சசிகலாவை எதைச்சையாக சந்தித்தேன் என்று ஒரத்தநாடு எம்எல்ஏ வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.. சசிகலா தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதற்காக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பதாகவே சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு புறப்பட்டு சென்றார்.. தஞ்சாவூரில் திருமண விழாக்கள், கோவில் விழாக்கள், தொண்டர்கள் சந்திப்பு என சுற்றுப்பயணத்தில்ஈடுபட்டு வருகிறார் சசிகலா. இந்நிலையில் ஒரத்தநாடு அருகே ஓவல்குடியில் திருமண நிகழ்ச்சியில் சசிகலா பங்கேற்பதற்காக சென்றபோது முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஓபிஎஸ் இன் தீவிர ஆதரவாளருமான வைத்திலிங்கமும் அங்கு வந்திருந்தார்.. இருவரும் சந்தித்து பேசினர். அப்போது […]
Tag: Politics
ஜெயலலிதா வழிநின்று கழகம் காப்போம், கரம் கோர்ப்போம், பகை வெல்வோம் என அதிமுக தொண்டர்களுக்கு பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.. இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, நிறை அன்புடைய சகோதரர்களே! சகோதரிகளே! கழகத்தின் பேரன்பு தொண்டர்களே அனைவருக்கும் மகிழ் வணக்கம். இன்றைய தொடக்கம் ஒரு இனிய தொடக்கமாகட்டும். நாளைய நாள் நமக்காகட்டும். நற் பணிகளால் தமிழ் சமூகம் மீள் உயிர்பெறட்டும். இதற்கான வெற்றி இலக்கை நோக்கி நம் கழகத்தை இயக்குவோம். அண்ணா […]
தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று நேற்று காலை ஒட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் திமுக முன்னிலை வகித்து அணைத்து மாவட்டங்களிலும் அதிக இடத்தை கைப்பற்றியுள்ளது. இதனால் எதிர்க்கட்சியான அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இதனிடையே பல வருடங்களாக இருக்கும் காட்சிகளே பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் 51 பேர் வார்டு உறுப்பினர் பதவியை கைப்பற்றியுள்ளனர். இதனை விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.
பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்கும் திமுக அரசை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்து இருக்கிறோம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரை புறக்கணித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாநிலத்தின் நிதி நிலை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று கூறி ஒரு வெற்று அறிக்கையை மாண்புமிகு நிதியமைச்சர் வெளியிட்டு இருக்கின்றார். ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் மாண்புமிகு அம்மா அரசு என்ன கூறியதோ அதையே ஒட்டுமொத்தமாக […]
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதையடுத்து அனைத்துப் பணிகளும் இயல்பாக தொடங்கி சீராக நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து, இந்தியாவின் பல பகுதிகளில் தேர்தலுக்கான பணிகளும் நடைபெற்று ஆங்காங்கே தேர்தலும் நடைபெற்று வருகின்றன. அதன்படி தமிழகத்திலும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சிகள் அனைத்தும் இறங்கிவிட்டன. இந்நிலையில் தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில், ஒருபுறம் பாஜகவினர் நடத்தும் வேல் யாத்திரை, மறுபுறம் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் […]
பாஜக பொய்களின் குப்பை என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஊரடங்கினால் பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதையடுத்து இந்தியாவின் பல மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் படிப்படியாக நடைபெற தொடங்கிவிட்டன. இதைதொடர்ந்து, மற்ற மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தற்போதே தொடங்கிவிட்டன. இந்நிலையில் ஆளும் கட்சிகள், எதிர்க் கட்சிகளை குறை கூறுவதும், எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சிகளை குறை கூறுவதும் என சுவாரசியமான பல வாக்குவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று […]
தமிழகத்தில் பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் வேல் யாத்திரை பாஜக கட்சியின் தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதற்கு பல அரசியல் தலைவர்களும், பொதுமக்களில் சிலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த கொரோனா காலகட்டத்தில் மற்ற மதத்தினருக்கு இதுபோன்ற அனுமதி வழங்காமல், இம்மாதிரியான யாத்திரைகளை நடத்துவது தமிழகத்திற்கு ஆகாத செயல் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த எதிர்வினை கருத்துக்களுக்கு நேர்மறையான எண்ணங்களை பதில்களை அளிக்கும் விதமாக, பாஜகவின் தலைவர் எல்.முருகன் ஒரு […]
2021 ஆம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் சூழ்நிலையில், அரசியல் வட்டாரங்களில் அவ்வபோது பரபரப்பான சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் தங்களுக்கு எதிராக போட்டியிடப் போகும் கட்சிகள் செய்யும் தவறுகளை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டி தொடர் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமலஹாசன் வெளியிட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. வீடியோவில் கமலஹாசன், […]
2021 ஆம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் சூழ்நிலையில், அரசியல் வட்டாரங்களில் அவ்வபோது பரபரப்பான சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் தங்களுக்கு எதிராக போட்டியிடப் போகும் கட்சிகள் செய்யும் தவறுகளை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டி தொடர் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களை அடையாளம் காண்பதற்கு கேமராக்களை பொருத்துவதற்கான தமிழக அரசின் டெண்டரில் விதிமீறல் நடந்திருப்பதாக எழுந்திருக்கும் புகாரில், முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்டோருக்கு […]
இனி வரக்கூடிய நாட்களில் தமிழக மக்கள் அதிகம் பார்க்கக் கூடிய பிரேக்கிங் செய்திகளாக எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தல் குறித்த தகவல்கள்தான் நிறைந்திருக்கும். தேர்தலுக்கான காலம் நெருங்கிக் கொண்டே இருக்கும்பட்சத்தில், அதற்காக போட்டியிட தயாராக இருக்கும் கட்சிகள் தங்களுடைய நிறைகளையும், எதிர்க்கட்சிகளின் குறைகளையும் கூறி தங்களது அனல்பறக்கும் பேச்சுகளால் மக்களை கவர நினைப்பார்கள். சில வாரங்களுக்கு முன்பு வரை அதிமுக கட்சியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து பல்வேறு விதமான சர்ச்சை கருத்துக்கள் வலம் வந்தன. தற்போது […]
தனக்காக அபராத தொகை செலுத்திய 4 பேருக்கு தனது வழக்கறிஞர் மூலமாக சசிகலா நன்றி தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா அவர்களுக்கு ருபாய் 10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராத பணத்தை தண்டனை காலம் முடிவடையும் நிலையில் கட்டினால், 2021 ஜனவரி 27 அன்று சசிகலா விடுதலை ஆவார் என்று சொல்லப்படுகிறது. இதையொட்டி சசிகலாவுக்காக பழனிவேல், வசந்தா தேவி, ஹேமா, விவேக் ஆகியோர் அபராத தொகையை டிடியாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் […]
தமிழகத்தில் பாஜக கட்சி தலைமையில் வேல் யாத்திரையை தடையை மீறி நடந்த முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் வேல் யாத்திரை குறித்து பாஜக தலைவர்கள் பலரும் அதை நடத்தியே தீருவோம் என பல இடங்களில் தங்களது கருத்துக்களையும் தெரிவித்து வந்தனர். இந்த வரிசையில், வேல் யாத்திரையை முடக்க நினைப்பது எதிர்விளைவுகளை உருவாக்கும் என்று வானதி ஸ்ரீனிவாசனும் வேல் யாத்திரைக்கு ஆதரவாக கருத்து கூறிய நிலையில், மதங்களின் பெயரால் வாக்கு வங்கி அரசியலுக்கு […]
ஆயிரம் பேரிடம் நிலமோசடி செய்த புகார் தொடர்பாக நடிகர் விஜய் மீது புதிய குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக பிரபல நடிகர் விஜய் அவர்களின் தந்தை சந்திரசேகர் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் புதிய கட்சியைத் ரிஜிஸ்டர் செய்தார். இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் தனக்கும், அந்த கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அறிவிப்பு ஒன்றையும் உடனடியாக வெளியிட்டார். அந்த அறிவிப்பு வெளியானது முதலே, பல்வேறு சர்ச்சை சம்பவங்கள் தொடர்ந்து விஜய் தொடர்பாக அரங்கேறி […]
பிரதமர் மோடி பயணத்திற்காக புதிதாக விமானம் வாங்கியது குறித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அளவு கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பலர் வேலை வாய்ப்பை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்த சூழ்நிலை ஒருபுறமிருக்க, பலரோ அத்தியாவசியமான உணவு கூட கிடைக்காமல் தவித்து வந்தனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்வதற்காக ரூபாய் 8000 கோடி செலவில் புது விமானம் வாங்கியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது குறித்து பலரும் தங்களது சமூக வலைதளங்களில் […]
தமிழ்மொழி படித்தவர்களுக்கு வாய்ப்பை மறுப்பதா? என மத்திய அரசுக்கு எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். மும்மொழி கல்விக் கொள்கை வாயிலாக ஹிந்தி மொழி தமிழகம், கன்னடம் உள்ளிட்ட மாநிலங்களில் திணிக்கப்படுவதாக மக்கள் பலர் நூதன முறைகளில் தொடர்ந்து எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். அதேபோல், தமிழகத்திலும் அரசு வேலை உட்பட பலவற்றில் தமிழர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை எனவும், வட மாநிலத்தவர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு அளிக்கப்படுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு சிறந்த உதாரணமாக, கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட ரயில்வே […]
மத்தியில் ஆளக்கூடிய பாஜக அரசு மக்களை மதிப்பதில்லை என புதுச்சேரி முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் மத்திய பாஜக அரசு ஜனநாயகத்தை மதிப்பதே இல்லை. மக்களின் பேச்சுரிமை, எழுத்துரிமை என அனைத்தும் முடக்கப்படுகிறது. புதுவையில் நாம் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கிறோம். ஆனால், அதை தடுக்க மத்திய அரசு இங்கு ஒருவரை அனுப்பியுள்ளது. அந்த நபர் புதுச்சேரியின் நலத்திட்டங்களை முடக்குவதற்கு என்னென்ன செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்கிறார் என்று கூறியுள்ளார். ஆனால் […]
கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து நடிகர் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு தொடர்ந்து தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தளர்வுகளின் அடிப்படையில், பல செயல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட சமயத்திலும், தியேட்டர்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள் உள்ளிட்டவை திறப்பதற்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதே போல், பொது இடங்களில் மதம், அரசியல் தொடர்பான […]
மாநகராட்சி அழைப்பிதழ் ஒன்றில் ஓபிஎஸ் பெயர் இல்லாதது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முதல் சமூக வலைதளங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த ஒரு விஷயம் அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது தான். இந்த வாக்குவாதம் தொடங்கியது முதலே இபிஎஸ் ஆதரவாளர்கள் என ஒரு குழுவும், ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மற்றொரு குழுவாகவும் பிரிந்து, பல்வேறுவிதமான போஸ்டர்களையும், கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அழைப்பிதழ் […]
தமிழக அரசின் மருத்துவ சேவை குறித்த போஸ்டர் ஒன்றில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சிறப்பான சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் தமிழக அரசின் சிறந்த மருத்துவ சேவையை உலகமே பாராட்டுகிறது என்பது உள்ளிட்ட செய்திகளை சமீப […]
இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலம் உத்திரப்பிரதேசம் தான் என பிரியங்கா காந்தி கடுமையாக சாடியுள்ளார். உத்திரப்பிரதேசத்தின் ஹத்ரஸ் மாவட்டத்தில் செப்டம்பர் 14ஆம் தேதி 20 வயது பட்டியலின பெண் ஒருவரை உயர் சாதியைச் சேர்ந்த சில கொடூர வாதிகள் வயலுக்கு இழுத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அந்தப் பெண்ணின் கழுத்து, முதுகு எலும்புகளை உடைத்து, நாக்கு கொடூரமாக வெட்டப்பட்டு மூச்சு விடக்கூட முடியாத நிலையில் மருத்துவமனையில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டிருந்தார் இன்று […]
சசிகலா விஷயத்தில் நாங்கள் தெளிவாக இருப்பதாகவும் பத்திரிக்கையாளர்களே தேவையற்ற செய்தியை வெளியிடுவதாகவும் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் மாற்று திறனாளிகளுக்கு ஆட்சியர் அலுவலகத்தின் வளாகத்தில் வைத்து தனித்துவமிக்க அடையாள அட்டை காதுகேளாதோருக்கான தொழில் நுட்ப கருவி பேட்டரி மூலம் இயங்கும் நாற்காலி போன்ற வற்றை 200 பயனாளிகளுக்கு 40 புள்ளி 80 லட்சம் மதிப் பெண் வழங்கும் விழா நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறையின் அமைச்சரான கே […]
நீட் தேர்வின் கெடுபிடிக்கான காரணங்கள் குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். நீட் தேர்வினால் ஏற்பட்ட மன உளைச்சலில் நேற்றுமுன்தினம் மட்டும் தமிழகத்தில் மூன்று மாணவர்கள் பரிதாபமாக தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர். இது குறித்து சமூக வலைதளங்களில் பல பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தங்களது கண்டனங்களை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினமும் நீட் தேர்வில் பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் நடைபெற்றுள்ளன. இது குறித்து தற்போது அரசியல் கட்சி தலைவர்கள், பலர் […]
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மீது எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் புகார் அளித்துள்ளார். ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முறைகேடு செய்வதாக பல புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது. இது குறித்து திமுகவின் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் களத்தில் இறங்கி விசாரணை நடத்தியதில் முறைகேடு உண்மை என தெரிய வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மீது புகார் தெரிவித்துள்ளார். அதில், பேக்கேஜ் டெண்டர் […]
தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்கள் நிலை குறித்து தமிழக முதல்வர் மௌனம் களைக்க வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பு அதிகமாக இருப்பதால் தற்போதைய சூழ்நிலைக்கு மாணவர்களுக்கு தேர்வு நடத்த வாய்ப்பில்லை என்பதால், முதற்கட்டமாக பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் நடக்கவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டதை […]
உயிர் காக்கும் விஷயத்தில் ஊழல் செய்வது மிகப்பெரிய துரோகம் என உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து, பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும், முககவசம் இலவசமாக மக்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை […]
முதல்வர் EPS துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் கூட்டாக சேர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்ட பின் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடப் போவது யார் என்ற பேச்சு விவாதப்பொருளாக தமிழகத்தில் மாறியுள்ளது. இதற்கு செல்லூர் ராஜூ உள்ளிட்ட அமைச்சர்கள் அடுத்தடுத்து, அதிமுக அடுத்த முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று அவசரம் காட்டியது தான். இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் EPS துணை முதல்வர் […]
அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் குறித்து அமைச்சர் ஆர் பி உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார். தீவிரமடைந்து வரும் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்ட பிறகு தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றனர். எதிர்க்கட்சிகள் இதற்கான தீவிர பணியில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில், ஆளும் கட்சியான அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தின் அடுத்த முதல்வர் வேட்பாளரை விரைவில் அதிமுக தீர்மானிக்க வேண்டும் […]
திமுக பரம்பரையே பிளேபாய் பரம்பரை என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் என்பவர், கமலாயம் சென்று பாஜக தலைவர்களை சந்தித்து வந்ததையடுத்து, திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கு.க.செல்வத்திற்கு சாக்லேட் கொடுத்து ஏமாற்றி விட்டார்கள் என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், கு.க.செல்வத்திற்கு சாக்லேட் கொடுத்து ஏமாற்றி விட்டார்கள் என சாக்லேட் பாய் தெரிவிக்கிறார் என்று தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு பதிலளித்த உதயநிதி, என்னை சாக்லேட் […]
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்த பரபரப்பு தகவல் ஒன்றை அமைச்சர் ஜெயக்குமார் அளித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் கொரோனா பாதிப்பிற்கு பின்பு விரைவில் நடைபெற இருக்கும் சூழ்நிலையில், அதற்கான பணிகளில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஆட்சியில் இருக்கக்கூடிய அதிமுக அரசின் கட்சியிலும் அடுத்த முதல்வர் யார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. தற்போது இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு தகவல் ஒன்றை அளித்துள்ளார். அதில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் பற்றிய […]
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி மறைந்து இரண்டு ஆண்டு நினைவு நாள் திமுக தொண்டர்களால் அனுசரிக்கப்படுகின்றது. இதனை அடுத்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நீங்கள் இட்ட கட்டளையை உங்கள் பாதையில் தொடருகின்றோம் தலைவரே. நீங்கள் தான் சொன்னீர்கள் அமைப்பு ரீதியாக கழகம் ஆடை அணிந்துள்ள உடலைப் போல. அதில் உயிரை போன்றதொரு கொள்கை. பதவி என்பது அணிகலன். அணிகலன் இன்றி வாழ […]
பிரபல நடிகர் கமலஹாசன் முதல்வர் பதவிக்கு புதிய ரூட் போடுவதாக கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. மக்கள் நீதி மய்ய கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் சூழலை உருவாக்குவோம் என அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தைப் பொறுத்தவரையில், கட்சியை ஆரம்பித்த சில நாட்களில் நடைபெற்ற முதல் தேர்தலிலேயே நல்ல வாக்கு சதவிகிதத்தை பெற்றவர் கமல். தற்போது புதுச்சேரி மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் சூழலை ஏற்படுத்துவோம் […]
திமுக தலைவர் முக.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக மாவட்ட செயலாளர்கள் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் கூட்டம் தொடங்கியது. திமுக தலைமை வெளியிட்ட அறிவிப்புக்கிணங்க திராவிட முன்னேற்ற கழக சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் எம்எல்ஏக்கள் 97 பேரில் கொரோனா தொற்று காரணமாக 12 பேர் பங்கேற்கவில்லை. எம்பிக்கள் 28 பேரும், மாவட்ட செயலாளர் 65 பேரும் என 160க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். திமுக அமைப்புச் […]
8வழிச்சாலை திட்டம் என்பது மாநில அரசின் திட்டம் இல்லை மத்திய அரசின் திட்டம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். விவசாயிகளை பாதிக்கின்ற எந்த ஒரு திட்டமும் தமிழகத்தில் வராது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் எட்டு வழி சாலை திட்டம் தொடர்பான வழக்கை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இதுகுறித்து தமிழக முதலமைச்சரின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி […]
அரசியல் பேசுவது சரியான வழிமுறையல்ல என பிரபல தயாரிப்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்> தமிழ் சினிமாவில் அதிகம் மார்க்கெட் கொண்ட நடிகராக தற்போது தளபதி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் விஜய் திகழ்ந்து வருகிறார். இவருக்கு அரசியலிலும் ஆர்வம் உண்டு என சில வட்டாரங்கள் தெரிவித்து வந்த போதிலும், அதனை விஜய் நேரடியாக இதுவரை கூறியதில்லை. அவர் சமீபகாலமாக ஆடியோ விழாக்களில் அரசியல் பேசுவது என்பது வழக்கமாகிவிட்டது. இதற்கு சிலர் ஆதரவாகவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வரும் சூழ்நிலையில், […]
தமிழக துணை முதல்வர் ஓ .பன்னீர்செல்வம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவ பரிசோதனைக்காக சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துமனையில் அனுமதிக்காட்டுள்ளார். வழக்கமான பரிசோதனையாகவே மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அவர் தரப்பிலிருந்து சொல்லப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் அவர் இன்று மாலை 2 மணிக்கு அவர் வீடு திரும்புவார் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அதே போல அவரை சந்திப்பதற்காக 12 மணியளவில் மருத்துவமனைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக செல்கிறார் என்றும், […]
ரஜினி பாஜகவை கண்டிக்க வேண்டும் என்று விசிக தெரிவித்துள்ளது பாஜகவை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. மத்திய அரசு கடந்த ஏப்ரல் 17-ம் தேதியன்று வெளியிட்ட அறிவிப்பில் 2020 ஆம் ஆண்டு வரவிருக்கும் மின்சார சட்டத் திருத்தம் குறித்து அனைத்து மாநிலம் மற்றும் பிற பங்குதாரர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படுவதாக தெரிவித்தது. இது மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கலுக்கு வழிவகையில் செய்யும் என்று திமுக கட்டணம் தெரிவித்தது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட திமுக புதிய மின்சார திருத்த சட்டம் விவசாயிகளின் வேலைக்கான […]
மோடியின் கணிப்பால் தான் தற்போது இந்தியா கொரோனாவை சிறப்பாக கையாண்டு வருவதாக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கருத்து தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதனுடைய பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வர, வல்லரசு நாடுகளான அமெரிக்கா போன்றவற்றை ஒப்பிடுகையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு, மற்றும் உயிரிழப்பு குறைந்த விகிதத்திலையே இருக்கிறது. மேலும் முன்பை காட்டிலும் கொரோனா பரவல் குறைந்திருப்பதாகவும், 12 […]
அரசின் தவறுகள் உயிர்பலி வாங்குவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 3ம் தேதியுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு உத்தரவை, மே 17 வரை மீண்டும் மத்திய அரசு நீட்டித்துள்ளது. இருப்பினும் பல்வேறு தகவல்களின் அடிப்படையில், தனிக் கடைகள் இயங்கும் என்றும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில், முடி வெட்டும் கடை, அழகு நிலையங்கள் உள்ளிட்டவற்றைத் தவிர பிற தனிக் கடைகள் திறக்கலாம் என […]
மலிவான அரசியல் செய்வதை எதிர்க்கட்சித் தலைவர் தவிர்க்க வேண்டும் என்று விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும் போது, மத்திய சுகாதாரத்துறை சார்பில் அரசு மருத்துவமனையை ஆய்வு நடத்தினார்கள். எல்லாமே நன்றாக இருப்பதாக தெரிவித்தனர். இது ஒரு பேரிடர் நேரம், அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல. இந்த தொற்றை ஒழிக்க உலக நாடுகள் போராடிக் கொண்டிருக்கின்றது. வல்லரசு நாடுகள் திணறிக்கொண்டு இருக்கும் நிலையில் தமிழகத்தில் முதலமைச்சர் சரியான நேரத்தில், சரியான முடிவுகளை […]
கொரோனா தடுப்பில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். உலகமே கொரோனவை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஊரடங்கில் இருந்து வருகின்றது. கொடூர தொற்றாக மாறியுள்ள கொரோனவை கட்டுப்படுத்த இது வரை மருந்து கண்டுபிடிக்கபடவில்லை. இதனால் கொரோனவை தடுப்பது உலக நாடுகளுக்கே சவாலாக இருக்கின்றது. ஆனாலும் தொற்றை கட்டுப்படுத்த சமூக விலகல் அவசியமான ஒன்றாக இருந்து வருவதால் மத்திய மாநில அரசுக்கள் இதனை தீவிரமாக அமுல் படுத்தியுள்ளது.உலகளவில் லட்சக்கணக்கான உயிர் பலியை வாங்கிய கொரோனா இந்தியாவிலும் […]
பிரதமர் மோடி நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இன்று உலக நாடுகளுக்கே பெரிய சவாலாக விளங்குவது கொரோனா வைரஸ். 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி மக்களின் உயிர்களை காவு வாங்கி வருகிறது. இதற்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியாததால், அனைத்து உலக நாடுகளும் ஊரடங்கு அமல் படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அந்தவகையில் இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனவை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார். இன்று உலக நாடுகளுக்கே பெரிய சவாலாக விளங்குவதுகொரோனா வைரஸ். 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி மக்களின் உயிர்களை காவு வாங்கி வருகிறது. இதற்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியாததால், அனைத்து உலக நாடுகளும் ஊரடங்கு அமல் படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அந்தவகையில் இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனவை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. மே […]
கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவுக்கு மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்பதால் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் வீட்டிற்குள்ளே முடங்கி கிடைக்கும் கேரள மதுபிரியர்கள் பலரும் தற்கொலை செய்யும் நிலையில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயன் கேரளாவில் மதுபானத்திற்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர் பரிந்துரைப்படி மதுபானம் தர ஆணையிட்டார். மருத்துவரின் பரிந்துரையின் படி குடிமகன்களுக்கு மதுபானம் […]
வீட்டில் தனிமைப்படுத்தப்படுபவர்கள் வெளியே வந்தால் அவர்களின் பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. தமிழகத்தில் மட்டும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்திற்கு கடந்த ஒரு மாதங்களில் 9,000_திற்கும் அதிகமானோர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் அனைவருமே வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக வீடுகளில் […]
கொரோனா அறிகுறியுடன் இருப்பதை அரசுக்கு தெரியபடுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்றய சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய தமிழக முதலவர் , நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட சுய ஊரடங்கு பின்பற்றிய தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்தார். முதலமைச்சர் பழனிசாமி தற்போது அறிகுறியுடன் இருப்பதே அரசுக்கு தெரியப்படுத்த விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார். அதேபோல தமிழகத்தில் பால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்க தடை […]
அதிமுகவின் விருதுநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்த ராஜேந்திர பாலாஜி நீக்கப்பட்டது அவரின் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோடி எங்கள் டாடி, சின்னம்மா கட்சியில் இணைந்தால் நான் வரவேற்பேன். கமலஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும். தமிழகத்திலும் மதக்கலவரம் ஏற்படும். இப்படி பாஜகவின் கருத்துக்களை முழுமையாக ஆதரித்து பேசி வருபவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இவரின் பல கருத்துக்கள் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. அதிமுகவின் விருதுநகர் மாவட்ட செயலாளராக இருந்துகொண்டு தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்துவந்த ராஜேந்திர பாலாஜியின் விருதுநகர் […]
தேவையற்ற பயணங்கள் யாருக்கும் உதவாது என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸை தடுப்பதற்காக பிரதமர் மோடி பொதுமக்கள் அனைவரும் நாளை சுய ஊரடங்கை அமல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கான ஆயத்த பணியில் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநில அரசுகள் ஈடுபட்டிருக்கின்றனர். மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தபட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவ்டிக்கைக்காக விடுமுறை விடப்பட்டுள்ளதை மக்கள் பொழுது போக்கிற்கு செலவழிக்கும் […]
ஏ ப்ரல் 9ஆம் தேதிக்குப் பதில் மார்ச் 31 ஆம் தேதியோடு தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நிறைவடையும் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிக்கப்பட்ம் என்று சபாநாயகர் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஏப்ரல் 9ம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறுவதாக இருந்த நிலையில், தற்போது மார்ச் 31ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடரின் நிகழ்வுகள் மாற்றியமைக்கப்பட்டு மார்ச் 31ஆம் தேதியுடன் இந்த கூட்டத்தொடர் முடிக்கப்படும் என்ற ஒரு அறிவிப்பை […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்டதற்காக முதல்வரை பிரதமர் பாராட்டினார் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் , மருத்துவப் பணிகளை மேற்கொள்ள ஓய்வுபெற்ற மருத்துவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை , முன்னெச்சரிக்கை குறித்து முதல்வரிடம் பிரதமர் கேட்டறிந்தார். தமிழக அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார். நாளை நடைபெறும் மக்கள் ஊரடங்குக்கு தமிழக […]
மத்திய பிரதேச மாநில அரசியல் சூழலுக்கு நாங்கள் காரணமில்லை என்று பாஜகவின் முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசை முதலமைச்சர் கமல்நாத் வழிநடத்தி வந்தார்.காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலால் ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து அவரின் ஆதரவு எம்எல்ஏக்கள் 22 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து கர்நாடகாவில் தஞ்சம் புகுந்தனர். இதனால் காங்கிரஸ் பெரும்பான்மை இழந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. […]