Chad ஜனாதிபதி இறந்த சம்பவத்தை ராணுவ செய்தி தொடர்பாளர் அரசு தொலைக்காட்சியில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வடக்கு கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் களத்தில் மோதலில் ஈடுபட்டு வந்த ராணுவ படைகளை பார்வை இடும்போது துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஜனாதிபதி Idriss Deby மரணமடைந்துள்ளார். இந்த செய்தியை ராணுவ செய்தி தொடர்பாளர் Azem Bermandoa Agouna அரசு தொலைக்காட்சி வாயிலாக உறுதி செய்துள்ளார். மேலும் மறைந்த ஜனாதிபதியின் மகன் Mahamat Kaka இடைக்கால அரசு தலைவராக நியமிக்கப்படுவார் என்றும் தகவல் […]
Tag: President
ஆந்திராவில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குடியரசுதலைவர் ராம்நாத் கோவிந்த் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியையடுத்த வெங்கடாபுரம் கிராமத்தில் உள்ள LG polymer தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவின் காரணமாக இதுவரை 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் பாதிக்கப்பட்டு, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளனர். இதுவரை 2,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், ஆங்காங்கே பொதுமக்கள் சாலையில் கொத்துக்கொத்தாக மயங்கி விழுவது அப்பகுதி மக்களிடையே பெரும் பெரும் பதற்றத்தை […]
உண்மையாகவே இத்தாலி பிரதமர் அழுதாரா ? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். கொரோனா குறித்து வாட்ஸ்அப்பில் தற்போது பல வதந்திகள் தாறுமாறாக பரவி வருகின்றன. அதில், மிகவும் முக்கியமாக அதிக நபரால் பகிரப்பட்ட ஒரு வதந்தி என்னவென்றால் குவியல் குவியலாக மக்கள் மரணத்தைப் பார்த்து இத்தாலிய பிரதமர் அழுகும் செய்தி புகைப்படத்துடன் வைரலாகி வந்தது. அது முற்றிலும் வதந்தி. அந்தப் புகைப்படத்தில் இருந்தது இத்தாலி அதிபர் அல்ல. அது பிரேசிலின் அதிபர். 2019ஆம் ஆண்டு […]
சர்வதேச பொருளாதார சக்திகளாக திகழும் நாடுகள், ஆதிக்கம் செலுத்தும் நடவடிக்கைகளை கைவிட்டால் மட்டுமே அனைத்து நாடுகளுக்கும் சமமான வளர்ச்சி என்பது சாத்தியமாகும். கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “சீனா இப்போது ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு தயாராக வேண்டும். நான் போட்டியிட்டு இரண்டாவது முறையாக வெற்றி பெறும்வரை காத்திருந்தால் அது இன்னும் கடினமாக இருக்கும்” என்று சீனாவை எச்சரித்தார். அப்போதுதான் முக்கியமான வர்த்தகங்களில் அமெரிக்காவிற்கு வழங்க எந்த சலுகையும் இல்லை என்று சீனா […]
குளியலறையில் வழுக்கி விழுந்து காயமடைந்த பிரேசில் அதிபா் ஜெயிர் பொல்சொனாரோவுக்கு தற்காலிகமாக நினைவுத் திறன் இழப்பு ஏற்பட்டுள்ளது. பிரேசில் அதிபா் ஜெயிர் பொல்சொனாரோ, தனது இல்லத்திலுள்ள குளியலறையில் டிசம்பர் 24ஆம் தேதி வழுக்கி விழுந்தார். அதையடுத்து, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். அதனைத் தொடா்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம் இப்போது நலமாக இருப்பதாக நாட்டு மக்களிடம் தெரிவித்துள்ளார். எனினும், குளியலறையில் வழுக்கி விழுந்ததைத் தொடர்ந்து, தனது பழைய நினைவுகள் மறந்து […]
இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்புத் தலைவராக சங்கீதா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் இணை நிர்வாக இயக்குநராக சங்கீதா ரெட்டி இருந்துவருகிறார். இந்த நிலையில், இவர் தற்போது 2019-20 இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். சங்கீதா ரெட்டியை எதிர்த்து போட்டியிட்ட எச்.எஸ்.ஐ.எல். (HSIL) நிறுவனத்தின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சந்தீப் சோமானி தோல்வியுற்றார். வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் தலைவரும் ஸ்டார் & டிஸ்னி இந்திய […]
வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வேவு பார்க்கப்பட்டு வந்ததாக வந்த தகவலை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர். சமீபத்தில் அரசியல் தலைவர்கள் பத்திரிகையாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரின் வாட்ஸ்அப் தளங்கள் இஸ்ரேலி நாட்டின் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். 2018 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2019மே வரை இஸ்ரேலிய நிறுவனம் இந்தியா உள்ளிட்ட பல நாட்டு மக்களை உளவு பார்த்ததாக தெரிவித்துள்ளது. இதையடுத்து […]
மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்கப்படும் என பாஜக மூத்தத் தலைவர் தெரிவித்ததற்கு, அவர் என்ன உங்கள் பாக்கெட்டில் உள்ளாரா என சிவ சேனா கேள்வி எழுப்பியுள்ளது. மகாராஷ்டிராவில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலின் முடிவுகள் 24ஆம் தேதி வெளியாகின. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 161 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 105 இடங்களில் வென்ற போதிலும், தனித்து ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையான 145 இடங்கள் அக்கட்சிக்குக் கிடைக்கவில்லை. இதனைத் தனக்குச் சாதகமாகப் […]
மிசோரின் ஆளுநராக கேரள மாநிலத்தின் பாஜக தலைவர் பி.எஸ்.பி.ஸ்ரீதரன் பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்று வெளியானது. அதில் கேரள மாநிலத்தின் பாஜக தலைவரான பிஎஸ் ஸ்ரீதரன் பிள்ளை மிசோரின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தது. மேலும் லடாக்கின் துணை ஆளுநராக ராதாகிருஷ்ணன் மாத்தூர் என்பவரும், ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக கிரிஷ் சந்திர என்பவரும், கோவாவின் ஆளுநராக ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யகோபால் என்பவரும் நியமிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஏற்கனவே தமிழக பாஜக […]
இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரி கொலை செய்யப்பட்டதை அடுத்து அவரது மனைவி கிரண் திவாரி அக்கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் செயல்பட்டுவரும் இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரி, அக்டோபர் 18-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கமலேஷ் வீட்டின் வெளியே உள்ள கண்காணிப்பு படக்கருவியின் பதிவை ஆய்வு செய்ததில், சந்தேகத்திற்குரிய மூன்று நபர்கள், கையில் இனிப்புப்பைகளுடன் வீட்டிற்குள் சென்றது தெரியவந்தது. அதையடுத்து […]
பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டில் நடைபெற்ற எக்விட்டர் நாட்டில் நாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. தென்னமெரிக்க நாடான எக்டர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தலைநகர் ஈக்வடாரில் அதிபர் லெனின் மோரைரோ அரசுக்கு எதிராக சிக்கன நடவடிக்கையை கண்டித்து ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர். அப்போது தடுப்புகளை அகற்றுவதோடு போலீசார் மீது கற்களை வீசி எறிந்து வன்முறையில் ஈடுபட்டனர்.இதேபோல் மசாஜீ […]
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 1945-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி பிறந்தவர். தற்போது நாட்டின் 14-வது ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் இவர் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி முதல் இப்பதவியில் உள்ளார். இதற்கு முன்னதாக, 2015 ஆம் ஆண்டு முதல் 2017 வரை பீகார் மாநிலத்தின் கவர்னராக பதவி வகித்துள்ளார். இதேபோல் 1994 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை […]
கர்நாடகா மாநிலத்தின் பா.ஜ.க தலைவராக நளின்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடகா மாநிலத்தின் பா.ஜ.க. தலைவராக பதவி வகித்தவர் எடியூரப்பா. காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த MLA-க்கள் தங்களது பதவியை இராஜினாமா செய்ததால் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. இதைதொடர்ந்து, பா.ஜ.க. மாநில தலைவரான எடியூரப்பா தனது ஆதரவு MLA-க்களுடன் சென்று ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆளுநரது அழைப்பை ஏற்று எடியூரப்பா முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தின் பா.ஜ.க. […]
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, அப்துல்கலாம் அவர்களின் நினைவுதினம் இன்று ஆகும் . இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான திரு. அப்துல்கலாம் அவர்கள் அக்டோபர் 15, 1931 ம் ஆண்டு ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த கலாம், […]
இலங்கையின் அடுத்த அதிபருக்கான தேர்தல் தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மைத்ரிபாலா சிறிசேனா, ராஜபக்சேவைத் தோல்வியடைச் செய்து இலங்கையின் அதிபரானார். இந்நிலையில் மைத்ரிபாலா சிறிசேனா பதவிக்காலமானது நிறைவடைய இருப்பதால் இலங்கையின் தலைமைத் தேர்தல் ஆணையரான மகிந்தா தேசபிரியா புதிய அதிபருக்கான தேர்தல் தேதியை அறிவித்துள்ளார். இவர் தேர்தல் நடத்தும் தேதியை பற்றி அதிபர்,சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களோடு கலந்து பேசியப் பின்னரே நவம்பர் 15 முதல் டிசம்பர் 7 வரை அதிபர் தேர்தலானது நடைபெறும் என்று அறிவித்துள்ளார். அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதி மாற்றுவதற்கு அதிபருக்கு கையில் தான் அதிகாரம் இருக்கின்றது குறிப்பிடத்தக்கது. .
காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்.?
காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை முடிவு செய்வதற்கான காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் அடுத்த வாரம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகி 10 நாட்கள் ஆன பிறகும் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கபடவில்லை.முகுல் வாஸ்னிக்,மல்லிகார்ஜுன கார்கே முதல் சச்சின் பைலட் உள்ளிட்ட இளம் தலைவர்கள் வரை அடுத்த காங்கிரஸ் தலைவருக்கான போட்டியில் இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசப்பட்டாலும் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. குலாம்நபி ஆசாத் ,அகமது பட்டேல் ,முகுல் வாஸ்னிக்,ஆனந்த் சர்மா உள்ளிட்ட மூத்த […]
நாட்டிலுள்ள 226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னையை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற மாநிலங்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்து பேசினார். அப்போது பேசிய அவர், தாங்கள் வெற்றி பெறாவிட்டால் , இந்தியா தோல்வி அடைகிறது என காங்கிரஸ் நினைக்கிறது. காங்கிரஸ் கட்சியும் இந்தியாவும் ஒன்றா ?. பாஜக வெற்றியடைந்ததால் ஜனநாயகம் தோற்றுவிட்டதாக காங்கிரஸ் கட்சி கூறுகிறது அப்படியெனில் வயநாடு, ரேபரேலியில் ஜனநாயகம் […]
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி, 130 கோடி மக்களுக்காக சேவை செய்வதை மிகசிறந்த வாய்ப்பாக கருதுகிறேன் என்று பேசியுள்ளார் 17-வது மக்களவையில் கடந்த 20-ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்தினார். இந்த உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அனைத்து கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டு விவாதித்தனர். இதையடுத்து மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பேசினார். அப்போது பேசிய அவர், மக்களுக்கு எந்தெந்த திட்டங்கள் […]
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்கு ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.இதில் பாரதிய ஜனதா மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. கடந்தமுறை போலவே கூட்டணி கட்சிகளை சேர்த்துக்கொண்டு கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இதையடுத்து டெல்லியில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நடைபெற்ற பா.ஜ.க எம்.பிக்கள் கூட்டத்தில் நரேந்திரமோடியே மீண்டும் பிரதமராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். […]
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை வரும் 30 -ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு பதவியேற்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 7 கட்டங்களாக நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.இதில் பாரதிய ஜனதா மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து டெல்லியில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற பா.ஜ.க எம்.பிக்கள் கூட்டத்தில் நரேந்திரமோடியே மீண்டும் பிரதமராக […]
தேர்தலில் வெற்றி பெற்றும் மீண்டும் இந்தோனேசிய அதிபராக தேர்வாகியுள்ள ஜோகோ விடோடோ_வுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தோனேசியாவில் அதிபர் பதவிக்கான காலம் முடிவடைந்ததையடுத்து கடந்த மாதம் 17_ஆம் தேதி அதிபர் தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெறுமென்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் அதிபர் ஜோகோ விடோடா_ வை எதிர்த்து ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஜெனரல் பிரபாவோ சுபியாந்தா வேட்பாளராக போட்டியிட்டார்.கடந்த 17_ஆம் தேதி வாக்குப்பதிவு முடிவடைந்தது. இதையடுத்து வார கணக்கில் நீடித்து வந்த வாக்கு எண்ணும் பணி முடிவடைந்து […]
மு.க. ஸ்டாலின் , இன்னும் 25 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஜனாதிபதியாக வருவார் என துரைமுருகன் புகழாரம் சூட்டியுள்ளார் . தூத்துக்குடி ஸ்பிக் நகரில் , திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய துரைமுருகன் , ”ஸ்டாலினுக்கு இணையான அரசியல் தலைவர் தமிழகத்தில் யாரும் இல்லை” என புகழ்ந்தார் . அதோடு, மு.க. ஸ்டாலின் இன்னும் 25 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஜனாதிபதியாகக் கூட வரலாம். அதற்க்கான வாய்ப்பு அதிகமுள்ளது எனவும் கூறினார்.
இலங்கை அதிபர் சிறிசேனா தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகின்றது. இலங்கையில் கொழும்பு நகரில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் கடந்த 21-ந் தேதி அடுத்தடுத்து என 8 குண்டுகள் வெடித்தது. இந்த கொடூர தாக்குதலுக்கு 359 பேர் பரிதாபமாக பலி ஆகினர். மேலும் 500_க்கும் அதிகமானோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலை நிகழ்த்தியது நாங்கள் தான் என்று ISIS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுகொண்டது. இந்த கொடூர தாக்குதலை பல்வேறு நாட்டின் தலைவர்கள் […]