Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருத்தணி கோவில் உண்டியல் பணம் திருட்டு….. மூதாட்டி உட்பட 3 பேர் கைது…..!!

திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் பொழுது பணம் மற்றும் நகையை திருடியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.  திருத்தணி கோவில் இணை ஆணையர் பழனி குமார் தலைமையில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் தற்காலிக ஊழியர்கள் மற்றும் ஆன்மிக சேவையில் ஈடுபடுவோர் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில் சூரிய பிரபை என்ற மூதாட்டி உண்டியல் காணிக்கை பணத்தை எண்ணும் பொழுது ஒரு லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 16 கிராம் தங்கத்தை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“செங்கல்சூளை கொத்தடிமைகள்” 8 குழந்தைகள் உட்பட 19 பேர் ஈரோட்டில் மீட்பு…!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்த எட்டு குழந்தைகள் உட்பட 19 பேர் மீட்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே முனியப்பன் பகுதியில் செயல்பட்டுவரும் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியாற்றி வருவதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு கோட்டாட்சியர் ஜெயராமன் தலைமையில் விரைந்த வருவாய் துறையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அங்கு சென்று செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்த கடலூர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் புகுந்த 5 அடி பாம்பு……. லாவகமாக பிடித்த தீயணைப்பு துறை….!!

ஈரோடு மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் புகுந்த  மண்ணுளிப்பாம்பு லாவகமாக பிடிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் காவல்துறையினர் கண்காணிப்பாளர்  அலுவலக வளாகத்தில் நகாவல்துறையினர் மோப்பநாய் பிரிவு பகுதிகளில் இருந்து வெளியேறிய 5 அடி நீளம் கொண்ட மண்ணுள்ளிபாம்பு அனைத்து மகளிர் காவல்நிலையம் நோக்கி சென்றது. இதனைக்கண்ட காவலர்கள் தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். பின் தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் பாம்பை லாவகமாக பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மறுமணம்” பெண்கொடுக்க மறுப்பு…… முற்றிய மோதல்….. மாறி மாறி வெட்டு…… 5 பேர் படுகாயம்…!!

சென்னை ராணிப்பேட்டை பகுதியை வாலாஜாவில் குடும்ப தகராறு காரணமாக உறவினர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 5 பேருக்கு வெட்டு காயம் ஏற்பட்டது. சென்னையைச் சேர்ந்த செல்வம் என்பவரது மனைவி இறந்த நிலையில் அவரக்கு  மறுமண ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளது. ஆனால் செல்வத்தின் உறவினர் காத்தவராயன் என்பவர் திருமணத்திற்கு இடையூறு செய்து பெண் கொடுக்க விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே பகை முற்றிய நிலையில் வாலாஜாபேட்டை வந்திருந்த செல்வத்தையும் அவரது தாயாரையும் காத்தவராயன் உள்ளிட்ட 3 பேர் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

ரூ25,00,000….. போலி மதுபாட்டில்களுக்கு வீட்டோடு சீல்….. 2 பேர் கைது….. புதுச்சேரி போலீஸ் அதிரடி…!!

புதுச்சேரி யூனியன் காரைக்காலில் வீட்டில் இயங்கி வந்த போலி மதுபான தொழிற்சாலையை காவல் துறையினர் கண்டுபிடித்து சீல் வைத்தனர். புதுச்சேரி யூனியன்  காரைக்கால் புறவழிச்சாலை பின்ஸ்கேர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலி மதுபான தொழிற்சாலை இயங்கி வருவதாக துணை ஆட்சியர்க்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து துணை ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் அந்த வீட்டிற்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் நூற்றுக்கணக்கான அட்டை பெட்டிகளில் 25 லட்சம் மதிப்புள்ள மது […]

Categories
தேசிய செய்திகள்

“ஜார்ஜண்ட் சட்டமன்ற தேர்தல்” 40,000 போலீஸ்….. பலத்த பாதுகாப்புடன் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு….!!

ஜார்கண்ட் மாநில சட்ட மன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. ஜார்கண்ட்  சட்டமன்ற தேர்தலுக்கான ஐந்தாவது இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னாள் முதலமைச்சர் மற்றும் பாஜக அமைச்சர்கள் இந்த தேர்தல் களத்தில் உள்ளனர். மொத்தம் உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் 65 தொகுதிகளுக்கு நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. எஞ்சிய 16 தொகுதிகளில் இன்று நடைபெறும் ஐந்தாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

24 வாரம் சிறப்பு பயிற்சி….. 407 உபி காவலர்களுக்கு…… சென்னையில் சத்திய பிராமண விழா…!!

சென்னையை ஆவடி பகுதியில்  உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற காவலர்களுக்கு சத்தியப்பிரமாண விழா நடைபெற்றது. சென்னையை  அடுத்த ஆவடி  பகுதியில் உள்ள  மத்திய ரிசெர்வ் காவல்படை பயிற்சி முகாமில்  டிஜிபி பிரவீன் தலைமையில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 407 காவலர்களுக்கு 24 வாரங்களாக பயிற்சி அளிக்கப்பட்டது.  இந்த பயிற்சியில் நவீன ஆயுதங்களை கையாளுதல் துப்பாக்கி சுடுதல் உடற்பயிற்சி போன்ற பயிற்சிகள் காவலர்களுக்கு அளிக்கப்பட்டது. பயிற்சி முகாம் நிறைவு பெற்ற நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

ஆபாச படம் பகிர்ந்தவர்கள் லிஸ்ட் தயார்… மாவட்டங்களுக்கு அனுப்பியாச்சு.. ஏடிஜிபி ரவி பேட்டி…!!

தமிழகத்தில் சிறுவர்கள் ஆபாச படங்களைப் பகிர்பவர்களின் பட்டியல் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை கூடுதல் இயக்குனர் ரவி தெரிவித்துள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இதில், பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் துறை கூடுதல் இயக்குனர் ரவி சென்னையில் சிறார்களின் ஆபாசபடங்களை பகிர்ந்த 30 பேர் கொண்ட பட்டியல் காவல் ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். தற்காத்துக் […]

Categories
தேசிய செய்திகள்

நண்பரின் மனைவி பலாத்காரம்….. சைக்கோ கில்லர் கைது ….!!

தெலங்கானாவில் நண்பனின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த சைக்கோ கில்லர் கைது செய்யப்பட்டார். தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் ராமையம்பேட்டையை சேர்ந்த அருண் என்பவரே அந்த சைக்கோ கொலையாளி. இவர் மீது ஏற்கனவே பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் ராமையம்பேட்டையில் கடந்த வாரம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த நிலையில்,அருண் என்னும் சைக்கோ கில்லரை கைது செய்தனர். அருண் சிறையில் அறிமுகமான […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அரக்கோணம்  இளைஞர் படுகொலை… சிசிடிவியால்  சிக்கிய கும்பல்… 5 பேர் கைது!!! 

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின்  உதவியோடு 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரக்கோணம் மார்க்கெட் பகுதியில் கடந்த 15ஆம் தேதி இரவு 8 மணியளவில் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகள்  தப்பி ஓடி தலைமறைவாகி இருந்து வந்தனர் . இந்த கொலை  அரக்கோணம் நகரில் பதற்றத்தை ஏற்படுத்தியது .போலீசார் வழக்கு பதிவுசெய்து கொலையாளிகளை வலைவீசி தேடிவந்தனர் .அப்போது அங்கிருந்த […]

Categories
மாநில செய்திகள்

பெண்களின் பாதுகாப்பிற்கு …புதிய வசதி …!!

 பெண்கள்  மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக மேலும் புதிய வசதிகளை  காவல்துறை வெளியிட்டுள்ளது. பெண்களின்  பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் மாநகர காவல்துறை ஏற்கனவே 35 மகளிர் காவல் நிலையத்திற்கு  அம்மா ரோந்து வாகனங்கள் கொடுத்து  ரோந்து பணியில் ஈடுபடுவதுடன், காவலன் என்ற செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதைதொடர்ந்து , பெண்கள்  மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத  நிலை  என்று நினைத்தால் 7530001100 என்ற வாட்ஸ் அப் நம்பர் , மற்றும் www.facbook.com/chennai.police என்ற முகநூல் பக்கத்திலும், [email protected] என்ற மின்னஞ்சல் […]

Categories
தேசிய செய்திகள்

தூக்கத்தை கெடுத்த மனைவி…!!! அடித்து உதைத்த கணவன் ….!!!

குஜராத்தில் தூங்கி கொண்டிருந்த கணவனை  எழுப்பியதால்  மனைவிக்கு சரமாரி அடி விழுந்த சம்பவம் நடந்துள்ளது. குஜாராத் மாநிலம்  தல்தெஜ் பகுதியை சேர்ந்தவர் பாவ்னா சவ்கான் (வயது 45).இவர் சில நாள்களுக்கு முன் பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதையடுத்து   15-ம் தேதி இரவு 11 மணிக்கு வீடு திரும்பி உள்ளார். வீட்டிற்கு உள்ளே செல்வதற்காக வீட்டின் வாசல் கதவை பலமுறை தட்டி உள்ளார். அவரது கணவன் கதவை திறக்கவில்லை . இதனால் கோபம் அடைந்த மனைவி கணவனை […]

Categories
மாவட்ட செய்திகள்

ஏன் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகல….. கணவன் தற்கொலை… மனைவி கவலைக்கிடம்…!!

ஒரு சிறிய பிரச்சனையில் பூதாகரமாக போட்டி போட்டுக்கொண்டு கணவனும் மனைவியும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபரீத சம்பவத்தில் கணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சோளம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகர். இவருக்கு திருமணமாகி ராதிகா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். சில நாட்களுக்கு முன் 7 வயது மகன் கமலேஷ்க்கு மூக்கில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது காயத்திற்கு சிகிச்சை அளிக்க மகனை ஏன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை என மனைவி ராதிகாவிடம் கேட்டுள்ளார் தனசேகர். இதனால்,கணவன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மணிபர்ஸ் திருட்டு” தலை நசுங்கி வாலிபர் மரணம்…… சென்னையில் பரபரப்பு….!!

சென்னை மதுரவாயல் பகுதியில் மணி பர்சை திருடியதால் வந்த தகராறு காரணமாக சொந்த நண்பனையே தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவள்ளூர் பகுதியை அடுத்த வேப்பம்பட்டை நகரை சேர்ந்தவர் முரளி. இவர் கன்னியாகுமரியைச் சேர்ந்த சிம்சன் சுப்பிரமணியன் அரவிந்த் ஆகிய மூன்று பேருடன் மதுரவாயல் பகுதியில் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளார். இவர்கள் நான்கு பேரும் கட்டிடங்களில் டைல்ஸ் ஒட்டும் பணியை மேற்கொண்டு வந்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

“தொடர் போராட்டம்” காவல்துறை-மாணவர்களுக்கு இடையே கடும் மோதல்…… லக்னோவில் பரபரப்பு….!!

லக்னோவில் டெல்லி மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து காவல்துறை மற்றும் மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் குடியுரிமை மசோதா குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தியதில் வன்முறை ஏற்பட்டு காவல்துறையினர் மாணவர்களை கொடூரமாக தாக்கிய சம்பவங்களை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மற்ற கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், லக்னோவில் கல்லூரி மாணவர்கள் குடியுரிமை மசோதாதாவிற்கு எதிராகவும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கோர விபத்து” மாநகர பேருந்து டயரில் சிக்கி தாய்-மகள் மரணம்…… சென்னையில் சோகம்….!!

சென்னை கீழ்கட்டளை அருகே மாநகரப் பேருந்து சக்கரத்தில் சிக்கி தாயும் 5 வயது சிறுமியும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆலந்தூர் பகுதியை அடுத்த திரிசூலம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி சுதா. இவர்கள் இருவருக்கும் ஷிவானி தீபக் ஆகிய 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் சுதா தனது இரண்டு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு  கோவிலம்பாக்கத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டு பின் மீண்டும் மாலை […]

Categories
தேசிய செய்திகள்

உன்னாவ் விவகாரம்” பாஜக MLAக்கு எதிரான வழக்கு…… 3 மணிக்கு டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு…!!

உன்னாவ் வன்கொடுமை விவகாரத்தில் கைது  செய்யப்பட்ட குல்தீப் சிங்க்கு எதிரான வழக்கிற்கான  தீர்ப்பை 3 மணிக்கு டெல்லி திஸ்ஹசாரி நீதிமன்றம் வழங்க உள்ளது. சில மாதங்களுக்கு முன்பாக உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் பாஜகவின் முக்கிய நிர்வாகியும் எம்.எல்.ஏவுமான  ஒருவர் வேலை தேடி வந்த இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், சமீபகாலத்தில் பாதிக்கப்பட்ட பெண் […]

Categories
தேசிய செய்திகள்

மசோதாவிற்கு எதிராக.. டெல்லியில் வன்முறை வெடித்தது…!!

டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது.  டெல்லி பாரத் நகர் பகுதியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பேருந்துகள் மீது தீ வைத்து எரிக்கப்பட்டது. குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் பொதுமக்கள், மாணவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுட்டனர். டெல்லியில் 3-பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களும் சேதமடைந்துள்ளது. வன்முறையை கட்டுப்படுத்த முயன்ற போலீசார் மீது பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த வன்முறை சம்பவத்தில் மூன்று காவல்துறையினர் காயம் அடைந்துள்ளனர். கடந்த வாரம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கந்துவட்டி கொடுமை…!! வீட்டை இழந்த நபர்…!!!

மதுரையில் கந்து வட்டி செலுத்த வில்லை என்று கூறி குடியிருந்த வீட்டை இடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மதுரை அருகே தத்தநேரியை சேர்ந்த குமார் என்பவர் அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரிடம் கடந்த 2014 ஆம் ஆண்டு கடனாக 2 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். இந்நிலையில் வாங்கிய கடனுக்கு வட்டியாகவே 3 லட்சம் ரூபாய் செலுத்திய குமார் தொடர்ந்து கடனை செலுத்த முடியவில்லை என்று நாகராஜிடம் கூறியுள்ளார். இன்னும் 7 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

லாட்டரி விற்பனை போலீஸார் உதவியுடன் நடைபெறுகிறது…!! முத்தரசன் பேட்டி

தமிழகத்தில் லாட்டரி விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் போலீசார் உதவியுடன் நடைபெறுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசிய போது, குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நாளை போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார். உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக பூர்வமாக நடைபெற வாய்ப்பில்லை எனவும் முத்தரசன் குறிப்பிட்டார். […]

Categories
மாநில செய்திகள்

சிறார் ஆபாச படங்களை பகிர்ந்தவர்களிடம் விசாரணை …!!

சிறார்  மற்றும் பெண்களின் ஆபாச படங்களை இணையத்தில்  பரப்பிய 1000 பேரின் விபரங்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக ஏடிஜிபி ரவி அறிவித்துள்ளார் . ஆபாச படங்களை  பதிவேற்றம் மற்றும் பகிர்ந்தது  தொடர்பாக   திருச்சி ,செங்கல்பட்டு ,கோயம்புத்தூர்,சென்னை ஆகிய இடங்களில் பதிவேற்றம் மற்றும் பகிர்ந்ததாக பல IP  அட்ரஸ்கள்  அனுப்பப்பட்டுள்ளது.இந்நிலையில்  திருச்சியில் சிறார்  ஆபாச படங்களை  முகநூலில் பதிவிறக்கம் செய்த வழக்கில்  கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டார். அவரது முகநூல் பக்கத்திலுள்ள குழுவில் இருக்கும்  100 பேரிடமும் விசாரணை நடைபெற்று […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் பல்சுவை

குடியுரிமை மசோதாவிற்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம்……. சென்னையில் பரபரப்பு….!!

இந்திய குடியுரிமை  சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து திமுக இளைஞரணி சார்பில் சென்னையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை   எதிர்த்து காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திமுக சார்பாக  மாவட்டம் தோறும் விரைவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக இளைஞரணி சார்பாக சென்னை மாவட்டத்தில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்  இந்திய குடியுரிமை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஸ்பாட் ஃபைன் வசூலில் முறைக்கேடு…!!

போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக வாகன ஓட்டிகளிடம் காவல்துறையினர் வசூலிக்கும் ஸ்பாட் ஃபைன் முறையில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் சேலத்தில் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலித்த உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் அதனை கையடக்க இயந்திரத்தில் வரவு வைக்காத வீடியோ வெளியாகியிருக்கிறது. இதனை பதிவு செய்திருக்கும் ஒருவர் வசூலித்த பணத்தை முறைப்படி கணக்கு காட்டவில்லை என்று கூறி உதவி ஆய்வாளரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளை நிறுத்தும் போலீசார் ஹெல்மெட் […]

Categories
மாநில செய்திகள்

“ஆபாச வீடியோ வழக்கு” ஓரின சேர்க்கைக்காக தான் பகிர்ந்தேன்……. கிறிஸ்டோபர் பகீர் வாக்குமூலம்…..!!

ஆபாச வீடியோ வழக்கில் கைது செய்யப்பட்ட  கிறிஸ்டோபரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. சமீபகாலமாக ஆபாச படம் இணையதளத்தில் பார்ப்பவர்கள் கைது செய்யப்படுபவர்கள் என்ற தகவல் பரவி வந்தது. ஆனால் குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கும் வீடியோ பதிவுகளை பதிவேற்றம் செய்தாலோ, பகிர்ந்தாலோ  மட்டும்தான் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்படி நேற்றைய தினம் திருச்சியை சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க கிறிஸ்டோபர் என்பவர் சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்களை பகிர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஐதராபாத் என்கவுண்டர்- நீதி விசாரணைக்கு உத்தரவு…!!

ஐதராபாத்தில் பெண் மருத்துவரை எரித்து கொன்ற 4 பேரை என்கவுண்டர் செய்தது தொடர்பாக நீதி விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வழக்கில் கைதான 4 பேரை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். இந்த நிலையில் என்கவுண்டர் செய்த போலீசாரை விசாரணைகுழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று  நடைபெற்றபோது குற்றவாளிகள் […]

Categories
தேசிய செய்திகள்

போலீசார்களைத் திணறவைக்கும் நித்தி…!!

சாமியார் நித்தியானந்தா இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் கர்நாடகம் மற்றும் குஜராத் மாநில போலீசார் திணறி வருகின்றனர். நித்தியானந்தா இருக்கும் இடத்தை இன்றைக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கும் அம்மாநிலபோலீசாருக்கும் கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.ஆனால்,அவர் எங்கே இருக்கிறார் என்பது மத்தியஅரசுக்கே தெரியாத நிலைதான் நீடிக்கிறது.இதனால் நீதிமன்றத்தில் அரசும்,காவல்துறையும் இன்றைக்கு என்ன தெரிவிப்பார்கள் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நிலையில் நித்தியானந்தாவின் முக்கியமான பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. சமீபத்தில் ஈகுவாடார் அருகே ஒரு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இரவில் சீறிப்பாய்ந்த பைக்குகள்… 21 பேரை மடக்கிப் பிடித்த போலீஸ்..!!

மருதமலை வடவள்ளி செல்லும் சாலையில் நேற்று முன்தினம் இரவில் பைக் ரேசில் ஈடுபட்ட 21 இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்து, 11 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். கோயம்புத்தூர் மருதமலை வடவள்ளி சாலையில் டிசம்பர் 10ஆம் தேதி இரவு காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஐ.ஒ.பி காலனியில் பைக் பந்தயத்தில் ஈடுபட்டிருந்த 21 இளைஞர்களை காவல் துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 11 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். அதன்பின்அந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குற்றவழக்குகளில் மீட்கப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி…!!

நாமக்கல் மாவட்டத்தில் நடப்பாண்டில் நடைபெற்ற குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட  சொத்துக்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் ஆயுதப்படை மைதானத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் 451 சவரன் தங்க நகைகள், 7 1/2 கிலோ வெள்ளி பொருட்கள் ,5 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப்பணம், 2 லாரிகள்,மற்றும்  100 செல்போன்கள் உள்ளிட்டவை உரியவர்களிடம் வழங்கப்பட்டன. இதனை  தேசிய கோவை மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் பெரியய்யா வழங்கினார் . மேலும்   வீடுகள் கடைகளில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

3 நாட்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம்  செய்த காவலன் செயலி …!!

காவலன் செயலியை 3 நாட்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம்  செய்திருப்பதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விசுவநாதன் தெரிவித்திருக்கிறார் .   பெண்கள் வெளியில் எங்கு சென்றாலும் அவர்களுக்கு பிரச்சனை நிலவி வருகிறது .இதில் பெரும் பங்கை வகிப்பது பாலியல் குற்றங்கள் .இந்நிலையில் பெண்களின் பாதுகாப்பைக்  கருதி ,காவலன் என்ற செயலியை சில நாட்களுக்கு முன் வெளியிட்டனர். சென்னை காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய காவல்துறை ஆணையர் விசுவநாதன்,  […]

Categories
தேசிய செய்திகள்

தலைநகரில் பரபரப்பு…… ”JNU மாணவர்கள் மீண்டும் போராட்டம்”….. போலீஸ் தடியடி ….!!

விடுதிக் கட்டண உயர்வை எதிர்த்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு செல்லவிருந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களை காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். பல்கலைக்கழக விடுதிக் கட்டண உயர்வைக் கண்டித்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (JNU) மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 400 விழுக்காடு உரை உயர்த்தப்பட்டிருக்கும் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி நவம்பர் 18ஆம் தேதி பேரணியாக சென்றனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“கொடூர கொலை” உயிரை பறித்த வாட்சப் வதந்தி……… கோவையில் பரபரப்பு…..!!

கோவையில் வெறும் வாட்டசாப் வதத்ந்தி ஒருவரின் உயிரையே எடுத்த  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஈச்சனாரியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றின் அருகே கடந்த மூன்றாம் தேதி காயங்களுடன் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து 3 தனிப்படைகள் அமைத்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இறந்து கிடந்தவர் கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சண்முகம் என்பது தெரியவந்தது. வாட்ஸாப்ப் வதந்தி : சண்முகத்தின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மரம் நடும் போது நிகழ்ந்த அதிசயம்…….. ஆராச்சியில் தொல்லியல்துறை…… இளைஞர்களுக்கு குவியும் பாராட்டு…..!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உள்ள முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்து உள்ள  பெரிய கண்மாய் பகுதியில் மரக்கன்றுகள் நடும் பொழுது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய முதுமக்கள் தாழியை இளைஞர்கள் சிலர் கண்டுபிடித்துள்ளனர். இதனை கண்ட கண்டுபிடிப்பாளர்கள் காவல் துறை மூலமாக தொல்லியல் துறைக்கு தகவல் அனுப்பினர். இதையடுத்து முதுமக்கள் தாழி குறித்து அகழ்வாராய்ச்சி நடத்தப்படும் என அரசு அருங்காட்சியக காப்பாளர் தெரிவித்தார். மேலும் இதனை கண்டெடுத்த இளைஞர்களுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

என்கவுண்ட்டர் செய்த காவலர்களுக்கு ரூ.1,00,000 பரிசு..!!

ஐதராபாத்தில் பிரியங்கா ரெட்டி வழக்கில் என்கவுண்ட்டர் நடத்திய காவலர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்க பரிசு வழங்குவதாக குஜராத்தை சேர்ந்த தொழில் அதிபர் அறிவித்துள்ளார். ஐதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவரை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கைதான நான்கு பேரையும்  காவல்துறையினர்  என்கவுண்ட்டரில் கொன்றதை குஜராத் மாநிலத்தின் முதல்-மந்திரி விஜய் ரூபானி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பரேஷ் தானானி உள்ளிட்டோர் பாராட்டினர். மேலும், அம்மாநிலத்தின் பாவ் நகர் மாவட்டம், மகுவா நகர் பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் ராஜ்பா கோஹில் ஐதராபாத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

தெலங்கானா மக்கள் கொண்டாடும் ரியல் சிங்கம்……!!

ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை குற்றவாளிகள் நான்கு பேரும் காவலர்களால் என்கவுன்டரில் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த அதிரடி நடவடிக்கை மூலம் எஸ்.பி. சஜ்ஜானார் மக்கள் கொண்டாடும் சிங்கமாக மாறிவிட்டார். ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் கடந்த 10 நாள்களுக்கு முன்பு நான்கு பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்பட்டார். தடயங்கள் எதுவும் காவலர்களுக்கு சிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் குற்றவாளிகள் அவரது உடலின் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தினர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“HEADMASTER வீட்டில்” 70 சவரன் நகை……. ரூ1,00,000 பணம் திருட்டு…… பெரம்பலூரில் பரபரப்பு….!!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 70 சவரன் தங்க நகை ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.  பெரம்பலூர் மாவட்டம் வேந்தட்டை பகுதியை அடுத்த சின்னாறு கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் செல்வம் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு பணிக்குச் சென்ற அவர் மாலை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மொக்க காரணம்” மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்……. சென்னையில் பரபரப்பு….!!

மொக்க காரணத்திற்க்காக மனைவியை கணவனே கழுத்தை நெரித்து கொலை  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனர் ஆன ஜெயராஜும் அவரது மனைவி 24 வயதான இலக்கியாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இலக்கியா வேளச்சேரி ஃபீனிக்ஸ் வணிக வளாகத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஒன்றாம் தேதி அன்று வீட்டில் ஜெயராஜன் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருப்பவர்கள் ஓடிவந்து பார்த்த பொழுது இலக்கியா தூக்கில் பிணமாக தொங்கினார். தன்னுடன் சண்டை […]

Categories
தேசிய செய்திகள்

23 வயது இளம்பெண்ணுக்கு தீ வைப்பு……… பிழைப்பது கடினம்…… உன்னாவ்வில் சோகம்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு விசாரணைக்கு ஆஜராக இருந்த இளம் பெண் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் அவர் உயிர் பிழைப்பதற்க்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என தகவல்கள் வெளியாகியுள்ளன.  உத்திரபிரதேச மாநிலத்தின் உன்னாவ் 23 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வனம்கொடுமை செய்யப்பட்டார். இதையடுத்து காவல்நிலையத்தில் அவர் அளித்த புகாரை அடிப்படையாக கொண்டு விசாரணை மேற்கொண்ட காவல்துறை அவரை நீதிமன்றத்தில் சாட்சியாக ஆஜராகுமாறு கூறியது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக சென்று கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

“தெலுங்கானா என்கவுண்டர் மகிழ்ச்சி அளிக்கிறது” நிர்பயா தயார் கருத்து…..!!

ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான நான்கு குற்றவாளிகளும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக நிர்பயாவின் தாயார் தெரிவித்துள்ளார். கடந்த 27ஆம் தேதி இரவு ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் முகமது பாஷா, சிவா, நவீன், கேசவலு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று அதிகாலை காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் நான்கு பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

உபி…..டெல்லி அதிகாரிகளே…….. தெலுங்கானா போலீஸ் பார்த்து கத்துக்கோங்க…….. மாயாவதி கருத்து….!!

உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி காவல்துறை  தெலுங்கானா காவல்துறையை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். ஹைதராபாத் கால்நடை மருத்துவர் பாலியல்  வன்கொடுமை கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கருத்து தெரிவித்துள்ளார். அதில், உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அம்மாநில அரசு தூங்கி கொண்டிருப்பதாக அவர் விமர்சித்தார். […]

Categories
மாநில செய்திகள்

“கூட்டு பலாத்காரம்” 23வயது இளம்பெண்னை தீ வைத்து எரித்த கொடூர கும்பல் கைது……!!

உத்திரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் கூட்டு பலாத்காரத்திற்கு ஆளான பெண்ணை தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் சென்ற மார்ச் மாதம் தனது சொந்த கிராமத்தில் சில பேரால் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட 23 வயது இளம்பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்ற காவல்துறை அதிகாரிகள் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் ஆஜராவதற்காக நீதிமன்றத்திற்கு சென்று கொண்டு இருந்த பாதிக்கப்பட்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“CCTVக்கு கலர் பெயிண்ட்” ATMஐ உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது….!!

சென்னை ஆவடி அருகே பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏடிஎம் ஐ உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை  ஆவடி பகுதியை  அடுத்த முத்தா புதுபேட்டையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்மில் நள்ளிரவில்புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த 4 கண்காணிப்பு கேமராக்களிலும் கலர் பெயிண்ட் அடித்து திருட முயன்றுள்ளார். இதனை வங்கியின் மும்பை தலைமை அலுவலகத்திலிருந்து கண்காணித்த அதிகாரி ஒருவர் உடனடியாக முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கர்ப்பத்தை தெரிவிக்க மறுப்பு” மன உளைச்சலால் தூக்கில் தொங்கிய கணவன்…….. சென்னையில் சோகம்…..!!

சென்னையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மன உளைச்சல் அடைந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை குன்றத்தூர் பகுதியை அடுத்த விஜயலட்சுமி நகரை சேர்ந்தவர் பவானி. இவரது மகன் உதயகுமார் அமுதா என்ற பெண்ணை சில வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துகொண்டார். உதயகுமார் கார் மெக்கானிக் ஆக பணியாற்றி தனது மனைவியுடன் சரஸ்வதி நகர் அவென்யூ பகுதியில் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அவரது மனைவி அமுதா […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“குழந்தை தொடர் அழுகை” மூச்சு திணற திணற கொடூரமாக கொன்ற தாய்…… வேலூரில் பரபரப்பு…!!

வேலூரில் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததன் காரணமாக தாயே பெற்ற குழந்தையை கொடூரமாக மூச்சு திணற கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பவித்ரா. இவருக்கு திருமணமாகி ஓராண்டு முடிந்த நிலையில், ஒரு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவரது குழந்தை பெயர் மௌனிகா. இவரது கணவர் நேற்றைய தினம் வேலைக்கு சென்றிருந்த சமயத்தில் வீட்டில் பவித்ரா அவரது குழந்தையுடன் வீட்டு வேலை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

23 வயதில் 8 மனைவிகள்…… 8 மனைவி புகார்……. காதல் மன்னன் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்….!!

தஞ்சாவூரில் 23 வயதான  இளைஞர் ஒருவர் 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் வெறும் 23 வயதான இவர் இதுவரை எட்டு பெண்களை காதலித்து திருமணமும் செய்துள்ளார். இதுவரை திருமணம் செய்த 8 பெண்களுடனும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் மாறி மாறி வெளியூருக்கு வேலைக்கு செல்வதாக கூறி குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ் கடைசியாக திருமணம் செய்த எட்டாவது பெண் அவரை நீண்ட நாட்களாக […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

புறா பிடிக்க சென்ற வாலிபர் திடீர் மரணம்…….. விசாரணையில் தீவிரம் காட்டும் போலீஸ்…!!

கரூர் மாவட்ட தான்தோன்றி மலை அருகே புறா பிடிக்க சென்றவர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் கரூர் மாவட்டம் தந்தோந்ன்றி மலைப் பகுதியில் தங்கியிருந்து கொத்தனார் ஆக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வேல்முருகனும் அவரது நண்பர் ராஜாவும் காட்டுப்பகுதிக்குள் புறா பிடிக்க சென்றுள்ளனர். அப்பொழுது அங்கே இருந்த மொட்டை கிணறு ஒன்றில் புறா ஒன்று இருந்துள்ளது. அதனை பிடிப்பதற்காக கயிறு கட்டி கிணற்றினுள் இறங்கியுள்ளார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கல்யாணம் பண்ணி கொடு….. இல்லைனா போட்டோவை பரப்பிடுவேன்…… மிரட்டல் விடுத்த வனக்காவலர் அதிரடி கைது….!!

காதலியுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்று மிரட்டிய வனத்துறை ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் நாகர்கோவிலில் உள்ள வனப்பகுதியில் வன உதவி அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு பழனியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு அது காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் ராஜா அந்த பெண்ணிடம் தான் உன்னை காதலிப்பதாகவும், தன்னை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தொழிலதிபரை கொல்ல ரூ50,00,000……. பெட்ரோல் குண்டு வீசிய கூலிப்படை…… தொழிலதிபர் மனைவி மரணம்….!!

பிரபல தொழிலதிபரை கொல்லும் முயற்சியில் பெட்ரோல் குண்டு வீசியதில் தீக்காயமடைந்த தொழிலதிபரின் மனைவி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள உத்தனப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் ஆனந்தபாபு. இவரது மனைவி நீலிமா. இவர் அப்பகுதியில் அட்டை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இவரும் இவரது மனைவியும் கடந்த 11ஆம் தேதி வழக்கம்போல் தொழிற்சாலைக்கு காரில் சென்றுள்ளனர். ஆனால் திரும்பும்பொழுது வேலை இருந்ததால் ஆனந்தபாபு மனைவியை மட்டும் வீட்டிற்கு போகுமாறு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“தாத்தா-பாட்டியுடன் தனிமை” கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை…… கடலூரில் சோகம்….!!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கல்லூரி மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியை அடுத்த சித்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இயற்கை மரணம் அடைந்து விட்டார். சுப்பிரமணியன் ஊட்டியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அவரது  மூத்த மகள் பிஎஸ்சி நர்சிங் படிப்பை முடித்துவிட்டு சென்னை தனியார் மருத்துவமனை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“கோர விபத்து” கார் மீது ஏறிய லாரி…… 80 வயது முதியவர் உட்பட 2 பேர் பலி…… லாரி டிரைவருக்கு போலீஸ் வலைவீச்சு….!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் கார் மீது லாரி ஏறியதில் முதியவர் உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது வயது எண்பது. இவரும் பெரம்பலூரை சேர்ந்த ராஜராஜன் என்ற இளைஞரும் விருத்தாச்சலம் பகுதியில் இருந்து கும்பகோணம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். காரை ராஜராஜன் ஓட்டி வந்தார். இதையடுத்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை அடுத்த நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலீசை கொடூரமாக கழுத்தில் தாக்கிய பிரபல ரவுடி கைது……. சென்னையில் பரபரப்பு….!!

சென்னையில் பிரபல ரவுடி கூறிய தகடு போன்ற பொருளால் காவல்துறை அதிகாரி ஒருவரை தாக்கியதில் அவருக்கு கழுத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்தவர் பல்சர் பாபு. இவர் பிரபல ரவுடி ஆவார். இவர் மீது சென்னை மற்றும் ஆந்திர மாநிலத்தின் காளகஸ்தி புத்தூர் காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் சென்ற வாரம் நடைபெற்ற கொள்ளை வழக்கு தொடர்பாக பல்சர் பாபு கைது செய்யப்பட்டு புத்தூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார். […]

Categories

Tech |