Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மீன் பிடித்து கொண்டிருந்த வாலிபர்…. கையில் பாய்ந்த தூண்டில் கொக்கி…. தீவிர சிகிச்சை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காட்டுப்பட்டி பகுதியில் அடைக்கன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அடைக்கன் அப்பகுதியில் இருக்கும் குளத்தில் தூண்டில் மூலம் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக தூண்டிலில் இருந்த கொக்கி அடைக்கனின் கையில் குத்தியது. அதனை எடுக்க முயற்சி செய்தும் அவரால் முடியவில்லை. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அடைக்கனை மீட்டு மூக்கண்ணாமலைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் அடைக்கனின் கையில் சிக்கியிருந்த தூண்டில் கொக்கியை அகற்றி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தந்தையை இழந்த வேதனை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளத்திவிடுதி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜ்குமார்(24) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ராஜா உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இந்நிலையில் வயிற்று வலி மற்றும் தந்தை இறந்த துக்கத்தில் இருந்த ராஜ்குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜ்குமாரின் உடலை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கரை ஒதுங்கிய கடல் பசு…. மீனவர்கள் அளித்த தகவல்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!!

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசுவை வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முத்துக்குடா கிராமத்தில் உள்ள கடற்கரையில் இறந்த நிலையில் கடல் பசு கரை ஒதுங்கியது. இதனை பார்த்த மீனவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் கடல் பசுவை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் கடல் பசு அதே பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டது.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

யாரேனும் கடத்தி சென்றார்களா…? இளம்பெண்ணை தேடும் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!!

காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தத்துமுத்துபட்டி பகுதியில் விவசாயியான மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விசித்ரா(19) என்ற மகள் உள்ளார். இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வீட்டிலிருந்த விசித்திரா திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் விசித்ராவை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் மாரிமுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பாலியல் தொல்லையால் விஷம் குடித்த சிறுமி…. காதலன் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் அருகே 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு ராஜா என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சிறுமி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது ராஜா(22), சின்ராஜ்(21), பிரசாத்(19) ஆகியும் மூன்று பேரும் சிறுமியை தூக்கி சென்று மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர். இதனை அடுத்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததை பார்த்து 3 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“மஞ்சப்பை எடுக்க வெட்கப்படாதீங்க” பாடல் பாடி அசத்திய மாணவர்கள்…. வைரலாகும் வீடியோ….!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள களபம் கிராமத்தில் கிராமிய கலைஞரான இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு பாடலை எழுதியுள்ளார். இந்நிலையில் மாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் உருமராஜா, முத்துச்செல்வன் ஆகிய இரண்டு சிறுவர்களும் தாளம், இசையோடு விழிப்புணர்வு பாடலை பாடி அசத்தியுள்ளனர். அந்த பாடலில் மஞ்சப்பை எடுத்து செல்ல யாரும் வெட்கப்படக் கூடாது. பிளாஸ்டிக் பொருட்கள் மண்வளத்தை கெடுப்பது மட்டுமில்லாமல் அனைத்து உயிர்களுக்கும் கேடு விளைவித்து, […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“இளம்பெண் பாலியல் பலாத்காரம்” தொழிலாளர்களுக்கு உடந்தையாக இருந்த மூதாட்டி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 24 வயது இளம்பெண் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளர்களான அண்ணாதுரை(56), ராஜேந்திரன்(45) ஆகிய இருவரும் அதே பகுதியில் வசிக்கும் அஞ்சலை(60) என்ற பெண்ணின் வீட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பெரிய வழக்கு பதிந்த போலீசார் அண்ணாதுரை, ராஜேந்திரன், அஞ்சலை ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

காதலனுடன் மீண்டும் தொடர்பு…. கணவரை கொன்ற இளம்பெண்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருங்களூர் பக்கம் போரம் கிராமத்தில் பாண்டிதுரை(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் நந்தினி(24) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பு திருப்பூரில் வேலை பார்த்தபோது ஒரு வாலிபருடன் நந்தினிக்கு காதல் ஏற்பட்டது. இது குறித்து அறிந்த நந்தினியின் பெற்றோர் அவரை பாண்டித்துரைக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பிறகு அந்த வாலிபருடன் தொடர்பில் இருந்த நந்தினியை பாண்டித்துரை கண்டித்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நந்தினி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கபடி வீரர் கொலை வழக்கு…. உறவினர்களின் கொடூர செயல்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!

வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள போரம் கிராமத்தில் அருண்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மணிமாறன்(29), பார்த்திபன்(25) என்ற உறவினர்கள் இருக்கின்றனர். அனைவரும் கபடி விளையாடுவதற்காக கிராமத்தில் ஒரு அணி அமைத்து பிற இடங்களுக்கு சென்று விளையாடி வந்தனர். இந்நிலையில் களத்தில் இறங்க அனுமதிக்காமல் மணிமாறனையும், பார்த்திபனையும் மாற்று வீரர்களாக மட்டுமே வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் பார்த்திபன் மணிமாறன் ஆகிய இருவரும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!!

சட்ட விரோதமாக சாராயம் தயாரித்து விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வாராப்பூர் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கணேசன் என்பவர் வீட்டிற்கு பின்புறம் சாராய ஊறல் வைத்து பானையில் சாராயம் தயார் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் கணேசனை கைது செய்தனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான போட்டி…. சாதனை படைத்த மாணவி…. குவியும் பாராட்டுகள்….!!!

போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த மாணவியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே தேக்வாண்டோ போட்டி நடைபெற்றது. இதில் கிளிக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஷர்மிளாதேவி 38 கிலோ தேக்குவாண்டா பிரிவில் கலந்து கொண்டார். இந்த மாணவி மாவட்ட அளவில் தங்கம் என்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ஷர்மிளா தேவி மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். தங்கம் வென்று […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எஜமானரின் வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பு….. கடித்து கொன்ற நாய்…. கண்ணீரில் குடும்பத்தினர்….!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பட்டி பகுதியில் ஜெயந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டின் முன்பகுதியில் நல்ல பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இந்நிலையில் வீட்டிற்குள் பாம்பு நுழைய முயன்றதை பார்த்த நாய் அதனுடன் சண்டையிட்டு கடித்து கொன்றது. மேலும் பாம்பின் விஷம் ஏறி நாயும் வாயில் நுரை தள்ளி பரிதாபமாக உயிரிழந்தது. எஜமானரின் குடும்பத்தினரை காப்பாற்றிய நாயின் உடலுக்கு குடும்பத்தினர் பூக்களை தூவி கண்ணீர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திருமணமான 5 மாதங்களில்…. புதுமாப்பிள்ளையின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!!

புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சாந்தநாதபுரத்தில் இருக்கும் விடுதியில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் தங்கி பெயிண்டர் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஆனந்துக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் விடுதியில் வைத்து ஆனந்த் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“பள்ளிக்கு லீவு விடுங்க; உங்களுக்கு கோவில் கட்டுறேன்” சமூக வலைதளத்தில் கலெக்டருக்கு குறுந்தகவல்….!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 9-ஆம் தேதி இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு கடந்த 10-ஆம் தேதி அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவித்தார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு நேற்று முன்தினம் பள்ளிக்கு விடுமுறை அளிக்க கோரி மாணவர்கள் தரப்பிலிருந்து இன்ஸ்டாகிராமில் பல குறுந்தகவல்கள் வந்ததாக முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு மாணவர் “மேம் ப்ளீஸ்… நாளைக்கு ஒரு நாள் மட்டும் லீவு விடுங்க… லீவு இல்லன்னா பைத்தியம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய கார்…. ஒருவர் பலி; 7 பேர் படுகாயம்…. புதுக்கோட்டையில் கோர விபத்து….!!!!

கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் ஒருவர் பலியான நிலையில், 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அகரப்பட்டி பகுதியில் கபடி வீரரான சேகர்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான திருப்பதி, மதி, ஆனந்தன், சரவணன், மாரிமுத்து, கண்ணன், வெள்ளைச்சாமி ஆகியோருடன் காரில் விராலிமலை- அன்னவாசல் சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் இலுப்பூர் குடிசை மாற்று வாரியம் அருகே வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஆன்லைன் விளம்பரத்தை நம்பி…. ரூ.8 1/2 லட்சத்தை இழந்த பெண்…. போலீஸ் வலைவீச்சு…!!!

பெண்ணிடமிருந்து 8 1/2 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கும்மாங்குடி பகுதியில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீதாலட்சுமி(27) என்ற மனைவி உள்ளார். இவர் வீட்டில் இருந்தபடியே வேலை செய்வதற்காக ஆன்லைன் மூலம் ஒரு விளம்பரத்தை பார்த்து அதிலிருந்து செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனை அடுத்து சீதாலட்சுமி தனது வாட்ஸ் அப் எண்ணில் வந்த லிங்கை தொட்டு அதில் வங்கி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபருக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செம்படா வயல் பகுதியில் கூலி தொழிலாளியான விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 8- ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்து விக்னேஷ் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க” தஞ்சமடைந்த காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!!

காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்லாலங்குடி திருப்பதி நகரில் சொக்கலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிஏ பட்டதாரியான பிரியா(21) என்ற மகள் உள்ளார். இவரும் சிவாஜி(29) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் காதல் ஜோடி விட்டு விட்டு வெளியேறி நெம்மகோட்டை செத்தி விநாயகர் கோவில் வைத்து திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பேருந்துக்காக காத்து கொண்டிருந்த முதியவர்….. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

விபத்தில் முதியவர் இருந்த வழக்கில் ஓட்டுநருக்கு ஓராண்டு ஜெயல் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழாத்தூரில் முத்துப்பிள்ளை(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு ஆலங்குடி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற தனியார் பேருந்து முதியவர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

1000-க்கும் மேற்பட்ட ஓவியங்கள்….. சாதனை படைத்த இளம்பெண்…. குவியும் பாராட்டுக்கள்….!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டினம் தெற்கு தெருவில் முகமது பதுருதீன்-பவுசியா பீவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சிபானா பஸ்லீம்(23) என்ற மகள் உள்ளார். இவருக்கு சதாம் உசேன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஓவியம் வரைவதில் ஆர்வமாக இருந்த சிபானா பஸ்லீம் 1000-க்கும் மேற்பட்ட குடியரசு தினம், சுதந்திரப் போராட்ட வீரர்கள், பெண்களுக்கான விழிப்புணர்வு, கொரோனா விழிப்புணர்வு, இயற்கை காட்சிகள் உள்பட பல்வேறு வகையான ஓவியங்களை வரைந்துள்ளார். இதனால் “விரிஷா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்” […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பரம்பூரில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சேகர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். இதனை அடுத்து பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் வனத்துறையினர் நார்த்தாமலை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சகோதரியின் வீட்டிற்கு சென்ற இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை பகுதியில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி(26) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விஜயலட்சுமி தனது சகோதரியான ஈஸ்வரி என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து தனியார் கம்பெனிக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்ட விஜயலட்சுமி திரும்பி வரவில்லை. […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கியாஸ் கசிவால் ஏற்பட்ட விபரீதம்…. 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

பேக்கரி கடையில் இருந்த 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள துவரங்குறிச்சியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். நேற்று காலை பேக்கரியில் இருந்த சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனாலும் தீயை அணைக்க முடியாததால் உடனடியாக தீயணைப்பு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எப்படி தீ விபத்து ஏற்பட்டது…? புத்தகங்கள், சீருடைகள் எரிந்து நாசம்…. தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம்…!!

தீ விபத்து ஏற்பட்டதால் பள்ளியில் இருந்த புத்தகங்கள், சீருடைகள் என அனைத்தும் எரிந்து நாசமானது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மணல்மேல் குடி அய்யனார் கோவில் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் இருக்கும் ஒரு அறையில் புத்தகம் மற்றும் பள்ளி சீருடைகள் வைக்கப்பட்டிருந்தது. நேற்று திடீரென அந்த அறையில் இருந்து புகை வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

யாரு இப்படி பண்ணது….? திடீரென சுருண்டு விழுந்த ஆடு-மாடுகள்…. போலீஸ் விசாரணை…!!

விஷம் கலந்த தண்ணீரைக் குடித்ததால் 2 பசுக்கள், 6 ஆடுகள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆயக்குடி வயல் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது வீட்டில் 2 பசு மாடுகள் மற்றும் 30 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் முருகன் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் மற்றும் ஆடுகளை வீட்டிற்கு ஓடி வந்து தவிட்டுடன் கூடிய தண்ணீரை குடிப்பதற்கு வைத்துள்ளார். அதனை குடித்த 2 பசுக்கள், 6 ஆடுகள் திடீரென சுருண்டு விழுந்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

காளையை தேடி சென்ற வாலிபர்கள்…. காட்டுக்குள் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலவயல் மஞ்சுவிரட்டில் அவிழ்த்து விடப்பட்ட காளை ஒன்று காணாமல் போனது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் வாலிபர்கள் சிலர் காளையை பொன்னமராவதி அருகே மூலங்குடி செட்டிச்சி ஊரணி அருகே தேடிக் கொண்டிருந்தனர். அப்போது வேப்பமரத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் தூக்கில் தொங்கியபடி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வாலிபர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சுற்றி வளைத்த தெருநாய்கள்…. மயிலை காப்பாற்றிய விவசாயி…. பாராட்டிய வனத்துறையினர்…!!

வெயில் காரணமாக மயங்கி விழுந்த மயிலை விவசாயி வனத்துறையினரிடம் பத்திரமாக ஒப்படைத்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சேந்தன்குடி கிராமத்தில் ஒரு ஆண் மயில் சுற்றித் திரிந்தது. இந்நிலையில் கடும் வெயில் காரணமாக திடீரென அந்த மயில் மயங்கி விழுந்தது. இதனை பார்த்த தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து மயிலை கடிக்க முயன்றது. அப்போது அவ்வழியாக சென்ற விவசாயியான கலைவாணன் என்பவர் தெருநாய்களிடம் இருந்து மயிலை பத்திரமாக மீட்டார். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இரு தரப்பினரிடையே மோதல்…. மத்திய ரிசர்வ் படை வீரர்கள் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

மத்திய ரிசர்வ் படை வீரர்களை தாக்கிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூர் கோட்டை தெருவில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 12-ஆம் தேதி பிடாரி அம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். அங்கு பக்தர்கள் வரும் வழியில் விஸ்வநாதன் மோட்டார் சைக்கிளை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும், விஸ்வநாதனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பயங்கர தீ விபத்து…. நூற்றுக்கணக்கான மரங்கள் எரிந்து நாசம்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

தைல மரக்காட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் நூற்றுக்கணக்கான மரங்கள் எரிந்து நாசமானது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி அருகே இருக்கும் சுக்கிரன் விடுதியில் காதர் உசேன் என்பவருக்கு சொந்தமான 50 ஏக்கர் பரப்பளவிலான தைல மரக்காடு அமைந்துள்ளது. இந்த தைல மரக்காட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தைல மரக்காட்டில் பற்றி எரிந்த தீயை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சைக்கிள் மீது மோதிய லாரி…. உயிருக்கு போராடிய முதியவர்…. கோர விபத்து…!!

சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மட்டங்கால் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டுக்கோட்டை- கந்தர்வகோட்டை நெடுஞ்சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியை நோக்கி வேகமாக சென்ற லாரி ராஜேந்திரனின் சைக்கிளின் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“சொத்தை பிரித்து தாங்க” அண்ணனை காலால் மிதித்து கொன்ற தம்பி…. பரபரப்பு சம்பவம்…!!

சொத்து தகராறில் தம்பி அண்ணனை காலால் மிதித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒடுக்கூர் கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நான்கு தம்பிகள், இரண்டு தங்கைகள் இருக்கின்றனர். இவர்களுக்குரிய சொத்துக்களை பாகப்பிரிவினை செய்யாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் பழனிச்சாமியின் 4-வது தம்பி சிவசாமி என்பவர் சொத்தை பிரித்து தருமாறு அடிக்கடி தகராறு செய்துள்ளார். நேற்று அண்ணன் தம்பிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கோபத்தில் சிவசாமி பழனிச்சாமியை கீழே தள்ளி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இடி மின்னலுடன் பெய்த கனமழை…. இறந்த 3 மாடுகள்….சோகத்தில் கிராம மக்கள்…!!

மின்னல் தாக்கியதால் 3 மாடுகள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடுமியான்மலை, சித்தன்னவாசல், காலாடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் கரடிக்காடு பகுதியில் மரியகிறிஸ்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான சினை மாடு மின்னல் தாக்கி பரிதாபமாக இறந்தது. மேலும் சித்திக், பெருமாள் ஆகியோருக்கு சொந்தமான மாடுகளும் மின்னல் தாக்கியதால் உயிரிழந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

போதையில் தகராறு செய்த விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் விவசாயியான முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தினமும் மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் முருகேசன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த குடும்பத்தினர் உடனடியாக முருகேசனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக இறந்துவிட்டார். இது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

காதலியின் வீட்டிற்கு சென்ற வாலிபர்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

காதலின் வீட்டிற்கு தீ வைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோகர்ணம் பகுதியில் மனோகர் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் 31 வயதுடைய பெண்ணை காதலித்து வந்துள்ளார். மேலும் திருமணம் செய்யாமல் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனோகர் பாண்டி தனது காதலியை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். நேற்று முன்தினம் காதலி தங்கியிருந்த வீட்டிற்கு மனோகர் பாண்டி தீ […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொழுந்து விட்டு எரிந்த தீ…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…. போலீஸ் விசாரணை…!!

தைல மரக்காட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கூவாட்டுப்பட்டியில் பஞ்சநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தைல மரக் காட்டில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தைல மரக்காட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. பெண் பார்க்க சென்ற போது நடந்த கொடூரம்…. புதுக்கோட்டையில் கோர விபத்து…!!

கார் மோதிய விபத்தில் மரத்தடியில் அமர்ந்திருந்த விவசாயி பலியான நிலையில் தம்பதியினர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கோத்திராபட்டி பகுதியில் பொய்யான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லம் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதியினர் அதே பகுதியில் வசிக்கும் விவசாயியான தியாகராஜன் என்பவருடன் மகனுக்கு பெண் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மூன்று பேரும் அனுமான் கோவில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோகர்ணம் பகுதியில் கூலித் தொழிலாளியான மணி சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது மணிசேகர் எதிர்பாராதவிதமாக சுவிட்ச் பாக்சை தொட்டுள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த மணிசேகரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மணிசேகர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இரை தேடி அலையும் மயில்கள்…. பொதுமக்களின் செயல்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….!!

மயில்கள் இரை தேடி சாலையில் சுற்றி திரிகிறது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் அருகிலுள்ள வனப்பகுதியில் ஏராளமான மயில்கள் காணப்படுகிறது. இந்த மயில்கள் உணவு தேடி சாலைகளில் சுற்றித் திரிகிறது. இந்நிலையில் பொதுமக்கள் மாலை நேரங்களில் தானியங்கள் உள்ளிட்டவைகளை மயில்களுக்கு இரையாக போடுகின்றனர். நேற்று மாலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இரை தேடி வந்த மயில்கள் தானியங்களை உண்ணுகின்றன. அதன்பின் மயில்கள் அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் தாகத்தை தீர்த்துக் கொண்டன. இதனையடுத்து தொட்டியை பராமரிக்க […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த ஊழியர்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

மின்வாரிய ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விளாரிப்பட்டி தெற்கு தெருவில் ரங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கரம்பக்குடி மின்வாரிய அலுவலகத்தில் மின் பாதை ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரங்கசாமி கறம்பக்குடி செட்டி தெருவில் மின் பாதையை சீரமைக்கும் பணியை கண்காணித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ரங்கசாமி மயங்கி விழுந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வடகாடு பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் விஷ்ணு மற்றும் சிவா என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் 2 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் அதிரடி….!!

சட்டவிரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஸ்ரீராமசமுத்திரம் காவிரி ஆற்றில் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 2 வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் மணலை கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து சட்ட விரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் பாண்டி மற்றும் முனிசாமி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மகனை பார்க்க சென்ற தந்தை…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் பூட்டை உடைத்து திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தவளப்பள்ளம் கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மகனை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு செந்தில் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் 20 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பேருந்தில் சென்ற பெண்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள எஸ். குலவாய்பட்டியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பிரியா பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது கூட்ட நெரிசலில் மர்ம நபர்கள் பிரியாவின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து பிரியா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஸ்ரீராமசமுத்திரம் காவிரி ஆற்றில் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 2 வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் மணலை கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து சட்ட விரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் தீபன் மற்றும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. சிக்கிய 315 கிலோ பொருள்…. போலீஸ் அதிரடி…!!

புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி தனிப்படை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் விடுதி, மளிகை கடை, பழைய பிளாஸ்டிக் கடைகள் போன்றவற்றில் பதுக்கி வைத்திருந்த 12 லட்ச ரூபாய் மதிப்புள்ள 315 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வேலியில் இருந்த மலைப்பாம்புகள்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

தீயணைப்பு துறையினர் இரண்டு மலைப்பாம்புகளை பத்திரமாக பிடித்துவிட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் பகுதியில் இருக்கும் வேலியில் இரண்டு மலைப்பாம்புகள் இருப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மலைபாம்புகளை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன்பின் இரண்டு பாம்புகளும் நார்த்தாமலை வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தேடி அலைந்த உறவினர்கள்…. சடலமாக மீட்கப்பட்ட வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவப்பூர் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வீட்டை விட்டு வெளியே சென்ற செந்தில்குமார் திரும்பி வரவில்லை. இதுகுறித்து செந்தில் குமாரின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செந்தில் குமாரை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் கவிநாடு கண்மாய் அருகே தூக்கில் அழுகிய […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

உருட்டுகட்டையால் தாக்கிய நபர்…. முன் விரோதத்தால் நடந்த விபரீதம்…. போலீஸ் நடவடிக்கை…!!

முன் விரோதம் காரணமாக வாலிபரை கட்டையால் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தொண்டைமான் நல்லூரில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மகேஷுக்கும், அதே பகுதியில் வசிக்கும் ஜெயபிரகாஷ் ஆகிய இருவருக்குமிடையே குளத்தில் மீன் பிடிப்பது தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் மகேஷ் அப்பகுதியில் இருக்கும் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது ஜெயபிரகாஷ் அங்கு சென்று மகேஷிடம் தகராறு செய்ததோடு, அவரை கட்டையால் சரமாரியாக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பெட்டி கடையில் அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய 4 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!

புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் டவுன் பகுதியில் இருக்கும் பெட்டிக்கடைகளில் காவல்துறையினர் அதிரடியாக சோதனை செய்துள்ளனர். அதில் சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 1500 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வாலியம்பட்டி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி சக்திவேலின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சக்திவேலின் சடலத்தை […]

Categories

Tech |