டிக் டோக் வீடியோ பதிவு செய்ய மக்களை முகம் சுழிக்க வைத்த கல்லூரி மாணவனை கைது செய்துள்ளனர் காவல்துறையினர். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் டிக் டாக் எனும் செயலியை பயன்படுத்தி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் புதுக்கோட்டை மாவட்டம் கருக்காகுறிச்சி பகுதியை சேர்ந்த கண்ணன் எனும் கல்லூரி மாணவன் பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் எதிர்பாராத நேரங்களில் மக்கள்மீது இடித்தும் அவர்கள் முகம் சுளிக்கும் வண்ணம் நடனமாடியும் அவர்களை அச்சுறுத்தும் வகையில் […]
Tag: # Public
கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆய்வகங்களை வரும் 15ஆம் தேதி பொதுமக்கள் மாணவர்கள் கண்டுகளிக்கலாம் என பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் குருஷேத்ரா என்ற தொழில்நுட்ப கருத்தரங்கு நேற்று தொடங்கியது. இந்த தொழில்நுட்ப கருத்தரங்கில் விழா மலரை அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கண்டுபிடிப்புகளை பார்த்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கருணாமூர்த்தி, கிண்டி பொறியியல் கல்லூரியில் நடைபெறும் குருஷேத்ரா 2020 […]
திமுக சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்திற்கு பொதுமக்களை நேரில் சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் கையெழுத்து பெற்றுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி சார்பில் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி கையெழுத்து இயக்கம் தொடங்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த இயக்கத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் திமுக தொண்டர்கள் பொதுமக்களிடம் கையெழுத்துப் பெற்றுவருகின்றனர். இந்த கையெழுத்து இயக்கம் வருகின்ற 8ஆம் தேதி வரை தொடரும் என்றும், […]
திருப்பத்தூரில் பொது கழிவறையை சுத்தம் செய்யாததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் 32-வது வார்டு கவுதம் பேட்டையில் சுமார் 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலான வீடுகளில் தனிநபர் கழிபறை கிடையாது. இதனால் அங்குள்ள பொதுக்கழிப்பறையை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கழிபறையில் போர்வெல் மூலம் தினமும் சுத்தம் செய்யப்படும். இந்நிலையில், கடந்த 8 நாட்களுக்கு முன்பு போர்வெல் இயந்திரம் பழுது ஏற்பட்டது. இதனால் கழிவறைக்கு தண்ணீர் வரவில்லை என்பதால். அப்பகுதி பெண்கள் […]
குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் பெய்த கனமழையால் மாநகராட்சிக்குட்பட்ட ராஜீவ் நகர், பாரதி நகர், கதிர்வேல் நகர், அன்னை தெரசா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளைச் சுற்றி மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் தங்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு சுகதாரச் சீர்கேடும் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றனர். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகமும் மோட்டார்கள் மூலம் மழைநீரை அகற்றும் பணியில் […]
காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட பொதுமக்களை கஞ்சா வியாபாரி சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தில் புருஷோத்தமன் என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். இவரது கஞ்சாவிற்கு பல இளைஞர்கள் அடிமையாகி வந்துள்ளனர். இதனால் பலரது குடும்பங்களும் பிரிந்த நிலையில் ஒரு சிலர் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்றைய தினம் கஞ்சா வியாபாரியான புருஷோத்தமனை தட்டி கேட்க நினைத்து பின் ஒன்றுகூடி விரட்டி […]
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக அமராவதி அணை ஒரே நாளில் 5 அடி நீர்மட்டம் உயர்ந்ததால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று பெய்த கனமழை காரணமாக திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை ஒரே நாளில் 5 அடி நீர்மட்டம் உயர்ந்ததால் பொதுமக்கள் – விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . 90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதியின் நீர் மட்டம் கடந்த வார நிலவரப்படி 30 […]
ராமநாதபுரத்தில் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பள்ளி மாணவர்கள் மற்றும் ஊர்மக்கள் மாவட்ட ஆட்சியரின் வீட்டை சூழ்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பழங்குடியினருக்கான சான்றிதழ் கேட்டு காட்டுநாயக்கர் இன மக்கள் போராடி வருகின்ற நிலையில் , ‘மாவட்டத்தில் பழங்குடியினரே இல்லை’ என்று கூறி அதிகாரிகள் தங்களுக்கு பழங்குடியினருக்கான சான்றிதழை தரவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர் . இதனால் ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் வீட்டை முற்றுகையிட்ட அவர்கள் கோஷமிட்டனர் .சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.டி.ஓ. சான்றிதழ் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என […]