முதுமலை முகாமில் பராமரிக்கப்படும் யானைகளுக்கு மாலை அணிவித்து, சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் புலிகள், காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. முதுமலை தெப்பக்காடு முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதுமலை தெப்பக்காடு முகாமில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டுள்ளது. இதனால் பாகன்கள் யானைகளை குளிப்பாட்டி, சந்தனம், குங்குமம் இட்டு அலங்கரித்துள்ளனர். அதன்பிறகு முகாமில் யானைகள் சமூக இடைவெளி விட்டு நிறுத்தப்பட்டன. […]
Tag: Pongal festival
தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று உற்சாகமுடன் கொண்டாடப்பட்டது தை முதல் நாள் ஆன இன்று பொங்கல் திருநாளாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டது. குடும்பமும் உறவுமாக சேர்ந்து கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகை பொங்கல் பண்டிகை இதனை சூரிய பொங்கல் என்றும் சொல்வார்கள். சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையை புது பானையில் பச்சை அரிசியும், வெல்லமும் ஈட்டு மஞ்சள் குலை கட்டி சூரியபகவானுக்கு அதை படைத்து பொங்கல் […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச துணிக்குப் பதிலாக குடும்ப அட்டைக்கு ரூபாய் 900 வங்கியில் செலுத்தப்படும் என புதுச்சேரி சமூகநலத் துறை அறிவித்துள்ளது. புதுச்சேரி சமூகநலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘புதுச்சேரி மாநில ஆளுநர், முதலமைச்சர் ஒப்புதலோடு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் இலவச துணிக்குப் பதிலாக, ரொக்கப்பணம் அளிக்கப்படுகிறது. சிவப்பு நிற குடும்ப அட்டைகளுக்கு 900 ரூபாயும் மற்ற குடும்ப அட்டைகளுக்கு 450 ரூபாயும் அவரவர் […]
புனித அந்தோணியார் கோயில் பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டியில் 450க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளது. அரியலூர் மாவட்டம் கோக்குடி கிராமத்தில் புனித அந்தோணியார் கோயில் பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம் . இந்நிலையில் இந்தாண்டு அக்கிராமத்தில் உள்ள பள்ளி மைதானத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இப்போட்டியில் 450 காளைகள், 250க்கும் மேற்பட்ட காளையர்கள் களத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]
பொங்கல் பண்டிகையை யொட்டி பூக்கள், பழங்கள், வாழைத்தார் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடை பெற்று வரும் நிலையில் அவற்றின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விபரங்கள் வருமாறு: குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பூ சந்தை யில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள் ளது. பூக்களின் தேவை அதிகரித்துள்ள நிலை யில், பனிப்பொழிவு, வெயில் காரணமாக வரத்து குறைந்துள்ளதால் அவற்றின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ 400 […]