தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19-ஆம் தேதி(நாளை) நடைபெற உள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் மாவட்ட தேர்தல் அலுவலர் பாலசுப்ரமணியம் தலைமையில் வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் பல்வேறு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை அடுத்து கடலூர் மாவட்டம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேஷ் திடீரென ஆய்வில் ஈடுபட்டுள்ளார். அப்போது […]
Tag: political
தூத்துக்குடி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரம் கோவில்பட்டி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். கோவில்பட்டியில் கடலை மிட்டாய், விவசாயம், கால்நடை வளர்ப்பு, தீப்பெட்டி உற்பத்தி முக்கியத் தொழில்களாக உள்ளன. கோவில்பட்டி தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 64 ஆயிரத்து 900 இருக்கிறார்கள். கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 7 முறை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் மூன்று முறையும், சுயேட்சை வேட்பாளர் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர். இங்கு திமுக ஒரு முறை கூட வெற்றி […]
ஜாதி மற்றும் அரசியல் இல்லாத படங்களில் மட்டுமே நடிப்பேன் என கூறும் நடிகை கோலிவுட் டோலிவுட் என பலமொழிகளில் மிகவும் பிஸியாக நடித்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் பிரபல நடிகையிடம் புதுமுக இயக்குனர் ஒருவர் கதை சொல்லியுள்ளார். கதை கேட்டு முடித்து கதையில் ஜாதிவெறி மற்றும் அரசியல் இருப்பதை அறிந்து ஜாதி மற்றும் அரசியல் இல்லாமல் கதை கூறுங்கள் நடித்து தருகிறேன் என நல்லவிதமாக கூறி அனுப்பியுள்ளார். சர்ச்சை பிரச்சினை என எதிலும் சிக்கி விடாமல் இருக்கவே […]
ரஜினியை வரவேற்கிறோம், மக்கள் பணியாற்ற வேண்டும், மக்கள் அங்கீகாரம் கொடுப்பதை மக்களோடு சேர்ந்து நாங்களும் பார்ப்பதற்கு ஆர்வத்தோட இருக்கிறோம் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நடைபெற்ற அன்னதானம் வழங்கும் விழாவை தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி .உதயகுமார் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் பத்தாவது நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் […]
தில்லி தொடரில் நடித்த பிறகு இந்திய அரசியல் பற்றி தனது அறிவு விரிவடைந்திருப்பதாக பாலிவுட் நடிகை அமிரா தஸ்தூர் கூறியுள்ளார். அமேசான் ப்ரைமில் ஒளிப்பரப்பாகவிருக்கும் ‘தில்லி’ என்ற வெப் சீரிஸில் இணைந்துள்ளார் நடிகை அமிரா தஸ்தூர். அலி அப்பாஸ் ஸாஃபர் இயக்கி வரும் இந்த தொடரில், சயீப் அலிகான் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்திய நாட்டின் அரசியல் மையமாக திகழும் லுடியன்ஸ் டெல்லி பகுதியின் அதிகார பின்னணிகளைக் கொண்டு அரசியல் திரில்லர் பாணியில் ‘தில்லி’ வெப் சீரிஸ் […]
ரஜினிகாந்த் நடிகர் என்பதால் அரசியல் சரியாக புரியாமல் பேசி வருகிறார் என திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பொது மக்களிடம் கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று சென்னை லயோலா கல்லூரி வாயிலில் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கல்லூரி மாணவர்களிடம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கையெழுத்து பெற்றார். […]
சசிகலா விடுதலை ஆவதும் ஆகாததும் எந்த விதத்திலும் பாதிக்காது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை திருவேற்காட்டில் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், துணி வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கி நிர்வாகிகளுடன் கருத்துக்கேட்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பங்கேற்று நிர்வாகிகளுடன் குறைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளை எடுத்துரைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் சசிகலா விடுதலை குறித்து கூறியது ராஜேந்திர பாலாஜியின் சொந்த கருத்தாக இருக்கலாம் […]
துரைமுருகனுக்கு எங்களுக்கு அறிவுரை கூறும் தகுதி தகுதி இல்லை என என்றும் அந்த அறிவுரையை ஸ்டாலினுக்கு தான் முதலில் கூற வேண்டும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது, “எங்களுக்கு அறிவுரை கூற துரைமுருகனுக்கு என்ன தகுதி உள்ளது, முதலில் அவருடைய அரசியல் பாரம்பரியம் என்ன ? பேரறிஞர் அண்ணா இருந்தவர், டாக்டர் கலைஞர்ரோடு பின்னிப்பிணைந்து இருந்தவர். இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவர் யார் வந்திருக்கணும் துரைமுருகன் தானே வந்திருக்க […]
வரலாற்றை மறைத்து விட முடியாது என நடிகரும் பாஜகவை சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது உருவப்படத்திற்கு பாஜக சார்பில் எஸ்.வி.சேகர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் ரஜினி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது இதற்கு பதிலளித்த இவர் கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு என தெரிவித்ததோடு எல்லா வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு, ரஜினி ஆற்றியது எதிர்வினையே தவிர அவர் […]
குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்றால் அதனை உடனடியாக அதிமுக எதிர்க்கும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். நிலக்கோட்டையில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு இல்லை என்ற பின்னரே அதிமுக ஆதரவு அளித்ததாகவும் விளக்கமளித்தார்.
பெரியார் தொடர்பாக ரஜினி பேசியது பற்றி எல்லாம் விவாதிப்பது வீண் வேலை என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய திருமுருகன் காந்தி நேரில் பேச இயலாதவர்கள் நடிகரை வைத்து டப்பிங் செய்வதாக விமர்சித்தார். குடியுரிமை திருத்த சட்டம் என்பது மனுதர்மத்தின் மறுஉருவம் என தெரிவித்த அவர் இச்சட்டத்திற்கு எதிராக போராட்டம் தொடர வேண்டும் எனவும் கூறினார்.
ஹைட்ரோகார்பன் திட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் வரும் 28ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் மக்களின் கருத்துக் கேட்பு தேவையில்லை என்ற ஆணையை திரும்பப் பெற வலியுறுத்தியும், விவசாய நிலங்களை பாழ்படுத்தும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை திரும்பப் பெற்று, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க […]
ரஜினிகாந்தை கண்டு அதிமுக பயப்படவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவிற்கு பின்னர் செய்தியாளரிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் “அண்ணா, பெரியார், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய நான்கு தலைவர்களுக்கும் எந்த இழுக்கு ஏற்பட்டாலும் அதனை கண்டித்து அதிமுக குரல் கொடுக்கும்” என தெரிவித்தார். பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற சமயம் பார்த்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் பாஸ்கரன் கூறியிருப்பது அவரது சொந்த கருத்தாக இருக்கலாம் எனவும் […]
டெல்லியில் NSE எனப்படும் தேசிய பாதுகாப்பு சட்டத்தை மூன்று மாதங்களுக்கு காவல்துறை பயன்படுத்திக்கொள்ள ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார். தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் டெல்லியில் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் என பல்வேறு இடங்களில் மாணவர் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சமாளிக்க நாளை முதல் ஏப்ரல் 18-ஆம் தேதி வரை 3 மாதங்கள் டெல்லியில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை […]
கீழடி அகழாய்வு ஆய்வு அறிக்கைகளை வெளியிடாமல் தடுக்க திரைமறைவில் சதி நடப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களின் மூலம் தமிழர் நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டிருக்கிறார். மூன்று கட்ட ஆய்வுகள் முடிந்து 2 ஆண்டுகளாகியும் உயர் நீதிமன்றம் இரண்டு முறை விதித்த கெடு முடிந்துவிட்ட நிலையிலும் இன்றுவரை அகழாய்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை என்று அவர் […]
துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் திட்ட குழு கூட்டம் இன்று நடைபெற்றது. புதுச்சேரியில் இம்மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தற்போதைய நிதி ஆதாரம்,துறை வாரியாக நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க கடந்த ஆறாம் தேதி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தலைமையில் திட்டக் குழுக் கூட்டம் நடந்தது. ஆனால் அந்த கூட்டத்தில் சட்டமன்ற கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாததை கண்டித்து முதலமைச்சர் ,அமைச்சர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், விடுபட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு மீண்டும் […]
நகைசுவை நடிகராக நடித்தவர் உக்ரைன் அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்று அனைவரையும் பிரமிக்கவைத்துள்ளார். உக்ரைன் நாட்டின் அதிபரான பெட்ரோ பொரஷென்கோவின் பதவி காலம் அடுத்த மாதம் முடிவடையும் நிலையில் அங்கு அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் அதிபர் பதவியை தக்கவைத்துக் கொள்ள மீண்டும் பெட்ரோ பொரஷென்கோ வேட்பாளராக போட்டியிட்டார். அவரை எதிர்த்து அந்த நாட்டின் நகைச்சுவை டி.வி. நடிகர் ஜெலன்ஸ்கி எந்தவித அரசியலில் அனுபவமும் இல்லாமல் போட்டியிட்டார்.கடந்த மாதம் 31_ஆம் தேதி அதிபர் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு நடைபெற்ற நிலையில் நேற்று முன்தினம் 2-வது […]