Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

கூட்ட நெரிசலில் திக்குமுக்காடும் தி.நகர்…… ஆங்காங்கே கேமரா…போலீஸ்…. தீவிரமாகும் தீபாவளி பணி…..!!

தீபாவளி பண்டிகைக்காக தி.நகரில் பொருள்கள் வாங்க வருவோரின் பாதுகாப்பிற்காக காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்புக் கேமரா பொருத்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  தீபாவளி பண்டிகையின்போது மக்கள் புத்தாடைகள், ஆபரணங்கள், அலங்காரப் பொருள்கள் உள்ளிட்டவற்றை வாங்குவது வழக்கம். அந்தவகையில், சென்னை தி.நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் பலரும் தங்களது குடும்பத்துடன் வந்து பண்டிகைக்கு தேவையான பொருள்களை வாங்கிச் சென்றுவருகின்றனர். இதனால் தி.நகரில் வழக்கத்தை விட அதிக அளவு போக்குவரத்து நெரிசலும் பொருள்கள் திருடுபோவதற்கான வாய்ப்பும் அதிகளவில் உள்ளது. […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மூதாட்டி கொலை….. கில்லி விஜய் பாணியில் மிளகாய் பொடி தூவி தப்பிக்க முயற்சி….. 2 பேர் கைது…!!

கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் மூதாட்டியை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டம் லிங்கமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்லம்மாள். இவர் தனது தோட்டத்து வீட்டில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் பால், மோர் வியாபாரம் செய்ததுடன் பலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி அவர் தனது வீட்டில் தூக்கில் தொங்குவதாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெருமாள் என்பவர் அரவக்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.தகவலறிந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பொய் வழக்கு” இளம்பெண்ணை பூட்ஸ் காலால் உதைத்து டார்ச்சர்….. ரூ3,00,000 அபராதம்….. மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு…!!

பெண் ஒருவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்கிய கொடுங்கையூர் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த பார்வதி தாக்கல் செய்த மனுவில், கடந்த 2015ஆம் ஆண்டு தன்னை வலுக்கட்டாயமாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பூட்ஸ் கால்களால் தாக்கி, பொய் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்த கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் கனகராஜ், உதவி […]

Categories
மாநில செய்திகள்

4 நாட்கள்….. மண்ணிற்குள் புதைக்கப்பட்ட பெண் குழந்தை உயிருடன் மீட்பு….. உபியில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்….!!

உத்திர பிரதேசத்தில் நான்கு நாட்கள் மண்ணிற்குள் புதைந்து கிடந்த பெண் குழந்தை உயிரோடு மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஹிதேஷ் குமார் சிரோகி. இவரின் மனைவிக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று இறந்து பிறந்தது. இதையடுத்து அக்குழந்தையை புதைக்க மண்ணை தோண்டினார்.அப்போது அவரின் கைகளில் பானை ஒன்று தட்டுப்பட்டது. அந்தப் பானைக்குள் அழகிய பெண் குழந்தை ஒன்று மெலிதான குரலில் அழுதது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹிதேஷ் […]

Categories
மாநில செய்திகள்

செல்லாத 500,1000 நோட்டுகளை வைத்து வியாபாரம்….. ரூ1.75 கோடி பறிமுதல்….. 6 பேர் கைது…. கேரளாவில் பரபரப்பு..!!

கேரளாவின் பழைய 500 1000 ரூபாய் நோட்டுகளை சேகரித்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் ஆறு நபர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் செல்லாத 1000, 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.பின்னர் அவர்களிடமிருந்த 1.75 கோடி ரூபாய் செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளையும் சொகுசு காரையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில், அவர்கள் செல்லாத ரூபாய் நோட்டுகளை கோழிக்கோடு, மலப்புரம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“குடி போதை” தெப்பத்தில் தவறி விழுந்து வாலிபர் மரணம்….. விருதுநகரில் சோகம்….!!

விருதுநகரில் குடிபோதையில் வாலிபர் ஒருவர் தெப்ப குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் அல்லம்பட்டி மொட்டையான்செட்டி தெருவில் புரட்டாசி பொங்கல் திருவிழா நடைபெற்றது. திருவிழாவின் ஒரு அங்கமாக அப்பகுதி மக்கள் கோயிலிலிருந்து தெப்பக்குளத்திற்கு கரகம் எடுத்துச்செல்வது வழக்கம். அவ்வாறு கரகம் எடுத்துச் செல்லும் போது அப்பகுதியைச்சேர்ந்த ராமகிருஷ்ணன்(30) என்பவர் குடிபோதையில் நிலைதடுமாறி தெப்பத்திற்குள் விழுந்தார். விழுந்த சிறிது நேரத்தில் அவர் மூச்சுத்திணறி தண்ணீருக்குள் மூழ்கி உயிரிழந்தார். இதனைப்பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

1.45 லட்சம் மதிப்புள்ள R15 பைக்கை சைடு லாக் உடைத்து திருடி சென்ற மர்மநபர்கள்….. CCTV அடிப்படையில் காவல்துறை தீவிர விசாரணை….!!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இரண்டு பேரை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் காவல்துறையினர் தேடி வருகின்றனர். செங்கோட்டை பகுதியில் உள்ள மெய்யப்பன் என்பவர் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். இவர் 20 நாட்களுக்கு முன்பு புதிதாக வாங்கிய யமஹா ஆர்15 இருசக்கர வாகனத்தை நேற்று இரவு கடைக்கு வெளியே நிறுத்திவிட்டு கடைக்குள் தூங்கியுள்ளார். காலையில் எழுந்து பார்த்த போது இருசக்கர வாகனம் திருடு போனது தெரிய வந்துள்ளது. இதனால் அங்கு பொருத்தப்பட்டிருந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வீடுகள் முன்பு ரத்தக்கறை….. பேயா..? பிசாசா…? அச்சத்தில் கிராமமக்கள்….!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு முன்பு ரத்தக்கறை படிந்து இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் அந்தியூர்  பகுதியை அடுத்த தவிட்டுபாளையம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட வீட்டு வாசலில் ரத்தக்கறை படிந்திருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் நள்ளிரவு பூஜை செய்த அடையாளம் தெரியாத நபர்கள், ஆடு சேவலை பலி கொடுத்து இழுத்துச் சென்ற பொழுது வீதிகளில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

1கோடி கொடு 2 ஆக மாத்தி தாரேன்…”கமிஷனுக்கு ஆசை” ரூ80,00,000 மோசடி….. பணத்தை இழந்து தவிக்கும் பேன்ஸி ஸ்டார் ஓனர்…!!

சென்னை வேப்பேரியை சேர்ந்த தினேஷ் என்பவர் அதே பகுதியில்  ஒப்பனை மற்றும் பேன்சி பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.  அவரை கடந்த 15 நாட்களுக்கு முன்பு அகமது என்பவர் நேரில் சந்தித்து  தமக்கு தெரிந்தவரிடம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் 100 ரூபாய் நோட்டுக்கள் இருப்பதாகவும், அதை 500 மட்டும் 2,000 நோட்டுகளாக மாற்றிக் கொடுத்தால் இரண்டு விழுக்காடு கமிஷன் கிடைக்கும் என்றும்  ஆசை வார்த்தை கூறியுள்ளார். கூடுதல் கமிஷனுக்கு ஆசைப்பட்டு தினேஷும் 80 லட்சம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மறு அடமானம் வைக்கப்பட்ட வீட்டு பத்திரம்…… ரூ70,00,000 மோசடி….. நடவடிக்கை எடுக்குமா காவல்துறை..? எதிர்பார்ப்பில் பட்டதாரி பெண்….!!

கோயம்பத்தூரில் நிதிநிறுவனம் ஒன்று அடமானம் வைத்த வீட்டுப்பத்திரத்தை மறு அடமானம் வைத்து ரூ70 லட்சம் மோசடி செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் களப்பட்டி லட்சுமி நகர் சேர்ந்தவர் அரவிந்த் குமார். இவருடைய மகள் தனது அம்மாவுடன் நேற்றையதினம் கோவை மாநகர காவல்துறை கமிஷனர் அலுவலகத்திற்கு  வந்து புகார் ஒன்றை கமிஷனரிடம் அளித்துள்ளார். அதில் ஐயா நான் மேல் படிப்புக்காக அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூபாய் 14 லட்சம் கடன் வாங்கினேன். படித்து முடித்ததும் என்னால் அந்தப் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சென்னையில் இரட்டைக்கொலை” கண்டிப்பால் ஏற்பட்ட விபரீதம்….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

சென்னையில்  6 பேர் கொண்ட மர்ம கும்பல் 2 பேரை ஒரே நேரத்தில் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டிபன் இவர் ஒரு ஆட்டோ டிரைவர் ஆவார். இவரது நண்பர் ஆனந்த் இவர் இந்திரா நகரைச் சேர்ந்தவர். நெருங்கிய நண்பர்களான இருவரும் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் பெரும்பாக்கத்தில் உள்ள மதுபான கடை ஒன்றுக்கு சென்று மது வாங்கி சற்று தொலை தூரம் சென்று அவர்களது சொந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மக்களே உஷார்” 1 வாரம்…… 100 பேர்….. ரூ25,00,000 மோசடி….. 5 பெண்கள் உட்பட 12 பேர் கைது…!!

சென்னையில் மோசடி  கும்பல் ஒன்று பெண்களை பயன்படுத்தி 1 வாரத்திற்குள்  ரூ 25,00,000 மோசடி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மோசடி கும்பல் ஒன்று இனிமையான குரல்வளம் கொண்ட பெண்களை பயன்படுத்தி பொதுமக்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உங்களுக்கு கடன் உதவி தேவைப்படும் பட்சத்தில் குறைந்த வட்டியில் அதிக பணத்தை கடனாக வாங்கித் தருவோம் என்று தெரிவிக்கிறார்கள். அந்த பெண்களின் பேச்சை உண்மை என்று நம்பி தனக்கு  கடன் உதவி தேவைப்படுகிறது என்று யாரேனும் கூறும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மகன் மனைவியுடன் கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர்….. அரசியல் உள்நோக்கம் இல்லை…. விசாரணையில் தகவல்…!!

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாத் பகுதியில்  பாஜக பிரமுகர் பந்து பிரகாஷ் மற்றும் அவரது மனைவி , மகன் ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கில் அரசியல் உள்நோக்கம் ஏதும் இல்லை என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. அக்டோபர்  எட்டாம் தேதி நண்பகல் வேளையில் துர்கா பூஜையின் போது கதவு தட்டப்படும் ஓசை கேட்டு வந்த பிரகாஷ் கதவை திறந்த உடன்  உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அவரையும் அவரது கர்ப்பிணி மனைவி மற்றும் ஆறு வயது மகனையும் அடுத்தடுத்து கொன்று […]

Categories
தேசிய செய்திகள்

வேகமாக சென்றேனா ? ”ரூ 1,50,000 அபராதம்” வாக்குவததால் திரும்ப கிடைக்கும் பணம் …!!

விதிமுறைகளை மீறியதாக வாகன வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்ட ஒன்றரை லட்சம் அபராதத்தை திரும்பபெற டெல்லி போக்குவரத்துப் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். டெல்லியில் நெடுஞ்சாலையில் 60 கிலோமீட்டர் என்று நினைக்க பட்ட வேகத்தைவிட தேசிய நெடுஞ்சாலையில் அதிக வேகத்தில் சென்றதாக வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் நெடுஞ்சாலையில் பொதுப்பணித்துறை வைத்துள்ள அறிவிப்பு பலகையில் அதிகபட்ச வேகம் 70 கிலோமீட்டர் என்று குறிப்பிடப்பட்டிருந்தாக அபராதம் விதிக்கப் பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். விதிமுறை ஏதும் இல்லாத நிலையில் தங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“இரட்டை வேஷம் அம்பலம்” பகலில் மேஸ்திரி…. இரவில் பைக் திருடர்கள்…. அதிரடியாக கைது செய்த காவல்துறை…!!

வேலூரில் பகலில் கட்டட மேஸ்திரியாகவும் இரவில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வேலூரில் காட்பாடி பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது உரிய ஆவணம் இன்றி இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பிடிபட்டனர். விசாரணையில் அவர்கள் சுரேஷ், அஜித்குமார் என்றும் கட்டிட மேஸ்திரியான இருவரும் பகலில் கட்டிட வேலையிலும் இரவில் இருசக்கர வாகன திருட்டிலும் ஈடுபட்டதும் தெரிய வந்ததை அடுத்து கைது செய்யப்பட்டனர். பின் […]

Categories
மாநில செய்திகள்

”காவல்துறையை சீர்திருத்தம் செய்க” விசாரணை ஒத்திவைப்பு ….!!

காவல் துறையை சீர்திருத்தம் செய்வது தொடர்பான வழக்கின் விசாரணையை டிசம்பர் 18ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவல்துறையை சீர்திருத்தம் செய்வது தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. மேலும், இதுவரை எடுக்கப்பட்ட காவல் துறை சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசும், காவல்துறை இயக்குநரும் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி தாக்கல் செய்த பதில்மனுவில், காவல் துறையில் சீர்திருத்தங்கள் செய்வது தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

“பிரபல வங்கியில் முறைகேடு” 21,000 போலி கணக்குகள்…… ரூ4,350 கோடி பணம் மோசடி….!!

பிஎம்சி வங்கி முறைகேட்டில் கைதான வங்கியின் முன்னாள் தலைவர் வரியம் சிங்கிடம்  தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மும்பையை தலைமையிடமாகக் கொண்ட பிஎம்சி வங்கியில் சுமார் 21,000 போலி கணக்குகள் மூலம் ரூபாய் 4350 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக புகார் வந்தது. இது தொடர்பாக மும்பை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். அதில்  பிஎம்சி வங்கியின் முன்னாள் தலைவர் வாரியம் சிங் அமிர்தசரசில் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள நட்சத்திர விடுதி ஒன்றை வாங்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிநவீன கேமராக்கள்….. 60க்கும் மேற்பட்ட போலீஸ் குவிப்பு….. கடும் நடவடிக்கையுடன் தொடங்கிய “தீபாவளி பந்தோபஸ்து”.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னை தியாகராயநகரில் உள்ளிட்ட இடங்களில் திருடர்களை பல்வேறு கேமராக்கள் மூலம் கண்காணித்து பிடிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  சென்னை வடக்கு தெற்கு மற்றும் மேற்கு மாம்பல சாலைகள், ரங்கநாதபுரம் சாலை உள்ளிட்ட இடங்களில் சாதாரண  நாட்களிலே கூட்டம் அலைமோதும் பட்சத்தில் தீபாவளி நேரங்களில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கூட்டம் இருக்கும். இதன்  காரணமாக அப்பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த காவல்துறையினர் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாம்பலம் ரயில் நிலையம் போத்தீஸ் ரங்கநாதபுரம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போச்சு…. போச்சு…. ”22,00,000 கிலோ நாசம்” …. மசாலா கம்பெனியே போச்சு …!!

தேனி கோடாங்கிபட்டி தனியார் மசாலா நிறுவனத்தில் இரண்டவது நாளாக எறிந்து வரும் தீயை கட்டுப்படுத்த வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டம் கோடாங்கி பட்டியல்  இருக்கக்கூடிய ஈஸ்டர்ன்  மசாலா நிறுவனத்தில் இருந்து பல பகுதிகளுக்கு மசாலா கொடுக்கப்படுகின்றது. இந்த நிறுவனத்தில் 400_க்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று  காலை வழக்கம் போல பணி தொடங்கிய போது 8 மணியளவில் தீடிரென தீ பற்றி எறிய ஆரம்பித்தது. இதையடுத்து அங்கிருந்த எச்சரிக்கை அலாரம் அடித்ததை தொடர்ந்து அனைத்து பணியாளர்களும் வெளியே ஓடினர்.இதை தொடர்ந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

உயிர் தப்பிய 400 பேர் ……. தேனி மசாலா கம்பெனியில் தீ விபத்து ……!!

தேனி மாவட்டத்தில் பிரபல தனியார் மசாலா நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்ட்டுள்ளது. தேனி மாவட்டம் கோடாங்கி பட்டியல்  இருக்கக்கூடிய ஈஸ்டர்ன்  மசாலா நிறுவனத்தில் இருந்து பல பகுதிகளுக்கு மசாலா கொடுக்கப்படுகின்றது. இந்த நிறுவனத்தில் 400_க்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல பணி தொடங்கிய போது தீடிரென தீ பற்றி எறிந்து விபத்துக்குள்ளாது. இதையடுத்து அங்கிருந்த எச்சரிக்கை அலாரம் அடித்ததை தொடர்ந்து அனைத்து பணியாளர்களும் வெளியே ஓடினர். இதை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“வாந்தி-மயக்கம்” பள்ளி மாணவன் திடீர் மரணம்…… போலீசார் தீவிர விசாரணை….!!

விழுப்புரத்தில் திடீரென மாணவன் வாந்தி மயக்கத்துடன் மரணித்தது குறித்து காவல்துறைனர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு பகுதி அருகே வசித்து வருபவர் பழனி. இவரது மகன் ஆகாஷ் என்பவர் மணலூர்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம்போல் ஆகாஷ் இன்று பள்ளிக்கு சென்றுள்ள நிலையில், பள்ளியில் வைத்து திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்துள்ளார். பின் பள்ளி ஆசிரியர்கள் ஆகாஷின் பெற்றோரை தொடர்பு கொண்டு பள்ளிக்கு வரவழைத்தனர். அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நகராட்சிக்கு எதிராக சாலை மறியல்….. போலீசுடன் பொதுமக்கள் தள்ளு முள்ளு….. போக்குவரத்தால் ஸ்தமித்த விருதுநகர்….!!

விருதுநகரில் ஆக்கிரமிப்பு அகற்றுதல் பணிகளுக்கு எதிராக மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் , காவல்துறைக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி கீழ ரத வீதிகளில் அமைந்துள்ள வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகளின்  உள்ளே நுழையும் படிகளை ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு இடித்து அகற்றி வந்தனர். இந்நிலையில் ஏற்கனவே அகற்றப்பட்ட இடிபாடுகளின் கற்களும் மணலும் ஆங்காங்கே […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காதல் மனைவியை அடித்தே கொன்ற கணவன்…… நெல்லையில் பரபரப்பு…..!!

நெல்லை  மாவட்டத்தில் காதல் மனைவியை கணவனே அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்பத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி நகரை சேர்ந்த பாரதிராஜா என்பவருக்கும் அதே பகுதியில் மணி நகர் பகுதியைச் சேர்ந்த நிர்மலா என்பவருக்கும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் ஸ்ரீநிதி என்ற பெண் குழந்தையும் சந்திரன் என்ற ஆண் குழந்தையும் உள்ளன. இந்நிலையில் திருமணமாகி எட்டு ஆண்டுகளில் பலமுறை இவர்களுக்குள் குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பாரதிராஜா நெல்லையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நெல்லையில் பயங்கரம்” ஓடும் பேருந்தில் அரிவாள் வெட்டு….. 2 பேர் படுகாயம்….. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு….!!

நெல்லை அருகே ஓடும் பேருந்தில் மர்மநபர்கள் 2 பேரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கிள்ளி குளத்தில் இருந்து நேற்று இரவு நெல்லைக்கு செல்லும் அரசு பேருந்தினுள் அக்கிராமத்தைச் சேர்ந்த இருவர் ஏறினர். அவர்களை தொடர்ந்து 2 மர்ம நபர்கள் வழிமறித்து பேருந்தினுள் ஏறினர். பின் பேருந்து சிறிது தூரம் சென்ற பிறகு ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பேருந்தில் பயணித்த கிள்ளி  குளத்தை சேர்ந்த இரண்டு பேரை […]

Categories
மாவட்ட செய்திகள்

நடுக்கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் மின்னல் தாக்கி பலி…… தூத்துக்குடியில் சோகம்…!!

தூத்துக்குடியில் மீன் பிடிக்க சென்ற பொழுது மின்னல் தாக்கி மீனவர் உயிரிழந்த  சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை அடுத்த வேம்பார் பெரியசாமி புரத்தைச் சேர்ந்தவர் ஜோசப் ஸ்டாலின் இவர். மீன் பிடிக்கும்  தொழிலை செய்து வருவதோடு மீனவர் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் தனது சொந்த நாட்டுப் படகில் அவரது நண்பர் தேவ திரவியம் என்பவரது மகனான ஜஸ்டின் அழைத்துக் கொண்டு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். இவர்கள் இருவரும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தொடர் கைவரிசை காட்டிய வழிப்பறி கும்பல்…… குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு….. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வழிப்பறி செய்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ள 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். திருவண்ணாமலையைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தனது உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக கடந்த மாதம் ஆரணி அருகே வந்த போது அவரை வழிமறித்த கும்பல் ஒன்று அவரை தாக்கி அவர் வைத்திருந்த பணம் நகை உள்ளிட்டவற்றை பறித்துச் சென்று தப்பி ஓடியது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து….. 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்….. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் அருகே அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றது. அந்த பேருந்து வேடசந்தூர் அருகே கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாயக்கன்பட்டி என்ற இடம் சென்றபொழுது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் பேருந்து ஓட்டுனர் நடத்துனர் உட்பட 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“காதல் விவகாரம்” சொந்த மகளை கொல்ல முயன்ற பெற்றோர்கள் கைது….!!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மகளை கொலை செய்ய முயன்றதாக பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் ராமையா கவிதா தம்பதியின் மூத்த மகளுக்கு திருமணம் முடிந்து விட்ட நிலையில் இரண்டாவது மகள் போடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அவர் தனது அக்காள் கணவரின் தம்பியை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாணவி தனது காதலனுடன் செல்போனுடன் பேசியதாக அவர் தங்கியிருந்த விடுதி வார்டன் மாணவியின் பெற்றோருக்கு தகவல் […]

Categories
மாநில செய்திகள்

அவுரா TO மும்பை எக்ஸ்பிரஸ்…. “ரூ5 கோடி”… 13 கிலோ தங்கம்….. கடத்தல் வேலையில் ஈடுபட்ட பலே திருடர்கள்….!!

ஒடிசாவில் விரைவு ரயில்லில் கடத்தி வரப்பட்ட ரூபாய் 5 கோடி மதிப்பிலான சுமார் 13 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.  அவுராவிலிருந்து மும்பைக்கு செல்லும் ஞானேஸ்வரி விரைவு இரயிலில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையின் இயக்குனரகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ரூர்கேலா என்ற பகுதியை வந்தடைந்த ஞானேஸ்வரி விரைவு ரயிலில் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது 110 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆவி சொன்னதால் செய்தேன்” 1 1/2 வயது குழந்தை கழுத்தை அறுத்த போதை இளைஞன்….!!

சென்னை புழல் பகுதி அருகே ஆவி சொன்னதால் ஒன்றரை வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்றதாக கூறிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் சென்னை புழல் பகுதியை அடுத்த ஜஸ்டின் புரத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் ராஜ். இவர் நேற்றைய தினம் கஞ்சா போதையில் பக்கத்து வீட்டாருடன் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது ஒன்றரை வயது குழந்தை சாய்சரண் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தப்பி ஓடியுள்ளான்.  இதையடுத்து தப்பி ஓடிய அவனை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், புழல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“போட்டோ காட்டி மிரட்டல்” 9ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த 2 பேர் கைது….!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த  2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியை அடுத்த ஆரம்ப சேரி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அந்த பள்ளி மாணவிக்கும் ஆரம்ப சேரி கிராமத்தைச் சேர்ந்த விஷ்வா என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவியுடன் நெருக்கமாக […]

Categories
மாநில செய்திகள்

போதை வியாபாரிகளை காப்பாற்ற….. போலீசை அடித்து நொறுக்கிய கிராம மக்கள்….. வைரலாகும் வீடியோ….!!

ஹரியானா மாநிலத்தில் ஷிர்ஷா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சோதனைக்கு சென்ற பொழுது காவல்துறையினர் தாக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. ஹரியானா மாநிலத்தில் ஷிர்ஷா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் போதை பொருள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் அங்கு சென்றனர். அப்போது போதைப் பொருள் கடத்தல்காரர்கள் என்று சந்தேகிக்கப்படும் சிலரும், கூடவே கிராமத்தை சேர்ந்த சிலரும் சேர்ந்து தாக்கியதில் 7 காவல்துறையினர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை கிராமமக்கள் காட்டு மிராண்டித்தனமாக தாக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தர்காவினுள் இளைஞரை அறைந்த பெண் காவலர்…. வைரலாகும் வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பெண் காவலர் ஒருவர் தர்காவிற்கு வருகை தந்த ஒருவரை அரையும் காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாநிலத்தில் அஜ்மீர் தர்கா ஒன்று அமைந்துள்ளது. இங்கே பாதுகாப்பு பணியில் பெண் காவலர் ஒருவர் ஈடுபட்டிருந்தார். அவர் தர்காவிற்கு வழிபாட்டிற்கு வந்த ஒருவரை அறைவது போன்ற வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. எதற்காக அந்த நபரை பெண் காவலர் அறைந்தார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. தற்போது இந்த வீடியோ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் திருட்டு முயற்சி…. பிடிபட்ட திருடன்…. தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்….!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே வீட்டில் திருட முயன்ற திருடனை பொதுமக்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கோவை மாவட்டம் சூலூர் பகுதியை அடுத்த  காக்காபாளையம் பகுதியில் தனது வீட்டில் ஜன்னல் கதவு மர்ம நபர்களால் திறக்கப்பட்டுவதை  மாணிக்கம் என்பவர் பார்த்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த சிலரை உதவிக்கு அழைத்து தப்பி ஓட முயன்ற  தஞ்சாவூரை சேர்ந்த கவியரசன் என்பவனை பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2 பச்சிளம் குழந்தைகளுடன் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட தாய்…. சென்னை கடற்கரையில் நிகழ்ந்த சோகம்….!!

சென்னையில் குழ்நதைகளின் கழுத்தை அறுத்து தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படடுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண் பெங்களூரில் கணவருடன் வசித்து வந்தார். புதன்கிழமை இரவு கணவருக்கு தெரியாமல் ஆறு வயது மகள் அனுஷ்யா மூன்று வயது மகன் பத்மேஷ் ஆகியோருடன் சென்னை வந்துள்ளார் பவித்ரா. மெரினா கடற்கரை விவேகானந்தர் இல்லம் பின்புறம் வைத்து குழந்தைகளின் கழுத்தையும் கத்தியால் அறுத்து அவரும் தனது கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். குழந்தைகளின் அழும் சத்தம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தமிழக ஓட்டுனரை தாக்கிய வடமாநிலத்தவர்கள்….. ஆதரவு அளித்த போலீசாருடன் பொதுமக்கள் மோதல்….. சென்னையில் பரபரப்பு…!!

தமிழக ஓட்டுனரை தாக்கிய வடமாநில இளைஞர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறி பொதுமக்களுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. சென்னை நீலாங்கரையை சேர்ந்த சிவச்சந்திரன் என்பவர் ஓலா கால் டாக்ஸி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். புதன்கிழமை இரவு சென்னை டிஜிபி அலுவலகம் எதிரே சிவச்சந்திரனின் கால் டாக்ஸியில் வடமாநிலத்தவர்கள் ஏறியுள்ளனர். குடிபோதையில் இருந்த இருவரும் ஆர்கே சாலையில் வந்து கொண்டிருந்தபோது காரில் ஏசி குளிர்ச்சி போதவில்லை என்று கூறி தகராறு செய்ததோடு தாக்கியதாகவும் கூறப்படுகிறது. காரை நிறுத்திய […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

3 நாட்கள் விடுமுறை …… ”வங்கியை பதம் பார்த்த கொள்ளையர்கள்” போலீஸ் விசாரணை …!!

வங்கிக்குள் கொள்ளையர்கள் நுழைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர். திருப்பூர் மாவட்டம்  பல்லடம் அருகே செயல்படும் வங்கியில் கடந்த சனிக்கிழமை பணி நேரம் முடிந்ததும் வங்கி ஊழியர்கள் பூட்டி விட்டு சென்றுள்ளனர். அதன்பின் மூன்று நாள் தொடர் விடுமுறை முடிந்து இன்று அலுவலர்கள் பணிக்குத் திரும்பிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பெற்றோர் அலட்சியம்” 6 வயது குழந்தை பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சென்னை தாம்பரம் அருகே வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஆறு வயது பெண் குழந்தை இரண்டாவது மாடியிலிருந்து கீழேவிழுந்து உயிரிழந்துள்ளது. சென்னை தாம்பரம்  பகுதியை அடுத்த திருமலை நகர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் பார்த்திபன் சூரியகல என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ராகவி என்ற பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. ராகவி வீட்டின் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ராகவி எதிர்பாராத […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள்

மோடி வருகையால் நடராஜா சர்வீஸ்…. மாமல்லபுர நகரத்தில் வாகனங்களுக்கு தடை…. திடீர் நடவடிக்கையால் மக்கள் அதிருப்தி….!!

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று காலை முதல் நான்கு சக்கர வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜிங்பிங் ஆகியோர் வருகின்ற 12,13 ஆகிய தேதிகளில் காஞ்சிபுர மாவட்டம் மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர். இந்நிலையில் தலைவர்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று முதல் மாமல்லபுரம் நகரத்திற்குள்  நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாமல்லபுர நகரத்திற்குள் இருக்கும் பேருந்து நிலையம் தற்காலிகமாக மாற்றப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் […]

Categories
மாநில செய்திகள்

தட்டி கேட்க ஆளில்லை…. குழந்தையை திருடி சென்ற ஜோடி….. வைரலாகும் CCTV வீடியோ…!!

உத்தரப்பிரதேசத்தில் தாயின் அருகே உறங்கிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை ஒரு ஆணும் பெண்ணும் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. உத்திரபிரதேச மாநிலம் மொகராபாத் பேருந்து நிலையம் ஒன்றில் தாயின் அருகே ஒரு குழந்தை உறங்கிக் கொண்டிருந்து. அப்போது அங்கு வந்த இருவரில் ஒருவரான ஆண் பாதுகாப்புக்கு நிற்க உடனிருந்த பெண் எந்த பதட்டமும் இன்றி வெகு இயல்பாக சொந்த குழந்தையை தூக்கி செல்வது போல குழந்தையை திருடி செல்லும் காட்சிகள் cctv காட்சிகளில் பதிவாகியுள்ளன. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கத்தி குத்து வாங்கிய கூலி தொழிலாளி…. தப்பி ஓடிய மர்ம நபர்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நள்ளிரவில் கூலித் தொழிலாளியை கத்தியால் தாக்கி விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை காவல்துறையினர்  தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம்  வேடசந்தூர் பகுதியை அடுத்த குக்கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சின்னசாமி. இவருக்கு சொந்தமாக ஒரு தோட்டமும் உள்ளது. இவர் எப்பொழுதும் வேலை முடித்து விட்டு வீட்டில் உணவு உண்டு பின் காற்றோட்டமாக தூங்க தோட்டத்தில் உறங்குவது வழக்கம். அதே போல்  நேற்று தனது தோட்டத்தில் உறங்கிக் சின்னசாமி கொண்டிருந்தார். அப்பொழுது  நள்ளிரவில் இவரது தோட்டத்தில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

20 வழக்குகள்… தப்பிக்க தனக்கு தானே தீ வைத்த ரவுடி…. சேலத்தில் பரபரப்பு…!!

சேலத்தில் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்ட ரவுடியை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சேலம் மாவட்டம் கிச்சி பாளையம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சிலம்பரசன் என்பவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று கிச்சிப்பாளையம் காவல் நிலையம் அருகே வந்த சிலம்பரசன் தனது காலில் டீசலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனை பார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.   […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பணப்பரிப்பு… மோசடி… கொலைமிரட்டல்… விஜய் தந்தை மீது தொடர் புகார்…. அதிர்ச்சியில் விஜய் குடும்பம்…!!

சென்னை தலைமை  காவல்நிலையத்தில் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் மீது மோசடி புகார் ஒன்றை சென்னை தலைமை காவல் ஆணையத்தில் தயாரிப்பாளர் சங்க உறுப்பினரான மணிமாறன் என்பவர் அளித்துள்ளார். அதில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான டிராபிக் ராமசாமி என்ற திரைப்படத்தை விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் இயக்கியதோடு அவரே  அதில் நடிக்கவும் செய்தார். இப்படத்தை வெளியிடுவதற்கான காப்பீட்டு […]

Categories
மாநில செய்திகள்

உதித் சூர்யாவை CBCID போலீசார் தேனி அழைத்துச் சென்றனர்…..!!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் கைது செய்யப்பட்ட உதித் சூர்யா_வை BCID போலீசார் தேனி அழைத்துச் சென்றனர். உதித் சூர்யா என்ற மாணவன் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக தேனி கல்லூரி முதல்வர் ராஜேந்திரனின் புகார் அளித்திருந்தார். இந்த புகாரையடுத்து  தேனி போலீசார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்து உதித் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வந்தார்கள். தண்டையார்பேட்டையில் இருந்து வந்த உதித் சூர்யா , அவரின் தந்தை வெங்கடேசன் , தாய் என குடும்பத்தோடு தலைமறைவானார்கள். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : உதித் சூர்யா_விடம் CBCID போலீசார் விசாரணை……!!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் கைது செய்யப்பட்ட உதித் சூர்யா_விடம் CBCID போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உதித் சூர்யா என்ற மாணவன் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக தேனி கல்லூரி முதல்வர் ராஜேந்திரனின் புகார் அளித்திருந்தார். இந்த புகாரையடுத்து  தேனி போலீசார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்து உதித் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வந்தார்கள். தண்டையார்பேட்டையில் இருந்து வந்த உதித் சூர்யா , அவரின் தந்தை வெங்கடேசன் , தாய் என குடும்பத்தோடு தலைமறைவானார்கள். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : நீட் ஆள்மாறாட்டம் : ”உதித் சூர்யா குடும்பத்துடன் கைது” CBCID அதிரடி ….!!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவன் உதித் சூர்யா குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதித் சூர்யா மஹாராஷ்டிராவில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தேனி பல்கலைக்கழக டீனுக்கு வந்த EMAIL மூலமாக இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.இது குறித்த விசாரணை நடக்கும் போதே மாணவன் உதித்சூர்யா கல்லூரியை விட்டு நிற்பதாக எழுதி கொடுத்து விட்டு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : நீட் ஆள்மாறாட்டம் : ”உதித் சூர்யா குடும்பத்துடன் கைது” CBCID அதிரடி ….!!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவன் உதித் சூர்யா குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதித் சூர்யா மஹாராஷ்டிராவில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தேனி பல்கலைக்கழக டீனுக்கு வந்த EMAIL மூலமாக இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.இது குறித்த விசாரணை நடக்கும் போதே மாணவன் உதித்சூர்யா கல்லூரியை விட்டு நிற்பதாக எழுதி கொடுத்து விட்டு […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் : CBCID போலீஸ் வசம் ஒப்படைப்பு…..!!

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேனி மருத்துவ கல்லூரியில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து உதித் சூர்யா என்ற மாணவன் படித்து வந்தது வெளிச்சத்துக்கு வந்த நிலையில் , உதித் சூர்யா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். மாணவன் உதித் சூர்யா தலைமறைவாகி இருக்கும் சூழலில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது மகாராஷ்டிரா மாநிலத்தில் என்பதால் இந்த விசாரணையை மேலும் தீவிரப்படுத்த வேண்டுமென்று தமிழக அரசு இந்த வழக்கை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பின் சுவரில் ஓட்டை… ரூ20,000 ரொக்க பணம்… ரூ2,00,000 மதிப்பிலான மதுபாட்டில்கள்…. சாராய கடையில் திருடர்கள் கைவரிசை…!!

செங்கல்பட்டை அடுத்த பாலூர் அருகே புதியதாக திறக்கப்பட்ட மதுபான கடையின் பின்புற சுவற்றில் துளையிட்டு சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளன.  செங்கல்பட்டு அருகே சாஸ்திரம் பாகம் பகுதியில் கடந்த ஓராண்டுக்கு முன்பு புதியதாக டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டது. நேற்று இரவு அந்த கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்துவிட்டு கல்லாவில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“மணல் திருட்டு” காவல் உதவி ஆய்வாளரை தாக்கி தப்பி ஓடிய மர்ம கும்பல்… வலை வீசி தேடும் போலீஸ்..!!

விழுப்புரம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு கடத்தல் கும்பல் தப்பி ஓடிவிட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் மணல் கடத்தல் செய்யப்படுவதாக ரகசிய தகவல் காவல்துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டது. இதன் பெயரில் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் இருந்து காவல் ஆய்வாளர் சதீஸ் மற்றும் காவலர் ஜோசப் ஆகியோர் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்றனர். இதையடுத்து மணல் திருட்டில் ஈடுபட்டவரை பிடிக்க முயற்சித்தனர். ஆனால் மணல் கொள்ளையில் ஈடுபட்ட காசிநாதன் உள்ளிட்ட 5 […]

Categories

Tech |