Categories
உலக செய்திகள்

கட்டளைகளை மீறிவிட்டனர்… இரு நாட்டு எல்லையில் பரபரப்பு… அடைக்கலம் தேடிய காவல்துறையினர்…!!

மியான்மரில் இருந்து காவல்துறையினர் இந்தியாவின் எல்லைக்குள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மியான்மரில் ராணுவ புரட்சி ஏற்பட்டது. மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அந்நாட்டு ராணுவத்தால் கவிழ்க்கப்பட்டது.இந்த தாக்குதலை கண்டித்து அந்த நாட்டு மக்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அந்நாட்டு காவல்துறையினர்  3 பேர் இந்திய மாநிலமான மிசோரமில் எல்லையை தாண்டி வந்துள்ளனர். இதனை அறிந்த மாநில காவல்துறையினர் அவர்களை இரு நாட்டு எல்லையில் இருந்து சற்று […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சந்தோசத்தில் கட்டி தழுவிய யானைகள்… நடைபெற்ற சிறப்பு பூஜைகள்… பலமான பாதுகாப்பு ஏற்பாடு…!!

புத்துணர்வு முகாமில் கலந்து கொண்ட யானைகள் துதிக்கையால் கட்டி தழுவி தங்களது சந்தோசத்தை வெளிபடுத்தியுள்ளன. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் பவானி ஆற்றுப் படுகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோவில் மற்றும் திருமடங்களை சேர்ந்த கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாமானது நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து 48 நாட்கள் நடைபெறும் இந்த முகாமை அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, சேவூர் ராமச்சந்திரன் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் போன்றோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்துள்ளனர். இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கட்டுப்பாடுகளுடன் அனுமதி… தை அம்மாவாசைக்கு திறக்கப்படும் கோவில்… தீவிர பணியில் பாதுகாப்பு துறைகள்…!!

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் கட்டுப்பாடுகளுடன் தை அமாவாசையையொட்டி திறக்கப்பட உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி மற்றும் பிரதோஷம் போன்ற தினங்களில் மட்டுமே பக்தர்கள் சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இதனையடுத்து வருகிற 11-ஆம் தேதி தை அமாவாசை நாளாக இருப்பதால் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடக்க உள்ளது. மேலும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இதுக்கு மேலும் பொறுக்க முடியாது… சடலத்துடன் சாலை மறியல்… அதிகாரிகளின் உத்தரவாதம்… நாமக்கல்லில் பரபரப்பு…!!

கிணற்றை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு இறந்த சிறுவனின் உடலுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெட்டு காட்டுப்புதூர் அருந்ததியர் காலனியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு குமரேசன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்களது காலனிக்கு அருகே […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு பாதுகாப்பு குடுங்க…. காவல் நிலையத்தில் காதல் ஜோடி… போலீசாரின் சமாதானம்…!!

பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஒதியத்தூர் பகுதியில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சினேகா என்ற ஒரு மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு நூல் மில்லில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அதே மில்லில் பணிபுரிந்து வரும் காட்டுக்கோட்டை பகுதியில் வசித்து வரும் ஸ்வஸ்திக் ராஜ் என்பவரை காதலித்துள்ளார். ஆனால் இவர்களின் காதலுக்கு இருவரின்  பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

தமிழகத்தில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல்… பாதுகாப்பு பணியில் 1,00,000 போலீசார்..!!

குடியரசு தினவிழாவையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைசாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கடந்த 8-ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட திருவிதாங்கோட்டையை சேர்ந்த அப்துல் சமீம் மற்றும் நாகர்கோவிலை சேர்ந்த தவுபீக் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இதில் அப்துல் சமீம் என்பவர் சென்னை அம்பத்தூரில் இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொலையில் தொடர்புடைய […]

Categories
மாநில செய்திகள்

காணும் பொங்கல்: சென்னை முழுவதும் பாதுகாப்புப்பணியில் 10,000 போலீசார்

காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையின் முக்கிய இடங்களில் 10 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. காணும் பொங்கலை ஒட்டி, சென்னை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மெரினா கடற்கரையில் 5 ஆயிரம் காவல் துறையினரும், இதர மக்கள் கூடும் பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத் தலங்களிலும் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். சுற்றுலாப் பயணிகள் கடலில் குளிக்க தடை விதித்தும், படகு சவாரி […]

Categories
காஞ்சிபுரம் சென்னை மாநில செய்திகள்

சீன அதிபர் வருகை : தனியார் பள்ளிகளே முடிவு செய்யலாம்… பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்..!!

சீன அதிபர் வருகையால்  தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பள்ளிகளே முடிவு செய்துகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது . பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய இரு நாட்டு தலைவர்கள் நாளை (12 ஆம்தேதி)  மற்றும் 13  ஆகிய இரு தேதிகளில் காஞ்சிபுரம்  மாவட்டம் மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர்.சீன அதிபர் தமிழகம் வருகையையொட்டி பல்வேறு  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 10,000-த்திற்கு அதிகமான […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள்

மோடி வருகையால் நடராஜா சர்வீஸ்…. மாமல்லபுர நகரத்தில் வாகனங்களுக்கு தடை…. திடீர் நடவடிக்கையால் மக்கள் அதிருப்தி….!!

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று காலை முதல் நான்கு சக்கர வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜிங்பிங் ஆகியோர் வருகின்ற 12,13 ஆகிய தேதிகளில் காஞ்சிபுர மாவட்டம் மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர். இந்நிலையில் தலைவர்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று முதல் மாமல்லபுரம் நகரத்திற்குள்  நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாமல்லபுர நகரத்திற்குள் இருக்கும் பேருந்து நிலையம் தற்காலிகமாக மாற்றப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் […]

Categories

Tech |