ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன் மூலம் மாபெரும் வரலாற்றுப்பிழையை பிரதமர் மோடி நிகழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார். பாகிஸ்தானில் உள்ள முசாபராபாத் மாகாணத்தில் உள்ள சட்டப்பேரவையில் அந்நாட்டின் முதலமைச்சர் இம்ரான் கான் இன்று உரையாற்றினார். அந்த உரையின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் இம்ரான். குறிப்பாக காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் குறித்து பேசிய அவர், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன் […]
Tag: Prime Minister Imran Khan
பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானை, பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தானில் பெஷாவர் பகுதியில் வசித்து வருபவர் ராதேஷ் சிங் தோனி. கல்சா என்ற அமைதி நீதி அமைப்பின் தலைவராக இவர் இருந்துவருகிறார். இவரின் உயிருக்கு பாகிஸ்தானில் உள்ள சில அடிப்படைவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இவர் கடந்தாண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தானின் லாகூரை விட்டு தனது குடும்பத்துடன் வெளியேறியுள்ளார். இதுகுறித்து அச்சம் தெரிவித்து பஞ்சாப் […]
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை டாவோஸ் பொருளாதார மாநாட்டில் சந்திக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை டாவோஸ் பொருளாதார மாநாட்டில் சந்திக்கிறார். பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பொறுப்பேற்ற பின்னர், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை அவர் மூன்றாவது முறையாக சந்திக்கவுள்ளார். இதற்கு முன்னதாக கடந்தாண்டு ஜூலை மாதம் வாஷிங்டனில் அதிபர் ட்ரம்பை இம்ரான் கான் சந்தித்தார். அதன் பின்னர் செப்டம்பர் […]
பாகிஸ்தானில் 40 ஆயிரம் தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வருகின்றார்கள் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்து வருவதாக எழுந்த விவகாரத்தில், அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அளித்து வந்த ராணுவ நிதியுதவியை நிறுத்தி வைத்துள்ளது. இதையடுத்து இரண்டு நாட்டு உறவை மேம்படுத்தும் நோக்கில் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். பின்னர் அங்கு நடந்த நிகழ்ச்சியில் பேசிய இம்ரான்கான் கூறுகையில் , பாகிஸ்தானில் தெஹ்ரீக் இ இன்சாப் அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு […]