Categories
தேசிய செய்திகள்

உ.பியில் வன்முறை… தடுப்புக்காவலில் பிரியங்கா காந்தி…. விளக்குமாரால் சுத்தம் செய்யும் வீடியோ இதோ!!

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அறையை காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி சுத்தம் செய்வது போன்ற காட்சி வெளியாகியுள்ளது.. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதிக்கு இறந்துபோன விவசாயிகள் குடும்பங்களை சேர்ந்த நபர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், அங்குள்ள நிலைமையை கண்டறிவதற்காக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்க காந்தி செல்வதற்கு முற்பட்ட போது, உத்தரபிரதேச காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.. தற்போது அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த கூடிய சூழலில், அவர் தங்கியிருக்கக் கூடிய அறையை விளக்குமாரால் சுத்தம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நெஞ்சில் கைவைத்து…. கீழே தள்ளிய போலீசார்…. ராகுல் காந்தி மீது தாக்குதல் …!!

உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இளம் பெண்ணின் உடலை போலீசார் குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல் அவர்களாகவே  அடக்கம் செய்தது மிகவும் விவாதத்துக்குள்ளாக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் இருந்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பாதிக்கப்பட்ட இளம்பெண் குடும்பத்தாரை சந்திக்க சென்றனர். ஆனால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலையில் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் தொண்டர்கள் என […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா முன்னெச்சரிக்கை : கைகளை சுத்தமாக கழுவுவது எப்படி?… வீடியோ வெளியிட்ட பிரியங்கா காந்தி!

காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைகளை சுத்தமாக கழுவுவது தொடர்பாக ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 315 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வரும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனிடையே மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று பிரபலங்கள் பலரும் தங்களது கைகளை எப்படி கழுவ வேண்டும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்: இன்று காங்கிரஸ் பொதுக்கூட்டம்..!!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் இன்று நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்துகொள்கின்றனர். நாட்டின் தலைநகர் டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற 8ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதனை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் இன்று பொதுக்கூட்டப் பேரணி நடைபெறவிருக்கிறது. கொண்லி, ஹாஸ் ஹாஸ் பகுதியில் நடக்கும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்துகொள்கின்றனர். ரஜோரி கார்டனில் நடக்கும் இப்பேரணியில் முன்னாள் பிரதமர் […]

Categories
தேசிய செய்திகள்

சிறையில் இருக்கும் தொண்டர் குடும்பத்தைச் சந்தித்து பிரியங்கா காந்தி ஆறுதல்..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் காங்கிரஸ் தொண்டரும், பெண் சமூக செயற்பாட்டாளருமான சதாப் ஜாபர் குடும்பத்தினரை பிரியங்கா காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடிய காங்கிரஸ் தொண்டரும், பெண் சமூக செயற்பாட்டாளருமான சதாப் ஜாபர் உத்தரப் பிரதேசக் காவலர்களால் கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்ற பிணை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அவரின் வீட்டிற்குச் சென்று, அவரது குழந்தைகள் மற்றும் உறவினர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் […]

Categories
தேசிய செய்திகள்

‘ஹைதராபாத் கொலை சம்பவத்தால் மன அமைதி கெட்டது’ – பிரியங்கா காந்தி.!!

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை அறிந்து மன அமைதி கெட்டதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “நாள்தோறும் பெண்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் சம்பவங்களால் வன்முறையை கைவிடும் எண்ணத்திற்கு நம் மண ஓட்டம் வந்துள்ளது. ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

விலைக்கு வாங்க முடியலைனா சிபிஐ வைத்து மிரட்டுவதா..? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்..!!

விலைக்கு வாங்க முடியாத காங்கிரஸ் தலைவர்களை சிபிஐ மூலம் மத்திய அரசு மிரட்டுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. மத்திய அரசின் தோல்விகளை அம்பலப்படுத்தியதால் தான் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ துடிப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது. குறிப்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பா.சிதம்பரம் மீது சிபிஐ எடுத்துள்ள  நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், மத்திய அரசின் தோல்விகளையும் உண்மைகளையும் அச்சமின்றி வெளிப்படுத்தியதால் தான் பா.சிதம்பரத்தை வேட்டையாட மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

“அடுத்த வாரம் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்” புதிய தலைவர் பிரியங்கா காந்தி.?

காங்கிரஸ் கட்சி தலைவராக யாரை தேர்ந்தெடுக்கலாம் என அடுத்த வாரம் செயற்குழுக் கூட்டம் நடத்தப்பட்டு விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது  மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததையடுத்து கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகினார். இதற்காக அவர் கடந்த மே 25-ஆம் தேதி ராஜினாமா கடிதத்தை அளித்து  விட்ட நிலையில் கட்சிக்கு அடுத்த  தலைவர் யார் என்ற குழப்பம் 2  மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்ற […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கருத்துக்கணிப்பில் பாஜக ஆட்சி…. தொண்டர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம்…. பிரியங்கா காந்தி வேண்டுகோள்..!!

காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கருத்துக்கணிப்பால் தொண்டர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலுக்கான 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தல் நடந்து முடிந்த பின் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் பெரும்பான்மையாக  பிரதமர் மோடியே  மீண்டும் ஆட்சியமைப்பார் என்று அறிவிப்பு வெளியானது. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களை காட்டிலும் அதிகமாக, 300 தொகுதிகள் வரை வெற்றிபெறும் என்றும் சில கணிப்புகள் தெரிவித்தன. இதனால் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம்” ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்றது…!!

நாடாளுமன்ற தேர்தலையடுத்து காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம்  நடைபெற்றது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தேர்தல் அறிவிப்பு வெளியாகியதையடுத்து தேசிய கட்சிகள் அடுத்தடுத்து தேர்தல் பணியை  வேகப்படுத்தினர்.இதையடுத்து அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் , பாரதீய ஜனதா கட்சியும் தேர்தல் வெற்றிக்காக வியூகங்களை வகுக்க ஆரம்பித்தனர். மேலும் மாநில அளவிலான நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டனர். இந்நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின்  செயற்குழுக்கூட்டம் அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி […]

Categories

Tech |