புகார் கொடுக்க வந்தவரை SI ஒருவர் ஆபாசமாக பேசி அடிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்பார்கள்.ஆனால் சில காவல்துறை அதிகாரிகளின் மோசமான அணுகுமுறையால் மக்கள் மத்தியில் போலீஸ் என்றாலே ஒரு வித பயம் ஏற்றப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியுள்ளது நமக்கு தெரியும். சமீபத்தில் கூட ஹெல்மட் அணியாததால் லத்தியால் தாக்கி கொடூரமாக ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் புகார் கொடுக்க வந்த ஒருவரை காவல்நிலைய […]
Tag: police
கவுந்தப்பாடி அருகே வீடு புகுந்த மர்மநபர்கள் பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 25 சவரன் நகைகளை கொள்ளையடித்துசென்றுள்ளனர். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சேர்ந்த துரைராஜ் இரவு வெளியே சென்றிருந்தபோது அவர் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் நான்கு பேர் துரைராஜின் மனைவி சாந்தி, மகள் கிருத்திகா உள்பட நான்கு பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து அணைத்து நகைகளையும் கழட்டுமாறு கேட்டுள்ளனர் அவர்களுள் ஒருபெண் சத்தமிட்டபோது ஒரு கொள்ளையன் கத்தியால் தன் கையை அறுத்து இதேபோல் உங்கள் கழுத்தையும் அறுப்போம் என […]
காவல்துறையினர் ஹெல்மெட் போடாமல் வாகன ஓட்டினால் வழக்கு பதிவு செய்யப்படும் என்று காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார் . தற்பொழுது ஹெல்மெட் கட்டாயமாக போடும் சட்டமானது தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் காவல்துறை அதிகாரிகள் ஹெல்மெட் போடாமல் இருப்பது மக்களிடையே அதிருப்த்தியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் சென்னையில் காவல் துறையில் பிறர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ஹெல்மெட் […]
திருச்சியில், லைஃப் கேர் சென்டர் என்ற குடி மற்றும் போதை மறுவாழ்வு மையத்தில் , காவலர் உயிரிழந்த மர்ம சம்பவத்தால் அம்மையத்திற்கு சீல் வைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி கே.கே.நகரில் உள்ள லைஃப் கேர் சென்டர் மையத்தில், கடலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் காவலராக பணிபுரிந்துவந்தார் . இந்நிலையில் மர்மமான முறையில் அவர் திடீரென உயிரிழந்தார். ஆனால் பிரேத பரிசோதனையில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் , போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதனால் ,அரசு மருத்துவர்கள் குழு ஆய்வு […]
இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து தான் என்று கமல் பேசியதற்கு வழக்கு தொடுக்கப்பட்டதையடுத்து இன்று கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார் . சில நாட்களுக்கு முன்பாக பிரச்சாரம் ஒன்றில் இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து தான் என்று கமல் பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதன்படி ,இந்தியாவின் தேசத் தந்தையான காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே ஒரு ஹிந்து ஆகையால் இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இருந்துதான் என்று அவர் பேசினார். இதனையடுத்து அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது […]
ஹரியானா மாநிலத்தில் வேலை தராததால் இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . ஹரியானா மாநிலம் குறுகிராமில் உள்ள பகுதியில் இளம் பெண் ஒருவர் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சரியான காரணமின்றி அவரை பணியிலிருந்து தனியார் கம்பெனி நிர்வாகம் நீக்கியது. இதனால் மனமுடைந்த அவர் செய்வதறியாது கம்பெனியின் மொட்டை மாடிக்குச் சென்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த கம்பெனியின் காவலாளி நிர்வாகத்திடம் மற்றும் காவல்துறையினரிடமும் தெரிவித்தார். இதனை அடுத்து காவல்துறையும், […]
மக்கள் யாரும் வதந்தியை நம்ப வேண்டாம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கையின் மேற்கு பகுதியில் உள்ள கடலோர நகரமான சிலாபமில் தவறாக வெளியான சமூக வலைத்தள பதிவால் அங்குள்ள இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. இதனால் அங்கு ஏற்பட்ட தொடர் பதற்றம் காரணமாக இன்று காலை 6 மணி வரை அங்கு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு , இலங்கையின் சில பகுதிகளில் சமூக வலைதளங்களை முடக்கபட்டது. மேலும் புட்டாளம், குருநெங்களா […]
இலங்கையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு என்று காவல்துறை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் நச்சத்திர விடுதிகளில் தற்கொலப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 253 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு மற்றும் தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூர தீவிரவாத […]
போக்குவரத்து துறை காவல் ஆய்வாளரின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர் போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்ட போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக உள்ள சண்முகம் அப்பகுதியிலுள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றுள்ளார். இதை அறிந்த மர்ம நபர் அவர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டு இருந்த , 2 கிலோ வெள்ளி, 65 ஆயிரம் ரூபாய் ரொக்கம் எட்டு சவரன் நகை […]
பழனியில் பணியில் இருந்த காவல் ஆய்வாளரை போதையில் தாக்கிய கேரள மாநில போலீசாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததையடுத்து திண்டுக்கல் மாவட்டம் பழனி பாதவிநாயகர் கோயிலில் சப்-இன்ஸ்பெக்டர் இளவரசு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது ஐந்து பேர் கொண்ட ஒரு கும்பல் மது போதையில் மலைக்கோயில் செல்ல முயற்சித்தபோது அவர்களை தடுக்க முயன்ற இளவரசை சரமாரியாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது . இதில் காயம் அடைந்த அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை […]
சமயபுரம் அருகே காரில் கடத்திவரப்பட்ட 212 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து காரில் கஞ்சா கடத்திவரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் சோதனையை தீவிரப்படுத்தினர். அப்போது அந்த வழியாக வந்த டொயோட்டா காரினை போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் சோதனையிட்டபோது 212 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை கண்டறிந்த போலீசார் அதனை பறிமுதல் செய்து காரில் வந்த இரண்டு இளைஞர்களை […]
மதுராந்தகம் அருகில் குடிநீர் கேட்டு மக்கள் திடீரென காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அரையபாக்கம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடடும்பங்கள் வசித்துவருகின்றனர் இவர்களுக்கு பாலாற்று ஆழ்துளை கிணறு வழியாக தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன் பைப்லைனில் பழுது ஏற்பட்டதால் அதை சீர்செய்ய வேண்டி ஊராட்சி நிர்வாகத்துக்கு மக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரம் குடிநீர் விநியோகம் முழுவதுமாக நிறுத்தப்பட்ட காரணத்தால் கோபமடைந்த மக்கள், மதுராந்தகம்- திருக்கழுக்குன்றம் சாலையில் குடங்களுடன் […]
திருப்பத்தூரில் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆசிரியர் பகுதியில் திமுக நிர்வாகியான கவிதாவும் அவரின் கணவருடன் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் வெளியே சென்ற போது மர்ம நபர் ஒருவர் கதவு திறந்திருப்பதை அறிந்து எந்தவிதபரபரப்புமின்றி படுக்கை அறையில் நுழைந்து 6 சவரன் நகை மற்றும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார். இக்கொள்ளை சம்பவம் அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது .இந்த பதிவுகளை வைத்து அப்பகுதி போலீசார் […]
பெண்ணாடம் அருகே ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் மையூரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்-ல் ராயதுரை என்பவர் பணம் எடுக்க சென்றார். அந்த நேரம் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொண்டிருந்ததை பார்த்து அவரை தடுக்க முயன்றுள்ளார் .அப்போது அந்த நபர் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க பயன்படுத்திய இரும்பு கம்பியை அங்கேயே வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் ஏறி விரைந்து தப்பிச் சென்றார். அந்த மர்ம […]
நாட்றாம்பள்ளி அருகில் போலி மதுபானம் விநியோகம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் நடுபட்டு காக்கங்கரை பகுதிகளில், காரில் போலி மதுபானங்களை விநியோகிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து அந்த பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். போலீசாரின் கண்காணிப்பில் ஏரியூர் கிராமத்தில் சிலர் சிறிய அறை அமைத்து, போலி மதுபானங்கள் தயாரித்து விநியோகம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சோதனை செய்ததில் மதுபானங்களின் மூலப்பொருட்கள், ஸ்டிக்கர்கள்,1000 மதுபாட்டில்களைபோலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செயப்பட்டது . விசாரணையில் அவர்கள் சட்டவிரோதமாக கடந்த 6 […]
வழக்குகளில் பறிமுதலான மது பானங்களை வெளியில் விற்ற காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு பணியிடைமாற்றம் செய்ப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் மதுவிலக்கு தனிப்படை பிரிவில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் கணபதி. இவர்கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்ப்பட்ட மதுபானங்களை காவல் நிலையத்தில் இருந்து எடுத்து வெளியில் விற்று வந்ததாக அவர் மீது புகார் எழுந்ததையடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் பணியிடைமாற்றம் செய்ப்பட்ட பின்னர் அவர் கோட்டகுப்பம் மதுவிலக்கு காவல்நிலையத்திற்கு சென்று சக காவலர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக […]
கிளியல் பகுதியை சேர்ந்த 18 வயது பெண்ணை பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கிய அ.தி.மு.க பிரமுகரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். கன்னியாகுமரி களியல் பகுதியில் வசித்து வரும் 18 வயது பெண் அங்கு உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார் .அக்கடைக்கு தொடர்ந்து வந்த சுனில் குமார் என்ற நபர் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்துச் சென்று தனது நண்பரான அ.தி.மு.க பிரமுகர் சுஜின் ராஜையும் வரவழைத்து இருவரும் அந்த பெண்ணை பாலியல் […]
ராமநாதபுரம், அருகே 7 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டார் . ராமநாதபுரம் பெரியபட்டினம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி, பள்ளிக்கு செல்லும் வழியில் செய்யது அப்துல் காதர் வீட்டு வளாகத்தில் பழம் பறிக்க சென்றுள்ளார். அப்போது 55 வயதான செய்யது, என்பவர் ,மிட்டாய் வாங்க பணம் தருவதாக கூறி சிறுமியை வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதைப்பற்றி சிறுமி, தனது பாட்டியிடம் கூறியுள்ள நிலையில் , கீழக்கரை […]
அறந்தாங்கி அருகே தண்ணீர் டம்ளரை திருடியதற்காக காவலர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்துள்ள மேற்பனைக்காடுபேட்ட பகுதியில் தண்ணீர் பந்தல் வைக்கப்பட்டுள்ளது. இப்பந்தலில் வைக்கப்பட்ட தண்ணீர் டம்ளர்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக காணாமல் போகி உள்ளது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது.இந்த நிலையில் கடந்த சனி கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் இரண்டு காவலர்கள் தண்ணீர் டம்ளரை திருடிச் செல்லும் காட்சி அந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இதையடுத்து தகவல் அறிந்த காவல் கண்காணிப்பாளர் […]
தமிழ்நாட்டிலுள்ள மத்திய சிறைகளில் போதை மறுவாழ்வு மையங்களை அமைக்க சிறைத்துறையினர் திட்டவகுத்துள்ளனர். தமிழ் நாட்டில் மொத்தம் 14 மத்திய சிறைகள் உள்ள நிலையில் சிறைவாசிகளில் பலர் போதை பழக்கதிற்கு அடிமையாக உள்ளனர். சிறை வளாகத்தில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவது சவாலாகவே இருந்துவரும் நிலையில் தேசிய சமூக பாதுகாப்பு நலத்துறையுடன் சிறைத்துறையினர் இணைந்து, சிறைகளில் போதை மறுவாழ்வு மையம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக, சிறைத்துறை கூறியுள்ளது .
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் போலீசாரைத் தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே , காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மாயவன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை மாயவன் நிறுத்தி சோதனையிட்டுள்ளார் .அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த அப்துல்லா மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் மாயவனை தாக்கியுள்ளனர் . இதனால் ,அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தது, மிரட்டல் விடுத்தது, ஹெல்மெட் அணியாமல் […]
அருப்புக்கோட்டை அருகே கார் விபத்தில் சிக்கிய பெண் பலியான சம்பவத்தில் குற்றவாளியான கார் ஓட்டுநர் கைதாகியுள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த ,சங்கரேசுவரி, குருவலட்சுமி,முருகேசுவரி செல்வி ஆகியோர் விறகு ஏற்றும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர் . சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி சென்றபோது அந்த வழியே வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து இவர்கள் மீது மோதியதில் நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டனர். இவ்விபத்தில் சிக்கியவர்களை விரைந்து சென்று அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் முன்பே குருவலட்சுமி இறந்து விட்டார். இதையடுத்து பலத்த காயமடைந்த மூவரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் […]
ஒகேனக்கல் அருகில் இளைஞர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசாரால் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒகேனக்கல்லை அடுத்துள்ள ஜருகு பகுதியை சேர்ந்தவர் முனுசாமி.இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.ஈரோட்டில் இருந்து உறவுக்கார பெண் ஒருவர் பள்ளி விடுமுறையைகாக இவரது வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவத்தன்று ஒகேனக்கலை சுற்றிப் பார்க்க இருவரும் சென்றுள்ளனர். ஒகேனக்கல் அடுத்த பண்ணப்பட்டி சாலையில் இருவரும் பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம […]
கொட்டாம்பட்டி அருகில் வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அடுத்துள்ள குன்னாரம்பட்டியை சேர்ந்தவர் துரைப்பாண்டி. 60 வயதான இவர் விவசாயியாக உள்ளார் . சம்பவத்தன்று துரைப்பாண்டியும், அவரது மனைவியும் சேக்கிபட்டியில் உள்ள தங்களது தோட்டத்திற்கு சென்றுள்ளார். இதனால் துரைப்பாண்டி வீடு பூட்டிக்கிடப்பதை அறிந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பீரோவில் உள்ள வைக்கப்பட்டிருந்த 21 பவுன் நகைகள் […]
குமரி மாவட்டம், வட்டக்கோட்டையில் சுற்றுலா கட்டணத்தை எதிர்த்து பொதுமக்கள் தர்ணாவில் இறங்கினர். குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றான வட்டக்கோட்டை,மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் . இதுவரை, வட்டக்கோட்டைக்குள் நுழைய கட்டணம் ஏதும் வசூலிக்கப் படவில்லை. ஆனால் தற்போது , மே மாதத்தில் இருந்து சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு, கட்டணம் வசூலிக்க தொடங்கினார்கள். ஆனால் கட்டணம் வசூலிக்கும் முறைக்கு உள்ளூர் மக்கள் […]
மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் போலீசாரால் கைது செய்யபட்டுள்ளார். இலங்கை தொடர் குண்டு வெடிப்பு காரணமாக மதுரை விமான நிலையத்தில் கடந்த சில நாட்களாகவே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மதுரை விமான நிலையத்தில் குண்டு வைக்கப் போவதாக தஞ்சாவூரை சேர்ந்த சந்திரசேகர், பாஸ்கர் ஆகியோரின் பெயரில் கடிதம் ஒன்று மதுரை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த கடிதம் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம் பேட்டையை […]
பெண் பணியாளர் தற்கொலை…!!
கே.கே.நகரில் பெண் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்டம் கே.கே . நகர் அடுத்துள்ள அம்பேத்கர் குடியிருப்பை சேர்ந்தவர் வசந்தி. இவருடைய வயது50. இப் பெண் மாநகராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். இவரது கணவர் கடந்த 10வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது மகன் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகிறார். இந் நிலையில் போதிய வருமானம் இல்லாமல் தனிமையில் வசித்து வந்த வசந்தி கடந்த சில தினங்களாக மிகுந்த […]
குடிபோதையில் சண்டையிட்ட தந்தையை கோபத்தில் அடித்துக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் கோவிந்தராஜ் நகரில் வசிப்பவர் சேகர் இவருடைய வயது 48. அதே இடத்தில் உள்ள சோப்பு கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவர் தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 23ம் தேதி வழக்கம்போல் வீட்டிற்கு குடிபோதையில் வந்த சேகர் அவரது மகன் (வயது 28) நரேஸ் குமாரிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். அவரது மகன் பணம் இல்லையென கூறினார். […]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் மீது டெல்லி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. பா.ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட கவுதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆக இருந்தவர். தற்போது பா.ஜ.க. சார்பில் கிழக்கு டெல்லி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இவர் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி அனுமதியின்றி பேரணி நடத்தியுள்ளார். இதனால் இவர் தேர்தல் விதிகளை மீறுகிறார் என்று தேர்தல் ஆணையம் கூறிய நிலையில், காவல்துறையினரிடம் புகாரளிக்குமாறு தேர்தல் ஆணையம் உள்ளூர் தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணையிட்டது. இதைத் […]
மேல்மலையனூர் அருகில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் புதூர் கொல்லைமேடு பகுதியை சேர்ந்த விவசாயி கன்னியப்பன்.இவரின் மனைவி செல்வராணி .45 வயதான இவர் நேற்று முன்தினம் வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தீவைத்துக் கொண்டார். அவரின் அலறல் சத்ததை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து செல்வராணியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் அவரை மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு […]
மதுரை மத்திய சிறையில் சிறைக்கைதியினரும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மதுரை மத்திய சிறையில் தேனி ,திண்டுக்கல் ,நெல்லை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து தண்டனை கைதிகள், சிறை கைதிகள் என 1000 திற்கும் அதிகமானோர் இருப்பதால் உணவு , சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் அதிகமான கட்டுப்பாடுகளை சிறைத்துறை நிர்வாகம் விதித்தது. இதன் காரணமாக கைதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கைதிகள் சிறையின் சுவர் மீது ஏறி போலீசாரை நோக்கி கற்களை வீசி கோஷங்களை எழுப்பினர். தாங்கள் போராட்டங்களை கைவிட்டால் சிறைக்காவலர்கள் […]
பொன்னமராவதியில் குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவாக பேசிய விவகாரத்தில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதியில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் பற்றியும் , அந்தச் சமூகத்தின் பெண்கள் பற்றியும் இருவர் தரக்குறைவாக பேசும் ஆடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வைரல் ஆகி வந்தது . இழிவாக பேசியவர்களை கண்டித்து சம்மந்தப்பட்ட சமூக மக்கள் பொன்னமராவதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வெளியாகிய ஆடியோ தொடர்பாகவும் , அதை சமூக வலைதளத்தில் பரப்பியவர் பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டு […]
குடிநீர் வழங்க கோரி வெங்கத்தான்குடியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அடுத்து வெங்கத்தான்குடி ஊராட்சி ஆற்றங்கரை தெருவில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தென்பரை பாமணி ஆற்று படுகையில் அமைந்துள்ள ஆழ்குழாய் கிணற்றின் வழியாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் வரவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் கைப்பம்பு மூலம் வரும் உப்பு நீரை தான் […]
பூம்புகார் அருகே மீனவர் வீட்டில் திருடிய திருடர்களை போலீசார் கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர். நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள வானகிரியை சேர்ந்தவர் சரவணன் (வயது 30) மீனவர். இவர் கடந்த 18-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு கும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட திருடர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 12 பவுன் நகையையும் , ரூ. 3 ஆயிரத்து 500 ரொக்கத்தையும் திருடி சென்றுள்ளனர். இந்நிலையில்நேற்று வீடு திரும்பிய சரவணன் நகை பணம் திருடப்பட்டிருப்பதை […]
கலிபோர்னியாவில் பெற்ற குழந்தைகளை கொடுமை படுத்திய தம்பதியினருக்கு கோர்ட் ஆயுள் தணடனை வழங்கியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியை சேர்ந்தவர் டேவிட் ஆலன் டர்பின் (வயது57) இவருடைய மனைவி லூயிஸ் அன்னா டர்பின் (50). இவர்களுக்கு 3 முதல் 30 வயதிலுள்ள 12 குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகள் பிறந்ததிலிருந்து வீட்டுக்குள் அடைத்து, சங்கிலியால் கட்டி வைத்து டேவிட் ஆலன் டர்பினும் அவரது மனைவியும் கொடுமை படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் ஒரு பெண்குழந்தை வீட்டின் ஜன்னல் வழியாக தப்பித்து வந்து போலீசில் புகார் செய்திருக்கிறாள். இவள் கொடுத்த புகாரின் […]
நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் வாக்குச்சாவடியில் வானத்தை நோக்கி தூப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. பாராளுக்குமன்ற தேர்தலில் இரண்டாம் கட்ட வகுப்பதிவு, தமிழகத்தில் 32 பாராளுமன்ற தொகுதிக்கும் 18 சட்டமன்ற தொகுதிக்கும் அதைப்போல புதுச்சேரியில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், மற்றும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் நடைபெறுகிறது.காலை 6 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இந்நிலையில், அரக்கோணம் தொகுதி ஆற்காடு வாக்குச்சாவடி வாக்குப்பதிவு நிறைவடையும் நேரத்தில் பொதுமக்கள் வாக்களிக்க திரண்டு வந்ததால், […]
பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் மீன்சுருட்டி , ஆண்டி மடத்தில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஒரு மாதமாகவே பொதுமக்களிடம் போலீசார் துண்டு பிரசுரங்களை வழங்கியும், பல விழிப்புணர்வு ஊர்வலங்களை நடத்தியும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தின.ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 290 வாக்குச் சாவடி மையங்களில் 35 மையங்கள் பதற்றமானவை என்றும், அதில் நெருக்கடியான மையம் 2 எனவும் […]
திருவள்ளூர் மாவட்டத்தின் புதூர் கிராமத்தில் கடந்த 8-ஆம் தேதி தாய் மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் மேலும் 2 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூரை சேர்ந்தவர் வனபெருமாள். இவர் திருத்தணி-அரக்கோணம் சாலையில் இருக்கும் ஒரு தனியார் தொழிற்சாலையில் கடந்த 20 வருடங்களாக செக்யூரிட்டி சூப்பர்வைசராக பணியாற்றி வருகின்றார். இவர் திருத்தணியில் இருக்கும் பெருமாள் தாங்கள் புதூர் கிராமத்தில் தனது மனைவி விஜி (எ) வீரலட்சுமி , மகன் போத்திராஜ் மற்றும் மகள் பவித்ரா ஆகியோருடன் 25 ஆண்டுகளாக […]
தனியார் நிறுவன ஊழியரின் உல்லாசமாக ஆசைக்கு ரூ 46 லட்சத்தை மோசடி செய்த கும்பல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மும்பையில் உள்ள குரார் என்ற பகுதியில் 65 வயதான ஓய்வு பெற்ற தனியார் நிறுவன அதிகாரி வசித்து வருகின்றார். இவர் பொழுதுபோக்குக்காக இணையதளத்தை பார்ப்பது வழக்கம். அப்போது ஆபாச படம் பார்த்ததாக தெரிகின்றது. அப்போது ஆபாச ஆசைக்கு ஆளான அவர் தனது பெயர் மற்றும் முகவரியை பதிவு செய்து அதில் இணைந்துள்ளார். மேலும் அழகிகளுடன் உல்லாசமாக இருக்கலாம் என்ற ஆசையில் […]
மதுரையில் 30க்கும் மேற்பட்ட வீடுகளில் திருடிய நபரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். மதுரையில் உள்ள மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் ஜெயக்குமாரி. இவர் வீட்டின் கதவை தாழ்ப்பாள் போடாமல் நன்கு தூங்கிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது. இதனை நோட்டமிட்ட மர்ம நபர் வீட்டுக்குள் நுழைந்து 70 ஆயிரம் ரொக்க பணம், 2 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றுள்ளான். இதையடுத்து ஜெயக்குமாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து […]
ஈரானில் பொது இடத்தில் காதலை வெளிப்படுத்திய காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர். ஈரான் நாட்டில் உள்ள தலைநகரான தெஹரானுக்கு அருகே உள்ள அராக் என்ற இடத்தில் வசித்து வந்த ஒரு இளைஞர் ஒருவர் அவரது வீட்டின் அருகே இருந்த வணிக வளாகம் சென்றார். அப்போது அந்த வணிக வளாகத்தில் இருந்த தனது தோழியிடம் அந்த இளைஞன் காதலை வெளிப்படுத்த அவரது தோழியும் காதலை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து அவர், தான் வைத்திருந்த மோதிரத்தை காதலிக்கு அணிவித்தார். இதை தொடர்ந்து இருவரும் கட்டியணைத்துக் கொண்டனர். அப்போது அந்த இடத்தில் பொதுமக்கள் சூழ்ந்து […]