குறைந்த அழுத்த மின்சாரத்தை சீரமைத்து தர கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள நாகமங்கலம் கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுடைய வீடுகளில் கடந்த இரண்டு மாதங்களாக குறைந்த அழுத்த மின்சாரத்தால் டிவி, மின்விசிறி, மின்மோட்டார், குளிர்சாதனப் பெட்டி, மிக்சி, கிரைண்டர் போன்ற மின்சாதன பொருட்கள் சரியாக இயங்கவில்லை. இதனால் மின்சாதன பொருட்கள் பழுதடைந்து போகின்றது. மேலும் குடிநீரும் சரியாக விநியோகிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து அவர்கள் சம்மந்தப்பட்ட […]
Tag: public protest
அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ மாணவிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பழுவூர் கிராமத்தில் அரசு பாலிடெக்னிக் ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். நிலையில் கல்லூரிக்கு வந்த மாணவ மாணவிகள் திடீரென பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வலியுறுத்தி கோரிக்கைகளாவது “அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி தரவேண்டும், கல்லூரியில் தரப்படும் உணவின் […]
மாட்டுக் கொட்டகை கட்டித் தரும்படி சாலையோரத்தில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பையூர் கிராமத்தில் இலவச மாடு வழங்கும் திட்டத்தில் மாடுகளை பெற்ற பயனாளிகளுக்கு மாட்டுக்கொட்டகை அமைத்து தரக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இதுவரை மாட்டுக்கொட்டகை கட்ட அனுமதி வழங்கப்படவில்லை.மேலும் ஊராட்சி மன்ற தலைவருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே மாட்டு கொட்டகை அமைத்து தரப்பட்டுள்ளது. இதனை குற்றஞ்சாட்டி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட […]
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பாலக்கரை கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு பழமலைநாதர் நகரில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தினமும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக குழாய்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக அப்பகுதியில் உள்ள மக்களுக்கு சரிவர குடிநீர் வருவதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். […]
சுடுகாட்டிற்கு தனி இடம் ஒதுக்கி தராததால் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள செங்கலத்துப்பாடி கிராமத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த கிராமத்தில் சுடுகாடிற்கு இடம் தனியாக இல்லை. அதனால் இந்த கிராமத்தில் உயிரிழப்புகள் நேரிடும் போது அவர்களை புதைப்பதற்கு கிராமமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இதுகுறித்து கிராமமக்கள் மேல் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் வருகிற […]