மக்கள் வரி பணத்தை லஞ்சமாக கொடுத்து தனக்கு வாக்களிக்கும்படி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசு அறிவித்திருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு.முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்டாப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணம் அறிவிக்காமல் அரசியல் ஆதாயத்திற்காக பொங்கல் பரிசு அறிவித்திருப்பதாக கடுமையாக விமர்சித்தார். பொங்கல் பரிசாக 2500 என்று அறிவித்திருப்பது யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்கிற பழமொழிக்கு ஏற்ப தேர்தலை ஒட்டி வழங்கப்பட்டிருக்கிற […]
Tag: #pressmeet
மக்கள் மீது இருக்கும் கடனுக்காக எந்த அரசும் மக்களை கடனை திருப்பி செலுத்துங்கள் என்று சொல்வது கிடையாது. அரசுதான் கடனை அடைத்து வருகிறது என கமல்ஹாசன் பேச்சுக்கு திருமங்கலத்தில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பதிலளித்தார். மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியை தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ப.சிதம்பரம் இந்திய பொருளாதாரம் […]
தடியடி நடத்திய காவல் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார். மனிதநேய ஜனநாயக கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி திருச்சி சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், “மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்திவருகின்றனர். மக்களின் இந்த உணர்வுகளை தமிழ்நாடு அரசும், காவல் துறையும் புரிந்து கொள்ளவில்லை. சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற […]
பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமான நிலையத்திற்கு வந்தபோது செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அரசியல் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு காரசாரமான பதில்களைக் கூறினார். பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது அரசியல் தொடர்பான கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. அப்போது ரஜினி பாஜகவில் இணைவது தொடர்பான கேள்விக்கு, ரஜினிகாந்த் பாஜகவில் இணைவதற்கு அவர் தான் தயாராக இருக்க வேண்டும் என்றார். மேலும் ரஜினி […]
இயக்குநர் ரத்தின சிவாவின் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘ சீறு’. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ‘சீறு’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் படத்தின் இயக்குநர் ரத்தின சிவா படம் குறித்த தன் அனுபவங்களை செய்தியாளர்களுடன் பகிர்ந்தார். அப்போது பேசிய அவர், படத்தின் கதையை முதலில் ஐசரி கணேஷை சந்தித்துக் கூறியதாகத் தெரிவித்தார். படத்தின் கதையை ஐசரி கணேஷ் முழுவதும் கேட்கவில்லை எனத் தெரிவித்த இயக்குநர், படத்தில் இடம்பெற்ற பவித்ரா என்ற கதாபாத்திரத்தின் செய்தியாளர் […]
புத்தகப் பிரியர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 9-ஆம் தேதி தொடங்க உள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 9-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை 13 நாட்கள் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த புத்தக கண்காட்சியில் பல லட்சம் தலைப்புகளில் ஒரு கோடி புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இதற்காக வாசகர்களுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பபாசி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். […]
கீழடி அகழாய்வு ஆய்வு அறிக்கைகளை வெளியிடாமல் தடுக்க திரைமறைவில் சதி நடப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களின் மூலம் தமிழர் நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டிருக்கிறார். மூன்று கட்ட ஆய்வுகள் முடிந்து 2 ஆண்டுகளாகியும் உயர் நீதிமன்றம் இரண்டு முறை விதித்த கெடு முடிந்துவிட்ட நிலையிலும் இன்றுவரை அகழாய்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை என்று அவர் […]
ஸ்ரேயஸ் அய்யர் சிறப்பாக செயல்பட்டு தனது நெருக்கடியை குறைத்ததாக இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி பாராட்டியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு விராட் கோஹ்லி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் எங்களது ஆட்டம் நல்ல முறையில் முடிந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான் ரோகித் சர்மா ஆகியோர் அதிக ரன்கள் எடுக்க தவறினர். எனவே அனுபவம் வாய்ந்த வீரரான நான் எனது பொறுப்பை ஏற்று அதிக ரன்கள் […]
கட்சி குறித்து பொதுவெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டாக சேர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர் . நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் அதிமுகவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின இதனைத் தொடர்ந்து அதிமுகவில் அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டு அதிமுக பின்னடைவை சந்தித்து வந்தது. இதற்கு காரணம் இரட்டை தலைமைதான் என்றும் அதனால் ஆலோசனை உடனடியாக எடுப்பதற்கு தாமதம் ஏற்படுவதாகவும் அதனால் அதிமுக பின்னடைவை சந்தித்து வருவதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்து வந்தன. இதனை தொடர்ந்து அதிமுகவிற்கு […]