Categories
மாநில செய்திகள்

BREAKING : பேச்சுவார்த்தை உடன்பாடு…. டாக்டர்கள் போராட்டம் வாபஸ்….!!

போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு  மீண்டும் பேச்சுவார்த்தையில் நடத்தியதில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும் , மருத்துவ மேல்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு உட்பட 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி  தமிழகம் முழுவது அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் , கோரிக்கைகளை ஏற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்த நிலையில் போராட்டம் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவர்கள் போராட்டம் : கோரிக்கையை ஆய்வு செய்ய IAS அதிகாரி நியமனம்…!!

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களின் கோரிக்கையை பரிசீலிக்க IAS அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும் , மருத்துவ மேல்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு உட்பட 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி  தமிழகம் முழுவது அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். கோரிக்கைகளை ஏற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து போராட்டத்தில் […]

Categories
இராணுவம் உலக செய்திகள்

சூடான் கலவரத்தில் 2 பேர் பலி …..

சூடானில் மக்களாட்சி வேண்டி போராடிய  போராட்டக்காரர்கள் மீது நடந்த  ராணுவத்துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர். சூடானில் கடந்த 30 ஆண்டுகளுக்கும்  மேலாக  ஓமர் அல் பஷிர் அதிபராக பதவி வகித்துவருகிறார். இதனை கண்டித்து போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதால்  ஓமர் அல் பஷிர் கடந்த ஏப்ரல் மாதம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.இதனால் அந்நாட்டில் இரு ஆண்டுகள் இடைக்கால ராணுவ ஆட்சி  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்த போராட்டக்காரர்கள், ”ராணுவ ஆட்சி நீங்கி மக்கள் ஆட்சிக்கு வழியிட வேண்டும்” என போராட்டம் நடத்தி வருவதால் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரம் அருகே பொதுமக்கள் குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல்…!!!

மதுராந்தகம் அருகில்  குடிநீர் கேட்டு மக்கள் திடீரென காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அரையபாக்கம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடடும்பங்கள் வசித்துவருகின்றனர்  இவர்களுக்கு பாலாற்று ஆழ்துளை கிணறு வழியாக தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன் பைப்லைனில் பழுது ஏற்பட்டதால் அதை சீர்செய்ய வேண்டி ஊராட்சி நிர்வாகத்துக்கு மக்கள் வேண்டுகோள்  விடுத்திருந்தனர். இந்நிலையில்  கடந்த ஒரு வாரம் குடிநீர் விநியோகம் முழுவதுமாக நிறுத்தப்பட்ட காரணத்தால்  கோபமடைந்த மக்கள், மதுராந்தகம்- திருக்கழுக்குன்றம் சாலையில் குடங்களுடன் […]

Categories
தேசிய செய்திகள்

உச்சநீதிமன்ற வளாகத்தை சுற்றி 144 தடை !!!

உச்சநீதிமன்ற வளாகத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது . உச்சநீதிமன்றத்தில்   பணிபுரிந்த முன்னாள் பெண் ஊழியர், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது  கடந்த மாதம் பாலியல் புகார் ஒன்றை அளித்தார். இது  குறித்து விசாரத்த நீதிபதிகள் பாப்தே, இந்திரா பானர்ஜி, இந்து மல்கோத்ரா போன்ற மூவர் அடங்கிய விசாரணை குழு, தலைமை நீதிபதிக்கு எதிரான புகார் அடிப்படை ஆதாரமற்றது என்று கூறி நிராகரித்தது.   இதனால் ,வழக்கறிஞர்கள் மற்றும் பெண் உரிமை ஆர்வலர்களும் இணைந்து போராட்டம் நடத்துவதால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வட்டக்கோட்டை சுற்றுலா கட்டணத்தை எதிர்த்து மக்கள் தர்ணா …

குமரி மாவட்டம், வட்டக்கோட்டையில் சுற்றுலா கட்டணத்தை எதிர்த்து பொதுமக்கள் தர்ணாவில் இறங்கினர்.   குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றான  வட்டக்கோட்டை,மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு  தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் . இதுவரை, வட்டக்கோட்டைக்குள் நுழைய  கட்டணம் ஏதும்  வசூலிக்கப் படவில்லை. ஆனால் தற்போது , மே மாதத்தில் இருந்து  சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு, கட்டணம் வசூலிக்க தொடங்கினார்கள். ஆனால் கட்டணம் வசூலிக்கும் முறைக்கு உள்ளூர் மக்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவாக பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை…!!

பொன்னமராவதியில் குறிப்பிட்ட  சமூகத்தினரை இழிவாக பேசிய விவகாரத்தில் ஒருவரை  பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதியில்  குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் பற்றியும் , அந்தச் சமூகத்தின் பெண்கள் பற்றியும் இருவர் தரக்குறைவாக பேசும் ஆடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வைரல் ஆகி வந்தது . இழிவாக பேசியவர்களை கண்டித்து சம்மந்தப்பட்ட சமூக மக்கள் பொன்னமராவதியில்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து  வெளியாகிய ஆடியோ தொடர்பாகவும் , அதை சமூக வலைதளத்தில் பரப்பியவர் பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

டாஸ்மாக்  கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்…!!

உப்புக்கோட்டையில் டாஸ்மாக்  கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் உப்புக்கோட்டை அருகில் உள்ள டொம்புச்சேரி கிராமத்தில்  5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்தப்பகுதி பஸ் நிறுத்தத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது. இந்த கடை முறையான அனுமதி இல்லாமல் திறக்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மூடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இந்த டாஸ்மாக் கடையை திறக்க இருப்பதாக தகவல் பரவியது.இதற்க்கு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருவாரூர் அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்…!!

குடிநீர் வழங்க கோரி வெங்கத்தான்குடியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அடுத்து வெங்கத்தான்குடி ஊராட்சி ஆற்றங்கரை தெருவில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தென்பரை பாமணி ஆற்று படுகையில் அமைந்துள்ள ஆழ்குழாய் கிணற்றின் வழியாக  குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் வரவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் கைப்பம்பு மூலம் வரும் உப்பு நீரை தான் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குடுநீர் வழங்க வேண்டி திடீரென சாலைமறியல்…!!

மணப்பாறையில் பொதுமக்கள் திடீரென பொதுமக்கள் குடிநீர் வசதி கேட்டு சாலைமறியலில் ஈடுபட்டுள்ளன. திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி காந்தி நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மக்களுக்கு முறையாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுமட்டுமின்றி ஆழ்குழாய் கிணறுகளிலும் இருந்து முறையாக தண்ணீர் வசதி மக்களுக்கு செய்யவில்லை என அனைத்து மக்களும் குற்றம் சாடினர்   . இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த மக்கள் திடீரென சாலை மறியலில் […]

Categories

Tech |