தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகைக்கான 21 பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கிடங்கிலிருந்து தமிழக அரசு அளிக்கும் பொங்கல் பரிசுகளாக பச்சரிசி, வெள்ளம், முந்திரி, ஏலக்காய், நெய், பாசிப்பருப்பு, ரவை, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், மிளகு, கரும்பு என 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு 1,028 நியாயவிலை கடைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் 4 லட்சத்து 82 ஆயிரத்து 187 பயனாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு […]
Tag: Pongal
நம் முன்னோர்கள் நாகரீகத்தின் முதல் வளர்ச்சி கட்டத்தில் இருக்கும் போது ஐந்திணை என சொல்லப்படும் ஐந்து வகை நிலங்களின் அடிப்படையில் தொழில் செய்து தங்களது வாழ்க்கையை நடத்தி வந்தனர். அந்தவகையில், ஐந்து திணைகளில் ஒன்றான முல்லை நிலத்தில் விவசாய தொழில் நடத்தப்பட்டு வந்தது. விவசாய நிலத்தை உழுவதற்கு பெரிதும் பயனுள்ளதாக காளைகள் இருந்தன. எனவே முல்லை நில மக்களின் வீட்டில் செல்லப்பிராணியாக காளைகள் வளர்க்கப்பட்டு வந்தன. இப்படி வீட்டில் வளர்க்கப்படும் காளைகளை வேட்டைக்கு அழைத்துச் செல்வதும், அதனுடன் […]
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக மக்கள் அனைவரும் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழாவை சிறப்பாக மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள். இந்த தைத்திருநாள் அல்லது பொங்கல் திருவிழாவிற்கு பல்வேறு கதைகள் கூறப்படுவது உண்டு. பெரும்பாலும் இந்நாளை இந்துக்கள் மட்டுமே புத்தாடை அணிந்து அதிகமாக கொண்டாடி வருகிறார்கள். ஆனால் உண்மையாகவே மதத்தை கடந்து ஐம்பூதங்களின் வழிபாடாக பொங்கல் பண்டிகை உள்ளது. காற்றின் உதவியுடன் எரியும் நெருப்பில், மண்ணால் செய்யப்பட்ட […]
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக மக்கள் அனைவரும் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் பாரம்பரிய முறைப்படி இத்திருநாளை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் பொங்கல் திருநாள் வித்தியாசமாக கொண்டாடப்படும். அந்த வகையில், சிறு வீட்டுப் பொங்கல் என்னும் முறை நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வழக்கத்தில் உள்ள நடைமுறையாகும். ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும் குழந்தைகள் அனைவரும் சேர்ந்து தாங்களாகவே வீடுகள் போன்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் அருகில் பொங்கல் வைத்து படையலிட்டு […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை போன்ற நகர் பகுதிகளிலும் பொங்கல் பானைகள் விற்பனையானது அதிகளவில் உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்திலுள்ள ராயப்பேட்டை, கொசப்பேட்டை, நுங்கம்பாக்கம் போன்ற பகுதிகளில் ஏராளமான மண்பானைகள் விற்பனைக்கு குவிந்துள்ளன. அதோடு ஓலைகள் மற்றும் விறகுகள் புறநகர் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டு வீதிகளில் வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. இவை அனைத்தையும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருக்கும் பொது மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானைகள் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது மதுரை மாவட்டத்திலுள்ள சுந்தரராஜன் பட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பானைகள் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இங்கு செய்யப்படும் மண்பானைகள் அழகர் மலையின் அடிவாரத்தில் செய்யப்படுகிறது. அங்குள்ள மண்ணில் கலக்கும் நீரில் மூலிகை குணங்கள் காணப்படுவதால் அங்கு செய்யப்படும் பானைகளுக்கு அவை தனிச்சிறப்பு சேர்க்கிறது. இதனால் தான் இந்த மண்பானைகளை வாங்குவதற்கு மக்கள் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இப்பகுதிகளுக்கு […]
தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு பெறுவதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் புகார் கொடுக்கலாம் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார் பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, 20 கிராம் முந்திரி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழுக் கரும்பு போன்ற பொருட்கள் மற்றும் ரூபாய் 2500 ரொக்கம் வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு வழங்குவதற்கான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து […]
உடலுக்கு இரும்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய திணை இனிப்பு பொங்கல் செய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். திணை அரிசி மற்றும் பாசிப்பருப்பை தனித்தனியாக வறுத்து நன்றாக ஊற வைக்க வேண்டும். அதன்பின் அதனை வேக வைத்து பின் வெல்லப்பாகை சேர்த்து பொங்கல் பதம் வந்தவுடன் 5 நிமிடம் மூடி வைத்துவிட வேண்டும். பின்னர் நெய்யில் முந்திரி, வறுத்த திராட்சை, பொடித்த ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து அதனை வேக வைத்த பொங்கல் பதத்துடன் […]
இனிப்பு என்றால் பிடிக்காதவர் உண்டா? நிச்சயம் வாய்ப்பு இல்லை. அதிலும் குழந்தைகளை கேற்கவெய் வேண்டாம் இனிப்பாக கொடுத்தால் அதிகமே கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அதற்காகவே இந்த சுவையான ரெசிபி இனிப்பு சுவை நிறைந்த கற்கண்டு பொங்கல் செய்வது பற்றி பார்க்கலாம்… தேவையானவை: பச்சரிசி – 2 கப் நெய் […]
சிவகங்கை மாவட்டத்தில் காளைகள் முட்டி 81 பேர் படுகாயமடைந்துள்ளனர். தென் தமிழகத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற மஞ்சுவிரட்டு என்றால் அது சிவகங்கை மாவட்டம் சிரவாயில் மஞ்சுவிரட்டு தான். சுமார் 80 ஏக்கர் நிலப் பரப்பளவில் மஞ்சுவிரட்டு போட்டியானது அப்பகுதியில் சிறப்பாக நடத்தப்படும். இதனைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் குவிந்த வண்ணம் இருப்பர். ஒவ்வொரு ஆண்டும் தை மூன்றாம் தேனாட்சி அம்மன், பெரிய கோவில் அம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு வழிபாடு செய்து, முன்னோர்களுக்கு அழைப்பு […]
சேலத்தில் எருதாட்டத்தை காண சென்ற வாலிபரை காளை முட்டி கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை அடுத்த வேப்பங்கொட்டை அய்யனாரப்பன் கோவில் முன்பு பிரசித்தி பெற்ற விளையாட்டான எருதாட்டம் நடைபெற்றது. இந்த விளையாட்டை காண்பதற்காக சேலம் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு மக்கள் அப்பகுதியில் குவிந்தனர். அந்த வகையில் எடப்பாடி பகுதியை அடுத்த செட்டிகுறிச்சியை சேர்ந்த உத்தர குமார் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் எருதாட்டத்தை காண வந்துள்ளார். அப்போது காளை ஒன்று […]
நாகர்கோயில் அருகேயுள்ள மீனவக் கிராமத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு மீனவ மக்கள் படகு போட்டி, நீச்சல் போட்டிகள் நடத்தி உற்சாகமாக கொண்டாடினர். தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் தினத்தை சாதி, மத பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த பண்டிகை காலங்களில் தமிழர்கள் தங்களது பாரம்பரிய விளையாட்டு போட்டிகளை நடத்தியும் தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவார்கள். அந்த வகையில், நாகர்கோவில் அருகேயுள்ள கேசவன்புத்தன்துறை கிராமத்தைச் சார்ந்த கிறித்துவ மக்கள் பொங்கல் கொடியேற்றி உழவர்களுக்கு மரியாதை செலுத்தும் […]
மாட்டுப்பொங்கலை முன்னிட்டு சுகந்தலையில் விளையாட்டுப் போட்டி உற்சாகமாக நடந்து முடிந்தது. தை முதல் நாள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழர்கள் புதுஆடை அணிந்து , வீடுகளில் கோலம் போட்டு , பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். அதே போல இரண்டாம் நாள் பண்டிகையாக மாட்டு பொங்கலையும் தமிழர்கள் சிறப்பாக கொண்டாடுவார்கள். அன்றைய தினம் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் விளையாட்டு போட்டி நடத்தி அன்றைய நாளை உற்சாகத்துடன் போக்குவார்கள். […]
பொங்கல் பண்டிகை விளையாட்டு போட்டி சுகந்தலையில் சிறப்பாக நடைபெற்றது.. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மாட்டுப்பொங்கலான இன்று அனைத்து பகுதியிலும் விளையாட்டுப் போட்டி நடத்தி மாட்டுப்பொங்கலை சிறப்பாக தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள சுகந்தலை கிராமத்தில் விளையாட்டு போட்டி நடத்துவதற்காக அலங்கரிக்கப்பட்டு தயார் செய்யப்பட்டது. EVLK இளைஞரணி சார்பில் பொங்கல் விளையாட்டு விழா முன்னெடுக்கப்பட்டது. மதியம் 2 மணிக்கு […]
தமிழரின் சிறப்பு பண்டிகையான பொங்கல் பற்றி ஐங்குறுநூறு பாடலில் சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழர் திருநாளில் தமிழல் வாழ்த்துவோமே! இதோ ஐங்குறுநூற்றில் இருந்து ஒரு பாடல்… தைத்திங்கள் வாழ்த்தாய் ஒலிக்கிறது! “நெற்பல பொலிக! பொன்பெரிது சிறக்க! விளைக வயலே! வருக இரவலர்! பால்பல ஊறுக! பகடுபல சிறக்க! பகைவர்புல் லார்க! பார்ப்பார் ஓதுக! பசிஇல் லாகுக! பிணிசேண் நீங்குக! வேந்துபகை தணிக! யாண்டுபல நந்துக! அறம்நனி சிறக்க! அல்லது கெடுக! அரசுமுறை செய்க! களவில் லாகுக! நன்று பெரிதுசிறக்க! […]
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே நடைபெற்ற பொங்கல் விழாவில் சுமார் 1000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், கிராம பொதுமக்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியை அடுத்த வடகடும்பாடி கிராமத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் தலைமையில் நடைபெற்றது. . இந்த நிகழ்ச்சியில் அதிமுக கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு முன்னுரிமை […]
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. பொங்கலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால் கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் அதிக அளவில் பூக்களை வாங்கி குவித்துள்ளனர். இந்நிலையில் அங்கு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை பூ மூன்றாயிரம் ரூபாய், சம்மங்கி 100 ரூபாய்க்கும், பிச்சி 100 ரூபாய்க்கும் கனகாம்பரம் 100 ரூபாய்க்கும் ஜாதிமல்லி 1200 […]
திருவள்ளூரில் போகியன்று பழைய பொருள்களை கொளுத்தி புகை மண்டலத்தை ஏற்படுத்துவதை முடிந்த அளவிற்கு தவிர்க்க வேண்டுமென மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பழையன கழிதல், புதியன புகுதல் என்பதே போகி பண்டிகை. அதன்படி தமிழக மக்கள் ஒவ்வொரு வருடமும் போகிப் பண்டிகை அன்று வீட்டில் உள்ள பெரியவர்கள் துணிகள், பழைய பொருட்கள் உள்ளிட்டவற்றை தீயிலிட்டு கொளுத்தி போகி பண்டிகையை கொண்டாடுவர். ஆனால் தற்பொழுது தமிழக மக்கள் அதுபோன்ற பொருட்களோடு சேர்த்து ரப்பர், நெகிழி […]
பொங்கல் பண்டிகையையொட்டி பல வண்ண கோலப்பொடிகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிர ஆர்வம்காட்டி வருகின்றனர். ஆண்டுதோறும் மார்கழி மாத கடைசி நாளில் சூரியனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்ய பெண்கள், மார்கழி முதல் நாளிலிருந்து பிள்ளையார் வைத்து மாதம் முழுவதும் வித விதமான கோலமிட்டு வண்ணமிடுவது வழக்கம். இந்நிலையில் இன்று மார்கழி மாதம் தொடங்கிய நிலையில், மார்கழி மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி தருமபுரியில் பல வண்ணங்களில் கோலப்பொடிகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தருமபுரி […]
தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு வழங்குவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, வாணியம்பாடியைச் சேர்ந்த நியாயவிலைக் கடைகளின் முன்பு ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். தமிழர் திருநாளாகிய பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாட்டிலுள்ள 2 கோடியே 5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்புப் பொங்கல் பரிசு வழங்க, தமிழ்நாடு அரசு 2,245 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள 3 லட்சத்து 12 ஆயிரத்து 971 குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு, அந்தந்த கிராம நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. […]
பொங்கலுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு பேருந்து குறித்து அமைச்சர் MR விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னை பல்லவன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில் , பொங்கலுக்கு வழக்கம் போல் சென்னையில் தற்காலிக பேருந்து நிலையங்கல் அமைக்கப்பட்டு அங்கிருந்து வெளியூறுகளுக்கு பேருந்துகள் செல்லும். சென்னையிலிருந்து 4950 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 29, 213 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. வருகின்ற 12 13 14 ஆகிய நாட்களில் பேருந்து இயக்கப்படும்.பொங்கல் பண்டிகை முடிந்த பின் […]
வரும் பொங்கல் பண்டிகையையொட்டி ‘தர்பார்’, ‘பட்டாஸ்’ ஆகிய இரு படங்கள் வெளியாவதைத் தொடர்ந்து தனுஷ் ரசிகர்களுக்கு ‘பட்டாஸ்’ படக்குழு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் ஒன்றை அளிக்கவுள்ளது. பொங்கலுக்கு ரஜினியின் ‘தர்பார்’, தனுஷின் ‘பட்டாஸ்’ என இரு படங்களும் மோதுகின்றன. இதனால் ஒரே குடும்பத்தில் போட்டி நிழவுவதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. இந்நிலையில் ‘தர்பார்’ திரைப்படம் 9ஆம் தேதியிலும், ‘பட்டாஸ்’ திரைப்படம் 16ஆம் தேதியிலும் வெளியாகும் தகவலையடுத்து தனுஷ் ரசிகர்களுக்கு ‘பட்டாஸ்’ படக்குழு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் ஒன்றை அளிக்க […]
பொங்கல் பரிசு தொகுப்பு வரும் 9ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வரும் 9ஆம் தேதிமுதல் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சண்முகம் சுந்தரம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும்வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளத்துக்கு […]
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் சர்க்கரைப் பொங்கலுக்குத் தேவையான வெல்லம், நாட்டுச் சர்க்கரை தயாரிக்கும் பணி ஈரோடு மாவட்டம் முழுவதும் வேகமாக நடைபெற்று வருகிறது. கடந்த பல ஆண்டுகளாகவே ஈரோடு மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெல்ல தயாரிப்பு குடும்பத் தொழிலாகவும், குடிசைத் தொழிலாகவும் இருக்கிறது. பல்லாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுவந்த இந்தத் தொழில் கடந்த சில ஆண்டுகளாக வெகுவாகக் குறைந்து சில நூறு பேர் ஈடுபட்டுவரும் தொழிலாக மாறி வருகிறது. குறிப்பாக 10 […]