புதுசேரியில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை இரவு 9 மணிமுதல் காலை 5 மணிவரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை ஆறு கட்ட நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதற்கான கால வரையறை நேற்றுடன் முடிந்த நிலையில், மீண்டும் […]
Tag: pudhuchery
தந்தை தொழிலுக்கு மகன் வராத விரக்தியில் தந்தை தற்கொலை செய்துகொண்டார். திருக்கனூரை சேர்ந்தவர் அழகப்பன். அறுவடை தொழில் செய்து வரும் அழகப்பன் தனது மகனையும் தனது தொழிலைச் செய்யுமாறு அழைத்துள்ளார். ஆனால் மகன் கதிரவன் அறுவடை தொழிலுக்கு வரப்போவதில்லை எனக்கூறியுள்ளார். இதனால் தந்தை மகன் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றும் தொழில் தொடர்பாக தந்தை மகன் இடையே தகராறு ஏற்படவே அழகப்பன் கோபம் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். வெகுநேரமாகியும் அழகப்பன் வீடு […]
புதுச்சேரி மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ரவுடி ஜெயபாலை கொலை செய்து கோரிமேடு காவலர் குடியிருப்பு அருகே மர்ம நபர்கள் வீசிச் சென்றுள்ளனர். கோரிமேடு பகுதியில் உள்ள தீயணைப்புத்துறை அதிகாரிகள் குடியிருப்பு அருகேயுள்ள காலி இடத்தில், குப்பை அகற்றும் தொழிலாளி ஒருவர், இளைஞர் ஒருவரின் சடலம் இருப்பதைக் கண்டு காவல்துறைக்கு தகவலளித்தார். உடனே அங்கு சென்ற காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். காவல்துறை நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் மேட்டுப்பாளையம் ராம்நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயபால் என்பதும், அவர் […]
அரசின் நிதி அதிகாரத்தில் தனக்கும் பெரும் பொறுப்பு உள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். புதுச்சேரி நிகழ்வுகள் மற்றும் மக்கள் குறைகேட்பு குறித்த செய்திகள் ஒரு கண்ணோட்டம் என்ற தலைப்பில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புத்தகம் வெளியிட்டு வருகிறார். அதன்படி கடந்த ஆண்டில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்புகளை உள்ளடக்கிய புத்தகத்தை, ஆளுநர் நேற்று வெளியிட்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இவ்விழாவில், புத்தகத்தினை அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் பெற்றுக் கொண்டனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, […]
புற்றுநோய் மருத்துவமனைகள் நம் நாட்டில் குறைவாக உள்ளதாகவும், அதனை அதிகப்படுத்துவதில் மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் திரைப்பட நடிகை கௌதமி வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நடைபெற்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிக்கொடை வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற பின்னர், திரைப்பட நடிகை கவுதமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவ நிபுணர்கள் நம் நாட்டில் மிகக் குறைவாக இருக்கின்றனர். அதனை அரசாங்கம் நிவர்த்தி செய்ய வேண்டும். […]
முதல்வர் நாராயணசாமி என்னை “பேய்” என்று கூறியதை ஏற்க முடியாது, இது நாகரிகமற்ற செயல் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடுமையாக விமர்சித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் முதலமைச்சர் நாராயணசாமிக்கும் ஆளுநர் கிரண்பேடிக்கும் அடிக்கடி கருத்து மோதல் இருந்து வருகிறது. சில நேரங்களில் இருவரும் நேரடியாக ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சனம் செய்து கொள்வது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நினைவு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. […]
புதுச்சேரியிலும் அரசு அனுமதியின்றி பேனர், கட் அவுட் தயாரிக்க கூடாது என உள்ளாட்சித்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னையில் 23 வயதான சுபஸ்ரீ என்ற மென்பொறியாளர் கடந்த வியாழக்கிழமை பள்ளிக்கரணை சாலை வழியாக ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் அவர் மீது விழுந்ததில் கீழே விழுந்தார். பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறி இறங்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீ மரணம் தமிழகத்தை உலுக்கியது. அதை தொடர்ந்து திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பேனர் […]
புதுச்சேரியில் உள்ளூர் இளைஞர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். புதுசேரி, வீராம்பட்டினம் கடற்கரை அருகே உள்ள அய்யம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் தினேஷ். இவர் அவர் வீட்டிற்கு அருகே இருக்கக்கூடிய கடற்கரை பகுதியில் வடமாநில இளைஞர்கள் சிலர் மது அருந்தியதாகவும், இதனை தினேஷ் தட்டிக் கேட்ட தாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் வடமாநில இளைஞர்களிடம் விசாரணை செய்யாமல், தினேஷை தாக்கி அவர் […]