Categories
சென்னை மாநில செய்திகள்

மாணவர்களே…! பணம் கேட்டால்…. புகார் கொடுங்க….. இமெயில் முகவரி வழங்கிய மாவட்ட ஆட்சியர்….!!

கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகளில் முழு கட்டணத்தை செலுத்த கட்டாயப்படுத்தினால் புகார் அளிக்க ஈமெயில் முகவரி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால், தமிழகத்தில் பல குடும்பங்களின் பொருளாதாரம் சரிந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் மாணவர்களிடம் முழு  கல்வி கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

அரசுப் பள்ளிகளிலும் சிலம்பக் கலை வளர வேண்டும்!

தனியார் பள்ளிகளில் சிலம்பம் விளையாட்டை ஆரம்பித்துவிட்டதைப் போல, கூடிய விரைவில் அரசுப் பள்ளியிலும் தொடங்கிவிடுவார்கள் என சிலம்பம் சம்மேளனத்தின் தலைவர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். அம்பத்தூர் அருகே கிருஷ்ணசாமி பள்ளி வளாகத்தில் அய்யப்பாக்கம் பார்க் வர்க்கர்ஸ் அசோசியேஷன், மருதுபாண்டியர் சிலம்ப பாசறை சார்பில் தமிழர் திருநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய சிலம்ப சம்மேளத்தின் தலைவரும் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் ஆணையருமான ராஜேந்திரன் கலந்துகொண்டார். அவருக்கு மாணவர்கள் சாலையில் சிலம்பம் சுற்றியவாறு மலர்த்தூவி உற்சாக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

4 வயது சிறுமி மரணம்….. தனியார் பள்ளிக்கு ரூ 1,00,000 அபராதம்…… சுகாதார இயக்குனர் அதிரடி….!!

வேலூரில் டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவையடுத்த வெட்டுவானம் அம்பேத்கர் நகரை சேர்ந்த சரண்ராஜ், மோனிகாராணி தம்பதியினருக்கு நட்சத்திரா(4) என்ற பெண் குழந்தை இருந்தது. நட்சத்திரா அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி நட்சத்திராவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அவரது பெற்றோர்கள் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.ஆனாலும், காய்ச்சல் அதிகரித்ததால் உடனடியாக அடுக்கம்பாறையில் உள்ள அரசு […]

Categories
காஞ்சிபுரம் சென்னை மாநில செய்திகள்

சீன அதிபர் வருகை : தனியார் பள்ளிகளே முடிவு செய்யலாம்… பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்..!!

சீன அதிபர் வருகையால்  தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பள்ளிகளே முடிவு செய்துகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது . பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய இரு நாட்டு தலைவர்கள் நாளை (12 ஆம்தேதி)  மற்றும் 13  ஆகிய இரு தேதிகளில் காஞ்சிபுரம்  மாவட்டம் மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர்.சீன அதிபர் தமிழகம் வருகையையொட்டி பல்வேறு  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 10,000-த்திற்கு அதிகமான […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் பரபரப்பு… வகுப்பறையில் +1 மாணவி தூக்கு போட்டு தற்கொலை.!!

மதுரையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மதுரை மாவட்டம் கே.புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் மாணவி ஒருவர் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதன்படி இந்த மாணவி இன்று வழக்கம்போல் காலையில் பள்ளிக்கு வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் யாரும் வகுப்பறையில் யாரும் இல்லாத நேரத்தில் தான் வீட்டிலிருந்து கொண்டு வந்த  சேலையால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து […]

Categories
தேசிய செய்திகள்

“5 வயது குழந்தை” பாலியல் பலாத்காரம்…. சிசிடிவியில் சிக்கிய துப்புரவு தொழிலாளி..!!

தெற்கு டெல்லியில் தனியார் பள்ளி துப்புரவு தொழிலாளி  ஒருவர் அதே  பள்ளியில் பயிலும் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தெற்கு டெல்லியில் இயங்கிவரும் ஒரு தனியார் பள்ளியில் துப்புரவு தொழிலாளி ஒருவர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளிக்கு அருகிலுள்ள பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த துப்புரவு தொழிலாளி அங்கு படித்து வரும் சில குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தனியார் பள்ளிகளுடன் போட்டி போடும் அரசுப் பள்ளி ..!!!

தனியார் பள்ளிகளுடன் போட்டி போடும் விதமாக அரசு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டம்  உதகை அருகே ஓடைக்காடு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த இரண்டு வருடங்களாக 18 மாணவர்கள் மட்டுமே பயின்று வந்தனர். இதனை கருத்தில்கொண்டு அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று பெற்றோரிடம் சி.பி.எஸ்.சி தரத்திற்கு இணையான தமிழக அரசின் புதிய பாடத் திட்டத்தை பற்றி எடுத்துரைத்துள்ளனர். மேலும் LKG மற்றும் UKG வகுப்புகள் ஆங்கிலவழிப் பாடத்திட்டத்தின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“30 தனியார் பள்ளி வாகனங்கள் இயங்க தடை “போக்குவரத்து துறை அதிரடி !!..

திருச்செந்தூர் பகுதியில் இயங்கும் தனியார் பள்ளி வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்ததில்   30க்கும் மேற்பட்ட வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு  கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க  சில நாட்களே உள்ள நிலையில் வருடந்தோறும் தனியார் பள்ளி வாகனங்களை அப்பகுதி போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சான்றிதழ் வழங்கி வருவது வழக்கம் இந்நிலையில் திருச்செந்தூர் பகுதி வட்டார போக்குவரத்து துறைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி வாகனங்கள் மீது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“விண்ணப்பம் வழங்குவதில் பாரபட்சம் ,தனியார் பள்ளியை முற்றுகை செய்த பெற்றோர்கள் “விருதுநகரில் பரபரப்பு !!…

விருதுநகரில் தனியார் பள்ளியை பெற்றோர்கள் முற்றுகை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . விருதுநகர் நகராட்சி அலுவலகம் எதிரே அரசு உதவி பெறும் தனியார் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பெற இரவு முழுவதும் நீண்ட வரிசையில்  பெற்றோர்கள் காத்திருந்தனர்.இந்நிலையில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகை செய்தனர். இதனையடுத்து மேலும் ஆத்திரமடைந்த பெற்றோர்களில் சிலர் மூடப்பட்ட பள்ளியின் […]

Categories

Tech |