலனாய்வு போலீசில் சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கும் மோகன் குமார் அவரது மனைவி கஸ்தூரி ஆகிய 2 பேரும் கடந்த 4 வருடங்களாக தீபாவளி பொங்கல் சீட்டு நடத்தி வருகின்றனர். அவர்களிடம் சீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கோவிலின் பூட்டை உடைத்து…. தங்க நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களுக்கு…. போலீஸ் வலைவீச்சு….!!!!

அங்காளம்மன் கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு தங்க நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாக்கம் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடித்தபின் பூசாரி ராமச்சந்திரன் கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பூசாரி ராமச்சந்திரன் கோவிலை திறந்து பூஜை செய்வதற்காக வந்துள்ளார். அப்போது கோவில் கதவின் பூட்டு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான மூதாட்டி….. மர்மமான முறையில் இறந்த சம்பவம்….. போலீஸ் விசாரணை….!!!

மர்மமான முறையில் மூதாட்டி இறந்த கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நாகமரை பரிசல் துறை காவிரி கரையோர பகுதியில் மூதாட்டியின் சடலம் கிடைப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

என்ன காரணம்….? கிணற்றில் பிணமாக மிதந்த பள்ளி மாணவி…. பல்வேறு கோணங்களில் போலீஸ் விசாரணை…. விழுப்புரத்தில் பரபரப்பு….!!!!

கிணற்றில் பிணமாக மிதந்த பள்ளி மாணவியின் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் கொடுக்கன்குப்பம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கலைச்செல்வன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மகள் இருந்தார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று கொடுக்கன்குளம் பகுதியில் வசித்து வரும் துளசி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் ராஜேஸ்வரி பிணமாக கிடந்துள்ளார். இதனை கண்டதும் அப்பகுதியைச் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஒரு வாரத்தில் வேலை வாங்கி தருகிறேன்” ரூ.16 லட்சம் அபேஸ் செய்த தம்பதி…. தந்தையின் பரபரப்பு புகார்….!!!

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 16 லட்ச ரூபாய் மோசடி செய்த தம்பதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ரங்கனூர் குறிச்சி கிராமத்தில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரான்ஸ்போர்ட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மாதையனுக்கு ஆத்தூரை சேர்ந்த சசிகுமார்-சாந்தலட்சுமி தம்பதியினருடன் பழக்கம் ஏற்பட்டது. சசிகுமார் தன்னை ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும் நான் ஏற்கனவே 40 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பெண்….. கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு….. போலீஸ் விசாரணை….!!!

வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விருவீடு கிராமத்தில் பரமேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியங்கா(28) என்ற மகள் இருக்கிறார். இவர் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த 2016-ஆம் ஆண்டு பிரியங்காவுக்கும் பெரியகுளம் தேவதானப்பட்டியில் வசிக்கும் ஜோதிபாஸ் எல்லோருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு ரித்வான் என்ற ஐந்து வயதில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“ஓய்வு பெற்ற முதியவருக்கு வெளிநாட்டில் வேலை” நூதன முறையில் 15 3/4 லட்ச ரூபாய் மோசடி….. போலீஸ் விசாரணை….!!!

முதியவரிடம் பல லட்ச ரூபாய் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் வண்ணார்பாளையத்தில் வீரபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் வெளிநாட்டில் வேலை தேடி வீரபாண்டியன் முழு விவரங்களையும் ஆன்லைனில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ஒருவர் செல்போன் மூலம் வீரபாண்டியனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர் தனது பெயர் லாரன்ஸ் பிராங்க் எனவும், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போன் பறிக்க முயன்ற வாலிபர்…. ரயில் சக்கரத்தில் சிக்கி துண்டான கால்….. பரபரப்பு சம்பவம்….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மின்சார ரயில் கும்மிடிப்பூண்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் வண்ணாரப்பேட்டை பென்சில் பேக்டரி- கொருக்குப்பேட்டை இடையே மின்சார ரயில் மெதுவாக சென்று கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த வாலிபர் ரயிலில் ஏறி ஜன்னலோரம் அமர்ந்திருந்த பயணிகளிடமிருந்து செல்போனை பறிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்து பயணிகள் கூச்சலிட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வாலிபர் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் அவரது இரண்டு கால்களும் ரயில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பையிலிருந்து கேட்ட அழுகை சத்தம்….. பேருந்தில் குழந்தையை விட்டு சென்ற சம்பவம்….. போலீஸ் விசாரணை….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டுவில் இருந்து அரசு பேருந்து செம்பட்டி நோக்கி 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அதில் காமாட்சிபுரத்தில் வசிக்கும் வேலுமணி என்ற பெண்ணும் பயணம் செய்துள்ளார். இந்நிலையில் பக்கத்தில் இருக்கையில் அமர்ந்திருந்த 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கையில் துணிப்பையுடன் அமர்ந்திருந்தார். இதனை அடுத்து செம்பட்டி பேருந்து நிலையத்திற்கு வந்தவுடன் இளம்பெண் துணி பையை இருக்கையிலேயே வைத்துவிட்டு இறங்கி சென்று விட்டார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனையடுத்து துணி பையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இலவச விழிப்புணர்வு என்ற பெயரில் அனுமதி” பொதுமக்களிடம் பணம் வசூலித்த 4 பேர் மீது வழக்குப்பதிவு….!!

சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தினர் பிரதம மந்திரியின் ஆயுஸ்மான் பாரத் இலவச மருத்துவ காப்பீடு திட்டம் குறித்தும், ஜன் ஆரோக்கிய யோஜனா காப்பீடு திட்டம் குறித்தும் பொதுமக்களுக்கு இலவச விழிப்புணர்வு முகாம் நடத்துவதாக கூறி மாவட்ட திட்ட இயக்குனர் அலுவலகத்தில் அனுமதி பெற்றனர். இந்நிலையில் அந்த நிறுவனத்தினர் வேப்பந்தட்டை ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் முகாம் நடத்தி பொதுமக்களிடம் 100 ரூபாய் வசூல் செய்ததாக ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமிக்கு தகவல் கிடைத்தது. இதனால் தனலட்சுமி அங்கு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

2 குடும்பத்தினரிடையே தகராறு….. 8 பேர் மீது வழக்குப்பதிவு….. போலீஸ் விசாரணை…..!!

முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள கணேசபுரம் ஊராளிபள்ளம் பகுதியில் மணிகண்டன்- பொண்ணு தம்பதியின்னா வசித்து வருகின்றனர். இவர்களுக்கும், அதே பகுதியில் வசிக்கும் மோகன் என்பவரது மனைவி மோனிஷாவுக்கும் இடையே பைப்லைன் சம்பந்தமாக ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதுகுறித்து பொண்ணு அளித்த புகாரின் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அதிக லாபத்திற்கு ஆசைப்பட்ட பெண்….. ரூ.4 லட்சத்தை மோசடி செய்த நபர்….போலீஸ் விசாரணை….!!!

4 லட்ச ரூபாயை மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் புகார் அளித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள புது குறுக்குபாளையம் இரண்டாவது தெருவில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் சாமிநாதனின் மனைவி அமுதாவிடம் ரியல் எஸ்டேட் தொழிலில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார். இதனை நம்பி அமுதா 4 லட்ச ரூபாய் பணத்தை இளங்கோவிடம் கொடுத்துள்ளார். ஆனால் இளங்கோ வந்த பணத்தை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“வேலை ரெடியா இருக்கு” காவல் உதவி எண்ணில் புகார் அளித்த பெண்….. போலீஸ் நடவடிக்கை….!!!

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் மீது பெண் புகார் அளித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆவினன்குடி பகுதியில் அமுதா என்பவர் வசித்து வருகிறார். இவர் லேடிஸ் பர்ஸ்ட் காவல் உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். அப்போது எனக்கு வீரமணி என்பவர் அறிமுகமானார். அவர் எனது மகளுக்கு நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பி அவரிடம் 55 ஆயிரம் ரூபாயை கொடுத்தேன். ஆனாலும் அவர் வேலை வாங்கி தராமல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“அந்த சான்றிதழ் பெறுவது கஷ்டம்” 14 1/2 லட்ச ரூபாயை இழந்த வாலிபர்….. போலீஸ் விசாரணை….!!!

வேலை வாங்கி தருவதாக பல லட்ச ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டலாம்பட்டி லட்சுமி நகரில் உமாசங்கர்(23) என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உமாசங்கரின் இணையதள முகவரிக்கு கனடாவில் மெடிக்கல் சம்பந்தமான வேலை இருப்பதாக தகவல் வந்தது. அதில் இருந்த செல்போன் எண்ணை உமாசங்கர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர் விசா, மருத்துவ பரிசோதனை, பயங்கரவாத […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு புதையல் கிடைச்சிருக்கு” 10 லட்ச ரூபாயை இழந்த வியாபாரி…. போலீஸ் விசாரணை…!!!

வாலிபர்கள் வியாபாரியிடம் 10 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி வாகராயம்பாளையம் பகுதியில் வியாபாரியான சதாசிவம்(48) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரியில் கூறியிருப்பதாவது, எனது கடைக்கு அடிக்கடி ஒரு வாலிபர் பொருட்கள் வாங்குவதற்காக வருவார். இந்நிலையில் வாலிபர் ஒரு நாள் அவரது நண்பருடன் எனது கடைக்கு வந்தார். அவர்கள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

யானை தந்தங்கள் எப்படி கிடைத்தது….?? காட்டுப்பகுதியில் சிக்கிய நபர்….. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

யானை தந்தங்களை கடத்தி விற்க முயன்ற குற்றத்திற்காக 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் மலைப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக சாக்கு பையுடன் நின்று கொண்டிருந்த ஒரு நபரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அப்போது 2 அடி நீளமுடைய நான்கு யானை தந்தங்கள் சாக்கு முட்டையில் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கேட்பாரற்று கிடந்த பண்டல்கள்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக ரயிலில் கடத்தி வந்த கஞ்சாவை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் கேரள மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று முன்தினம் ரயில்வே தனிப்படை போலீசார் ரயிலில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது முன்பதிவு இல்லாத பெட்டியில் கிடந்த ஒரு பையை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் 2 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை எடுத்து போலீசார் அந்த கஞ்சாவை பறிமுதல் செய்து சேலம் ரயில்வே […]

Categories
உலக செய்திகள்

மர்மமான முறையில்….. இறந்து கிடந்த இளம் பெண்…. பிரபல நாட்டில் பெரும் அதிர்ச்சி….!!!!

வட அயர்லாந்தில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட அயர்லாந்து நாட்டில் மேற்கு பெல்பாஸ்டில் உள்ள ஒரு பகுதியில் அமைந்துள்ள வீட்டில் 28 வயதுடைய பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் புலனாய்வு குழுவின் துப்பறியும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் புலனாய்வு குழுவின் துப்பறியும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக…. ஆயுதத்தோடு நின்ற வாலிபர்….. போலீஸ் நடவடிக்கை…!!

ஆயுதத்தை கையில் வைத்துக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழக்குளம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சாந்தகுமார்(24) என்பவர் கையில் வாள் போன்ற பயங்கர ஆயுதத்துடன் நின்று கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சாந்தகுமாரை கைது செய்தனர். அவர் மீது காவல் நிலையங்களில் 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மகளை திருமணம் செய்த இளம்பெண்…. தந்தையின் பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை…!!

மகளை திருமணம் செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தந்தை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூரில் கூலி தொழிலாளி ஒருவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனக்கு ஒரு மகனும், 2 மகள்களும் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் 9-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். வருகிற செப்டம்பர் மாதம் 8-ஆம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரயிலில் பயணித்த பெண்…. நூதன முறையில் திருடிய வாலிபர்….. போலீஸ் விசாரணை…!!

நூதன முறையில் செல்போனை திருடி சென்ற வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசங்கரி(21) என்ற மகள் உள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சிவசங்கரி நாகர்கோவில் கோட்டார் ரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு பயணிகள் ரயிலில் செல்வது வழக்கம். நேற்று ரயிலில் சிவசங்கரி வேலைக்கு சென்று கொண்டிருந்த போது அவர் அருகில் ஒரு வாலிபர் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன பள்ளி மாணவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா(16) என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி நடுவலூர் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே சென்ற சரண்யா நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சரண்யாவின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் சிறுமி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்று வந்த மாணவர்…. சரமாரியாக தாக்கிய சிறுவர்கள்…. போலீஸ் விசாரணை…!!

பள்ளி மாணவரை தாக்கிய சிறுவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆயன்குளம் கிராமத்தில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சய் என்ற மகன் உள்ளார். இவர் பாளையங்கோட்டையில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் சஞ்சய் ஆயன்குளம் பேருந்து நிறுத்தத்தில் தனது நண்பர்களுடன் வந்து இறங்கினார். அப்போது திடீரென இரண்டு சிறுவர்கள் அங்கு சென்று சஞ்சயை வழிமறித்து தாக்கியுள்ளனர். இதனால் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சகோதரியின் வீட்டிற்கு சென்ற இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை பகுதியில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி(26) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விஜயலட்சுமி தனது சகோதரியான ஈஸ்வரி என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து தனியார் கம்பெனிக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்ட விஜயலட்சுமி திரும்பி வரவில்லை. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்ற மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி காணாமல் போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மஞ்சாலுமூடு பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல பள்ளிக்கு சென்ற மாணவி நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் மனைவியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் மாணவி கிடைக்காததால் அவரது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காதலியை வழிமறித்து தகராறு…. தட்டிகேட்ட தந்தைக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

காதல் விவகாரத்தில் பெண்ணின் தந்தையை 3 வாலிபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாலப்பள்ளம் ஈச்சவிளை பகுதியில் வைகுண்ட மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜின்(20) என்ற மகன் உள்ளார். இவர் தொலையாவட்டம் பகுதியில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் அஜின் மாங்கரை செங்கிட்டான்விளை பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகரின் மகளை காதலித்தது தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சனை இருந்துள்ளது. நேற்று அஜின் தனது நண்பர்களான […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எரிந்து சாம்பலான ஸ்கூட்டர்…. வியாபாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மர்ம நபர்கள் ஸ்கூட்டரை தீ வைத்து எரித்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மஞ்சள்பரப்பு கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காபி, மிளகு போன்றவற்றை வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் தனது ஸ்கூட்டரை வீட்டிற்கு முன்பு நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது ஸ்கூட்டர் எரிந்து சாம்பலாகி கிடப்பதை கண்டு ராஜேந்திரன் அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி ஸ்கூட்டரை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திடீரென இறந்த இளம்பெண்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முதலிப்பட்டியில் முத்து பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசி என்ற மகள் இருந்துள்ளார். இவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்த தமிழரசிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக தமிழரசியின் குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு தமிழரசியை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மனைவியை பார்க்க சென்ற கணவர்…. ஓட்டுநர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

லாரி ஓட்டுநரை தாக்கிய மனைவி மற்றும் அவரது தம்பி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள கரட்டுப்பட்டியில் லாரி ஓட்டுநரான பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துர்கா தேவி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் துர்காதேவி தனது 2 குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் பழனிவேல் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்காக வேதாச்சலபுரத்திலிருக்கும் மாமனார் வீட்டிற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பா.ஜனதா பிரமுகரின் கார் எரிப்பு…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் விசாரணை…!!

பா.ஜனதா பிரமுகரின் காரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள மதுரவாயல் கிருஷ்ணா நகர் 1-வது தெருவில் பா. ஜனதா கட்சி பிரமுகரான சதீஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சதீஷ் குமாரின் வீட்டிற்கு முன்பு நிறுத்தி இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்து. இதனை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக தண்ணீர் ஊற்றி காரில் பற்றி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

துர்நாற்றத்துடன் வந்த கரும்புகை….. தம்பதியினருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

தம்பதியினர் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான பாஷா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நூர்ஜஹான் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவர்கள் 3 பேருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். இந்நிலையில் போதிய வருமானம் கிடைக்காததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இது யாரா இருக்கும்….? அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

சடலமாக மீட்கப்பட்ட நபரின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கோட்டை செல்லும் சாலையில் வசிஷ்ட நதி பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடப்பதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த ஆணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“விஷம் வச்சி கொன்னுட்டாங்க” பசுக்களை பார்த்து கதறிய பெண்…. போலீஸ் விசாரணை…!!

2 பசுக்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக பெண் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடுகபட்டியில் கலைச்செல்வி என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது தோட்டத்தில் 4 பசுக்களை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் கலைச்செல்வி தனது பசுக்களுக்கு கழனி தண்ணீர் சேகரிப்பதற்காக ஊரின் ஒரு பகுதியில் குடத்தை வைத்து செல்வது வழக்கம். அந்த குடத்தில் பொதுமக்கள் கழனி தண்ணீரை ஊற்றி செல்வர். இந்நிலையில் பொதுமக்கள் ஊற்றிய கழனி தண்ணீரை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பணம் எடுப்பதற்காக சென்ற நபர்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளியின் வங்கி கணக்கில் இருந்து பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள குஜிலியம்பாறை பகுதியில் கூலி தொழிலாளியான அம்மையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வங்கி கணக்கில் 53 ஆயிரம் ரூபாயை சேமித்து வைத்துள்ளார். இந்நிலையில் பணம் எடுப்பதற்காக அம்மையப்பன் ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது வங்கி கணக்கில் பணம் இல்லை என வந்ததால் அம்மையப்பன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டும் சரியான தகவல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லை” மூதாட்டி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

மூதாட்டியின் பணத்தை மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சின்னாளபட்டியில் விஜயலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயலட்சுமி தான் சேமித்து வைத்திருந்த 76 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுப்பதற்காக வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது வங்கி கணக்கில் பணம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பிறகு விஜயலட்சுமி வங்கிக் கணக்கு புத்தகத்தில் பண வரவு-செலவு விவரத்தை பதிவு செய்துள்ளார். அப்போது மூதாட்டியின் வங்கி கணக்கில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பணம் கொடுக்காத வியாபாரி…. சரமாரியாக தாக்கிய இருவர்…. போலீஸ் விசாரணை…!!

மாட்டு வியாபாரியை தாக்கிய 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள மணக்குடி தெற்கு தெருவில் மாட்டு வியாபாரியான செந்தில் என்பவர் வசித்துவருகிறார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் தேவேந்திரன் என்பவருக்கு சொந்தமான பசு மாட்டை செந்தில் 17 ஆயிரம் ரூபாய்க்கு விலை பேசி வாங்கியுள்ளார். அப்போது முன்பணமாக 1,700 ரூபாய் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் மீதமுள்ள 15 ஆயிரத்து 300 ரூபாயை செந்தில் தரவில்லை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சாலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

சடலமாக மீட்கப்பட்ட முதியவரின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருமாந்துறை-கைகாட்டி சாலையில் 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த முதியவர் யார்? எந்த ஊரைச் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன புதுமாப்பிள்ளை…. காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன புதுமாப்பிள்ளையை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா ராயபுரத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் மோகனப்பிரியா என்ற பெண்ணை மணிகண்டன் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் வீட்டில் இருந்த மணிகண்டன் திடீரென காணாமல் போய் விட்டார். இதனை அடுத்து மணிகண்டனை அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிணற்றில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கிணற்றிலிருந்து முதியவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் ராமர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராமரின் சடலம் தோட்டத்துக்கு கிணற்றில் மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ராமரின் சடலத்தை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காணாமல் போன தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன தொழிலாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள உடப்பன்பட்டியில் கூலித் தொழிலாளியான அழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்ற அழகன் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரது உறவினர்கள் அழகனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இதனை அடுத்து நேற்று அப்பகுதியில் இருக்கும் கண்மாயில் அழகரின் சடலம் மிதப்பதாக பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீக்காயங்களுடன் கிடந்த மூதாட்டி…. அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

மர்மமான முறையில் மூதாட்டி இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் தியாகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சண்முகத்தாய் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சண்முகத்தாய் கால் தவறி கீழே விழுந்ததால் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தீக்காயங்களுடன் மூதாட்டி தரையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“தங்க பிஸ்கட் வாங்கி தரேன்” 5 லட்ச ரூபாயை பறிகொடுத்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

5 லட்ச ரூபாயை மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வெளிபட்டிணத்தில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கரலிங்கம் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் சண்முகத்திடம் உசிலம்பட்டி பகுதியில் குறைந்த விலைக்கு தங்க பிஸ்கட் வாங்கி தருவதாக சங்கரலிங்கம் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய சண்முகம் 5 லட்ச ரூபாயுடன் உசிலம்பட்டிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து தங்க பிஸ்கட் வாங்குவது குறித்து பேரம் பேசிக் கொண்டிருந்தபோது சில மர்ம […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அழுகிய நிலையில் தொங்கிய தலை” அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. கோவையில் பரபரப்பு…!!

அழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பாலமநல்லூரில் இருக்கும் தனியார் தோட்டத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது தூக்கில் அழுகிய நிலையில் ஆணின் தலையும், உடல் தரையிலும் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் காவல்துறையினர் அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கருவை கலைத்தனர்” சிறுமிக்கு தாய்மாமன் செய்த கொடூரம்…. சென்னையில் பரபரப்பு…!!

சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்த தாய்மாமனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள காசிமேடு பகுதியில் 45 வயதுடைய பெண் வசித்து வருகிறார். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இந்த பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். இதனால் தனது 1 வயது பெண் குழந்தையை தம்பியான தேசப்பன் என்பவரிடம் கொடுத்துவிட்டு அந்தப் பெண் வேறு ஒரு நபரை திருமணம் செய்துள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு தாய்மாமனான தேசப்பன் 9 வயதுடைய அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இது யாராக இருக்கும்….? சடலமாக கிடந்த மூதாட்டி…. போலீஸ் விசாரணை…!!

சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டியின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு அருகே பெரியார் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய கிணறு அமைந்துள்ளது. இந்தக் கிணற்றில் மூதாட்டியின் சடலம் மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மூதாட்டியின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பள்ளிக்கு அருகில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்… போலீஸ் விசாரணை…!!

கூலி தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வட மாம்பாக்கம் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளி அருகே 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்து கிடந்த ஆணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“உங்களை திருமணம் செய்ய விரும்புகிறேன்” பெண்ணிடம் 27 1/2 லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

நூதன முறையில் பெண்ணிடம் இருந்து பல லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புள்ள ஓசூர் சின்ன எலசகிரியில் 37 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார். இந்நிலையில் மறுமணம் செய்வதற்காக பிரபல இணையதள திருமண தகவல் மையத்தில் அந்த பெண் தனது விவரங்களை பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ஸ்காட்லாந்து நாட்டிலிருந்து மார்கஸ் பக்சி என்பவர் இளம் பெண்ணிடம் […]

Categories

Tech |