தொடர்ந்து பெய்த கனமழையால் கழிவு நீருடன் சேர்ந்து மழைநீரும் வீட்டிற்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில் கோணாமேடு உள்பட மூன்று பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து தெருக்களில் ஆறாக ஓடி உள்ளது. இதனால் அப்பகுதிகளில் இருக்கும் கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டதால் மழைநீருடன் கலந்து வீட்டிற்குள் புகுந்ததால் பொது மக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் கழுவி நீர் கால்வாய் அடைப்புகளை […]
Tag: pothumakkal poratam
தனி வார்டை பொது வார்டாக மாற்ற கோரி அலுவலகம் முன்பாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பெரங்கியம் பகுதியில் 9-வார்டு பொதுவாக அமைந்திருக்கிறது. இந்நிலையில் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் போது இப்பகுதி தனி வார்டாக மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. இதனை கண்டித்து உள்ளாட்சித் தேர்தலை வாக்காளர்கள் புறக்கணித்துள்ளனர். அதன்பின் போட்டியிட யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய வராத காரணத்தினால் ஒன்பதாவது வார்டு பொது வார்டாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவற்றில் போட்டியிட தற்போது மூன்று […]
நகை மீட்க சென்ற பொதுமக்கள் கூட்டுறவு சங்கம் அலுவலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களுடைய தங்க நகைகளை அடகு வைத்து இருந்திருக்கின்றனர். இதில் பொதுமக்கள் சிலர் அடகு வைத்திருந்த நகைகளை வடிகட்டி மீட்பதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சென்றுள்ளனர். அப்போது அவர்களிடம் அடகு வைத்து இருந்த நகைகள் அனைத்தும் ஏலம் விடப்பட்டதாக பணியில் இருந்த செயலாளர் திருநாராயணன் தெரிவித்துள்ளார். […]
இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவகளிடமிருந்து மீட்டு தருமாறு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் கொத்தூர் ஊராட்சி அமைந்திருக்கிறது. இந்த ஊராட்சியில் 100-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தை சுடுகாடாக பயன்படுத்தி வந்த காரணத்தினால் தற்போது அதே பகுதியில் வசிக்கும் வேறு சிலர் அதை ஆக்கிரமிப்பு செய்து பட்டா பெற்று விவசாயம் செய்து வருவதாக தெரியவந்துள்ளது. இதனால் இறந்து போகும் நபர்களை அங்கே அடக்கம் […]
பொதுமக்கள் அனைவரும் குப்பை கிடங்கை அமைக்க கூடாது என சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள நகராட்சியை மாநகராட்சியுடன் தரம் உயர்த்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் விவசாய நெல் பண்ணை நிலத்தில் குப்பை கிடங்கு அமைப்பதற்காக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வந்துள்ளனர். இது பற்றி தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் கிடங்கை அமைப்பதற்கு தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். அதன்பின் அவர்கள் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டால் மண்ணின் தன்மை மாறும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையான […]
குடிநீரை விநியோகம் செய்ய வேண்டி பொதுமக்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியகம்மியம்பட்டு அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் செய்யாததால் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இது வரை எடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் 5௦-க்கும் அதிகமானோர் காலி குடங்களுடன் புத்து கோவில் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் […]
கிராம மக்கள் திடீர் என நடத்திய தர்ணா போராட்டத்தினால் கலெக்டர் அலுவலகம் முன்பாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் கலெக்டர் அலுவலகம் முன்பாக பொதுமக்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் கிராமத்தில் வாக்காளர் பட்டியலில் பல விதமான குளறுபடிகள் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அதன்பின் வாக்காளர் பட்டியலில் இறந்துபோனவர்களின் பெயர்கள் நீக்கப்படாமலும், ஒரு வார்டில் வசிப்பவர்கள் பெயரை சம்பந்தமே இல்லாமல் இன்னொரு வார்டில் சேர்க்கப்பட்டிருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அதனால் அதிகாரிகள் விசாரணை […]
நிலம் வாங்கிய உரிமையாளர்கள் இழப்பீடு கேட்டு மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா டோல்கேட் விரிவாக்கப் பணிக்காக 236 நபர்களிடமிருந்து தேசிய நெடுஞ்சாலையில் இரு பக்கங்களில் இருக்கும் 22 ஏக்கர் வீட்டுமனை நிலங்களை கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு ஒரு சதுர அடி நிலத்திற்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என கூறி 236 நபர்களுக்கு மொத்தமாக 449 கோடி ரூபாய் வழங்க வேண்டும். ஆனால் 5 ஆண்டுகள் ஆகியும் இழப்பீடு தொகையை வழங்காமல் காலம் […]
கூட்டுறவு சங்கத்தின் முன்பாக பொதுமக்கள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கடம்பூர் கிராமத்தில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைந்திருக்கிறது. இதில் கடம்பூர், மே.புதூர் உள்ளிட்ட பல கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கணக்கு வைத்து பணம் பரிவர்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கணக்கு வைத்திருக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அடகு வைத்த நகைகளை திருப்பும் போது ஊழியர்கள் நகைகளை முறையாக வழங்குவது இல்லை என கூறப்படுகின்றது. இதனால் கோபம் அடைந்த […]
பாதாள சாக்கடைகள் பளுதுயடைந்ததால் அதை சரிசெய்து தருமாறு பொது மக்கள் தீப்பந்தம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தின் பேரூராட்சிகளில் 45 வார்டுகளில் இருக்கும் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் செல்லும் வகையில் அனைத்து வார்டுகளுக்கும் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதாள சாக்கடையில் அடைப்புகள் ஏதேனும் ஏற்படாமல் இருக்க மூடிகள் கொண்டு மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த மூடிகள் பல இடங்களில் உடைந்த மற்றும் சேதமடைந்து கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகன […]
தேங்கி நிற்கின்ற மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கச்சேரி ரோட்டில் இருக்கும் காமராஜபுரம் பகுதியில் மழைநீர் வடியாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் தேங்கும் மழைநீர் கழிவுநீருடன் சேர்ந்து அருகிலிருக்கும் குடியிருப்புகளில் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை அடுத்து உதயேந்திரம் செல்லும் சாலையில் இருக்கும் எம்.ஜி.ஆர் சிலை முன்பாக […]
சாக்லேட் தொழிற்சாலையில் இருந்து ஆற்றில் விடப்படும் கழிவு நீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெங்களாபுரம் அனேரி கிராமத்திற்கு செல்லும் வழியில் தனியார் சாக்லேட் தொழிற்சாலை அமைந்திருக்கிறது. இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை அங்குள்ள பாம்பாற்றில் விடுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் பாம்பாற்றில் இருக்கும் தண்ணீர் மாசு படிந்தும் மற்றும் நச்சுத் தன்மையாக மாறியுள்ளது. அதில் இருக்கும் மீன்கள், உயிரினங்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகிறது. இதனையடுத்து பாம்பாற்றில் கலக்கப்படும் கழிவு […]