Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“பணியிடைமாற்றத்தால் வேதனை” தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய வாலிபர்….. ரயில் மோதி மரணம்…!!

பணியிடைமாற்றம்  செய்த வேதனையினால் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய வாலிபர் ரயில்  மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்னால் விழுப்புரம் to  காட்பாடி வரை செல்லும் ரயில்வே தண்டவாளம் உள்ளது. இந்த தண்டவாளத்தில் நேற்றைய தினம் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சென்றதும் ரயில்வே காவல் நிலைய அதிகாரிகளுக்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“முன்விரோதம்” AC மெக்கானிக்கை ஆட்டோவில் கடத்தி சென்ற கும்பல்….. 4 பேர் கைது…. 6 பேருக்கு போலீஸ் வலைவீச்சு….!!

சென்னை ஐஸ்ஹவுஸ் நடேசன் சாலை பகுதியைச் சேர்ந்த ராம் குமார் என்பவரை 10 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றது குறித்து காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை ஐஸ்ஹவுஸ்  பக்கத்தில் வசித்து  வருபவர் ராம்குமார். இவர் AC  மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று  தனது வீட்டின் அருகே நின்று ராம்குமார் செல்போன் பேசி கொண்டிருந்த போது அங்கே வந்த 10 பேர் கொண்ட கும்பல் அவரை ஆட்டோவில் கடத்தி சென்றது. இது தொடர்பாக வழக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

டாக்டர் வீட்டில் கைவரிசை….. மிளகாய் பொடி தூவி 50 சவரன் நகை…. ரூ3,00,000 பணம் கொள்ளை…. குழப்பத்தில் போலீசார்….!!

வேலூர் காட்பாடியில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்டம்  காட்பாடி பகுதியை அடுத்த  பாலாஜி நகரில் வசித்து வரும் ராமனைய்யா குடியாத்தம் சாலையில் சாந்தி கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை மாலை குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிய போது முன்பக்க கதவு மற்றும் பீரோ  பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மகன்..மகளின் உதவியுடன்….. கணவன் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி….. பரபரப்பு வாக்குமூலம்…!!

தர்மபுரியில் மகன் மகளின் உதவியுடன் மனைவியே கணவன் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் வேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கராசு. இவர் தர்மபுரியை சுற்றியுள்ள பகுதிகளில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. நாள்தோறும் மது அருந்திவிட்டு தனது மனைவி மகன் மகளுடன் போதையில் தங்கராசு சண்டையிடுவது வழக்கம். இதையடுத்து சம்பவத்தன்று மது அருந்திவிட்டு தனது மனைவி, மகன் மகளுடன் சண்டையிட்டு உள்ளார் தங்கராசு. இதையடுத்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கர்ப்பிணி பெண் மீது தாக்குதல்….. நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம்….. சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு….!!

கடலூரில் கர்ப்பிணி பெண்ணை தாக்கியவர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.  கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியை அடுத்த கார்குடல்  கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியசீலன். இவரும் 7 மாத கர்ப்பிணியான இவரது மனைவி கிருஷ்ணவேணியும்  நேற்று காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது முன்விரோதம் காரணமாக 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று இவர்களை வழிமறித்து சரமாரியாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த இருவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதையைடுத்து கர்ப்பிணிப் பெண்ணை கொடூரமாக தாக்கிய […]

Categories
மாநில செய்திகள்

காணும் பொங்கல்: சென்னை முழுவதும் பாதுகாப்புப்பணியில் 10,000 போலீசார்

காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையின் முக்கிய இடங்களில் 10 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. காணும் பொங்கலை ஒட்டி, சென்னை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மெரினா கடற்கரையில் 5 ஆயிரம் காவல் துறையினரும், இதர மக்கள் கூடும் பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத் தலங்களிலும் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். சுற்றுலாப் பயணிகள் கடலில் குளிக்க தடை விதித்தும், படகு சவாரி […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள்

37 சோதனை சாவடிகள்….. துப்பாக்கி ஏந்திய காவல் படை….. குமரியில் பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 37 சோதனைச் சாவடிகளில் காவல்துறையினருக்கு துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமாரி மாவட்டம் களியக்காவிளை அருகே காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூன்று அடி கொண்ட ரைபிள் ரக துப்பாக்கி 37 சோதனை சாவடிகளில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர தமிழகம் முழுவதும் உள்ள ஓரிரு சோதனைச் சாவடிகளிலும் துப்பாக்கியுடன் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“சப்-இன்ஸ்பெக்டர் பணி” எழுத்து தேர்வு…… 2,194இல்…… 1,603 பேர் பங்கேற்பு…..!!

திருப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வுக்கு 2,194 பேர் விண்ணப்பிருந்த நிலையில் 1603 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.  தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமத்தின் சார்பில் திருப்பூர் மாவட்ட சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு இன்று திருப்பூரில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கு திருப்பூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள 2194 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதன்படி 1,093 பேருக்கு திருப்பூர்குமரன் மகளிர் கல்லூரியிலும், 891 பேருக்கு இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும்  தேர்வுகள் எழுத வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரர்கள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சாமி தரிசனம்…… கோவில் வளாகத்தில் திருடர்கள் கைவரிசை….. திருவண்ணாமலையில் வாழ்க்கையை தொலைத்த ஆந்திர பெண்….!!

திருவண்ணாமலையில் ஆந்திர பெண் ஒருவரின் மடிக்கணினியை திருடர்கள் திருடி சென்றதால் அவர் தனது வேலையை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர்  கோவிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் கூட்டம்  அதிக அளவில் காணப்படும். ஆகையால் அங்கு நாள்தோறும் வரும் கார் மற்றும் வாகனங்களை நிறுத்த அரசு சார்பிலும் கோவில் நிர்வாகம் சார்பிலும் வசதி ஏற்படுத்தபட்டதுடன் அதற்கான கட்டணமும் வசூலிக்கப்பட்டது. அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க ஆந்திராவிலிருந்து வந்த ஒரு குடும்பத்தினர் தங்களது காரை அம்மணி அம்மன் கோபுரம் அருகே  நிறுத்தி பூட்டிவிட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் மரணம்…… இனி யார் இருக்கா….. கதறிய பெற்றோர்கள்…. வேலூரில் சோகம்…!!

பெற்றெடுத்த 2 குழந்தைகளையும் குளத்தினுள் பறிகொடுத்துவிட்டு பெற்றோர்கள் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  வேலூர் மாவட்டம் நெமிலி பகுதியை அடுத்த மேலூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவர் நெமிலியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அமுலு. இவர்கள் இருவருக்கும் ஹரிணி என்ற 4 வயது பெண் குழந்தையும், தர்ஷன் என்ற 2 வயது ஆண் குழந்தையும் இருந்தனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார் அமுலு. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“ட்ராவான தேர்தல் முடிவு” திடீர் கலவரம்….. டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு….. விருதுநகரில் பரபரப்பு…!!

விருதுநகரில் வாக்குசாவடி ஒன்றில் ஏற்பட்ட கலவரத்தை தடுக்க முயன்ற டிஎஸ்பிஐ  மர்ம கும்பல் வெட்டிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சியில் நடைபெற்று முடிந்த தேர்தலில் மொத்தம் 14 தொகுதியில் அதிமுக-5 திமுக-6 அமமுக-1 சுயேச்சை-2 என்ற எண்ணிக்கையில் வெற்றி பெற்றனர். இதையடுத்து தலைவர் துணைத் தலைவர் பதவிகளை தேர்ந்தெடுக்க மறைமுகத் தேர்தல் நேற்றையதினம் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் பஞ்சவர்ணம் என்பவரும் திமுக சார்பில் காளீஸ்வரி என்பவரும் போட்டியிட்டனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

40 பவுன் நகை….. ரூ3,00,000 பணம் கொள்ளை….. இன்ஜினியர் வீட்டில் மர்மநபர்கள் கைவரிசை….!!

சேலத்தில் மாநகராட்சி இன்ஜினியர் வீட்டில் 40 பவுன் நகை ரூ3 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் அசோகன். இவர் சேலம் மாநகராட்சியில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ப்ரீத்தனா. இவருக்கு ஜிவிகா ப்ரிஜித் என  இரண்டு குழந்தைகள் உள்ளன. ஜீவிகா சென்னையில் மருத்துவ படிப்பு மூன்றாமாண்டு விடுதியில் தங்கி படித்து வர, ப்ரிஜித் சேலத்தில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

3,00,000 CCTV கேமராக்கள்….. 50% குறைந்த செயின் பறிப்பு சம்பவங்கள்…. சென்னை மாநகர ஆணையர் தகவல்…!!

CCTV கேமராக்களால் 50% செயின் பறிப்பு குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.  வடசென்னை பகுதி அதிமுக கட்சியின் சார்பாக 500 சிசிடிவி கேமராக்கள் காவல்துறையினருக்கு வழங்கும் நிகழ்ச்சி தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய அதிமுக உறுப்பினர்கள் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் காவல்துறை உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் பேசிய ஏ கே விஸ்வநாதன், சிசிடிவி கேமராக்கள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தேசியக் கொடியை காப்பாற்றிய காவலருக்கு பாராட்டு…!!

போராட்டத்தின்போது கீழே விழுந்த தேசியக் கொடியை தூக்கி நிறுத்திய காவலருக்கு, காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். கடலூர் மாவட்டம் வால்பேட்டை அருகே டிசம்பர் மாதம் 20ஆம் தேதி இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினருக்கும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரஸ்பரம் தாக்கி கொண்டனர். அப்போது போராட்டக்காரர்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வேலைக்கு அவசரம்….. வாகனத்தை முந்தி செல்ல முயற்சி… குமரியில் கோர விபத்து….!!

நாகர்கோவிலில் வேலைக்கு செல்லும் அவசரத்தில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற நர்ஸ் விபத்தில் சிக்கி உயிரிழந்த்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில்  தக்கல்  பகுதியை அடுத்த மணலிக்கரை யை சேர்ந்தவர் ஸ்டெல்லா ராணி. இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார். நாள்தோறும் தனது ஸ்கூட்டரில் பணிக்கு சென்று  வரும் இவர் நேற்றைய தினம் காலை வழக்கம்போல் தனது ஸ்கூட்டரில் பணிக்கு சென்றுள்ளார். பணிக்கு வேகமாக செல்ல நினைத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“குடிபோதை” தூக்கம் கலைத்ததால் திட்டு…. தலைக்கேறிய கோபம்….பாட்டி தலையில் டிவியை போட்டு கொன்ற பேரன்…..!!

ஈரோட்டில் சொந்த பாட்டியின் தலையில் பேரனே டிவியை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை அடுத்த விவேகானந்த நகரில் வசித்து வருபவர் ஜோகரம்மாள். இவரது மகன் சாதிக் பாஷா பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். சாதிக் பாட்ஷாவின் மகன் பீர்முகமது சரக்கு ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சாதிக் பாட்சாவின் மனைவி இறந்துவிட மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதையடுத்து பீர்முகமதுக்கு  மது அருந்தும் பழக்கம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை…… வரலாற்று ஆசிரியர்களை அடித்து துவைத்த பொதுமக்கள்….. ஈரோட்டில் பரபரப்பு….!!

ஈரோட்டில் 10 ஆம்  வகுப்பு மாணவிக்கு  பாலியல் தொல்லை அளித்த 2 ஆசிரியர்களை  பொதுமக்கள் அடித்து உதைத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் மகேந்திர மங்கலம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில்  லட்சுமணன் சின்ன முத்து ஆகியோர் வரலாற்று ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அவ்வப்போது குடிபோதையில் பள்ளிக்கு வந்து பாடம்  எடுப்பதால் மாணவர்களுக்கு இவர்களை கண்டாலே பிடிக்காது. இந்நிலையில் இருவரும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தந்தை கைதால் மனவேதனை…… போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளித்த மகன்….. கடலூரில் பரபரப்பு…!!

கடலூரில் தந்தையை கைது செய்த மனவேதனையில் மகன் காவல்நிலையம் முன் தீ குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை அடுத்த குக்கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் சில நாட்களுக்கு முன் உள்ளாட்சி தேர்தல் விரோதத்தில் ஹாலோபிளாக் விற்பனையாளரை எரித்துக் கொல்ல முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில்  ஓட்டுனராக பணியாற்றி வந்த இவரது மகன் அனந்தராமன் நேற்று ஊருக்கு வந்த கையுடன் பெட்ரோல் கேனை கையில் […]

Categories
மாவட்ட செய்திகள்

கடவுள் காப்பாத்த வரல…… சிவன் சன்னதி முன்….. பள்ளி மாணவன் துடிதுடிக்க கொலை….. செங்கல்பட்டில் பரபரப்பு….!!

செங்கல்பட்டில் சிவாலயத்திலிருந்து வெளியே வந்த 9 ஆம் வகுப்பு மாணவனை மர்மநபர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் வேம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் உஷா தம்பதியினர். இவரது மகன் புருஷோத்தமன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். இவர்களுக்கு  சொந்த ஊர் விழுப்புரம் ஆக இருக்கும் பட்சத்தில் இங்கே வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். உஷா அதே பகுதியில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தாய்..தந்தை…பாட்டி… எல்லாரும் போய்ட்டாங்க….. நானும் போறேன்…. ஏரியில் மூழ்கி வாலிபர் மரணம்….!!

அரியலூரில் தாய், தந்தை, பாட்டி என அனைத்து சொந்தத்தையும் இழந்து மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியை அடுத்த நின்றியூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா. இவரது வயது 30. இவரது தாய் தந்தை இவரும் சிவாவின்  சிறுவயதிலேயே இறந்து விட இவரது பாட்டி தான் இவரை இத்தனை காலமும் வளர்த்து வந்துள்ளார். தாய் தந்தை இல்லாத குறையை தீர்க்கும் அளவிற்கு அன்பையும் பாசத்தையும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்டதில் பயங்கரவாதிகளுக்குத் தொடர்பு’- பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு..!!

கன்னியாகுமரி காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்டதில் பயங்கரவாதிகளுக்குத் தொடர்பிருப்பதாக பாஜக மூத்தத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார். மத்திய முன்னாள் இணையமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”கன்னியாகுமரி மாவட்டத்தில், கேரள தமிழ்நாடு எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் பணியிலிருந்த காவலர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டிருக்கிறார். இதில் ஈடுபட்ட குற்றவாளிகள், முஸ்லிம் பயங்கரவாதத்தில் ஈடுபட்டு பல குற்றச் செயல்களில் தேடப்பட்டுவரும் நபர் என்பது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இப்படியும் போலீசா ? ”ஆதரவற்ற முதியவர் உடல் அடக்கம்” குவியும் பாராட்டு …!!

பிச்சை எடுத்து வாழ்ந்துவந்த ஆதரவற்ற முதியவர் ஒருவர் இறந்த நிலையில், அவரது உடலை தனது சொந்த செலவில் நல்லடக்கம் செய்த தலைமைக் காவலரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியில் ஆதரவற்ற முதியவர் (சுமார் 70 வயது) ஒருவர் பிச்சை எடுத்துவந்தார். இவர் நேற்று திடீரென இறந்துவிட்டார். இதுகுறித்து அஞ்சுகிராமம் கிராம நிர்வாக அலுவலர், அஞ்சுகிராமம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து அக்காவல் நிலையத்தில் பணியாற்றிவரும் தலைமைக் காவலர் லிங்கேஸ், தனது […]

Categories
தேசிய செய்திகள்

JUST NOW : JNU மாணவர் சங்க தலைவி மீது வழக்கு பதிவு …..!!

JNU பல்கலைக்கழக தாக்குதல் சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. நேற்று முன்தினம் டெல்லி JNU பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியினுள் நுழைந்த கும்பல் அங்குள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கடுமையாக தாக்கினார். கொடூர ஆயுதங்களோடு நுழைந்து மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பாஜகவின் மாணவர் அமைப்பான ABVP தான் காரணம் என்று ஒரு தரப்பினரும் , இடதுசாரி மாணவர் அமைப்புதான் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஆபாச படம்” ஒரே நாள்… ஒரே மாவட்டம்…. 2 பேர் கைது…. தொடரும் போலீஸ் வேட்டை…!!

கோவையில் குழந்தைகளின் ஆபாச படத்தை முகநூலில் பதிவேற்றம்  செய்த குற்றத்திற்க்காக தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழகத்தில் அதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக குழந்தைகளின் ஆபாசப்படங்களை பார்ப்போர், அதை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்வோர், சமூக வலைதளங்களில் பதிவேற்றுவோர் உள்ளிட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி கைது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பணம் வரல…. காலால் எட்டி மிதித்து…. கல் எரிந்ததால்…. ATM மிஷன் சேதம்…. மர்ம நபர் கைது…!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகில் பணம் வராததால் ஆத்திரம் அடைந்த நபர்  ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகிஉள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளையில் ஏடிஎம் இயந்திர மையம் ஒன்று உள்ளது. அங்கு வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க முயற்சித்த பொழுது இயந்திர கோளாறு காரணமாக பணம் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்  இயந்திரத்தை பலமுறை காலால் உதைப்பது, கல்லை கொண்டு தாக்குவது உள்ளிட்ட  காட்சிகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டு வாசலில் நிறுத்திய புல்லட் பைக் மாயம்….. அடையாளம் காட்டிய CCTV….. திருடனுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

சென்னையை அடுத்த ஆவடியில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த SOFTWARE என்ஜினீயர் ஒருவரின் புல்லட் பைக்கை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற  சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னைஆவடியை அடுத்த பகுதியில்  SOFTWARE என்ஜினீயர் ஒருவர் தனது விலையுயர்ந்த புல்லட்  பைக்கை வீட்டு வாசலில் நிறுத்தி வைத்துவிட்டு வெளியில் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த பொழுது பைக்கை காணவில்லை. பின் அருகிலுள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆராய்ந்த பொழுது மர்ம நபர் ஒருவர் சைடு லாக்கை உடைத்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காதில் விஷம் ஊற்றி…. இளம் பெண் தற்கொலை…. எரிந்த உடல்… பாதியில் அணைப்பு… சுடுகாட்டில் அதிரடி காட்டிய போலீஸ்….!!

கடலூரில் தாய் திட்டியதால் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்ப சுடுகாட்டிற்கு சென்று காவல்துறையினர் மீட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை அடுத்த புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்கள் இருவருக்கும் இந்துமதி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டு வேலைகள் செய்யாத காரணத்தினால் அவரது தாயார் தனலட்சுமி இந்துமதியை கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள்

பஸ்காக வெயிட்டிங்….. பயணி வெட்டி படுகொலை….. யார் இவர்…? மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

செங்கல்பட்டில் பேருந்திற்காக காத்திருந்த பயணியை மர்மநபர்கள் வெட்டி கொன்ற சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதியில் உள்ள சிவானந்தா குருகுலம் எதிரில் அமைந்திருக்கக் கூடிய பேருந்து நிலையத்தில் அதிகாலை சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. இதனை கண்ட இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் உடலை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

2 இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்…… நிதானமாக சென்ற வாலிபர் மரணம்…. அரியலூரில் சோகம்…!!

அரியலூரில் 2 இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி கொண்டதில் ஒரு வாலிபர் உயிரிழக்க 2 பேர் படுகாயம்  அடைந்தனர்.  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை அடுத்த கொல்லாபுரம்  கிராமத்தில் வசித்து வருபவர் பாரதிராஜா. இவரது தந்தை கொளஞ்சிநாதன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். பாரதிராஜா ஐடிஐ படித்து முடித்துவிட்டு அதே பகுதியில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்து பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு பணிக்கு சென்று வீடு திரும்பிய பாரதிராஜா தனது மோட்டார் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இரு தரப்பினரிடையே கடும் மோதல்….. வானம் நோக்கி துப்பாக்கி சூடு…. 10 பேர் படுகாயம்…. விருதுநகரில் பரபரப்பு…!!

விருதுநகரில் இருதரப்பினர் இடையே மோதல் முற்றியதால் காவல்துறையினர் வானத்தை நோக்கி  துப்பாக்கி சூடு நடத்தினர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பகுதியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு செங்குளம் கிராமத்திலிருந்து ஒரு பிரிவினர் வாகனம் மூலம் விழா நடக்கும் இடத்திற்கு சென்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, பின் ஊர் திரும்பிய அவர்கள் சென்ற வாகனம் மீது மற்றொரு பிரிவினர் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“காதலுக்கு எதிர்ப்பு” காண்ட்ராக்டர் கொலை…… காதலன் உட்பட 2 பேர் பலி…!!

கன்னியகுமாரியில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பில்டிங் காண்ட்ராக்டரை பெண்ணின் காதலன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியை அடுத்த தெரிசனங்கோப்பு நகரை சேர்ந்தவர் ஆனந்த். இவர் பில்டிங் கான்ட்ராக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது உறவினர் பெண் ஒருவரை அம்பலத்தூர்  பகுதியைச் சேர்ந்த தேவானந்த் என்பவர் உயிருக்குயிராக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு ஆனந்த் எதிர்ப்பு தெரிவித்ததோடு தேவானந்தாவை பலமுறை கண்டித்தும் உள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் பகை ஏற்பட்டது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“படியில் பயணம் நொடியில் மரணம்” கன்னியாகுமாரி வாலிபருக்கு ரயிலில் நேர்ந்த விபரீதம்….!!

கன்னியகுமாரியில் ஓடும் ரயிலில் இருந்து வாலிபர் ஒருவர்விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நேற்று அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று தண்டவாளத்தில் கிடந்துள்ளது. இதை கண்ட ஊர்மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  பின் மேற்கொண்ட விசாரணையில் அவர் கன்னியாகுமரியை சேர்ந்த ரமேஷ் என்பதும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வயிற்றில் பஞ்சை வைத்து தைத்த மருத்துவர்….. பிரசவ பெண் மரணம்….. நியாயம் கேட்டு உறவினர்கள் போராட்டம்…!!

கடலூரில் பிரசவம் பார்த்த பெண்மணி வயற்றில் மருத்துவர்கள் பஞ்சு வைத்து தைத்ததாக கூறி இறந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகை செய்து போராட்டம் நடத்தினர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த ஆலடி பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவர்  அப்பகுதியில் உள்ள நெடுவன்குப்பத்தை சேர்ந்த திவ்யா என்பவரை காதலித்து வந்துள்ளார். பின் இருவரும் 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் பிரியா கர்ப்பமாக அவருக்கு கடந்த மாதம் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்டு அவருக்கு அழகான […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

9 ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்…… வங்கி ஊழியர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது…!!

கோவையில் 9 ஆம் வகுப்பு  மாணவியை பாலியல் பலாத்காரம்  செய்த வாங்கி ஊழியர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டார். கோயம்புத்தூர் செல்வபுரம் பகுதியை அடுத்த  தில்லை நகரில் வசித்து வருபவர் ராம்குமார். இவர் அதே பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட பிரபல வங்கி ஒன்றின்  கிரெடிட் கார்டு பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கோவையில் தனியார் பள்ளி ஒன்றில் 9ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த ராம்குமார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“TWO-WHEELER திருட்டு” CCTVயில் சிக்கிய கள்ளச்சாவி….. 19 வயது இளம்பெண் கைது….!!

சென்னை  திருவல்லிக்கேணி பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் 19 வயது இளம்பெண் கைது  செய்யப்பட்டுள்ளார்.  சென்னை திருவல்லிக்கேணி பகுதியை அடுத்த  தாயார் சாகிப் தெருவை சேர்ந்தவர் யாசர். 2 நாட்களுக்கு முன்பு இவர் தனது வீட்டு வாசலில் இருசக்கர வாகனத்தை விட்டு சென்றுள்ளார்.  மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது இரு சக்கர வாகனத்தை காணவில்லை மர்மநபர்கள் யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து யாசர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நேருக்கு நேர் மோதல்” சுக்குநூறாக நொறுங்கிய 2 லாரிகள்….. 2 டிரைவர்கள் பலி…. கோவையில் சோகம்…!!

கோவை அருகே 2 லாரிகளும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 2 டிரைவர்களும் உயிரிழந்த சம்பவம்  அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்றைய தினம் தனது லாரியில் ஐஸ்கிரீம் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு கன்னியாகுமரி சென்று பின் ஐஸ்கிரீம் கம்பெனிகளில் பெட்டிகளை அடுக்கி வைத்துவிட்டு கோயம்புத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காலாவதியான மருந்துகளை எரிக்க முயற்சி….. மர்மநபரை அடித்து துவைத்த பொதுமக்கள்….. கோவையில் பரபரப்பு…!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே காலாவதியான ஆங்கில மருந்துகளை குடியிருப்பு பகுதிக்கு அருகே எரிக்க முயன்றதாக ஒருவரை பிடித்து பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கோவை மாவட்டம் காடம்பாடி பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகில் மர்ம நபர் ஒருவர் காலாவதியான ஆங்கில மருந்துகளை கொட்டி எரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனை  கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை பிடித்து விசாரித்த பொழுது, பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள ராஜா சிங் ஆகியோருக்கு சொந்தமான மருந்தகத்திலிருந்து அவற்றைக் கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். பின் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் புத்தாண்டுக் கொண்டாட்டம்… பாதுகாப்புப் பணியில் 15,000 காவல்துறையினர்!

ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக மாநகர் முழுவதும் 15 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். நாளை நள்ளிரவு ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி மெரினா கடற்கரை, கிழக்குக் கடற்கரைச் சாலை உள்ளிட்ட இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவர். எனவே, பாதுகாப்புப் பணியில் சுமார் 15 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், பல்வேறு பாதுகாப்புப் பணிகளிலும் காவல்துறை ஈடுபட்டுள்ளது.குறிப்பாக, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அடையாறு, கீழ்ப்பாக்கம், புளியந்தோப்பு, அயனாவரம் உள்ளிட்ட 368 இடங்களில், காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபடவுள்ளனர். வழிபாட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திமுக பிரமுகர் வீட்டில்… 2,68,000 மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள்.. காவல்துறை பறிமுதல்..!!

 வடவள்ளி பகுதியில் 2 லட்சத்து 68 ஆயிரம் மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை காவல் துறை பறிமுதல் செய்துள்ளது. கோவை மாவட்டம், வடவள்ளி லட்சுமி நகர் பகுதியில் உள்ள திமுக பிரமுகர் ஆனந்தன் என்பவரின் பங்களாவில் ஷேக், ரஷீத் ஆகிய இருவர் வாடகைக்கு தங்கி வருகின்றனர். அவர்களிடம் தடைசெய்யப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருப்பதாக காவல் துறைக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து துணைக் கண்காணிப்பாளர் வேல்முருகன், ஆய்வாளர் மணிவண்ணன் […]

Categories
மாநில செய்திகள்

நல்ல வேளை ஒன்னும் ஆகல… வாக்கு பெட்டியை திருடிய குடிமகன்கள்… மீட்டது காவல்துறை..!!

புதுக்கோட்டையில் காவலர்களை தள்ளிவிட்டு வாக்குப்பெட்டியை திருடிய மர்ம நபர்கள் கைது செய்யபட்டனர்.  தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக 27 மாவட்டங்களுக்கு வாக்கு பதிவு இன்று  காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் என மொத்தம் 45, 336 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. மக்கள் அனைவரும் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று […]

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் : முதற்கட்ட வாக்கு பதிவு நிறைவு…!!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக 27 மாவட்டங்களுக்கு வாக்கு பதிவு இன்று  காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் என மொத்தம் 45, 336 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. மக்கள் அனைவரும் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

காவலர்களை தள்ளிவிட்டு… வாக்குப்பெட்டி திருட்டு… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டையில் காவலர்களை தள்ளிவிட்டு வாக்குப்பெட்டியை மர்ம நபர்கள் திருடிச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. 27 மாவட்டங்களுக்கு முதல் கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்கு பதிவு இன்று  காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் அனைவரும் ஆர்வமுடன் தங்களது வாக்கினை செலுத்தினர். வாக்குப்பதிவுக்கு  24, 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்க, 63000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இறுதியில் 5 மணிக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும்.!!

தமிழகத்தில் முதல் கட்டமாக இன்று ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்று  (27)  மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. சென்னை உட்பட 10 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடக்கின்றது. வாக்குப்பதிவுக்காக  24, 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. கிராம ஊராட்சி மன்றத் தலைவர், கிராம ஊராட்சி மன்ற […]

Categories
மாநில செய்திகள்

நாளை ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு…. 63,000 போலீசார் குவிப்பு..!!

தமிழகத்தில் முதல் கட்டமாக நாளை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நாளை  (27)  மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. சென்னை உட்பட 10 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடக்கின்றது. ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் உள்ளிட்டப் பதவிகளுக்கு சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் போட்டியிடுகின்றனர். முதல் கட்டமான நாளை […]

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல் : பாதுகாப்புப் பணியில் 63,000 காவல் துறையினர்..!!

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் 60 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்க இருக்கிறது. ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் உள்ளிட்டப் பதவிகளுக்கு சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், தேர்தல் நேரத்தில் எந்த வித […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாலிபர் உயிரை காவு வாங்கிய சூதாட்டம்…… போலீஸ் விசாரணை….. சென்னையில் பரபரப்பு….!!

சென்னை கொடுங்கையூரில் சூதாட்டம் தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் தப்பி ஓட முயன்ற நபர் மாடியில் இருந்து குதித்து உயிர் இறந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணமூர்த்தி நகரில் கம்பெனி ஒன்றில் மேல்தளத்தில் அனுமதியின்றி சூதாட்ட விடுதி நடப்பதாக கிடைத்த தகவலையடுத்து தனிப்படை காவல்துறையினர் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது முன்புறம் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருந்த 15 பேர் தப்பி ஓடிய நிலையில் ஒரு புறம் இருந்த நான்கு பேரை மட்டும் காவல்துறையினர் […]

Categories
மாநில செய்திகள்

என் கணவரை நான் தான் கொன்னேன்…. என்ன தூக்குல போடுங்க….. காவல்துறை மனைவியின் பகிர் மனு….!!

ஹரியானா மாநிலத்தில் காவல்துறை அதிகாரியான தனது கணவரை கொலை செய்து விட்டதாகவும் அதற்காக தம்மை தூக்கிலிட வேண்டும் என்று கோரியும்  அமைச்சரிடம் பெண் ஒருவர் மனு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவில் மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ்ஜி மக்களிடம் மனுக்களை வாங்கிக் கொண்டிருந்த பொழுது மறைந்த காவல்துறை உதவி ஆய்வாளரின் மனைவி சுனில்குமார் மனு அளித்தார். அதில் அவர் மதுவுக்கு அடிமையான தனது கணவர் 2017ம் ஆண்டு ஜூலை மாதம் இரவு வழக்கம் போல் […]

Categories
திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

விசாரிக்க சென்ற இடத்தில்… “15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை”… காவலர் மீது பாய்ந்தது போக்ஸோ..!!

புகாரை விசாரிக்கச் சென்ற இடத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நாகை மாவட்டம், புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்குத் திருமணமாகி 15 வயதில் ஒரு மகள் உள்ளார். செந்தில்குமார் குடும்பத் தகராறு காரணமாக, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காவல்நிலையத்தில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளார். இந்நிலையில், அந்தப் புகார் சம்பந்தமாக விசாரிப்பதற்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நன்னிலம் காவல் நிலையத்தில் காவலராகப் […]

Categories
மாநில செய்திகள்

போராட்டம் நடத்திய 5000 பேர் மீது வழக்கு…!!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடத்திய திருமாவளவன்,  ஜவாஹிருல்லா, நடிகர் சித்தார்த் உள்பட 5000 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சியுடன் சேர்ந்து பல்வேறு அமைப்புகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டை நேற்று முற்றுகையிட முயன்றனர். அப்போது பிரதமர் மோடியின் உருவப்படத்தை எரித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பட்டினம்பாக்கம் போலீசார் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியது, சட்டவிரோதமாக ஒன்று கூடியது உள்ளிட்ட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பல்லால் கடித்து….. தப்பியோடிய சாராய வியாபாரிகள்…… படுகாயமடைந்த 2 போலிஸ் மருத்துவமனையில் அனுமதி…!!

தஞ்சை மாவட்டம் திருவோணத்தில் காவல்துறையினரை கத்தி மற்றும் கட்டையை காட்டி மிரட்டியும் பல்லால் கடித்து காயப்படுத்தியும்  தப்பி ஓடிய கள்ளச்சாராய வியாபாரிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த திருவோணம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி  விற்ப்பதாக அருண்பாண்டியன், இளங்கோவன் ஆகியோர் பற்றிய தகவல்காவல்துறையினருக்கு தெருவிக்கப்பட்டது. அதனையடுத்து அருண்பாண்டியன் மற்றும்  இளங்கோவன் ஆகிய இருவரும் ஒரு திருமணத்தில்   கலந்து கொள்ள   இருப்பதை அறிந்து அங்கு சென்ற  காவல் துறையினர் அவர்களை பிடிக்க முயன்ற […]

Categories

Tech |