தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தை மாதம் பிரதோஷத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்துள்ளனர். இன்னிலையில் காலை 6:50 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்ட உடன் பக்தர்களின் உடல் வெப்பநிலையானது பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின் கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டவுடன் […]
Tag: Precaution
கேரளாவில் இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடு சரியில்லை என்று பிரபல வில்லன் நடிகர் ஹரீஷ் பெராடி குற்றஞ்சாட்டியுள்ளார். உலகையே உலுக்கிவரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், பிரபல வில்லன் நடிகர் ஹரீஷ் பெராடி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து […]
விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் நோய் தாக்கிய பயணிக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது என்பது குறித்த ஒத்திகை நடத்தப்பட்டது. நூற்றுக்கும் அதிகமானோரை சீனாவில் காவுவாங்கி உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. சென்னை விமான நிலைய பன்னாட்டு முனையத்தின் வருகைப் பகுதியில், சீனாவிலிருந்து வரும் பயணிகளை நவீன கருவி மூலமாக ஸ்கேன் செய்து, கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டால் அப்பயணிக்கு உடனடியாக எவ்வாறு சிகிச்சை அளிப்பது குறித்த ஒத்திகை […]
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகின்றது. வடகிழக்கு பருவமழை கடந்த 17ஆம் தேதி முதல் தொடங்கியதால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த ஒரு சில தினங்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது குறித்தும் , இனி செய்ய வேண்டிய பணிகள் குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகின்றது. தலைமை செயலகத்தில் […]
வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் கண்காணிக்க மாவட்டம்தோறும் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்துக்கு அதிக மழை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை பணியை மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடத்தியதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அதிகாரிகளாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய காரணத்தினால் அனைத்து […]
சென்னை துரைப்பாக்கத்தில் வாகன ஓட்டிகளுக்கும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் போக்குவரத்து காவல் துறையினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். டெங்கு காய்ச்சலை தடுக்கும் பொருட்டு கிடைக்கும் நேரத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் வரை காவல் துறையினரை சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான குழு, சாலையில் சிக்னலில் போது நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கி வந்துள்ளார். காவல்துறையினரின் […]
ஜப்பானியில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள 6 லட்சம் மக்களை காலி செய்து மாற்று இடத்துக்கு செல்லுங்கள் என்று அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பான் நாட்டில் உள்ள தென்மேற்கு பகுதியில் அமைந்து இருக்கும் தீவு மாகாணத்தின் குயூஷுவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் அங்குள்ள தாழ்வான மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. சகா, நாகசாகி உள்பட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் நீர் சூழ்ந்துள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளநீர் தேங்கி கிடைப்பதால் முற்றிலும் மக்களின் […]